Shuru
Apke Nagar Ki App…
புதுக்கோட்டை: மன்னர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு! புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் செனையக்குடி கிராம எல்லையிலுள்ள பெரிய வயலகாட்டில் தனியாருக்கு சொந்தமான நிலம் அமைந்துள்ளது. அந்நிலத்தில் புதுக்கோட்டையை மன்னாராக இருந்து ஆட்சி செய்த தொண்டைமான் மன்னர் நிலம் தானம் வழங்கியதை வெளிப்படுத்தும் கல்வெட்டு, வாமன கோட்டுருவத்துடன் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆ.மணிகண்டன் கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நம்ம ஊரு புதுக்கோட்டை
புதுக்கோட்டை: மன்னர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு! புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் செனையக்குடி கிராம எல்லையிலுள்ள பெரிய வயலகாட்டில் தனியாருக்கு சொந்தமான நிலம் அமைந்துள்ளது. அந்நிலத்தில் புதுக்கோட்டையை மன்னாராக இருந்து ஆட்சி செய்த தொண்டைமான் மன்னர் நிலம் தானம் வழங்கியதை வெளிப்படுத்தும் கல்வெட்டு, வாமன கோட்டுருவத்துடன் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆ.மணிகண்டன் கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
More news from தமிழ்நாடு and nearby areas
- புதுக்கோட்டை: மன்னர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு! புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் செனையக்குடி கிராம எல்லையிலுள்ள பெரிய வயலகாட்டில் தனியாருக்கு சொந்தமான நிலம் அமைந்துள்ளது. அந்நிலத்தில் புதுக்கோட்டையை மன்னாராக இருந்து ஆட்சி செய்த தொண்டைமான் மன்னர் நிலம் தானம் வழங்கியதை வெளிப்படுத்தும் கல்வெட்டு, வாமன கோட்டுருவத்துடன் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆ.மணிகண்டன் கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.1
- திண்டுக்கல் ரயில் நிலையம் முன்பு பயணிகளை ஏற்ற வந்த அரசு பேருந்து பழுதாகி நின்றதால் *பொதுமக்கள் அரசு பேருந்தை தள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்1
- வேடசந்தூர்: மாரம்பாடி புனித பெரிய அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித பெரிய அந்தோனியார் ஆலயம் உள்ளது. 2026 ஆம் ஆண்டு பிறந்ததையொட்டி சிறப்பு திருப்பலி பூஜைகள் நடைபெற்றது. ஆலயத்தின் பங்கு தந்தை சுரேஷ்சகாயராஜ், துணைப் பங்கு தந்தை அமல்ராஜ் ஆகியோர் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த சிறப்பு பூஜையில் மாரம்பாடி ஊர் மேனேஜர் மற்றும் நாட்டாமை, மணியக்காரர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.1
- நாமக்கல் மாவட்டம் அத்தனூர் பேரூராட்சியில் இன்று ஜனவரி 1 புத்தாண்டு விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது பொதுமக்கள் புத்தாண்டு வரவேற்கும் பட்சத்தில் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர் மற்றும் வண்ண வான வெடிகள் வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர். கோயில்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டன அனைத்து இல்லங்களிலும் வண்ணக் கோலங்கள் இட்டு மிகச் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்1
- உதிரி பாகங்களின் விலை உயர்வுக்கு ஏற்ப போர்வெல் கட்டணத்தை உயர்த்தக்கோரி தேனி மாவட்டத்தில் போர்வெல் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் குமுளி- மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் 50க்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்களை நிறுத்தி வைத்து 4வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் திருச்செங்கோட்டை தலைமை இடமாக வைத்து போர்வெல் உரிமையாளர்கள் சங்கம் இயங்கி வருகிறது.அங்குள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்கள் இந்தியா முழுவதும் சென்று பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.இவற்றில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் ,வாகன பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பு மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை உள்ளிட்ட சார்பு தொழில் பணிகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலை செய்து வருகின்றனர்.இந்நிலையில் துளைபோட பயன்படுத்தப்படும் காப்பர், ராடு உள்ளிட்ட பல்வேறு உதிரி பாகங்களின் விலை சந்தை மார்க்கெட்டில் ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்படுவதால் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.சீனாவில் இருந்து வரும் காப்பர் மூலப்பொருள் வரத்து நின்றதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்தியாவில் கையிருப்பில் உள்ள காப்பர் குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 20,000 ரூபாய் அளவிற்கு விலை உயர்ந்துள்ளது.ஆனால் குறிப்பாக விலை உயர்வுக்கு ஏற்ப போர்வெல் கட்டணத்தை உயர்த்தி ஏஜெண்டுகளிடமும் பொதுமக்களிடமும் போர்வெல் உரிமையாளர்களால் வாங்க முடியவில்லை.இதனால் இந்தியா முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் போர்வெல் உரிமையாளர்கள் உதிரி பாகங்களின் விலை உயர்வுக்கு ஏற்ப போர்வெல் கட்டணத்தை உயர்த்த கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்ட போர்வெல் உரிமையாளர்கள் குமுளி - மதுரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஆண்டிபட்டி அருகே கரிசல்பட்டி விலக்கு பகுதியில் 50க்கும் மேற்பட்ட போர்வெல் வாகனங்களை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்க தற்போது 4வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு இதற்கு நடவடிக்கை எடுத்து உதிரி பாகங்களின் விலை உயர்வுக்கு ஏற்ப கட்டணத்தை உயர்த்தும் வரை காலவரையற்ற முறையில் தங்களது போராட்டம் தொடரும் என போர்வெல் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.1
- வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருட்டு பாலஜங்கமனஅள்ளி கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் நேற்று முன்தினம் குடும்பத்துடன் வீட்டை பூட்டி விட்டு தஞ்சாவூர் சென்று இருந்த நிலையில், நேற்று வீடு திரும்பி பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 10.5 பவுன் தங்க நகை 4 லட்சம் பணம் திருடப்பட்டது தெரியவந்தது இது குறித்து அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்1
- அதியமான் கோட்டை ஸ்ரீ வீரகாரன் கோயில் 27ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக கொண்டாட்டம் நல்லம்பள்ளி அருகே அதியமான் கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ வீரகாரன் கோயில் 27ம் ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது, முக்கிய நாளான இன்று அதிகாலை முதலே சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. பக்தர்கள் குடும்பத்துடன் வந்து நேர்த்தி கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ் விழாவிற்க்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்1
- புதுக்கோட்டை: பட்டப்பகலில் தங்க செயினை பறித்த பெண் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அடுத்த மீமிசல் சாலை விளானூரில் அடையாளம் தெரியாத ஒரு பெண், குழந்தை கழுத்தில் உள்ள செயினை பறித்துள்ளார். இதனை அடுத்து அப்பெண்ணை சிறைப்பிடித்த கிராம மக்கள் ஆவுடையார் கோவில் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த பெண் காவலர்கள் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.1