திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயா்வை ரத்து செய்யக்கோரி சிறப்பு தீர்மானம்! குப்பை பிரச்சினைக்கு சிறப்பு நிதி பெறவும் முடிவு. திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயா்வை ரத்து செய்யக்கோரி சிறப்பு தீர்மானம்! குப்பை பிரச்சினைக்கு சிறப்பு நிதி பெறவும் முடிவு. திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி உயா்வை ரத்து செய்யக்கோரியும், குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண சிறப்பு நிதி பெறவும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலா்கள் கூட்டம் நேற்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு பொறுப்பு மேயரும், துணை மேயருமான பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கமிஷனா் அமித் முன்னிலை வகித்தார். இதில் கூட்டம் தொடங்கியதும் துணை மேயா் பாலசுப்பிரமணியன் பேசியதாவது: கடந்த மாநகராட்சி கவுன்சிலா்கள் கூட்டத்தில் முன்னாள் முதல் அமைச்சா்கள் புகைப்படம் வைக்கக்கோரி மன்ற உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா். இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் முன்னாள் முதல் அமைச்சா்களின் புகைப்படங்களை மன்ற உறுப்பினா்கள் கொண்டு வந்து வழங்கினால் அதனை கூட்ட அரங்கில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயா்வை ரத்து செய்யக்கோரி சிறப்பு தீர்மானம்! குப்பை பிரச்சினைக்கு சிறப்பு நிதி பெறவும் முடிவு. திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உயா்வை ரத்து செய்யக்கோரி சிறப்பு தீர்மானம்! குப்பை பிரச்சினைக்கு சிறப்பு நிதி பெறவும் முடிவு. திருப்பூர் மாநகராட்சியில் சொத்துவரி உயா்வை ரத்து செய்யக்கோரியும், குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண சிறப்பு நிதி பெறவும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலா்கள் கூட்டம் நேற்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதற்கு பொறுப்பு மேயரும், துணை மேயருமான பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கமிஷனா் அமித் முன்னிலை வகித்தார். இதில் கூட்டம் தொடங்கியதும் துணை மேயா் பாலசுப்பிரமணியன் பேசியதாவது: கடந்த மாநகராட்சி கவுன்சிலா்கள் கூட்டத்தில் முன்னாள் முதல் அமைச்சா்கள் புகைப்படம் வைக்கக்கோரி மன்ற உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா். இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் முன்னாள் முதல் அமைச்சா்களின் புகைப்படங்களை மன்ற உறுப்பினா்கள் கொண்டு வந்து வழங்கினால் அதனை கூட்ட அரங்கில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- திம்பம் மலைப்பாதையில் 7வது கொண்டை ஊசி வளைவில் சிக்கிய கண்டெய்னர் லாரி திம்பம் மலைப்பாதையில் 7வது கொண்டை ஊசி வளைவில் சிக்கிய கண்டெய்னர் லாரி சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் திம்பம் மலைப்பாதை வழி யாக தமிழகத்திலிருந்து கர் நாடக மாநிலம் மைசூர் செல்வதற்காக கண்டெய் னர் லாரி நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது. 7வது கொண்டை ஊசி வளை வில் லாரி திரும்பும் போது அதிக பாரம் காரணமாக லாரியின் பின்பகுதி தரை யில் உரசியதால் லாரி நகர முடியாமல் நின்றது. இதன் காரணமாக மலைப்பாதையின் இருபுற மும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்டவரிசை யில் அணிவகுத்து நின்றன. தகவலறிந்து விரைந்து வந்த ஆசனூர் போலீசார் போக்குவரத்தை சீர் செய் யும் பணியில் ஈடுபட்ட னர். மலைப்பாதையில் லாரி நகர முடியாமல் நின் றதால் தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கிடையே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மற்ற 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு திம்பம் மலைப்பாதை 7வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முடியாமல் நின்ற கண்டெய்னர் லாரி நின்றதால் அணிவகுத்து நின்ற வாகனங்கள். ஓட்டுனர்கள் உதவியுடன் லாரியை நகர்த்தும் பணி நடைபெற்றது. இரண்டு மணி நேர போராட்டத் திற்கு பின் லாரி நகர்த் தப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து சீரானது. மலைப்பாதையில் அனும திக்கப்பட்ட அளவை விட அதிக பாரம் ஏற்றிச்செல் லும் லாரிகளால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்ப டுவதாக பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.1
- மாம்பாறை முனியப்பன் கோவிலில் இன்று பக்தர்கள் அடைசல் பூஜை வழிபாடு செய்தனர்1
- ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு! ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு! திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பழைய பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் த/பெ பாண்டி கடந்த 7 ந் தேதி பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 32 1/2 பவுன் நகை மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர் திருடி சென்றார். இது குறித்து ஒட்டன்சத்திரம் கோட்ட காவல் துணை காணிப்பாளர் கார்த்திகேயன் ஆய்வாளர் லிங்கபாண்டியன் சார்பு ஆய்வாளர் சிவராஜ் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவு ஆகி உள்ள காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் திண்டுக்கல் அருகே கதிரியன் குளத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஈடுபட்டதும் அவர் மற்றொரு வழக்கில் திருட்டு வழக்கில் கைதாகி மதுரை சிறையில் இருப்பதும் தெரியவந்தது இதையடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர் .அப்போது அவர் பாலகிருஷ்ணன் வீட்டில் திருடிய இத ஒப்பிக்கொண்டதை அடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 32 1/2 பவுன் நகைகள் 280 கிராம் வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர் குற்றவாளி விரைந்து செயல்பட்டு கைது செய்து நகைகளை முழுவதையும் மீட்ட ஒட்டன்சத்திரம் போலீசாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.2
- பழனி நகர் பகுதிகளில் நகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை மக்கா குப்பை தனித்தனியே பிரித்து சேகரித்து வந்தது வரவேற்கத்தக்கது1
- தவெக அரசுக்கு எதிராக விவசாயிகளை திரட்டி போராட்டம்! இபிஎஸ் அறிவிப்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் இருந்து விமான மூலம் சென்னை செல்வதற்கு முன் சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும் போது, தமிழக வெற்றிக்கழக அரசு தேர்தல் வாக்குறுதியின் அளித்தபடி விவசாயிகளின் முழு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மேலும் கடன் தள்ளுபடி காண அறிவிப்பு நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவிக்க வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு விளையாடுவதை விட்டுவிட்டு முதல்வர் மௌனத்தை கலைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், ஒருவேளை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய அறிவிப்பு தவறும் பட்சத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து அதிமுக சார்பில் விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.1
- ஒட்டன்சத்திரத்தில் தலித் விடுதலை இயக்க மாநில செயலாளர் தலித் கே. ராமர் திருவுருவபட திறப்பு விழா மாநில தலைவர் ச.கருப்பையா பங்கேற்பு. ஒட்டன்சத்திரத்தில் தலித் விடுதலை இயக்க மாநிலச் செயலாளர் தலித் கே.ராமர் நினைவேந்தல் திருவுருவ படத்திறப்பு விழா மாநில தலைவர் ச.கருப்பைய்யா பங்கேற்பு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தலித் விடுதலை இயக்கம் மாநில செயலாளர் தலித்.கே.ராமர் நினைவேந்தல் மற்றும் திருவுருவ படத்திறப்பு விழா தலித் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் அசுரன் என்ற மகுடீஸ்வரன், தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தலித் விடுதலை இயக்க மாநில தலைவர்.ச.கருப்பைய்யா கலந்துகொண்டு தலித் இயக்க மாநில செயலாளர் தலித் கே ராமர் திருவுருவ படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை நிகழ்த்தி வரும் ஆகஸ்ட் மாதம் 28 ந்தேதி வெள்ளிக்கிழமை திண்டுக்கல்லில் நிலமீட்பு குறித்த ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலித் கதிர் காமன், தலித் விடுதலை இயக்கம் மாநில இளைஞரணிச் செயலாளர் பீமா ராவ் தமிழ் புலிகள் கட்சியின் மாநில வழக்குரைஞர் அணி செயலாளர் சின்னகருப்பன், பிஎஸ்பி மாவட்ட தலைவர் மனேகரன்,இந்தியதேசிய காங்கிரஸ் கட்சி எஸ்சி எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் பிச்சை முத்து, த.தீ.ஒ.மு மாவட்ட தலைவர் முத்துசாமி, தேவேந்திர மறுமலர்ச்சி பேரவை பகத்சிங் பழனிசாமி, ஆதித்தமிழர் சமூக நீதிப் பேரவை தலித் கே. சுப்பிரமணியன், தமிழ் தேச மக்கள் முன்னணி காளிமுத்து, விசிக இளஞ்சிறுத்தைகள் பேரவை மாவட்ட செயலாளர் வடிவேல்,உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் இறுதியில் தலித் விடுதலை இயக்க திண்டுக்கல் மாவட்ட தலைவர் ராசேந்திரன் நன்றி தெரிவித்தார்.2
- கோபிச்செட்டிப்பாளையம் அருகே தடுப்பூசி செலுத்தியதால் 10 மாத குழந்தை உயிரிழப்பா???? கோபிச்செட்டிப்பாளையம் அருகே உள்ள பொலவக்காளிபாளையத்தில் கார்த்திக் - சரோஜினி தம்பதியரின் 10 மாத ஆண் குழந்தை தருணுக்கு நேற்று தடுப்பூசி போட்ட நிலையில் வயிற்று போக்கு காரணமாக உயிரிழப்பு. நேற்று காலை தடுப்பூசி போடப்பட்ட பின்னர் குழந்தை தருணுக்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இன்று காலை வயிற்று போக்கு ஏற்பட்டு குழந்தை உயிரிழந்து உள்ள நிலையில் உடற் கூறு ஆய்விற்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தையின் சடலம் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குநர் அருணா கூறும் போது, கோபியில் 14 குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் 13 குழந்தைகள் நலமாக இருப்பதால், தருண் இறப்பு குறித்து உடற்கூறு ஆய்விற்கு பிறகே தெரிய வரும் என்றார்.1