திண்டுக்கல் லோயர்கேம்ப் இரயில்பாதை திட்ட முயற்சியாளர்களுக்கு பாராட்டு விழா திண்டுக்கல் லோயர்கேம்ப் இரயில்பாதை திட்ட முயற்சியாளர்களுக்கு பாராட்டு விழா குமுளி: தேனி மாவட்டம் குமுளி அருகே குமுளி வர்த்தகர் சங்க கூட்ட அரங்கில், திண்டுக்கல் லோயர்கேம்ப் அகல இரயில்பாதை திட்டம் செயல்படுத்த ஆய்வு செய்ய, மத்திய இரயில்வே அமைச்சர் உத்திரவிட்டுள்ளதை அடுத்து, அதற்காக முயற்சி எடுத்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன், இடுக்கி நாடாளுமன்ற உறுப்பினர் டீன்குரியகோஸ், திண்டுக்கல் குமுளி இரயில்பாதை திட்டப் போராட்டக்குழு தலைவர் ஆர்.சங்கர நாராயணன் மற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. குமுளி வியாபாரிகள் விவசாயிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் மஜோகாரிமுட்டம், மாவட்ட சங்கதலைவர் சன்னி பய்யம்பள்ளி, துணைத்தலைவர் சிபுதோமஸ், தேக்கடி டூரிசம் கோஆர்டினேஷன் கமிட்டி தலைவர் முகமது ஷாஜி, குமுளி பஞ்சாயத்து தலைவர் M.M.வர்கீஸ் ஆகியோர் விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்தனர். திண்டுக்கல் குமுளி அகல இரயில்பாதை திட்டப் போராட்டக்குழு துணைத்தலைவர் ரவிச்சந்திரன், குரூஸ் தண்டபாணி, சின்னமனூர் எல்.கே.சிவமணி, முருகேசன், ராஜவேலு செயலாளர்கள் போடி கோபால், மகாராஜன், வெங்கடேஷ், காந்திராஜன், இராஜேந்திரபிரசாத் மற்றும் பல்வேறு கிளை நிர்வாகிகள் கஜேந்திரன், துடிவீரன், பாலையா, ஜெயபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போராட்டங்களில் பங்கேற்ற அனைவருக்கும் போராட்டக்குழு சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
திண்டுக்கல் லோயர்கேம்ப் இரயில்பாதை திட்ட முயற்சியாளர்களுக்கு பாராட்டு விழா திண்டுக்கல் லோயர்கேம்ப் இரயில்பாதை திட்ட முயற்சியாளர்களுக்கு பாராட்டு விழா குமுளி: தேனி மாவட்டம் குமுளி அருகே குமுளி வர்த்தகர் சங்க கூட்ட அரங்கில், திண்டுக்கல் லோயர்கேம்ப் அகல இரயில்பாதை திட்டம் செயல்படுத்த ஆய்வு செய்ய, மத்திய இரயில்வே அமைச்சர் உத்திரவிட்டுள்ளதை அடுத்து, அதற்காக முயற்சி எடுத்த தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன், இடுக்கி
நாடாளுமன்ற உறுப்பினர் டீன்குரியகோஸ், திண்டுக்கல் குமுளி இரயில்பாதை திட்டப் போராட்டக்குழு தலைவர் ஆர்.சங்கர நாராயணன் மற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. குமுளி வியாபாரிகள் விவசாயிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் மஜோகாரிமுட்டம், மாவட்ட சங்கதலைவர் சன்னி பய்யம்பள்ளி, துணைத்தலைவர் சிபுதோமஸ், தேக்கடி டூரிசம் கோஆர்டினேஷன் கமிட்டி தலைவர் முகமது ஷாஜி, குமுளி பஞ்சாயத்து தலைவர் M.M.வர்கீஸ் ஆகியோர் விழாவினை சிறப்பாக ஏற்பாடு
செய்தனர். திண்டுக்கல் குமுளி அகல இரயில்பாதை திட்டப் போராட்டக்குழு துணைத்தலைவர் ரவிச்சந்திரன், குரூஸ் தண்டபாணி, சின்னமனூர் எல்.கே.சிவமணி, முருகேசன், ராஜவேலு செயலாளர்கள் போடி கோபால், மகாராஜன், வெங்கடேஷ், காந்திராஜன், இராஜேந்திரபிரசாத் மற்றும் பல்வேறு கிளை நிர்வாகிகள் கஜேந்திரன், துடிவீரன், பாலையா, ஜெயபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். போராட்டங்களில் பங்கேற்ற அனைவருக்கும் போராட்டக்குழு சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
- வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அனைத்து நிலை வருவாய்த்துறை அலுவலர்களுக்கு சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும் வருவாய் அலுவலர்களின் பணித்தன்மையை கருத்தில் கொண்டு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், வருவாய்த் துறையில் காலியாக உள்ள காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறை அலுவலர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர் இதனால் தேனி - மதுரை நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது1
- சிறுமியின் பேச்சு சிறப்பு #tamil #publicresponse #publicintrest #DMK #TVK #ADMK #publicspeaking1
- Post by G.thangarasu1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் ஆதிலட்சுமிபுரம் அருகே உள்ள பழைய இரும்பு கடையில் திடீரென தீப்பற்றி எரிந்ததை தொடர்ந்து ஆத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலகத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் ஆத்தூர் மற்றும் நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர்கள் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொழுந்துவிட்டு பற்றி எரிந்த தீயை நீண்ட நேரமாக போராடி தண்ணீரை பீச்சி அடித்து முற்றிலுமாக அணைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் புகை மூட்டமாக காட்சியளித்ததுடன் பரபரப்பான சூழல் நிலவியது.1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன் கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட செங்காட்டு காலனி அருகே தனியார் தென்னந்தோப்புகள் அதிகம் உள்ளன. இதில் ஆண் மயில்கள், பெண் மயில்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட மைல்கள் வசித்து வருகின்றன. இதற்கிடையில் இன்று அதிகாலையில் சூரியனை வரவேற்கும் விதமாக செங்காட்டு காலனி அருகே உள்ள தனியார் நெல் குடோன் மேற்கூரையின் மேல் ஒரு ஆண்மையில் திடீரென தோகை விரித்தாடியது இதனை அருகில் உள்ள பொதுமக்கள் மறைமுகமாக நின்று கண்டு ரசித்தனர். *இடம் செங்காட்டு காலனி நெல் குடோன்*1
- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டின் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.1
- அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலை கண்டித்து, திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போரை உடனடியாக நிறுத்தி அப்பாவி மக்களின் உயிர்களை காப்பாற்ற வேண்டும் என முழக்கமிட்டனர். மேலும், மத்திய அரசு தலையிட்டு போரை நிறுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோரிக்கை விடுத்தனர்.1
- இடிந்து விழும் நிலையில் உள்ள நீர்த்தேக்க தொட்டியினை விரைந்து அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்டம் மாரம்பாடி ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கை1