மழை பெய்தால் எம்எல்ஏ அலுவலகத்துல தங்குங்க, சாப்பாடு தர சொல்றேன்!" – கும்பகோணம் தரைக்கடை வியாபாரிகளை நெகிழ வைத்த வேளாண் அமைச்சர் வினோத்! வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், கும்பகோணத்தில் தீபாவளி வியாபாரம் இறுதிச் கட்டத்தை எட்டியுள்ளது. கும்பகோணம் ஆயிகுளம், டைமண்ட் தியேட்டர், உச்சிப்பிள்ளையார் கோவில், பொற்றாமரை குளம் மற்றும் காந்தி பூங்கா ஆகியப் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் தரைக்கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இருப்பினும், அவ்வப்போது பெய்து வரும் கனமழையால் வியாபாரிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், கும்பகோணம் கடைவீதிகளுக்கு நேரில் நடந்து சென்ற வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத், தரைக்கடை வியாபாரிகளைச் சந்தித்துப் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது வியாபாரிகளிடம் கனிவுடன் பேசிய அமைச்சர், "தரைக்கடை அமைப்பதற்கு உங்களிடம் யாரேனும் பணம் வாங்கினார்களா? அல்லது பணம் கேட்டு மிரட்டினார்களா? அப்படி யாராவது பணம் கேட்டால் எனக்கு உடனடியாகத் தகவல் சொல்லுங்கள், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கிறேன்" என்று தைரியம் அளித்தார். "அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அருகிலேயே எம்.எல்.ஏ அலுவலகம் இருக்கிறது; மழை நேரத்தில் நீங்கள் அங்கு சென்று தங்குங்கள். உங்களுக்குத் தேவையான உணவுகளை ஏற்பாடு செய்து தரச் சொல்கிறேன். நல்லபடியாக வியாபாரத்தை முடித்துவிட்டு, உங்கள் சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்துடன் தீபாவளியைச் சந்தோஷமாகக் கொண்டாடுங்கள்" என அன்புக்கூறி உபசரித்தார். அமைச்சரின் இந்த எதிர்பாராத அன்பும், தாயுள்ளத்தோடு கூடிய அக்கறையும் அங்குள்ள தரைக்கடை வியாபாரிகள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி உச்சிப் பிள்ளையார் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக புறக்காவல் நிலையத்திற்கும் நேரில் சென்ற அமைச்சர், அங்குள்ள கண்காணிப்புப் பணிகளை ஆய்வு செய்தார். பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் விழிப்புடன் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளுமாறு அங்கிருந்த காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.
மழை பெய்தால் எம்எல்ஏ அலுவலகத்துல தங்குங்க, சாப்பாடு தர சொல்றேன்!" – கும்பகோணம் தரைக்கடை வியாபாரிகளை நெகிழ வைத்த வேளாண் அமைச்சர் வினோத்! வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், கும்பகோணத்தில் தீபாவளி வியாபாரம் இறுதிச் கட்டத்தை எட்டியுள்ளது. கும்பகோணம் ஆயிகுளம், டைமண்ட் தியேட்டர், உச்சிப்பிள்ளையார் கோவில், பொற்றாமரை குளம் மற்றும் காந்தி பூங்கா ஆகியப் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் தரைக்கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இருப்பினும், அவ்வப்போது பெய்து வரும் கனமழையால் வியாபாரிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், கும்பகோணம் கடைவீதிகளுக்கு நேரில் நடந்து சென்ற வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத், தரைக்கடை வியாபாரிகளைச் சந்தித்துப் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது வியாபாரிகளிடம் கனிவுடன் பேசிய அமைச்சர், "தரைக்கடை அமைப்பதற்கு உங்களிடம் யாரேனும் பணம் வாங்கினார்களா? அல்லது பணம் கேட்டு மிரட்டினார்களா? அப்படி யாராவது பணம் கேட்டால் எனக்கு உடனடியாகத் தகவல் சொல்லுங்கள், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கிறேன்" என்று தைரியம் அளித்தார். "அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அருகிலேயே எம்.எல்.ஏ அலுவலகம் இருக்கிறது; மழை நேரத்தில் நீங்கள் அங்கு சென்று தங்குங்கள். உங்களுக்குத் தேவையான உணவுகளை ஏற்பாடு செய்து தரச் சொல்கிறேன். நல்லபடியாக வியாபாரத்தை முடித்துவிட்டு, உங்கள் சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்துடன் தீபாவளியைச் சந்தோஷமாகக் கொண்டாடுங்கள்" என அன்புக்கூறி உபசரித்தார். அமைச்சரின் இந்த எதிர்பாராத அன்பும், தாயுள்ளத்தோடு கூடிய அக்கறையும் அங்குள்ள தரைக்கடை வியாபாரிகள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி உச்சிப் பிள்ளையார் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக புறக்காவல் நிலையத்திற்கும் நேரில் சென்ற அமைச்சர், அங்குள்ள கண்காணிப்புப் பணிகளை ஆய்வு செய்தார். பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் விழிப்புடன் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளுமாறு அங்கிருந்த காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.
- பேருந்து நிறுத்தாமல் சென்ற அரசுப் பேருந்து: கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் கூலித் தொழிலாளப் பெண்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்! கள்ளக்குறிச்சி மாவட்டம், கோமுகி அணை அருகே கச்சிராயப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில், நேற்று (06.11.2026) மதியம் சுமார் 2:30 மணியளவில் கொட்டும் மழையிலும் பேருந்திற்காகக் காத்திருந்த கூலித் தொழிலாளப் பெண்களை ஏற்றிச் செல்லாமல் அரசுப் பேருந்து நிறுத்தாமல் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூலக்காட்டில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கிச் சென்ற ‘வெற்றி பயணம்’ அரசுப் பேருந்தை, வழியில் நின்று கொண்டிருந்த தினக்கூலி வேலை செய்யும் பெண்கள் கைகாட்டி நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால், ஓட்டுநரும் நடத்துநரும் பேருந்தை நிறுத்தாமல் வேகமாக இயக்கிச் சென்றுள்ளனர். கனமழையிலும் பேருந்துக்காகக் காத்திருந்த தங்களை ஏற்றிச் செல்லாமல் அலட்சியமாகச் சென்ற பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது கள்ளக்குறிச்சி போக்குவரத்துத்துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- மழை பெய்தால் எம்எல்ஏ அலுவலகத்துல தங்குங்க, சாப்பாடு தர சொல்றேன்!" – கும்பகோணம் தரைக்கடை வியாபாரிகளை நெகிழ வைத்த வேளாண் அமைச்சர் வினோத்! வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், கும்பகோணத்தில் தீபாவளி வியாபாரம் இறுதிச் கட்டத்தை எட்டியுள்ளது. கும்பகோணம் ஆயிகுளம், டைமண்ட் தியேட்டர், உச்சிப்பிள்ளையார் கோவில், பொற்றாமரை குளம் மற்றும் காந்தி பூங்கா ஆகியப் பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சிறு வியாபாரிகள் தரைக்கடை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இருப்பினும், அவ்வப்போது பெய்து வரும் கனமழையால் வியாபாரிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், கும்பகோணம் கடைவீதிகளுக்கு நேரில் நடந்து சென்ற வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத், தரைக்கடை வியாபாரிகளைச் சந்தித்துப் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது வியாபாரிகளிடம் கனிவுடன் பேசிய அமைச்சர், "தரைக்கடை அமைப்பதற்கு உங்களிடம் யாரேனும் பணம் வாங்கினார்களா? அல்லது பணம் கேட்டு மிரட்டினார்களா? அப்படி யாராவது பணம் கேட்டால் எனக்கு உடனடியாகத் தகவல் சொல்லுங்கள், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கிறேன்" என்று தைரியம் அளித்தார். "அவ்வப்போது மழை பெய்து வருகிறது. அருகிலேயே எம்.எல்.ஏ அலுவலகம் இருக்கிறது; மழை நேரத்தில் நீங்கள் அங்கு சென்று தங்குங்கள். உங்களுக்குத் தேவையான உணவுகளை ஏற்பாடு செய்து தரச் சொல்கிறேன். நல்லபடியாக வியாபாரத்தை முடித்துவிட்டு, உங்கள் சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்துடன் தீபாவளியைச் சந்தோஷமாகக் கொண்டாடுங்கள்" என அன்புக்கூறி உபசரித்தார். அமைச்சரின் இந்த எதிர்பாராத அன்பும், தாயுள்ளத்தோடு கூடிய அக்கறையும் அங்குள்ள தரைக்கடை வியாபாரிகள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி உச்சிப் பிள்ளையார் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக புறக்காவல் நிலையத்திற்கும் நேரில் சென்ற அமைச்சர், அங்குள்ள கண்காணிப்புப் பணிகளை ஆய்வு செய்தார். பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் விழிப்புடன் கண்காணிப்புப் பணியை மேற்கொள்ளுமாறு அங்கிருந்த காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.1
- புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் 3 மாதங்களாக ஊதியமில்லை: தீபாவளி பண்டிகை வேளையிலும் தவிக்கும் ஊழியர்கள்! புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (PTU) பணியாற்றி வரும் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத ஊழியர்களுக்குக் கடந்த 3 மாதங்களாக அரசு மானிய நிதி (GIA – Grant-in-Aid) வழங்கப்படாததால், அவர்கள் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். பல்கலைக்கழக நிதி ஒதுக்கீட்டிற்கான GIA கோப்பு, உயர்கல்வித்துறை மற்றும் நிதித்துறையின் பல்வேறு கட்டப் பரிசீலனைகளுக்குப் பிறகு, தற்போது கடந்த மூன்று நாட்களாக ஆளுநர் அலுவலகத்தில் நிலுவையில் இருப்பதாகத் தெரிகிறது. அரசு நிதியுதவி சரியான நேரத்தில் கிடைக்காததால், ஊழியர்களுக்கான மாதாந்திர ஊதியம் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. முன்னதாக, கடந்த மாதம் ஊழியர்கள் மேற்கொண்ட தொடர் கோரிக்கைகள் மற்றும் போராட்டங்கள் காரணமாக, பல்கலைக்கழகத்தின் உள்நாட்டு நிதியிலிருந்து (Internal Fund) தற்காலிகமாக ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டுக்கூட ஊதியம் வழங்கப்படாததால், ஊழியர்களும் அவர்களது குடும்பத்தினரும் பெரும் கவலையிலும் மன உளைச்சலிலும் ஆழ்ந்துள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் அரசு உடனடியாகத் தலையிட்டு, ஆளுநர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ள கோப்பிற்கு விரைந்து ஒப்புதல் அளித்து, ஊழியர்களின் நிலுவை ஊதியத்தை தீபாவளிக்கு முன் வழங்க வேண்டும் எனப் பல்கலைக்கழக ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.1
- செந்துறை பெரியநாயகி உடனுறை சிவதாண்டஸ்வரர் கோயிலில் தேய்பிறை பிரதோஷ வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு! அரியலூர் மாவட்டம், செந்துறையில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டு பழமையான அருள்மிகு பெரியநாயகி உடனுறை சிவதாண்டஸ்வரர் திருக்கோயிலில் இன்று தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. இதனை முன்னிட்டு சிவதாண்டஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோயிலுக்கு வெளியே அமைந்துள்ள நந்தி பகவானுக்கு 16 வகையான மூலிகைப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுவாமிகள் சிறிய பல்லக்கில் எழுந்தருளி கோயில் வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த வழிபாட்டில் தேவாரப் பாடல்கள் பாடப்பட்டு, சிவனடியார்கள், சிவபக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து இறையருள் பெற்றனர். இவ்விழாவால் செந்துறை பகுதியில் பக்தி பரவசம் நிலவியது.1
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சாலையோரம் வசிக்கும் 5,000-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு புத்தாடை மற்றும் உணவு வழங்கி தன்னார்வலர் பாரதிமோகன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சாலையோரம் வசிக்கும் 5,000-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்கு புத்தாடை மற்றும் உணவு வழங்கி தன்னார்வலர் பாரதிமோகன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். பேட்டி:பாரதிமோகன் -தன்னார்வலர் மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாரதிமோகன், 'பாரதிமோகன் அறக்கட்டளை' மூலம் கடந்த பல ஆண்டுகளாகச் சாலையோரம் ஆதரவின்றித் திரியும் நபர்களுக்குத் தினந்தோறும் உணவு வழங்கி வருகிறார். மேலும், மனநலம் பாதிக்கப்பட்டுத் திரிபவர்களை மீட்டு, முடி திருத்தம் செய்து, குளிக்க வைத்து, புத்தாடை அணிவித்து, அவர்களை உரிய காப்பகங்களிலோ அல்லது குடும்பத்தினரிடமோ ஒப்படைக்கும் நற்பணிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் தங்கியுள்ள 5,000-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற ஏழை எளிய மக்களுக்கு ஈரோட்டிலிருந்து பிரத்யேகமாக வாங்கி வரப்பட்ட புத்தாடைகள் வழங்கப்பட்டன. மேலும், தீபாவளி அன்று சுமார் 1,500 பேருக்குச் சுடச்சுட சிக்கன் பிரியாணி மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டு அவர்களுடன் இணைந்து தீபாவளி உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது குறிப்பாக, உலகப் புகழ்பெற்ற சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்களான வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா மற்றும் நாகை பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட முதியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட நபர்களை நேரில் சந்தித்து, அவர்களையும் தனது குடும்பத்தினராகக் கருதி புத்தாடைகளை வழங்கி மகிழ்வித்தார். பண்டிகை நாட்களில் யாரும் கண்டுகொள்ளாத சாலையோர மனிதர்களின் துயரறிந்து, தொடர்ந்து களத்தில் நின்று உதவி செய்து வரும் தன்னார்வலர் பாரதிமோகனின் இந்த மனிதநேயப் பணியைப் பொதுமக்கள் மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் மனதாரப் பாராட்டி வருகின்றனர்.2
- நாகப்பட்டினம் நகராட்சியில் தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியல்: அக்டோபர் மாத ஊதியம் மற்றும் தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தி நாகை சிதம்பரம் சாலையில் சாலை மறியல்: ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு: நாகப்பட்டினம் நகராட்சியில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றிய வருகின்றனர். இவர்களுக்கு கடந்த இரண்டு மாதமாக ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. இதனை கண்டித்து கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பணியாளர்களுடன் நகராட்சி அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தையில் அவர்களுக்கு கடந்த நான்காம் தேதி சம்பளம் மற்றும் தீபாவளி போனஸ் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இந்த நிலையில் உறுதி அளித்தபடி ஊதியம் வழங்காததை கண்டித்து தூய்மை பணியாளர்கள் இன்று நகராட்சி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்று வரும் சாலை மறியல் காரணமாக நாகை சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கான நிலுவை ஊதியம் மற்றும் தீபாவளி போனசை உடனே வழங்க வேண்டும் என ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வலியுறுத்தி கோசங்களை எழுப்பி வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உடனடியாக தீர்வு எட்ட வேண்டும் என தூய்மை பணியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். போராட்டம் காரணமாக போலீசார் போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பி விட்டுள்ளனர்.1
- கொசப்பாடி கிராமத்தில் னசரி குடிநீர் வழங்காததை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சாலை மறியல் நடைபெற்றது..1
- nagenthran தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத அவலம்: திரு. ஜோசப் விஜய்யின் 'தவெக' ஆட்சியில் படுபாதாளத்தில் சட்டம்-ஒழுங்கு! மாநிலத் தலைநகரான சென்னை nagenthran தமிழகத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத அவலம்: திரு. ஜோசப் விஜய்யின் 'தவெக' ஆட்சியில் படுபாதாளத்தில் சட்டம்-ஒழுங்கு! மாநிலத் தலைநகரான சென்னை செங்குன்றத்தில் காவல் நிலையத்தின் அருகிலேயே கஞ்சா போதையில் ஒரு கொடூரன் பொதுமக்களைத் தாக்கியதோடு, தடுக்க வந்த காவல் உதவி ஆய்வாளரையே கத்தியால் வெட்டத் துணிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. காவல் உதவி ஆய்வாளரே உயிரைக் காப்பாற்றிக்கொள்ளக் கடும் முயற்சியில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்து போயுள்ளது என்பதற்குச் சான்றாகும். திரு. 6TVKvijayHQ தலைமையிலான தவெக அரசு நிர்வாகத்தில் முற்றிலும் தோல்வியடைந்து குற்றவாளிகளுக்குச் சட்டம் மற்றும் காவல்துறை மீதான அச்சமே இல்லாத சூழலை உருவாக்கியுள்ளது. மேடை முழக்கங்களுக்கும் கள எதார்த்தத்திற்கும் உள்ள இடைவெளியை மக்கள் தற்போது கண்கூடாக உணர்கிறார்கள்.1