விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்த வெளிவளாக பயிற்சி... விருத்தாசலம்: நல்லுார் அடுத்த பெரியநெசலுார் கிராமத்தில், வேளாண் அறிவியல் நிலைய தலைவர் நடராஜன் தலைமை தாங்கி, வேளாண் அறிவியல் நிலையத்தின் முக்கிய குறிக்கோள் மற்றும் அதிக மகசூல் தரும் உயர்தர ரகங்கள் குறித்தும், விதை உற்பத்தி செய்யும் முறைகள், மக்காச்சோளத்தில் படைப்புழு மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். அதைத்தொடர்ந்து, மக்காச்சோள பயிருக்கு ஒவ்வொரு 10 வரிசைக்கும் 75 செ.மீ., இடைவெளி விட வேண்டும். இதனால் பூச்சிகொல்லி தெளிப்பதற்கு ஏதுவாக அமையும். வரப்பு பயிராக கம்பு, நேப்பியர் மற்றும் ஊடுபயிராக உளுந்து, பச்சைபயிறு சாகுபடி செய்ய வேண்டும். மேலும், படைப்புழுக்களை கவர்ந்து இழுக்கும் இனக் கவர்ச்சிபொறி வைக்க வேண்டும் என வேளாண் விஞ்ஞானிகள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினர். மேலும் ஒருங்கிணைந்த பயிர் பராமரிப்பு மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கமளிக்கப்பட்டது. இதில், கிராம விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

- பண்ருட்டி சட்டமன்ற எம்எல்ஏ சிறப்பான முறையில் பணியாற்றி வருவதை காணலாம் பண்ருட்டி சட்டமன்ற எம்எல்ஏ விவசாயிகளின் பிரச்சனைகளை ஒரு ஒரு நாளாக தீர்த்து வைத்து அந்த நிலையில் இப்பொழுது ஒரு வீடியோவை காணலாம்1
- त्यांनी पुरावे द्यावेत | दीपकेंच्या प्रश्नावर मंत्री नितेश राणेंचे उत्तर त्यांनी पुरावे द्यावेत | दीपकेंच्या प्रश्नावर मंत्री नितेश राणेंचे उत्तर....1
- தேவரடியார் குப்பம் சுற்றுஉட்டகப் பகுதிகளில் லேசான சாரல் மழை. ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தேவரடியார் குப்பம், ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான முருக்கம்பாடி, மேலந்தல், காங்கியனூர், தேவனூர், ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் மேலும் மழை எதிர்பார்க்கின்றனர்1
- பாபநாசம் பகுதியில் ஆடி 18 முன்னிட்டு சப்பரம் தயாரிக்கும் பணி தீவிரம்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கணபதி அக்ரஹாரம் பகுதியில் நான்கு தலைமுறைகளாக சப்பரம் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆடி 18 முன்னிட்டு ஓலைச் சப்பரம் வடிவத்தில் சப்பரம் தயாரித்து வருகின்றனர். இந்த சப்பரத்தினை குழந்தைகளுக்கு பெரியவர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இந்த தொழிலில் ஈடுபடும் தச்சு தொழிலாளர்கள் கூறியதாவது ... நான்கு தலைமுறைகளாக சப்பரம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவதாகவும், தங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க வேண்டும் என்றும், இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும், சப்பரம் தயாரிக்க பயன்படுத்தும் மூலப் பொருட்கள் விலைவாசி உயர்வால் மிகவும் சிரமப்படுவதாகவும் , மரங்கள் குறைந்த விலையில் கிடைப்பதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உடனடியாக அடிப்படை வசதிகள் தொழிலாளர்களுக்கு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.1
- தேவூர் முத்தாள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 32 வது ஆண்டு திருவிளக்கு பூஜை தேவூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்தாள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 32ம் ஆண்டு ஆடி திருவிளக்கு பெருவிழா நேற்றிரவு நடைப்பெற்றது. விழாவினை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டது. பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையும் அதனை தொடர்ந்து அம்பாளுக்கு சந்தனகாப்பு அலங்காரமும் நடந்தது.1
- கருங்கன்னி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் முளைப்பாரி திருவிழா நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் தாலுக்கா கருங்கன்னி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு நான்காம் வருடமாக சடையன் கோட்டகம் அருள்வாக்கு வெண்ணிலா அம்மா தலைமையிலும் மேனகா, சத்யா ,மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையிலும் பெருமாள் குளக்கரையில் இருந்து 108 முளைப்பாரி பெண் பக்தர்கள் தலையில் சுமந்து சேவுராயர் அய்யனார் மற்றும் சிவன் கோவில் வழியாக மேலப்பிடாரி கடை தெருவில் இருந்து ஊர்வலமாக சிவன் பார்வதி மேடம் அணிந்தவர்களுடன் இணைந்து மேல வாத்தியங்களுடன் வான வேடிக்கை நடைபெற்று அருள்மிகு ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது மேலும் அலங்கரிக்கப்பட்டஅம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது இந்த முளைப்பாரி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.1
- நாகை ஆட்சியர் அலுவலகம் அருகே நிறுத்தியிருந்த ஸ்கூட்டி ஹேண்டில் லாக்கை உடைத்து நைசாக திருடும் காட்சி நாகை ஆட்சியர் அலுவலகம் அருகே பரபரப்பு: நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டி திருட்டு – சிசிடிவி காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரல் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஜெராக்ஸ் கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடிச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நபர் ஒருவர் தனது ஸ்கூட்டியை ஜெராக்ஸ் கடை வாசலில் நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், பூட்டப்பட்டிருந்த ஸ்கூட்டியின் ஹேண்டில் லாக்கை காலால் உடைத்து, வாகனத்தை நைசாக திருடிச் சென்றுள்ளார். இந்தத் திருட்டு சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகின்றன. இச்சம்பவம் குறித்து பெறப்பட்ட புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஸ்கூட்டியை திருடிச் சென்ற மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த ஆட்சியர் அலுவலக பகுதியிலேயே நடைபெற்ற இந்தத் துணிச்சல் திருட்டு சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.1
- கடலூர் மாவட்டத்தில சிறுத்தை நடமாட்டமா மக்கள் பயத்துடன் வசிக்கின்றனர் கடலூர் தென்னம்பாக்கம் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான குடும்பங்கள் வாழ்கின்றனர் இந்த நிலையில் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது என சிசிடிவி காணப்பட்டதில் இருந்து மக்கள் பெரும் பயத்துடன் வசிக்கின்றனர்1