logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திண்டுக்கல்லில், காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு 72 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தினர் இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ல் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நீத்தார் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப் பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, இறந்த காவல்துறையினர் குறித்து நினைவு கூர்ந்தனர். தொடர்ந்து ADSP-கள், DSP-கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். துக்கம் அனுசரிக்கும் விதமாக காவலர்கள் அனைவரும் நெஞ்சில் மற்றும் கைகளில் கறுப்பு பட்டை அணிந்து பங்கேற்றனர். அப்போது 72 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப் பட்டது

3 hrs ago
user_Raja
Raja
திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
3 hrs ago

திண்டுக்கல்லில், காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு 72 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தினர் இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ல் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நீத்தார் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப் பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, இறந்த காவல்துறையினர் குறித்து நினைவு கூர்ந்தனர். தொடர்ந்து ADSP-கள், DSP-கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். துக்கம் அனுசரிக்கும் விதமாக காவலர்கள் அனைவரும் நெஞ்சில் மற்றும் கைகளில் கறுப்பு பட்டை அணிந்து பங்கேற்றனர். அப்போது 72 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப் பட்டது

More news from தமிழ்நாடு and nearby areas
  • அஞ்சலி பைபாஸ் பகுதியில் போக்குவரத்து நெரிசலை உடனடியாக சீர் செய்த போலீசார் திண்டுக்கல் அஞ்சலி பைபாஸ் பகுதியானது திருச்சி கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் திண்டுக்கல் மதுரை பழனி தேனி உள்ளிட்ட பகுதிகளுக்கு முக்கிய இணைப்பாக உள்ளது இந்த ரவுண்டானா பகுதியில் சுமார் அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்தனர்
    2
    அஞ்சலி பைபாஸ் பகுதியில் போக்குவரத்து நெரிசலை உடனடியாக சீர் செய்த போலீசார்
திண்டுக்கல் அஞ்சலி பைபாஸ் பகுதியானது திருச்சி கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் திண்டுக்கல் மதுரை பழனி தேனி உள்ளிட்ட பகுதிகளுக்கு முக்கிய இணைப்பாக உள்ளது இந்த ரவுண்டானா பகுதியில் சுமார் அரை மணி நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதை தொடர்ந்து போலீசார் அப்பகுதியில் போக்குவரத்தை சீர் செய்தனர்
    user_Raja
    Raja
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    52 min ago
  • ஸ்ரீராமபுரம் பேரூராட்சி தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா கோலாகலம்திண்டுக்கல் மத்திய மாவட்டச் செயலாளர் எம்.எல். வாசுதேவன் தலைமையில் பல்வேறு பகுதிகளில் ஆயுத பூஜை கொண்டாட்டம்! திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆயுத பூஜை விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகக் கட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மத்திய மாவட்டச் செயலாளர் எம்.எல். வாசுதேவன் அவர்களின் தலைமையில் நடைபெற்று வரும் கட்சி நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, ஸ்ரீராமபுரம் பேரூராட்சிச் செயலாளர் அருள்குமார் தலைமையில் இந்த விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி இணைச் செயலாளர் மணிகண்டன், பொருளாளர் விவின் குமார், துணைச் செயலாளர் முத்துகுமார், மகளிர் அணி நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள், தொண்டர் அணி நிர்வாகிகள் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, கட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவராகச் சென்று இறைவனை வழிபட்டு, விழாவில் பங்கேற்றனர். தொடர்ந்து, விழாவில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு கடலைச் சுண்டல், பழ வகைகள் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கட்சியின் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆயுத பூஜை விழா, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆயுத பூஜை விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
    1
    ஸ்ரீராமபுரம் பேரூராட்சி தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா கோலாகலம்திண்டுக்கல் மத்திய மாவட்டச் செயலாளர் எம்.எல். வாசுதேவன் தலைமையில் பல்வேறு பகுதிகளில் ஆயுத பூஜை கொண்டாட்டம்!
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆயுத பூஜை விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகக் கட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
இதில் 
திண்டுக்கல் மத்திய மாவட்டச் செயலாளர் எம்.எல். வாசுதேவன் அவர்களின் தலைமையில் நடைபெற்று வரும் கட்சி நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, ஸ்ரீராமபுரம் பேரூராட்சிச் செயலாளர் அருள்குமார் தலைமையில் இந்த விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி இணைச் செயலாளர் மணிகண்டன், பொருளாளர் விவின் குமார், துணைச் செயலாளர் முத்துகுமார், மகளிர் அணி நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள், தொண்டர் அணி நிர்வாகிகள் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி, கட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவராகச் சென்று இறைவனை வழிபட்டு, விழாவில் பங்கேற்றனர்.
தொடர்ந்து, விழாவில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு கடலைச் சுண்டல், பழ வகைகள் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
கட்சியின் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆயுத பூஜை விழா, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆயுத பூஜை விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.
    user_ALL INDIA REPORTER KPA
    ALL INDIA REPORTER KPA
    ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    20 hrs ago
  • திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று? திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வளாகத்தில் இன்று காவலர்கள் வீர வணக்கம் நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் பனி மரணம் மற்றும் சாலை விபத்தில் மரணம் அடைந்த காவல்துறையினருக்கு வீர வணக்கத்தை 72- குண்டுகள் முழங்க காவல்துறையினர் தெரிவித்தனர்.
    1
    திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் இன்று?
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வளாகத்தில் இன்று காவலர்கள் வீர வணக்கம் நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் பனி மரணம் மற்றும் சாலை விபத்தில் மரணம் அடைந்த காவல்துறையினருக்கு வீர வணக்கத்தை 72- குண்டுகள் முழங்க  காவல்துறையினர் தெரிவித்தனர்.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    3 hrs ago
  • வையம்பட்டி அருகே வீ த லீடர் அமைப்பு நடவடிக்கையின் பேரில் குடிநீர் வசதி திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதி வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டி ஊராட்சி தோப்பூர் களத்தில் நீண்ட நாட்களாக தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து பொதுமக்கள் முதல்வர் தனி செல் பிரிவு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து வீ த லீடர் மணப்பாறை சட்டமன்றத் தொகுதி வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டி ஊராட்சி நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் வீ த லீடர் நிர்வாகிகள் அதிகாரிகளிடம் மனு அளித்து, சமூக வலைதளங்கள் வாயிலாகவும் எடுத்துரைத்து, நேரில் ஆய்வு செய்யக் கோரினோம். எங்களது கோரிக்கையை ஏற்று அரசு அதிகாரிகள் தண்ணீர் பிரச்சனையை சரிசெய்து கொடுத்தனர்.
    1
    வையம்பட்டி அருகே வீ த லீடர் அமைப்பு நடவடிக்கையின் பேரில் குடிநீர் வசதி 
திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதி வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டி ஊராட்சி தோப்பூர் களத்தில் நீண்ட நாட்களாக தண்ணீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து பொதுமக்கள் முதல்வர் தனி செல் பிரிவு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து வீ த லீடர் மணப்பாறை சட்டமன்றத் தொகுதி வையம்பட்டி ஒன்றியம் தவளைவீரன்பட்டி ஊராட்சி  நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் வீ த லீடர் நிர்வாகிகள் அதிகாரிகளிடம் மனு அளித்து, சமூக வலைதளங்கள் வாயிலாகவும் எடுத்துரைத்து, நேரில் ஆய்வு செய்யக் கோரினோம். எங்களது கோரிக்கையை ஏற்று அரசு அதிகாரிகள் தண்ணீர் பிரச்சனையை சரிசெய்து கொடுத்தனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    11 min ago
  • *விவசாய பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி தவெக அரசை கண்டித்து தேனியில் இடதுசாரி விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் - போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்* *எல்நினோ பாதிப்பு காரணமாக தமிழக முழுவதும் உள்ள மாவட்டங்களை "வறட்சி மாவட்டங்களாக" அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்* தவெக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி தமிழகம் முழுவதும் இடதுசாரி விவசாய சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது இதன் ஒரு பகுதியாக தேனி நேரு சிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது முன்னதாக சிறிது தூரம் நடைபயணமாக வருகை தந்து பின்னர் நேரு சிலை முன்பு உள்ள சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் தவெக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரியும், எல் நினோ பாதிப்பால் அணைகளில் நீர் வரத்து இன்றி முதல் போக சாகுபடி செய்ய முடியாமல் போனதால் தமிழக முழுவதும் உள்ள மாவட்டங்களை "வறட்சி மாவட்டங்களாக" அறிவித்து விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டியும் மேகமலை - வருஷநாடு விவசாயிகளுக்கு 2006 வன உரிமை சட்டத்தின் படி பட்டா வழங்க கோரியும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர் இதனால் தேனி நேர சிலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
    1
    *விவசாய பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி தவெக அரசை கண்டித்து தேனியில் இடதுசாரி விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் - போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்*
*எல்நினோ பாதிப்பு காரணமாக தமிழக முழுவதும் உள்ள மாவட்டங்களை "வறட்சி மாவட்டங்களாக" அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்*
தவெக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி தமிழகம் முழுவதும் இடதுசாரி விவசாய சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது 
இதன் ஒரு பகுதியாக தேனி நேரு சிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது 
முன்னதாக சிறிது தூரம் நடைபயணமாக வருகை தந்து பின்னர் நேரு சிலை முன்பு உள்ள சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் 
தவெக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல விவசாயிகளின் கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரியும், 
எல் நினோ பாதிப்பால் அணைகளில் நீர் வரத்து இன்றி முதல் போக சாகுபடி செய்ய முடியாமல் போனதால் தமிழக முழுவதும் உள்ள மாவட்டங்களை "வறட்சி மாவட்டங்களாக" அறிவித்து விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டியும்
மேகமலை - வருஷநாடு விவசாயிகளுக்கு 2006 வன உரிமை சட்டத்தின் படி பட்டா வழங்க கோரியும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் 
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர் இதனால் தேனி நேர சிலை பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
    user_Shakthi
    Shakthi
    Local News Reporter பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    48 min ago
  • சத்திரப்பட்டியில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், சத்திரப்பட்டி, அரசு மதுபான கடையில் 11-10-26 ஞாயிற்றுக்கிழமை 3:40 மணியிலிருந்து4:30 ஒரு மணி நேரமாக பாட்டிலை உடைத்து மதுபிரியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த சைக்கோ வாலிபர் மது மற்றும் கஞ்சா போதையில் நான் தேனியில் பெரிய ரவுடி கத்தியை எடுத்தால் சங்கை அறுக்காமல் வைக்க மாட்டேன் மதுபான கடை பார்களை அடித்து நொறுக்கி விடுவேன் தீ வைத்து கொளுத்தி விடுவேன் எவன் தடுக்க வந்தாலும் குத்தி குடலை உருவி விடுவேன் கூறி வந்தவன் காவல்துறை விரைந்து வந்து விசாரணை செய்து விரட்டிப் பிடிக்கும் போது அவன் பைக்கில் தப்பி ஓடியவன் சத்திரப்பட்டி மெயின் ரோட்டின் எதிரே வந்த முதியவரின் வாகனத்தின் மோதி படுகாயங்களை ஏற்படுத்தி விட்டு ஆபாச வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டல் விட்டுள்ளான் எங்கள் ஆட்சி தான் நடைபெறுகிறது என்று கூறிவிட்டு தொடர்ந்து தலைமறைவு உடன் வந்தவர்களின் செல்போன் நம்பர் : 7604934071 & 9159219108 தேனியில் குற்றச் செயல்கள் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டவன் ஒட்டச்சத்திரத்தில் டிரைவராக வேலை பார்த்துக் கொண்டு தலைமறைவாக உள்ளதாக தகவல் இரண்டு வாரமாக எந்த நடவடிக்கையும் எடுக்காத சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து பேசி லஞ்சம் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்க வில்லையா என்பது கேள்விக்குறியாக உள்ளது எனவே மாவட்ட ஆட்சியாளர் துர்கா மூர்த்தி அவர்களும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும் அரசு மதுபான கடைகளுக்கே பாதுகாப்பு இல்லை பார், மது பிரியர்கள், பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த குற்றவாளியை பிடித்து கடுமையான தண்டனை கொடுக்க வேண்டுமென மது பிரியர்கள், சமூக ஆர்வலர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர் நடவடிக்கை எடுக்கப்படுமா???
    1
    சத்திரப்பட்டியில் காவல் நிலையத்தில்   கட்டப்பஞ்சாயத்து 
திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், சத்திரப்பட்டி, அரசு மதுபான கடையில்  11-10-26
ஞாயிற்றுக்கிழமை 3:40 மணியிலிருந்து4:30 ஒரு மணி நேரமாக பாட்டிலை உடைத்து  மதுபிரியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த  சைக்கோ வாலிபர் மது மற்றும் கஞ்சா போதையில் நான் தேனியில் பெரிய ரவுடி கத்தியை எடுத்தால் சங்கை அறுக்காமல் வைக்க மாட்டேன் மதுபான கடை பார்களை  அடித்து நொறுக்கி விடுவேன் தீ வைத்து கொளுத்தி விடுவேன் எவன் தடுக்க வந்தாலும் குத்தி குடலை உருவி  விடுவேன் கூறி வந்தவன்   காவல்துறை விரைந்து வந்து விசாரணை செய்து விரட்டிப் பிடிக்கும்  போது அவன் பைக்கில் தப்பி  ஓடியவன் சத்திரப்பட்டி மெயின் ரோட்டின்  எதிரே வந்த முதியவரின் வாகனத்தின் மோதி படுகாயங்களை  ஏற்படுத்தி விட்டு  ஆபாச வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டல் விட்டுள்ளான்   எங்கள் ஆட்சி தான் நடைபெறுகிறது என்று  கூறிவிட்டு தொடர்ந்து தலைமறைவு  உடன் வந்தவர்களின் செல்போன் நம்பர் : 7604934071 & 9159219108 தேனியில் குற்றச் செயல்கள் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டவன் ஒட்டச்சத்திரத்தில் டிரைவராக வேலை பார்த்துக் கொண்டு  தலைமறைவாக  உள்ளதாக தகவல் இரண்டு  வாரமாக எந்த நடவடிக்கையும் எடுக்காத  சத்திரப்பட்டி காவல்  நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து பேசி லஞ்சம் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்க வில்லையா என்பது கேள்விக்குறியாக உள்ளது  எனவே மாவட்ட ஆட்சியாளர் துர்கா மூர்த்தி அவர்களும் மாவட்ட காவல்துறை  கண்காணிப்பாளரும் அரசு மதுபான கடைகளுக்கே  பாதுகாப்பு இல்லை பார், மது பிரியர்கள், பொதுமக்கள்  உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த குற்றவாளியை பிடித்து  கடுமையான தண்டனை கொடுக்க வேண்டுமென மது பிரியர்கள், சமூக ஆர்வலர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர் நடவடிக்கை எடுக்கப்படுமா???
    user_முத்து ராஜா
    முத்து ராஜா
    Local News Reporter பழனி, திண்டுக்கல், தமிழ்நாடு•
    2 hrs ago
  • சிங்கம்புணரி தனியார் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்வு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தனியார் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்வு நடைபெற்றது. நவராத்திரி விழாவின் பத்தாம் நாளான இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்து பள்ளியில் சேர்த்தனர். குருவான ஆசிரியை குழந்தையின் கையைப் பிடித்து நெல்மணியில் அகரம் எழுதச் சொல்லி கல்வி ஆரம்பம் செய்தனர். சரஸ்வதி வேடமிட்ட குழந்தைகள் வீணையுடன் அமர, பாலகர்கள் அ, ஆ எழுதி கல்விப் பயணத்தைத் துவக்கினர். பழமை மாறாத இந்நிகழ்வு பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
    1
    சிங்கம்புணரி தனியார் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்வு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தனியார் மெட்ரிக் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்வு நடைபெற்றது. நவராத்திரி விழாவின் பத்தாம் நாளான இன்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு புத்தாடை அணிவித்து பள்ளியில் சேர்த்தனர். குருவான ஆசிரியை குழந்தையின் கையைப் பிடித்து நெல்மணியில் அகரம் எழுதச் சொல்லி கல்வி ஆரம்பம் செய்தனர். சரஸ்வதி வேடமிட்ட குழந்தைகள் வீணையுடன் அமர, பாலகர்கள் அ, ஆ எழுதி கல்விப் பயணத்தைத் துவக்கினர். பழமை மாறாத இந்நிகழ்வு பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
    user_ABDUL SALAM
    ABDUL SALAM
    Photographer சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • திண்டுக்கல்லில், காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு 72 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தினர் இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ல் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நீத்தார் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப் பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, இறந்த காவல்துறையினர் குறித்து நினைவு கூர்ந்தனர். தொடர்ந்து ADSP-கள், DSP-கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். துக்கம் அனுசரிக்கும் விதமாக காவலர்கள் அனைவரும் நெஞ்சில் மற்றும் கைகளில் கறுப்பு பட்டை அணிந்து பங்கேற்றனர். அப்போது 72 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப் பட்டது
    1
    திண்டுக்கல்லில், காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு 72 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தினர்
இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ல் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள காவலர் நீத்தார் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப் பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, இறந்த காவல்துறையினர் குறித்து நினைவு கூர்ந்தனர்.
தொடர்ந்து ADSP-கள், DSP-கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
துக்கம் அனுசரிக்கும் விதமாக காவலர்கள் அனைவரும் நெஞ்சில் மற்றும் கைகளில் கறுப்பு பட்டை அணிந்து பங்கேற்றனர். அப்போது 72 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப் பட்டது
    user_Raja
    Raja
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.