Shuru
Apke Nagar Ki App…
கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் 9 பேர் உயிரிழப்பு : தமிழ்நாடு மற்றும் இங்கையிலும் கனமழைக்கு வாய்ப்பு - எச்சரிக்கை... கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை மேலும் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களிலும், இலங்கையில் உள்ள ஊவா உள்ளிட்ட சில மாகாணங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுளது.
முனைவர"நமது பூமி" சந்திரகுமார்
கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் 9 பேர் உயிரிழப்பு : தமிழ்நாடு மற்றும் இங்கையிலும் கனமழைக்கு வாய்ப்பு - எச்சரிக்கை... கேரளாவில் பெய்துவரும் தொடர் கனமழையால் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை மேலும் தமிழ்நாட்டில் உள்ள பல மாவட்டங்களிலும், இலங்கையில் உள்ள ஊவா உள்ளிட்ட சில மாகாணங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுளது.
More news from தமிழ்நாடு and nearby areas
- கரூர் மாவட்ட ஆட்சியர் காலை உணவு திட்டத்தை தொடங்கினார். கரூர் மாவட்டத்துக்கு இன்று செப்டம்பர் : 22 காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், 21,487 கரூர் மாவட்ட மாணவ, மாணவியர் பயன் பெறுவர். தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்சியில், 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட்டு, காமராஜர் காலை உணவு திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை, முதல்வர் ஜோசப் விஜய் காணொளி காட்சியின் மூலமாக தொடங்கி வைத்தார் இதன்படி கரூர் மாநகராட்சியில், 30 பள்ளிகளில், 2,936 மாணவர்கள், குளித்தலை நகராட்சியில், 6 பள்ளிகளில், 805 பேர், பள்ளப்பட்டி நகராட்சியில், 9 பள்ளிகளில், 1,439 பேர், புகழூர் நகராட்சியில், 7 பள்ளிகளில், 407 பேர் உள்ளனர். கரூர் ஊராட்சி ஒன்றியத்தில், 19 பள்ளிகளில், 919 மாணவர், தான்தோன்றிமலையில், 26 பள்ளிகளில், 1,871 பேர், அரவக்குறிச்சியில், 16 பள்ளிகளில், 818 பேர், க.பரமத்தியில், 28 பள்ளிகளில், 915 பேர், குளித்தலையில், 28 பள்ளிகளில், 3,047 பேர், கிருஷ்ணராயபுரத்தில், 18 பள்ளிகளில், 1,853 பேர், கடவூரில், 34 பள்ளிகளில், 2,962 பேர் உள்பட மொத்தம், 310 பள்ளிகளில் பயிலும், 21,487 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் இருந்தனர் இந்த நிகழ்ச்சியில் காலை உணவு திட்டத்தை மாணவ மாணவியருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்கள் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் முத்துக்குமரன். கரூர் கிருஷ்ணாபுரம் சட்டமன்ற உறுப்பினர் சத்யா அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்1
- காதலித்து கலப்பு திருமணம், விட்டுச்சென்ற காதலன், காதலன் மற்றும் அவர்களின் பெற்றோரை கைது செய்ய வலியுறுத்தி பெண் புகார். கரூர் மாவட்டம் குளித்தலை தாலுக்கா காக்கையம் பட்டியை சேர்ந்தவர் முத்துலட்சுமி இவர் காணப்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக்ல் படித்து வந்தபோது அதே கல்லூரியில் படித்து வந்த கார்த்திக் என்பவர் உடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் இருப்பினும் கார்த்திக் முத்துலட்சுமியை சென்னைக்கு சென்று திருமணம் செய்து ஒரு வருடம் இருவரும் வசித்து வந்துள்ளனர். மேலும் முத்துலட்சுமி கர்ப்பமாக இருந்துள்ள நிலையில் கார்த்திக்கின் பெற்றோர்கள் தொடர்பு கொண்டு முத்துலட்சுமியின் கருவை கலைத்துவிட்டு எங்களுடன் வந்துவிடு என கூறியுள்ளனர். கார்த்தி முத்துலட்சுமி கருவை கலைத்துவிட்டு தனியாக விட்டுவிட்டு பெற்றவுடன் சென்று விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துலட்சுமி கார்த்திக்கை தொடர்பு கொண்ட போது கார்த்திக்கின் பெற்றோர் கொலை மிரட்டல் கொடுத்துள்ளனர். அவரின் தாய் தந்தையின் மீது குளித்தலை மகளிர் காவல் நிலையத்தில் முத்துலட்சுமி புகார் கொடுத்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் மீது எஸ்சிஎஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூவர் மீதும் FIR பதிவு செய்தும் இன்னும் கைது செய்யபடததால் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் புகார் மனு அளித்தார்.1
- காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தி ல் 21,273-மாணாக்கர்கள் பயனடைவர். பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தி ல் 21,273-மாணாக்கர்கள் பயனடைவர். தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, கரூர் மாவட்டம், தான்தோன்றி ஊராட்சி ஒன்றியம், மணவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் முத்துக்குமரன் மாணவ-மாணவியர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். இந்த திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளியில் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் காலை உணவுத் திட்டத்தின் மூலம் 1 ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 768 பள்ளிகளில் பயிலும் 30,669 மாணவ-மாணவியர்கள் பயன்பெறும் நிலையில் இந்த விரிவாக்கத் திட்டத்தின் மூலம் 6 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை 310 அரசுப் பள்ளிகளில் பயிலும் 21,273 மாணாக்கர்களுக்கு இன்று முதல் காலை உணவு வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் மாணவ-மாணவியர்களுக்கு திங்கட்கிழமை - வெண் பொங்கல், காய்கறி சாம்பார், செவ்வாய் கிழமை - சேமியா கிச்சடி, காய்கறி சாம்பார் புதன்கிழமை - வெண் பொங்கல், காய்கறி சாம்பார், வியாழக்கிழமை - ரவா உப்புமா, காய்கறி சாம்பார் மற்றும் வெள்ளிக்கிழமை- கோதுமை ரவா கிச்சடி, காய்கறி சாம்பார் என ஐந்து நாட்களும்,பள்ளி வேலை நாட்களில் உணவு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், கிருஷ்ணராயபுரம் எம் எல் ஏ.சத்யா, மாநகராட்சி ஆணையர் பிரித்திவிராஜ் ,திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை தனசேகரன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பொன்னாம்பலம், முதன்மை கல்வி அலுவலர் ராஜு, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) அக்பர் அலி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.1
- *தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் குழுவினர் திடீர் சோதனை* தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மற்றும் குற்ற தடுப்புத்துறை அதிகாரிகள் 8 பேர் கொண்ட குழுவினர் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள ஊராட்சி ஆணையாளர் அறை, பொறியாளர் குழுவினரின் அறை மற்றும் பணியாளர்களின் அறை உள்ளிட்ட பகுதிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக லஞ்சப்பண பரிமாற்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அதிகரித்து வந்ததாக குற்றச்சாட்டு வந்ததன் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளனர். ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் கிராம ஊராட்சி ஆணையாளர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் குழுவினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருமே பணியில் இருக்கும் போது திடீரென்று நடைபெற்று வரும் இந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினரின் சோதனை சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோதனையில் பணம் ஏதும் பொருட்கள் கைப்பற்ற படுகிறதா என்பது சோதனை முடிவில் தெரியவரும்.1
- சித்தையன் கோட்டையில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக அன்னதானம் என்னும் கந்தூரி விழா நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தையன் கோட்டையில் மறைந்த முன்னாள் இஸ்லாமிய பெரியார் முஹையதீன் ஆண்டவர் அவர்களை நினைவு கூறும் விதமாக பகுதிவாழ் இஸ்லாமிய பொதுமக்கள் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் அன்னதானம் வழங்கி சந்தனக்கூடு என்னும் உரூஸ்விழா விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதனைத் தொடர்ந்து புதன்கிழமை நாளை இரவு சந்தனக்கூடு என்னும் உரூஸ் விழா நடைபெற இருப்பதை தொடர்ந்து இன்று விழா கமிட்டியாளர்கள் மற்றும் ஜமாத் தலைவர்கள் ஒருங்கிணைந்து சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானம் என்னும் கந்தூரி விழா நடைபெற்றது. இதில் சுமார் 5000 திற்கும் மேற்பட்ட அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டு தாங்கள் கொண்டு வந்த பாத்திரங்களில் விழா கமிட்டியாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவுகளை மன மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.1
- அரவக்குறிச்சி அருகே SBI வங்கியில் கொள்ளை முயற்சி! - ஜன்னலை உடைத்து புகுந்த மர்ம நபர்கள் தப்பியோட்டம்* கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த கோவிலூரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில் இன்று அதிகாலை கொள்ளை முயற்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜன்னல் கம்பிகளை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், வங்கிக்குள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அப்போது வங்கியில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் சத்தம் அலறியதால், அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள் எதையும் எடுக்காமல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வங்கியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து, தப்பியோடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த கொள்ளை முயற்சியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. > கரூர் அரவக்குறிச்சி அருகே பாரத ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சி! ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அலாரம் அடித்ததும் தப்பியோட்டம். போலீசார் சிசிடிவி ஆய்வு! செய்து வருகின்றனர்1
- ஈரோடு மசாஜ் சென்டர் ஆண்களுக்கு மட்டும் (Male to Male Massage) உடல் புத்துணர்ச்சி • மன அமைதி • முழுமையான ஓய்வு அன்றாட வேலைப்பளு, உடல் சோர்வு மற்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட, அமைதியான மற்றும் சுத்தமான சூழலில் தரமான மசாஜ் சேவையை அனுபவியுங்கள். எங்கள் சேவைகள் - உடல் தளர்வு மசாஜ் - முழு உடல் ரிலாக்ஸ் மசாஜ் - மன அழுத்த நிவாரண மசாஜ் - புத்துணர்ச்சி தரும் தெரபி எங்கள் சிறப்பம்சங்கள் ✔ 100% ரகசியம் பாதுகாக்கப்படும் ✔ அனுபவமிக்க தெரபிஸ்ட் ✔ சுத்தமான மற்றும் சுகாதாரமான சூழல் ✔ தனியார் மற்றும் அமைதியான அறைகள் ✔ தரமான சேவை கட்டணம் 💰 ரூ. 1500 மட்டுமே தொடர்புக்கு 📞 63854 43602 முகவரி ஈரோடு பேருந்து நிலையம் அருகில், PSR சில்க்ஸ் பின்புறம், ஈரோடு ஆயில் மசாஜ். 🌿 சோர்வா...? உங்கள் உடல் சொல்லும் ஒரு சிறிய சிக்னல் அது! 💆♂️ உடலுக்கும் மனதுக்கும் தேவையான அமைதியை, தொழில்முறை மசாஜ் சேவையுடன் அனுபவியுங்கள். ✨ ஏன் எங்களைத் தேர்வு செய்ய வேண்டும்? ✔️ அனுபவமுள்ள தெரபிஸ்ட் ✔️ சுத்தமான & தனியுரிமை கொண்ட சூழல் ✔️ ஆண்களுக்கு ஆண் தெரபிஸ்ட் மட்டும் ✔️ நியாயமான கட்டணம் – ₹1500 மட்டும் 📍 ஈரோடு பேருந்து நிலையம் அருகில் 📍 PSR Silks பின்புறம் 📞 Booking: 063854 43602 இன்று உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்குங்கள். உங்கள் உடல் அதற்கு நன்றி சொல்லும். ✨ #ErodeMassageCenter #Erode #Massage #Wellness #Relaxation #SelfCare #StressRelief #ProfessionalMassage #TamilNadu #BookNow #ErodeBusiness #HealthyLifestyle #Recharge #FeelBetter1
- கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டம் கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சிக்கு உட்பட்ட செம்படாபாளையம் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் புகழூர் நகராட்சிக்கு சொந்தமான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு கையகப்படுத்தும் பணி நடைபெற உள்ள நிலையில் அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவாய்த்துறையினர் கொண்டு வந்த ஜேசிபி, டிராக்டர் இயந்திரங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே புகழூர் சர்க்கரை ஆலையிலிருந்து வெளிவரும் பக்காஸ் மற்றும் கரித்தூள் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் இங்கு குடியிருக்கும் பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. தற்போது இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் இந்த ஊரில் வாழ முடியாத சூழல் ஏற்படும் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த புகலூர் வட்டாட்சியர் மற்றும் வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளர் ஆகியோர் பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் பீஸ் கமிட்டி அமைத்து சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது தொடர்பாக பேசி முடிவு செய்து கொள்ளலாம் எனக் கூறியதை ஏற்று பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.1
- தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மின்விளக்கு பழுதடைந்துள்ளதால் அவளியாக செல்லும் வாகன ஓட்டிகள் நோயாளிகள் சிரமம் தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது தேனி மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதியில் இருந்து நாள்தோறும் ஏராளமான இரவு பகல் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர் இந்நிலையில் இரவு நேரங்களில் மருத்துவமனை முன்பு உள்ள உயர்மின் கோபுர விளக்கு பல மாதங்களுக்கு முன்பு பழுதடைந்து இதுவரை சரி செய்யாமல் அரசு மருத்துவமனை முன்பு இருள் சூழ்ந்து காணப்படுகிறது இதனால் அவளியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாலும் மேலும் இரவு நேரங்களில் வரும் நோயாளிகள் இருளில் அச்சத்துடன் மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர் இதனால் மின்விளக்கு சரி செய்யுமாறு பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என நோயாளிகள் மற்றும் சமூக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர் தற்போது தமிழக வெற்றிக்கழக அரசு மக்களுக்கான ஆட்சியை செய்து வருவோம் என தெரிவிக்கும் நிலையில் இது போன்ற மக்கள் அலட்சியப் போக்கையும் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ள எம்எல்ஏக்கள் மெத்தனப் போக்கில் தங்கள் சொந்த வேலைகளை மட்டுமே செய்து வருவதாகவும் மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தாத எம்எல்ஏக்கள் அரசு அதிகாரிகள் அலட்சியத்துடன் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்1