Shuru
Apke Nagar Ki App…
வேடசந்தூரில் எம் எல் ஏ அலுவலகம் அருகில் பல நாட்களாக பழுதாகி உள்ள நிலையில் உள்ள அடி பம்ப் இந்த அடி பம்ப்பில் பலர் நல்ல குடி நீர் தேவைக்கு பயனடைந்து வந்தனர் வேடசந்தூர் சுற்றியும் எங்கும் நல்ல தண்ணீர் கிடையாது ஆனால் இந்த பம்ப்பில் மட்டுமே நல்ல தண்ணீர் கிடைக்கும். ஆனால் இப்பொழுதோ இதை சரி செய்து கொடுக்க யாரும் முன் வராததால் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
த.கௌதமன்
வேடசந்தூரில் எம் எல் ஏ அலுவலகம் அருகில் பல நாட்களாக பழுதாகி உள்ள நிலையில் உள்ள அடி பம்ப் இந்த அடி பம்ப்பில் பலர் நல்ல குடி நீர் தேவைக்கு பயனடைந்து வந்தனர் வேடசந்தூர் சுற்றியும் எங்கும் நல்ல தண்ணீர் கிடையாது ஆனால் இந்த பம்ப்பில் மட்டுமே நல்ல தண்ணீர் கிடைக்கும். ஆனால் இப்பொழுதோ இதை சரி செய்து கொடுக்க யாரும் முன் வராததால் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடியில் 300 ஆண்டுகள் பழமையான மாமுனிவர் புனித பெரிய அந்தோணியார் திருத்தலம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16,17,18 ஆகிய மூன்று நாட்களில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் அதோபோல் இந்த ஆண்டும் திருவிழாவின் முதல் கொடி பவனி நேற்று இரவு தொடங்கியது இந்நிகழ்வில் ஊர் பெரியதனகாரர்கள், கிராம மக்கள், பங்கு தந்தையர்கள், அமலவை கன்னியர்கள், குருக்கள், பிரதர்கள், இருபால் துறவியர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்1
- பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை-திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.1
- திண்டுக்கல் சோலைஹால் பகுதியில் உள்ள மீன் கடைகளை அகற்றி மேட்டுப்பட்டி சாலைகள் உள்ள குலசாலையில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது1
- கரூர் மாவட்ட திமுக செயலாளர் வி. செந்தில் பாலாஜி ஆணைக்கிணங்க, நாளை மறுநாள்(11/01/29) நடைபெறும் திமுக திராவிட பொங்கல் சமத்துவ விளையாட்டு போட்டி நடைபெறும் இடமான தமிழ் நகரில் விளையாட்டு மைதானத்தை இன்று தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர் தலைமையில் பணியாட்கள் மற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.1
- விஜய் நடித்து வெளியாகி உள்ள ஜனநாயகம் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் பெரியகுளம் பவளம் தியேட்டர் முன்பு விஜய் கட் அவுட் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டுள்ளனர்1
- தேனி அருகே தாடிச்சேரியில் திமுக சார்பில் மாபெரும் கபடி போட்டி: தங்கம் தமிழ்செல்வன் எம்.பி தொடங்கி வைத்தார்! தேனி அருகே தாடிச்சேரியில் திமுகவின் தேனி வடக்கு மாவட்டம் தேனி வடக்கு ஒன்றியம் சார்பாக திராவிட பொங்கல் சமூக நீதிக்கான திருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது இந்த கபடி போட்டியில் தாடிச்சேரி, சிவலிங்க நாயக்கன்பட்டி ,கோட்டூர் சீலையம்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கபடி அணியினர் பங்கேற்றனர்.இந்த விழாவின் இரண்டாம் நாள் கபடி போட்டியினை தேனி பாராளுமன்ற உறுப்பினரும் திமுகவின் தேனி வடக்கு மாவட்ட செயலாளருமாகிய தங்க தமிழ்ச்செல்வன் பங்கேற்று கபடி போட்டிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து விளையாடிய கபடி வீரர்கள் ஆடுகளத்தில் சிறப்பான முறையில் விளையாடினார்கள் இந்தப் போட்டியில் சிறப்பான முறையில் மூன்றாம் இடம் பிடித்த கபடி அணியினருக்கு ரூபாய் 15,000 மற்றும் சுழல் கோப்பையும் இரண்டாம் இடம் பிடித்த கபடி அணியினருக்கு 20,000 மற்றும் சுழல் கோப்பையும், முதல் இடம் பிடித்த கபடி அணியினருக்கு ரூபாய் 25000 மற்றும் சுழல் கோப்பையும் தேனி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சக்கரவர்த்தி வழங்கி சிறப்பித்தார்.மேலும் இந்த நிகழ்வில் தேனி வடக்கு ஒன்றிய விவசாய அமைப்பாளர் ரவி, கிளை செயலாளர்கள் தவசி, பாக்கியம், தேனி வடக்கு ஒன்றிய மீனவர் அணி அமைப்பாளர் போத்திராஜ் ,தேனி வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் முருக ஜெகதீஸ் ,ஆதிதிராவிட நல குழு அணி அமைப்பாளர் பால்ராஜ் ,தேனி வடக்கு ஒன்றிய விளையாட்டு மேம்பட்டிய அணி துணை அமைப்பாளர் தமிழரசன் ,திமுக பிரதிநிதிகள் சூரத் தேவன், ராஜவேல் சுரேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள்,விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் இந்த விழாவிற்கு வருகை புரிந்த பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு தேனீ வடக்கு ஒன்றியம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது1
- *பொங்கல் தொகுப்பு வழங்கிய பேரூராட்சி தலைவர்* தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் தொகுப்புகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பெரியகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்கரை பேரூராட்சி பகுதியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வினை பேரூராட்சி தலைவர் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் கூட்டுறவு துறையினர் கலந்து கொண்டனர்.1
- *தேனி பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிறுத்துவதில் இரு தரப்பிற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் 8 ஆட்டோ ஓட்டுநர்கள் கைது, 20க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து ஆட்டோக்கள் பறிமுதல்* *கைது செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களை விடுவிக்கக்கோரி தேனி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசார் உடன் வாக்குவாத ஈடுபட்ட 60க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் கைது* தேனி புதிய பேருந்து நிலையம் பகுதியில் பென்னிகுயிக் ஆட்டோ சங்கம் என்ற பெயரில் ஆட்டோ நிறுத்தம் உள்ளது இந்த ஆட்டோ நிறுத்தத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று வருகின்றனர் இந்த ஆட்டோ நிறுத்தத்தில் மற்றொரு தரப்பினர் ஆட்டோக்களை நிறுத்துவதால் இருதரப்பிற்கிடையே பிரச்சனை நிலவி வந்தது இந்த நிலையில் அப்பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு ஆட்டோ நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் மேலும் அப்பகுதியில் ஆட்டோ நிறுத்துவதற்கு அனுமதி இல்லை என கூறி ஆட்டோ நிறுத்தத்தை அகற்றி கடந்த சில நாட்களுக்கு முன்பு பேரிக்காடுகளை வைத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர் இதனால் தேனி போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது தேனி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த நிலையில் போலீசாரின் தடையை மீறி ஆட்டோ நிறுத்திய 8 நபர்களின் ஆட்டோக்களை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர் மேலும் 20க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது இதனை அடுத்து கைது செய்யப்பட்ட நபர்களை விடுவிக்கக்கோரி தேனி காவல் நிலையத்தை ஏராளமான ஆட்டோ ஓட்டுநர்கள் முற்றுகையிட்டு போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனை அடுத்து தேனி காவல் நிலையத்தில் டிஎஸ்பி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர் இந்த நிலையில் காவல் நிலையத்தில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடு சுமார் 61 நபர்களை கைது செய்த போலீசார் அவர்களை தனியார் மண்டபத்தில் அடைத்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் கூறுகையில் தாங்கள் 13 வருடங்களாக முறையாக பதிவு பெற்று ஆட்டோ நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி வருகிறோம் இந்த நிலையில் ஆட்டோ நிறுத்தத்தில் பிரச்சினை ஏற்படுத்திய மற்றொரு தரப்பினரின் மீது நடவடிக்கை எடுக்காமல் போலீசார் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு தங்கள் ஆட்டோ சங்கத்தை சேர்ந்த ஓட்டுனர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிந்தனர் இதனால் கடந்த சில நாட்களாக ஆட்டோ ஓட்ட முடியாமல் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் கைது செய்யப்பட்ட தங்கள் சங்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்1