logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

முசிறி நகராட்சி ஊழியர்கள் போராட்டம் முசிறி, ஆக. 28: திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர். நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் கருவூலம் வாயிலாக வழங்க வேண்டும், பணியிட மாறுதல்கள் மற்றும் பணி உயர்வு மாறுதல் கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பிடவும், எல்லை விரிவாக்க பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிடவும், ஆய்வுக் கூட்டங்களை சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள், அலுவலக நேரம் கடந்து ஆய்வு கூட்டம் நடத்தப்படுவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முசிறி நகராட்சி ஊழியர்கள் 25 பேர் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

37 min ago
user_நா. முருகன்
நா. முருகன்
முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
37 min ago

முசிறி நகராட்சி ஊழியர்கள் போராட்டம் முசிறி, ஆக. 28: திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர். நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் கருவூலம் வாயிலாக வழங்க வேண்டும், பணியிட மாறுதல்கள் மற்றும் பணி உயர்வு மாறுதல் கலந்தாய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும், காலி பணியிடங்களை நிரப்பிடவும், எல்லை விரிவாக்க பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிடவும், ஆய்வுக் கூட்டங்களை சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள், அலுவலக நேரம் கடந்து ஆய்வு கூட்டம் நடத்தப்படுவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முசிறி நகராட்சி ஊழியர்கள் 25 பேர் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • முசிறி அருகில் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் சாலை போக்குவரத்து விதிகள் குறித்து குறும்பட காட்சி மற்றும் கருத்தரங்கம் அரசு கல்லூரியில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் பிரச்சார வாகனம் குறும்படம் மற்றும் கருத்தரங்கம். முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் சார்பாக போக்குவரத்து வாகன விதிமுறைகள், பிரச்சார வாகன குறும்படம் காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முருகராஜ் பாண்டியன் தலைமை தாங்கினார். போக்குவரத்து முசிறி கழக கிளை மேலாளர் அருண்குமார் முன்னிலை வகித்து, சிறப்புரையாற்றினார். பயிற்சி மேலாளர் கிருஷ்ணமூர்த்தி போக்குவரத்து விளக்கினார். போக்குவரத்து கும்பகோணம் கோட்டம் பொது மேலாளர் சுரேஷ்குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்து கண்காட்சி தொடங்கி வைத்து போக்குவரத்து விதிமுறைகளை மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி மாணவ மாணவியர்களுக் இடையே எடுத்துரைத்து விளக்கினார். முன்னதாக பொருளியல் துறை பேராசிரியர் பீமராஜ் அனைவரையும் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணியும், போக்குவரத்து வாகன விதிமுறைகள் குறித்து குறும்பட கண்காட்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி பொறியியல் துறை பேராசிரியர் தர்மராஜ், உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்க மாவட்டச் செயலாளர் கம்பரசம்பேட்டை தர்மராஜ், மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் போக்குவரத்து கழக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவில் தமிழ்்துறை பேராசிரியர் பெரியசாமி அனைவருக்கும் நன்றி கூறினார்.
    1
    முசிறி அருகில் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் சாலை போக்குவரத்து விதிகள் குறித்து குறும்பட காட்சி மற்றும் கருத்தரங்கம் 
அரசு கல்லூரியில் சாலை போக்குவரத்து விதிமுறைகள் பிரச்சார வாகனம் குறும்படம் மற்றும் கருத்தரங்கம்.
முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நல பணி திட்டம் சார்பாக போக்குவரத்து வாகன விதிமுறைகள், பிரச்சார வாகன குறும்படம் காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முருகராஜ் பாண்டியன் தலைமை தாங்கினார். போக்குவரத்து முசிறி கழக கிளை மேலாளர் அருண்குமார் முன்னிலை வகித்து, சிறப்புரையாற்றினார். பயிற்சி மேலாளர் கிருஷ்ணமூர்த்தி போக்குவரத்து விளக்கினார். போக்குவரத்து கும்பகோணம் கோட்டம் பொது மேலாளர் சுரேஷ்குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்து கண்காட்சி தொடங்கி வைத்து போக்குவரத்து விதிமுறைகளை மற்றும் விழிப்புணர்வு உறுதிமொழி மாணவ மாணவியர்களுக் இடையே எடுத்துரைத்து விளக்கினார். முன்னதாக பொருளியல் துறை பேராசிரியர் பீமராஜ் அனைவரையும் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு பேரணியும், போக்குவரத்து வாகன விதிமுறைகள் குறித்து குறும்பட கண்காட்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி பொறியியல் துறை பேராசிரியர் தர்மராஜ், உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்க மாவட்டச் செயலாளர் கம்பரசம்பேட்டை  தர்மராஜ், மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவியர்கள் போக்குவரத்து கழக பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவில் தமிழ்்துறை பேராசிரியர் பெரியசாமி அனைவருக்கும் நன்றி கூறினார்.
    user_நா. முருகன்
    நா. முருகன்
    முசிறி, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    8 hrs ago
  • நேபாள நோக்கி பெருமளவு நீர் பாய்ந்து திடீர்வெள்ளப் பேரழிவுகாரணம் என்ன? போதேகோஷி ஆற்றை சக்திவாய்ந்த நிலச்சரிவு மறித்ததால், சீனப் பகுதியில் இருந்து நேபாளத்தை நோக்கி பெருமளவு நீர் பாய்ந்து திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. • பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து பள்ளத்தாக்கில் விழுந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்; இது நிலச்சரிவைத் தூண்டியிருக்கலாம் அல்லது அதன் தாக்கத்தை மேலும் தீவிரப்படுத்தியிருக்கலாம்.
    1
    நேபாள நோக்கி பெருமளவு நீர் பாய்ந்து திடீர்வெள்ளப் பேரழிவுகாரணம் என்ன?
போதேகோஷி ஆற்றை சக்திவாய்ந்த நிலச்சரிவு மறித்ததால், சீனப் பகுதியில் இருந்து நேபாளத்தை நோக்கி பெருமளவு நீர் பாய்ந்து திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
• பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து பள்ளத்தாக்கில் விழுந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்; இது நிலச்சரிவைத் தூண்டியிருக்கலாம் அல்லது அதன் தாக்கத்தை மேலும் தீவிரப்படுத்தியிருக்கலாம்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • புதுக்கோட்டை திருக்கட்டளை பகுதியில் உள்ள ஸ்ரீ அருள்மிகு காடப்பிள்ளை அய்யனார் சமேத புஷ்கலாம்பிகை ஆலய முளைப்பாரி . * *ஸ்ரீ அருள்மிகு காடப்பிள்ளை அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்ற முடிந்த நிலையில் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது ஏழு ஊரு கிராம பங்காளிகள் மற்றும் பெண்கள் 200க்கும் மேற்பட்டோர் கடந்த ஒரு வார காலம் நோன்பு இருந்து வளர்த்த முளைப்பாறையை திருக்கட்டளை பகுதியில் உள்ள காடப்பிள்ளை அய்யனார் கோவிலில் இருந்து திருமலராய சமுத்திரம் பகுதியில் உள்ள சிவன் கோயில் குளத்தில் மேளதாளம் வழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு முளைப்பாறியை கரைத்தனர் .
    1
    புதுக்கோட்டை திருக்கட்டளை பகுதியில் உள்ள ஸ்ரீ அருள்மிகு காடப்பிள்ளை அய்யனார் சமேத புஷ்கலாம்பிகை ஆலய முளைப்பாரி .
*
*ஸ்ரீ அருள்மிகு காடப்பிள்ளை அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்ற முடிந்த நிலையில் முளைப்பாரி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது ஏழு ஊரு கிராம பங்காளிகள் மற்றும் பெண்கள் 200க்கும் மேற்பட்டோர் கடந்த ஒரு வார காலம் நோன்பு இருந்து வளர்த்த முளைப்பாறையை திருக்கட்டளை பகுதியில் உள்ள காடப்பிள்ளை அய்யனார் கோவிலில் இருந்து திருமலராய சமுத்திரம் பகுதியில் உள்ள சிவன் கோயில் குளத்தில் மேளதாளம் வழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு முளைப்பாறியை கரைத்தனர் .
    user_6974
    6974
    புதுக்கோட்டை, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    33 min ago
  • ஆத்தூர் மகாலிங்கேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு செய்த பக்தர்கள். ஆத்தூர் வெள்ளப் பிள்ளையார் கோவிலில் உள்ள மகாலிங்கேஸ்வரர் சன்னதியில், பிரதோஷத்தை ஒட்டி இன்று சுவாமிக்கு சிறப்பு ஹோமம், பால், தயிர், சந்தனம் மற்றும் பன்னீர், மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் விமர்சியாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானப் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்தது.
    1
    ஆத்தூர் மகாலிங்கேஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு செய்த பக்தர்கள்.
ஆத்தூர் வெள்ளப் பிள்ளையார் கோவிலில் உள்ள மகாலிங்கேஸ்வரர் சன்னதியில், பிரதோஷத்தை ஒட்டி இன்று சுவாமிக்கு சிறப்பு ஹோமம், பால், தயிர், சந்தனம் மற்றும் பன்னீர், மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் விமர்சியாக நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானப் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்தது.
    user_Kannapiran S
    Kannapiran S
    Local News Reporter ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    22 hrs ago
  • *திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்* திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி திண்டுக்கல் மாவட்டம் சார்பாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பட்டியல் இன மக்களுக்கு கொடுத்த 145 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா இருக்கு இடம் எங்கே? மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என கூறி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    1
    *திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்*

திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி திண்டுக்கல் மாவட்டம் சார்பாக
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பட்டியல் இன மக்களுக்கு கொடுத்த 145 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா இருக்கு இடம் எங்கே?
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என கூறி
முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    user_DOMINIC SELVARAJ
    DOMINIC SELVARAJ
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    21 min ago
  • சேலத்தில் அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்! சேலம் ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் கோட்டை கனரா வங்கி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு, மத்திய அரசு வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என போராட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.
    1
    சேலத்தில் அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!
சேலம் ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் கோட்டை கனரா வங்கி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு, மத்திய அரசு வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என போராட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    3 hrs ago
  • மணப்பாறை அருகே சிலிண்டர் வெடித்து தீ விபத்து பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பண்ணாங்கொம்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று திடீரென சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதையறிந்த மணப்பாறை தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்று போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் எந்த ஒரு அசாம்பாவிதம் ஏற்படவில்லை.
    1
    மணப்பாறை அருகே சிலிண்டர் வெடித்து தீ விபத்து பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பண்ணாங்கொம்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று திடீரென சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதையறிந்த மணப்பாறை தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்று போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் எந்த ஒரு அசாம்பாவிதம் ஏற்படவில்லை.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • மணப்பாறையில் ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் பற்றி எரிந்த தீ : கடும் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி திருச்சி மாவட்டம் மணப்பாறை திண்டுக்கல் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகே தனியார் பள்ளி, விடுதி, நுகர்பொருள் வாணிபக் கிடங்கு, தேவாலயம், - மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் பாலத்திற்கு அடியில் ரெயில்வே தண்டவாளம் அருகே மின் மாற்றிக்கு எதிரே அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் பிளாஸ்டிக் கழிவுகள், கருப்பு சக்கை, பல்வேறு விதமான குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென அந்த குப்பையில் தீப்பற்றி எரிந்தது. இந்த தீ ரெயில்வே மின் இணைப்பு அருகேயும், மின் மாற்றி அருகேயும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தீ எரிந்ததோடு அந்த இடத்தில் இருந்து கரும் புகை கிளம்பியது. இதனால் அந்த பகுதியே கடும் புகை மூட்டமாக காட்சி அளித்ததுடன் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுமட்டுமின்றி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் புகை சூழ்ந்து கொண்டதால் மக்கள் மூச்சு விட கூட கடும் சிரமப்பட்டனர். இவ்வாறு தீ பற்றி எரியும் சம்பவம் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. பாலத்தின் அடியில் குப்பைகளை கொட்டுவதால் தான் அடிக்கடி தீவிபத்து ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் பள்ளி உள்ளதால் மாணவ -மாணவிகள் தொற்று நோய்க்கு ஆளாகும் நிலையும் உள்ளது. ஆகவே திண்டுக்கல் சாலை ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் குப்பை கொட்டுவதை தடுக்க நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    4
    மணப்பாறையில்
ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் பற்றி எரிந்த தீ :
கடும் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
திருச்சி மாவட்டம் மணப்பாறை திண்டுக்கல் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகே தனியார் பள்ளி, விடுதி, நுகர்பொருள் வாணிபக் கிடங்கு, தேவாலயம், - மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் பாலத்திற்கு அடியில் ரெயில்வே  தண்டவாளம் அருகே மின் மாற்றிக்கு எதிரே அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் பிளாஸ்டிக் கழிவுகள், கருப்பு சக்கை, பல்வேறு விதமான குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென அந்த குப்பையில் தீப்பற்றி எரிந்தது.  இந்த தீ ரெயில்வே மின் இணைப்பு அருகேயும், மின் மாற்றி அருகேயும்  பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தீ எரிந்ததோடு அந்த இடத்தில் இருந்து கரும் புகை கிளம்பியது. இதனால் அந்த பகுதியே கடும் புகை மூட்டமாக காட்சி அளித்ததுடன் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுமட்டுமின்றி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் புகை சூழ்ந்து கொண்டதால் மக்கள் மூச்சு விட கூட கடும் சிரமப்பட்டனர். இவ்வாறு தீ பற்றி எரியும் சம்பவம் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. பாலத்தின் அடியில் குப்பைகளை கொட்டுவதால் தான் அடிக்கடி தீவிபத்து ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் பள்ளி உள்ளதால் மாணவ -மாணவிகள் தொற்று நோய்க்கு ஆளாகும் நிலையும் உள்ளது. ஆகவே திண்டுக்கல் சாலை ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் குப்பை கொட்டுவதை தடுக்க நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.