Shuru
Apke Nagar Ki App…
சேலத்தில் திராவிடர் கழகம் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! சேலம் திராவிடர் கழகத்தின் சார்பில், மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி வாரி கணக்கெடுப்பை நீக்கிட மத்திய அரசு முயற்சித்து வருவதை கண்டித்து, இன்று கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
Rajendran
சேலத்தில் திராவிடர் கழகம் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! சேலம் திராவிடர் கழகத்தின் சார்பில், மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி வாரி கணக்கெடுப்பை நீக்கிட மத்திய அரசு முயற்சித்து வருவதை கண்டித்து, இன்று கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- சேலத்தில் திமுக தொழிற்சங்க பேரவையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்! திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மத்திய மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினார். இதில் தொழிலாளர்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்க கூடாது, தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதிய பலன்கள் மற்றும் நிலுவையில் உள்ள துணிகளை உடனடியாக வழங்க வேண்டும் என்பது மீட்டர் கோரிக்கைகளை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்டோர் உடன் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களை எழுப்பியவாறு கலந்து கொண்டார்.1
- தருமபுரி அடுத்த பெரியாம்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் மாடு ஏற்றி வந்த மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தருமபுரி அடுத்த பெரியாம்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் மாடு ஏற்றி வந்த மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி சந்தையில் சுமார் 14 மாடுகளை ஈச்சர் மினி வேனில் கேரளா மாநிலத்திற்கு ஏற்றிக்கொண்டு சென்ற மினி வேன் தருமபுரி அருகே உள்ள பெரியாம்பட்டி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும்போது வண்டியின் பின் சக்கரம் வெடித்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைகுலைந்து விபத்துக்குள்ளானது. இந்த வண்டியை கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் கோழிக்கோடு மாவட்டம் பாலுசரி கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது ரஃபிக். (42) என்பவர் ஓட்டி வந்தார். விபத்தில் வாகனம் முன்பக்கம் நொறுங்கியது. இதனால் மாட்டிற்கோ, ஓட்டுனருக்கோ எந்த ஒரு உயிர் சேதமும் இன்றி உயிர் தப்பினர். மேலும் விபத்து குறித்து காரிமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- அதியமான் கோட்டை அரசு ஆண்கள் / பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் “பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் கலெக்டர் சரவணன் ஆய்வு1
- சுட்டெரிக்கும் வெயிலில் ஒய்யாரமாக புள்வெளியில் உலா வந்த கரடி... பொது மக்கள் கண்டு மகிழ்ச்சி ... உதகை அருகே தலைகுந்தா பகுதியில் பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் கரடி ஒன்று அங்குள்ள புள்வெளியில் ஒய்யாரமாக அமர்ந்து பின்னர் அந்த பகுதியில் உலா வந்தது. இதனை அவ்வழியாக சென்றவர்களும், பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கரடியை கண்டு மகிழ்ந்து வீடியோ எடுத்து சென்றனர்.1
- கல்வராயன் மலை இன்னாடு கிராமத்தில் ஓம் சக்தி கோவில் கஞ்சி திருவிழா! கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, இன்னாடு கிராமத்தில் உள்ள அருள்மிகு ஓம் சக்தி அம்மன் கோவிலில் கஞ்சி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி காப்பு கட்டிய பெண்கள் பால்குடம், முளைப்பாரி, தீச்சட்டி மற்றும் பூங்கரகம் உள்ளிட்டவற்றை ஏந்தி, பக்தர்களுடன் ஊர்வலமாக கோவிலை நோக்கிச் சென்றனர். பின்னர் கோவிலை சென்றடைந்த பக்தர்கள் அம்மனை வழிபட்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கஞ்சி அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு, சிறப்பாக நடைபெற்ற கஞ்சி திருவிழாவில் பங்கேற்றனர்.1
- காரிமங்கலம் அருகே மாடுகள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து 15-க்கும் மேற்பட்ட நாட்டுமாடுகள் காயம் – கால்நடை மருத்துவக் குழுவினர் சிகிச்சை தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே, மாடுகள் ஏற்றி வந்த சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15-க்கும் மேற்பட்ட நாட்டுமாடுகள் காயமடைந்தன. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் செளகத் அலி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து 15-க்கும் மேற்பட்ட நாட்டுமாடுகளை சரக்கு லாரியில் ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கிச் சென்றுள்ளார். பெரியாம்பட்டி நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டிருந்தபோது, திடீரென முன்பக்க டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலை நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் 15-க்கும் மேற்பட்ட மாடுகள் லேசான காயங்களுடன் உயிர்தப்பின. ஒரு மாட்டுக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டு எழ முடியாமல் தவித்தது. இதையடுத்து கால்நடை ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த நடமாடும் கால்நடை மருத்துவக் குழுவினர், காயமடைந்த மாட்டுக்கு சிகிச்சை அளித்தனர். இந்த விபத்தால் தருமபுரி–கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த காரிமங்கலம் போலீசார், மாடுகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர்செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.2
- புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பி பணம் பறிக்க முயற்சி: கரூர் தொழிலதிபர் ஆட்சியர், எஸ்.பி.யிடம் புகார் தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதுடன், பணம் பறிக்க நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கரூரைச் சேர்ந்த தொழிலதிபர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் ரியல் எஸ்டேட் மற்றும் திருப்பூரில் கார்மென்ட்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், கரீமா என்ற பெண் சமூக வலைதளத்திற்கு அளித்த பேட்டியில், சாகுல் ஹமீது தன்னை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி திருமணம் செய்துகொண்டதாகவும், பின்னர் தகாத வார்த்தைகளால் பேசி வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த 7-ஆம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சாகுல் ஹமீது தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கரீமா புகார் அளித்துள்ளார். அப்போது ஊடகங்களிடம் பேசிய அவர், சாகுல் ஹமீதின் புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பியதாகவும் சாகுல் ஹமீது தனது புகாரில் தெரிவித்துள்ளார். அரவக்குறிச்சியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் தூண்டுதலின் பேரிலேயே தன் மீது வீண் பழி சுமத்தப்படுவதாகவும், தன்னிடம் இருந்து பணத்தை பறிக்கும் நோக்கில் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், மேலும், சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட தகவல்களால் தானும் தனது குடும்பத்தினரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும், தங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, தனது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி அவதூறு பரப்பியதாக கூறப்படும் கரீமா மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்படுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் சாகுல் ஹமீது புகார் மனு அளித்துள்ளார்.2
- சேலத்தில் திராவிடர் கழகம் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! சேலம் திராவிடர் கழகத்தின் சார்பில், மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி வாரி கணக்கெடுப்பை நீக்கிட மத்திய அரசு முயற்சித்து வருவதை கண்டித்து, இன்று கோட்டை மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.1