பசுமை எதிர்காலத்தை உருவாக்குவதற்கான எங்கள் கூட்டு அர்ப்பணிப்பை வலுவூட்டும்,அர்த்தமுள்ள துவக்கத்தின் படி : கூறுகிறார்" ராமராஜ்" காட்டன் நாகராஜ்... திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த(31.07.2026, வெள்ளிக்கிழமை) அன்று பல்லடம் வனம் இந்தியா பவுண்டேஷன் தனது பசுமை வாகன முயற்சி மற்றும் கழிவுகளுக்குச் செல்வ திட்டம் பல்லடம் வனாலயம் வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்ற வனம் இந்தியா பவுண்டேஷன் நிர்வாகியும் "ராமராஜ் "காட்டன் நிறுவனருமான நாகராஜன் தனது வலைதள பகுதியில் குறிப்பிட்டிருப்பதாவது...இந்த நிகழ்வில் மாண்புமிகு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் அவர்களை வரவேற்கும் பாக்கியம் பெற்றேன். நான் கவுரவ தலைவராக பணியாற்றும் வனம் இந்தியா பவுண்டேஷன் சார்பாக செங்கோட்டையன் அவர்களுக்கு பாரம்பரிய சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினேன் இந்த நிகழ்வை தமிழக அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் , ஜி. அருண்ராஜ் , கமலி, மற்றும் திருப்பூர், பல்லடம் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் மணீஷ் நாரணவேர், உள்ளிட்ட திருப்பூர் மாவட்ட, மாநகர காவல்துறை, அரசு துறை அதிகாரிகள், வனம் இந்தியா பவுண்டேஷன் நிர்வாகிகள் ஊர் பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் இந்த நிகழ்வின் முயற்சிகளின் துவக்கம், பசுமை எதிர்காலத்தை உருவாக்குவதற்கான எங்கள் கூட்டு அர்ப்பணிப்பை வலுவூட்டும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் பொறுப்புள்ள கழிவு மேலாண்மை ஆகியவற்றுக்கான மற்றொரு அர்த்தமுள்ள துவக்கத்தின் படியை குறிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
பசுமை எதிர்காலத்தை உருவாக்குவதற்கான எங்கள் கூட்டு அர்ப்பணிப்பை வலுவூட்டும்,அர்த்தமுள்ள துவக்கத்தின் படி : கூறுகிறார்" ராமராஜ்" காட்டன் நாகராஜ்... திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கடந்த(31.07.2026, வெள்ளிக்கிழமை) அன்று பல்லடம் வனம் இந்தியா பவுண்டேஷன் தனது பசுமை வாகன முயற்சி மற்றும் கழிவுகளுக்குச் செல்வ திட்டம் பல்லடம் வனாலயம் வளாகத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பங்கேற்ற வனம் இந்தியா பவுண்டேஷன் நிர்வாகியும் "ராமராஜ் "காட்டன் நிறுவனருமான
நாகராஜன் தனது வலைதள பகுதியில் குறிப்பிட்டிருப்பதாவது...இந்த நிகழ்வில் மாண்புமிகு தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் அவர்களை வரவேற்கும் பாக்கியம் பெற்றேன். நான் கவுரவ தலைவராக பணியாற்றும் வனம் இந்தியா பவுண்டேஷன் சார்பாக செங்கோட்டையன் அவர்களுக்கு பாரம்பரிய சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினேன் இந்த நிகழ்வை தமிழக அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் , ஜி. அருண்ராஜ் , கமலி, மற்றும் திருப்பூர், பல்லடம் உள்ளிட்ட சட்டமன்ற
உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் மணீஷ் நாரணவேர், உள்ளிட்ட திருப்பூர் மாவட்ட, மாநகர காவல்துறை, அரசு துறை அதிகாரிகள், வனம் இந்தியா பவுண்டேஷன் நிர்வாகிகள் ஊர் பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் இந்த நிகழ்வின் முயற்சிகளின் துவக்கம், பசுமை எதிர்காலத்தை உருவாக்குவதற்கான எங்கள் கூட்டு அர்ப்பணிப்பை வலுவூட்டும், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் பொறுப்புள்ள கழிவு மேலாண்மை ஆகியவற்றுக்கான மற்றொரு அர்த்தமுள்ள துவக்கத்தின் படியை குறிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
- கிரிக்கெட் விளையாடும் போது நடந்த சில ரசிக்கும் படியான காட்சிகள்.1
- திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் நிலமோசடி சம்பந்தமாக சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் அவர்கள் இரண்டாவது நாளாக சிபிசிஐடி காவல்துறையினரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்1
- மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் கரூர், ஆகஸ்ட் 1: மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கரூர் மாவட்டத்தின் 5ஆம் வட்டம் சார்பில் இன்று (01.08.2026) காலை 10.00 மணியளவில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் தோழர் K. கலாராணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர், காவேரி தமிழ்நாட்டின் உயிர்நதி என்பதையும், மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், காவேரி நீர் உரிமையைப் பாதுகாக்க ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.1
- 🚨 கரூர் மாவட்டம்: வெள்ளியணையில் மீண்டும் காவேரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு – சேதமடைந்த சாலையால் பொதுமக்கள் அவதி கரூர் மாவட்டம், வெள்ளியணை பகுதியில் காவேரி கூட்டுக் குடிநீர் குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாக வெளியேறுவதுடன், அப்பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதே பகுதியில் அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படுவதால், ஒவ்வொரு முறையும் சாலை தோண்டப்பட்டு பழுதுபார்க்கப்படுகிறது. ஆனால், பணிகள் முடிந்த பிறகும் சாலை முழுமையாக சீரமைக்கப்படாமல் இருப்பதால் பல இடங்களில் மேடு, பள்ளங்கள் உருவாகி, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, காவேரி கூட்டுக் குடிநீர் குழாயை நிரந்தரமாக சீரமைப்பதுடன், சேதமடைந்த சாலையையும் தரமான முறையில் முழுமையாக புதுப்பித்து, பொதுமக்களின் சிரமத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்3
- இடுக்கியில் நிலச்சரிவுக்கு பெண் பலி; கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது:இடுக்கியில் நிலச்சரிவுக்கு பெண் பலி; 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக மந்தமாக இருந்த தென்மேற்கு பருவமழை, கடந்த மூன்று நாட்களாக மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. நேற்று இரவு முழுவதும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. தமிழக-கேரள எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டம், தொடுபுழா தாலுகாவிற்கு உட்பட்ட குடயத்தூர் கொலப்ரா அருகிலுள்ள அடூர் மலைப்பகுதியில் இன்று அதிகாலை திடீரெனப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி சுமதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு, சுமதியின் சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர். இதேபோல், கோட்டயம் மாவட்டத்திலும் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.பூஞ்சார் தெக்கேக்கரா பையனித்தோட்டம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு குடியிருப்பு வீடு முழுமையாகச் சேதமடைந்துள்ளது. மழை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில்; இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ (Orange Alert) விடுக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வயநாடு, இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மீட்புப் பணிகளை விரைவுபடுத்தும் பொருட்டு, தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து 34 வீரர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படையின் சிறப்புப் பிரிவு கேரளா விரைந்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.1
- திண்டுக்கல் மாநகராட்சி ஆணையரின் வேண்டுகோள் ஆத்தூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து உள்ளதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்1
- கண்ணெதிரே கருகிப்போன கனவு!” தமிழ்புரம் விவசாயிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய தீ விபத்து – 2 ஏக்கர் கரும்பு பயிர்கள் சாம்பல்! “கண்ணெதிரே கருகிப்போன கனவு!” தமிழ்புரம் விவசாயிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய தீ விபத்து – 2 ஏக்கர் கரும்பு பயிர்கள் சாம்பல்! ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தமிழ்புரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம், தனது விவசாய நிலத்தில் சுமார் 3½ ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு பயிர்களை சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில், நேற்று கரும்பு வயலில் எதிர்பாராத விதமாக திடீரென தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியது. கரும்பு பயிர்கள் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி ஆறுமுகம், அருகிலிருந்த விவசாயிகளின் உதவியுடன் டிராக்டர்களை பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். ஆனால், காற்றின் வேகத்தால் தீ கொழுந்துவிட்டு வேகமாக பரவியதால், விவசாயிகள் மேற்கொண்ட தீயணைப்பு முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆசனூரிலிருந்து தமிழ்புரம் கிராமத்திற்கு தீயணைப்பு வாகனம் விரைந்து சென்ற நிலையில், அது சம்பவ இடத்தை அடைவதற்குள் தீ வேகமாக பரவி, சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு பயிர்கள் முற்றிலும் தீயில் கருகி சாம்பலாகின. பல மாதங்களாக கடுமையாக உழைத்து, அறுவடையை எதிர்பார்த்து வளர்த்து வந்த கரும்பு பயிர்கள் கண்முன்னே தீயில் கருகி நாசமானதை கண்டு விவசாயி ஆறுமுகம் பெரும் வேதனை அடைந்தார். இந்த தீ விபத்தால் அவருக்கு கணிசமான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. தாளவாடியில் தீயணைப்பு நிலையம் அவசியம்! தாளவாடி மலைப்பகுதியில் விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ள நிலையில், தீ விபத்து போன்ற அவசர காலங்களில் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தை சென்றடைவதில் ஏற்படும் காலதாமதத்தால் பெரும் சேதங்கள் ஏற்படுவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட விவசாயி ஆறுமுகத்திற்கு அரசு உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற தீ விபத்துகளில் பெரும் சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் தாளவாடி பகுதியில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1