என் பூலாம்பட்டியில் தவெக வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே வி.பெரியபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட என் பூலாம்பட்டியில் மணப்பாறை தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் R.கதிரவனுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரச்சாரம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த பிரச்சாரமானது திருச்சி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் தினேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் வையம்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் குணசேகரன் மற்றும் இணை செயலாளர் பாஸ்கர் அவர்களின் அறிவுரையின்படி மற்றும் பொருளாளர் திரு சந்துரு , ஒன்றிய செயற்குழு உறுப்பினர் திரு அந்தோணி மற்றும் திருமதி பராசக்தி அவர்கள் மற்றும் வி.பெரியபட்டி பொறுப்பாளர்கள் எலிசபெத், தீர்த்தம்,சூசை, லாரன்ஸ், ஜோயல்,அருள் ஞானராஜ், ரூபன், ஜான், மகேந்திரன், ஆல்பர்ட், டேவிட், மேரி மோனிகா* அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கப்பட்டது.
என் பூலாம்பட்டியில் தவெக வேட்பாளருக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே வி.பெரியபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட என் பூலாம்பட்டியில் மணப்பாறை தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் R.கதிரவனுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரச்சாரம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த பிரச்சாரமானது திருச்சி தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் தினேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் வையம்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் குணசேகரன் மற்றும் இணை செயலாளர் பாஸ்கர் அவர்களின் அறிவுரையின்படி மற்றும் பொருளாளர் திரு சந்துரு , ஒன்றிய செயற்குழு உறுப்பினர் திரு அந்தோணி மற்றும் திருமதி பராசக்தி அவர்கள் மற்றும் வி.பெரியபட்டி பொறுப்பாளர்கள் எலிசபெத், தீர்த்தம்,சூசை, லாரன்ஸ், ஜோயல்,அருள் ஞானராஜ், ரூபன், ஜான், மகேந்திரன், ஆல்பர்ட், டேவிட், மேரி மோனிகா* அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கப்பட்டது.
- தமிழகமெங்கும் வரும் (ஏப்ரல் 23ந்தேதி) சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பொதுமக்கள் எந்த வித அச்சமின்றி 100% வாக்களிக்க வேண்டும். இதனையடுத்து இன்று மாலையுடன் முடிவடையும் நிலையில் பிரச்சாரத்தை மாற்று வழிகளில் செய்தல் மற்றும் வாக்களிக்க பணம் பட்டுவாடா செய்தல்,பொருட்கள், மதுபானம் வழங்குதல் உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் போன்ற செயல்கள் நடப்பது தெரிய வந்தால் 1950, 8939146100, 100 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல் துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.1
- மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துவரங்குச்சியில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மனித நேயம் கட்சி வேட்பாளர் அப்துல் சமது அவர்களை ஆதரித்து செல்வகுமார் இன்று துவரங்குறிச்சி பூதநாயகம் கோவில் அருகில் உள்ள நாடக மேடையில் பேசும்போது பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் முத்தரைய சமுதாயத்தை அசிங்கப்படுத்திய ஏளனமாக பார்த்தார்கள் தமிழக முதல்வர் நல்லாட்சி நாயகன் சமூகநீதியுடன் பார்த்தார் இந்த நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு கடந்து கூட அரசியலில் புறந்தள்ள பட்டு ஒதுக்கப்பட்டு முத்தரையர் சமுதாயத்தில் சட்டமன்ற உறுப்பினராக வாய்ப்பு தந்த தாய் உள்ளம் கொண்ட முதல்வர் தான் நம்ம முதல்வர் என்று செல்வகுமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்1
- 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் சசிகலா மற்றும் மருத்துவர் அய்யா ராமதாஸ், ஸ்ரீ காந்திமதி அறிவித்த 120 தொகுதிகளில் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டி இன்று பாரதிய இந்து மக்கள் கட்சி சார்பில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில், வே. மலைக்கோட்டை தர்மா தலைமையில் பால்குடம் எடுத்து, மாவிளக்கு இட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.1
- Post by பெரியசாமி1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்தில் 20/04/2026 இன்று தீ தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு ஆத்தூர் நிலைய அலுவலர் சு.கணேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு ஆத்தூர் சடையாண்டி கோயில் அருகில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா வாட்டர் கம்பெனியில் போலி ஒத்திகை பயிற்சி நடத்தி பணியாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு சார்ந்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.1
- சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டானம் ரோடு பெரிய பள்ளிவாசலில், காரைக்குடி சட்டமன்றத் தொகுதி மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எஸ். மாங்குடியை ஆதரித்து வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. முன்னாள் ஒன்றிய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப. சிதம்பரம், ஜமாத் நிர்வாகிகளை நேரில் சந்தித்து, காங்கிரஸ் கட்சியின் 'கை' சின்னத்திற்கு ஆதரவு கோரினார். இந்த சந்திப்பின் போது ஜமாத் தலைவர் மஹபூப் பாட்சா,மற்றும் நிர்வாகிகள்,ஜமாத்தார்கள் , கூட்டணி கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.1
- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை முதல் சுவாமியும் அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் நான்கு மாசி வீதி உலா வருவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று இரவு நடைபெறும் வீதியுலாவை காண்பதற்காக நகரின் பல்வேறு பகுதியில் இருந்து பெண்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சாரை சாரையாக நான்ஞமாசி வீதிகளை நோக்கி வந்த வண்ணமே உள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா, பழைய கோட்டை கிராமம் புறத்தாகுடியை சேர்ந்த அந்தோணி என்பவரின் மகள் ஜாஸ்மின் அந்தோணி பிரியா (40). இவர் பிறந்ததிலிருந்து மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரின் தந்தை அந்தோணி கடந்த 2000 ஆம் ஆண்டும், தாயார் ஆரோக்கியமேரி கடந்த 2016 ஆம் ஆண்டும் இறந்துவிட்ட நிலையில், அவரின் பெரியப்பா மகனான ஜான்பால்ராஜ் என்பவரின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று 20.04.2026 மதியம் சுமார் 15:30 மணியளவில் தனது வீட்டின் பின்பக்கம் குளிக்க செல்லும் போது, சுமார் 2½ அடி தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்து விட்டார். இதை அறிந்த வையம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.1