logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

*திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்* திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி திண்டுக்கல் மாவட்டம் சார்பாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பட்டியல் இன மக்களுக்கு கொடுத்த 145 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா இருக்கு இடம் எங்கே? மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என கூறி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

53 min ago
user_DOMINIC SELVARAJ
DOMINIC SELVARAJ
திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
53 min ago

*திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்* திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி திண்டுக்கல் மாவட்டம் சார்பாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பட்டியல் இன மக்களுக்கு கொடுத்த 145 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா இருக்கு இடம் எங்கே? மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 7 முறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என கூறி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • அவனியாபுரம் பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் 7 சென்ட் நிலத்தை மீட்க அரசுக்கு கோரிக்கை-கோவில் நிலம் முப்புதர் மண்டி ரவுடிகளின் கூடாரமாக மாறி இருப்பதாக வேதனை* *அவனியாபுரம் பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் 7 சென்ட் நிலத்தை மீட்க அரசுக்கு கோரிக்கை-கோவில் நிலம் முப்புதர் மண்டி ரவுடிகளின் கூடாரமாக மாறி இருப்பதாக வேதனை* திருக்கோவில் நிர்வாகத்தின் அலட்சியத்தினால் குடியிருப்பு பகுதியில் சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஏக்கர் பரப்பளவு நிலம் வருவாய் ஆதாரங்கள் இன்றி முட்புதர் மற்றும் ஆக்கிரமிப்பில் உள்ளது.‌ அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இடம் விவசாய குத்தகைக்கு விடப்பட்டு 25 வருடங்களுக்கு மேல் விவசாயம் நடைபெறவில்லை அதற்கான நில குத்தகை தொகையும் அதிகாரிகள் வசூல் செய்யாமல் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு. மதுரை அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் 7 சென்ட் நிலம் அவனியாபுரம் வள்ளானந்தபுரம் பகுதியில் உள்ளது . இந்த இடத்தில் ஏராளமான குடியிருப்பு பகுதிகள் வந்துள்ள நிலையில் தற்போது ஒரு சென்ட் 15 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சுமார் முப்பது கோடி மதிப்பிலான கோயிலுக்கு சொந்தமான இந்த நிலம் குத்தகைதாரர் வசம் கடந்த 25 வருடங்களாக இருப்பதாக கூறப்படுகிறது . மேலும் குத்தகைதாரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்திற்கு உரிய வாடகை எதுவும் செலுத்துவதில்லை, அவனியாபுரம் கல்யாணசுந்தரேஷ்வரர் பால மீனாம்பிகை திருக்கோவில் அறநிலைத்துறை அதிகாரிகளும் கோவிலுக்கு வர வேண்டிய வருவாய் ஆதாரத்தை முறையாக வசூல் கணக்கீடு செய்யாமல் அலட்சியமாக உள்ளனர். அவனியாபுரம் கிராமம் வல்லானந்தபுரம் பகுதியில் உள்ள சர்வே எண் 292க்கு கட்டுப்பட்ட 2 ஏக்கர் 7 சென்ட் நிலம் அவனியாபுரம் அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் பால மீனாம்பிகை திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் முறையான பராமரிப்பு இல்லாமல் முட் புதராகவும் ஆக்கிரமிப்பு மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் உள்ளது . இங்கு பழைய வாகனங்கள் உபயோக படுத்தாமல் பராமரிக்கப்படாமல் நிறுத்தப்பட்டு அங்கு குடிகாரர்கள் திறந்தவெளி பார் போல் செயல்படுகிறது . இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும் சமூக விரோதிகளின் புகழிடமாகவும் இந்த இடம் உள்ளதால் சுமார் 30 கோடி மதிப்பு மிக்க இந்த இடத்தை கைப்பற்றி அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் பால மீனாம்பிகை திருக்கோவில் நிர்வாகம் முட் புதர்களை அகற்றி வருவாயை பெருக்கும் விதமாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவிலுக்கு சொந்தமான நிலம் ரவுடிகளின் கூடாரமாக மாறி உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். கோவில் இடத்தை மீட்க வேண்டும் இன்றைக்கு இந்து சமய அறநிலை துறை அமைச்சராக ஒரு இளைஞர் வந்துள்ளார். அவர் இதனை கருத்தில் கொண்டு கோவில் நிலத்தை மீட்டுத் தருவார் என நம்புகிறோம். அதேபோல் மதுரையில் பிரசித்தி பெற்ற தளமான பாண்டி முனீஸ்வரர் கோவிலுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் வழங்கிய நிலத்தை கோவில் பூசாரிகள் பிளாட்டு போட்டுவிட்டனர். இது சம்பந்தமான அனைத்து ஆவணங்களும் கொண்டு அறநிலையத்துறையில் புகார் அளித்துள்ளோம் அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பேட்டி: சிங்கராஜ் வழக்கறிஞர், தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்போர் பொதுச் செயலாளர்.
    1
    அவனியாபுரம் பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் 7 சென்ட் நிலத்தை மீட்க அரசுக்கு கோரிக்கை-கோவில் நிலம் முப்புதர் மண்டி ரவுடிகளின் கூடாரமாக மாறி இருப்பதாக வேதனை* 



*அவனியாபுரம் பால மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் 7 சென்ட் நிலத்தை மீட்க அரசுக்கு கோரிக்கை-கோவில் நிலம் முப்புதர் மண்டி ரவுடிகளின் கூடாரமாக மாறி இருப்பதாக வேதனை* 
திருக்கோவில் நிர்வாகத்தின் அலட்சியத்தினால் குடியிருப்பு பகுதியில் சுமார் 30 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஏக்கர் பரப்பளவு நிலம் வருவாய் ஆதாரங்கள் இன்றி முட்புதர் மற்றும்  ஆக்கிரமிப்பில் உள்ளது.‌ அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இடம் விவசாய குத்தகைக்கு விடப்பட்டு 25 வருடங்களுக்கு மேல் விவசாயம் நடைபெறவில்லை அதற்கான நில குத்தகை தொகையும் அதிகாரிகள் வசூல் செய்யாமல் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டு.
மதுரை அவனியாபுரம் கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் 7 சென்ட் நிலம் அவனியாபுரம் வள்ளானந்தபுரம் பகுதியில் உள்ளது . இந்த இடத்தில் ஏராளமான குடியிருப்பு பகுதிகள் வந்துள்ள நிலையில் தற்போது ஒரு சென்ட் 15 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சுமார் முப்பது கோடி மதிப்பிலான கோயிலுக்கு சொந்தமான இந்த நிலம் குத்தகைதாரர் வசம் கடந்த 25 வருடங்களாக இருப்பதாக கூறப்படுகிறது .
மேலும் குத்தகைதாரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்திற்கு உரிய வாடகை எதுவும் செலுத்துவதில்லை, அவனியாபுரம் கல்யாணசுந்தரேஷ்வரர் பால மீனாம்பிகை திருக்கோவில் அறநிலைத்துறை அதிகாரிகளும் கோவிலுக்கு வர வேண்டிய வருவாய் ஆதாரத்தை முறையாக வசூல் கணக்கீடு செய்யாமல் அலட்சியமாக உள்ளனர்.
அவனியாபுரம் கிராமம் வல்லானந்தபுரம் பகுதியில் உள்ள சர்வே எண் 292க்கு கட்டுப்பட்ட 2 ஏக்கர் 7 சென்ட் நிலம் அவனியாபுரம் அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் பால மீனாம்பிகை திருக்கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் முறையான பராமரிப்பு இல்லாமல் முட் புதராகவும் ஆக்கிரமிப்பு மற்றும்  சமூக விரோதிகளின் கூடாரமாகவும் உள்ளது .
இங்கு பழைய வாகனங்கள் உபயோக படுத்தாமல் பராமரிக்கப்படாமல்  நிறுத்தப்பட்டு அங்கு குடிகாரர்கள் திறந்தவெளி பார் போல் செயல்படுகிறது .
இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும் சமூக விரோதிகளின் புகழிடமாகவும் இந்த இடம்  உள்ளதால் சுமார் 30 கோடி மதிப்பு மிக்க இந்த இடத்தை கைப்பற்றி அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் பால மீனாம்பிகை திருக்கோவில் நிர்வாகம் முட் புதர்களை அகற்றி வருவாயை பெருக்கும் விதமாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவிலுக்கு சொந்தமான நிலம் ரவுடிகளின் கூடாரமாக மாறி உள்ளது. இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். கோவில் இடத்தை மீட்க வேண்டும் இன்றைக்கு இந்து சமய அறநிலை துறை அமைச்சராக ஒரு இளைஞர் வந்துள்ளார். அவர் இதனை கருத்தில் கொண்டு கோவில் நிலத்தை மீட்டுத் தருவார் என நம்புகிறோம். அதேபோல் மதுரையில் பிரசித்தி பெற்ற தளமான பாண்டி முனீஸ்வரர் கோவிலுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் வழங்கிய நிலத்தை கோவில் பூசாரிகள் பிளாட்டு போட்டுவிட்டனர். இது சம்பந்தமான அனைத்து ஆவணங்களும் கொண்டு அறநிலையத்துறையில் புகார் அளித்துள்ளோம் அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பேட்டி:
சிங்கராஜ் 
வழக்கறிஞர், தென்னிந்திய நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்போர் பொதுச் செயலாளர்.
    user_Dr R.VIJAY
    Dr R.VIJAY
    Local News Reporter மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    1 hr ago
  • வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை *தேனி வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீவிர சோதனை* *லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பேரூராட்சி அலுவலக கதவினை பூட்டி ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர்* தேனி அருகே வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இதன் ஒரு பகுதியாக தேனி வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பேரூராட்சி அலுவலக நுழைவாயில் கதவை பூட்டிவிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள், மற்றும் டெண்டர்கள் வழங்குவதில் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
    2
    வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
*தேனி வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீவிர சோதனை*
*லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பேரூராட்சி அலுவலக கதவினை பூட்டி ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர்*
தேனி அருகே வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் 
தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இதன் ஒரு பகுதியாக தேனி வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் 
லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பேரூராட்சி அலுவலக நுழைவாயில் கதவை பூட்டிவிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் 
பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள், மற்றும் டெண்டர்கள் வழங்குவதில் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • கர்ப்பிணிக்கு சிக்கலான முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை ஆரோக்கியமான குழந்தை பிறப்பு முதுகுத்தண்டுவட காசநோய் பாதிப்பால் நடக்க முடியாமல் அவதிப்பட்ட 28 வார கர்ப்பிணிக்கு, மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சவாலான முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், அந்த பெண் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார். 28 வயதான கர்ப்பிணிக்கு தொடர்ந்து கடுமையான முதுகுத்தண்டு வலி ஏற்பட்டதுடன், நடப்பதில் சிரமமும் மார்புக்குக் கீழ் உணர்விழப்பும் ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனைகளில் முதுகுத்தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நரம்புகளுக்கு அதிக அழுத்தம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, முதுகுத்தண்டுவடத்தின் மீதான அழுத்தத்தை குறைக்கும் வகையில் Decompressive Laminectomy அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தாய் மற்றும் சேய் இருவரையும் காக்க வேண்டும் மற்றும் 28 வார கர்ப்பம் என்பதால் அறுவைசிகிச்சை மருத்துவர்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருந்தது தாயின் உயிருக்கும் உடல்நலத்திற்கும் சிகிச்சை அளிப்பதுடன், வயிற்றில் இருந்த கருவின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியிருந்தது. பரிசோதனைகளில் T1–T2 பகுதியில் முதுகுத்தண்டு பாதிப்பு, முதுகுத்தண்டில் கூன் விழுந்தது போன்ற மாற்றம் மற்றும் நரம்பு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது ‘பாட்ஸ் ஸ்பைன்’ எனப்படும் முதுகுத்தண்டுவட காசநோய் பாதிப்பாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். C3–T4 பகுதியில் சிக்கலான அறுவைசிகிச்சையை தொடர்ந்து முதுகுத்தண்டுவடத்தை நிலைநிறுத்தும் வகையில் C3–T4 பகுதியில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பல மணி நேரம் நோயாளியை குப்புறப் படுக்க வேண்டியிருந்ததால், தாய் மற்றும் கருவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளின் போது கருவை கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கவும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அறுவைசிகிச்சைக்குப் பின்னர் நோயாளியின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் மீண்டும் நன்றாக நடக்கத் தொடங்கினார். தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்த நிலையில், பின்னர் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார். முதுகுத்தண்டுவட அறுவைசிகிச்சை துறைத்தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் கே. செல்வகுமரன், முதுநிலை நிபுணர் டாக்டர் கே. எம். கவில் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறுவைசிகிச்சையை மேற்கொண்டனர். இது மதுரையில் மருத்துவத் துறையின் மிகப்பெரிய சாதனையாக அமைந்துள்ளது.
    1
    கர்ப்பிணிக்கு சிக்கலான முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை ஆரோக்கியமான குழந்தை பிறப்பு
முதுகுத்தண்டுவட காசநோய் பாதிப்பால் நடக்க முடியாமல் அவதிப்பட்ட 28 வார கர்ப்பிணிக்கு, மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சவாலான முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், அந்த பெண் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார்.
28 வயதான கர்ப்பிணிக்கு தொடர்ந்து கடுமையான முதுகுத்தண்டு வலி ஏற்பட்டதுடன், நடப்பதில் சிரமமும் மார்புக்குக் கீழ் உணர்விழப்பும் ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனைகளில் முதுகுத்தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நரம்புகளுக்கு அதிக அழுத்தம் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, முதுகுத்தண்டுவடத்தின் மீதான அழுத்தத்தை குறைக்கும் வகையில் Decompressive Laminectomy அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
தாய் மற்றும் சேய் இருவரையும் காக்க வேண்டும் மற்றும் 
28 வார கர்ப்பம் என்பதால் அறுவைசிகிச்சை மருத்துவர்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருந்தது தாயின் உயிருக்கும் உடல்நலத்திற்கும் சிகிச்சை அளிப்பதுடன், வயிற்றில் இருந்த கருவின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியிருந்தது.
பரிசோதனைகளில் T1–T2 பகுதியில் முதுகுத்தண்டு பாதிப்பு, முதுகுத்தண்டில் கூன் விழுந்தது போன்ற மாற்றம் மற்றும் நரம்பு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது ‘பாட்ஸ் ஸ்பைன்’ எனப்படும் முதுகுத்தண்டுவட காசநோய் பாதிப்பாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
C3–T4 பகுதியில் சிக்கலான அறுவைசிகிச்சையை
தொடர்ந்து முதுகுத்தண்டுவடத்தை நிலைநிறுத்தும் வகையில் C3–T4 பகுதியில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பல மணி நேரம் நோயாளியை குப்புறப் படுக்க வேண்டியிருந்ததால், தாய் மற்றும் கருவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளின்
போது கருவை கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கவும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
அறுவைசிகிச்சைக்குப் பின்னர் நோயாளியின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் மீண்டும் நன்றாக நடக்கத் தொடங்கினார். தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்த நிலையில், பின்னர் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார்.
முதுகுத்தண்டுவட அறுவைசிகிச்சை துறைத்தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் கே. செல்வகுமரன், முதுநிலை நிபுணர் டாக்டர் கே. எம். கவில் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறுவைசிகிச்சையை மேற்கொண்டனர்.
இது மதுரையில் மருத்துவத் துறையின் மிகப்பெரிய சாதனையாக அமைந்துள்ளது.
    user_மதுரைக்காரன்
    மதுரைக்காரன்
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • நேபாள நோக்கி பெருமளவு நீர் பாய்ந்து திடீர்வெள்ளப் பேரழிவுகாரணம் என்ன? போதேகோஷி ஆற்றை சக்திவாய்ந்த நிலச்சரிவு மறித்ததால், சீனப் பகுதியில் இருந்து நேபாளத்தை நோக்கி பெருமளவு நீர் பாய்ந்து திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. • பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து பள்ளத்தாக்கில் விழுந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்; இது நிலச்சரிவைத் தூண்டியிருக்கலாம் அல்லது அதன் தாக்கத்தை மேலும் தீவிரப்படுத்தியிருக்கலாம்.
    1
    நேபாள நோக்கி பெருமளவு நீர் பாய்ந்து திடீர்வெள்ளப் பேரழிவுகாரணம் என்ன?
போதேகோஷி ஆற்றை சக்திவாய்ந்த நிலச்சரிவு மறித்ததால், சீனப் பகுதியில் இருந்து நேபாளத்தை நோக்கி பெருமளவு நீர் பாய்ந்து திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
• பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து பள்ளத்தாக்கில் விழுந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்; இது நிலச்சரிவைத் தூண்டியிருக்கலாம் அல்லது அதன் தாக்கத்தை மேலும் தீவிரப்படுத்தியிருக்கலாம்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • ஆண்டிப்பட்டி அருகே உள்ள வருசநாடு பகுதியில் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றிதிரியும் நாய்கள் கூட்டம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் மிகவும் அச்சத்தோடு இருக்கின்றனர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு பகுதியில் நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன இதனால் பொதுமக்கள் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு சென்று வருகின்றனர் பொதுமக்கள் யாரையும் இந்த நாய் கூட்டம் கடித்து விடும் முன்பு இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    1
    ஆண்டிப்பட்டி அருகே உள்ள வருசநாடு பகுதியில் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றிதிரியும் நாய்கள் கூட்டம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது 

இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் மிகவும் அச்சத்தோடு இருக்கின்றனர் 
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு பகுதியில் நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன 
இதனால் பொதுமக்கள் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு சென்று வருகின்றனர் 
பொதுமக்கள் யாரையும் இந்த நாய் கூட்டம் கடித்து விடும் முன்பு இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • திண்டுக்கல்லில் மின் கசிவு காரணமாக துணிக்கடையில் தீ விபத்து உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு திண்டுக்கல் கிழக்குரத வீதியில் சுப்ரமணியம் டெக்ஸ்டைல்ஸ் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு ஊழியர்கள் கிளம்பிச் சென்றனர். இந்நிலையில் இன்று 27.08.26 காலை கடையின் முன்பக்கம் வைத்துள்ள கண்ணாடி ஷோகேஸ் அருகே மின் கசிவு காரணமாக திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. பூட்டி இருந்த கடையில் இருந்து புகை வருவதை கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை துரிதமாக செயல்பட்டு கடைக்குள் தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். மேலும் கடையின் முன்பக்கம் உள்ள கண்ணாடி ஷோகேஸ் மற்றும் அது சுற்றி உள்ள பகுதியில் பரவிய தீயை உடனடியாக அணைத்தனர். இந்த தீ விபத்தினால் பெரும் அளவில் பொருட் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    1
    திண்டுக்கல்லில் மின் கசிவு காரணமாக துணிக்கடையில் தீ விபத்து உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு
திண்டுக்கல் கிழக்குரத வீதியில் சுப்ரமணியம் டெக்ஸ்டைல்ஸ் செயல்பட்டு வருகிறது.
நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு ஊழியர்கள் கிளம்பிச் சென்றனர். 
இந்நிலையில் இன்று 27.08.26 காலை கடையின் முன்பக்கம் வைத்துள்ள கண்ணாடி ஷோகேஸ் அருகே மின் கசிவு காரணமாக திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. 
பூட்டி இருந்த கடையில் இருந்து புகை வருவதை கண்ட பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை துரிதமாக செயல்பட்டு கடைக்குள் தீ பரவாமல் கட்டுப்படுத்தினர்.
மேலும் கடையின் முன்பக்கம் உள்ள கண்ணாடி ஷோகேஸ் மற்றும் அது சுற்றி உள்ள பகுதியில் பரவிய தீயை உடனடியாக அணைத்தனர்.
இந்த தீ விபத்தினால் பெரும் அளவில் பொருட் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    user_DOMINIC SELVARAJ
    DOMINIC SELVARAJ
    திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    7 hrs ago
  • உங்களைத் தேடி உங்கள் ஊர்' முகாமில் மனுக்கள் பெற மாவட்ட ஆட்சியர் வராததால் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அரசு அதிகாரிகள் அலட்சியம் 'உங்களைத் தேடி உங்கள் ஊர்' முகாமில் மனுக்கள் பெற மாவட்ட ஆட்சியர் வராததால் பொதுமக்கள் வேதனை ஆறு மணிக்கு மேல் மனு வாங்காததால் அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம் ​ ​ தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெரியகுளம் தாலுகா பகுதியில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி காலை 9 மணி முதல் ஆகஸ்ட் 28-ஆம் தேதி காலை 9 மணி வரை 24 மணி நேர சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக பெரியகுளத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ​ தங்கள் பகுதியின் நீண்டகாலப் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் காலையிலேயே முகாம் அமைவிடத்திற்கு வந்து குவிந்தனர். முகாமுக்கு வந்த மக்களிடம் அங்கு இருந்த அதிகாரிகள் முறையான பதில்களைக் கூறாமல் பொறுமையில் பேசி பொதுமக்களை அலைக்கழித்துள்ளனர். மேலும் அரசு அதிகாரிகள் மனுக்களைப் பெறுவதிலும், அதில் உள்ள சந்தேகங்களைத் தீர்ப்பதிலும் மெத்தனப் போக்கையும் அலட்சியத்தையும் காட்டியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. எனவே​ மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன் அவர்கள் நேரடியாக வந்து மனுக்களைப் பெறுவார் என பொதுமக்கள் மாலை 3 மணி முதல் ஆறு மணி வரை நீண்ட நேரமாகக் காத்திருந்தனர். ஆனால், ஆட்சியர் வருகை தராததால் ஏமாற்றமடைந்த மக்கள், மனுக்களைக் கூட வழங்க முடியாமல் வேதனையுடன் திரும்பினர். 'மக்களுக்காக முகாம்' என்று விளம்பரம் செய்துவிட்டு, பெயரளவில் மட்டும் முகாம் நடத்திய மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு சிறிது நேரம் கடும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. ​மேலும் அரசுத்துறை அதிகாரிகள் மாலை 6:00 மணியுடன் வேலைகளை முடித்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து ஆறு மணிக்கு மேல் மனு கொடுக்க வந்த பெண்களுக்கு மனுக்கள் பெறப்படாது எனக் கூறியதை தொடர்ந்து அங்கு இருந்த பெரியகுளம் வட்டாட்சியர் புவனேஸ்வரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசுத் திட்டங்களை மதித்து வரும் மக்களுக்குச் சரியான பதில் அளிக்காமல் அலட்சியமாக நடந்துகொண்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மீது தமிழக அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இதுபோன்று அரசு பணத்தை விரயம் செய்து பெயரளவில் நடைபெறும் முகாம்களை நடத்தி பொதுமக்களை அலைக்களிப்பதாகவும், இது போன்ற செயல்படும் அரசு அதிகாரி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேட்டி : அரசப்பன்.
    1
    உங்களைத் தேடி உங்கள் ஊர்' முகாமில் மனுக்கள் பெற மாவட்ட ஆட்சியர் வராததால் 
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அரசு அதிகாரிகள் அலட்சியம்
'உங்களைத் தேடி உங்கள் ஊர்' முகாமில் மனுக்கள் பெற மாவட்ட ஆட்சியர் வராததால் பொதுமக்கள் வேதனை 
ஆறு மணிக்கு மேல் மனு வாங்காததால் அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்
​
​ தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெரியகுளம் தாலுகா பகுதியில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி காலை 9 மணி முதல் ஆகஸ்ட் 28-ஆம் தேதி காலை 9 மணி வரை 24 மணி நேர சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 
இதற்காக பெரியகுளத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
​ தங்கள் பகுதியின் நீண்டகாலப் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் காலையிலேயே முகாம் அமைவிடத்திற்கு வந்து குவிந்தனர்.
முகாமுக்கு வந்த மக்களிடம் அங்கு இருந்த அதிகாரிகள் முறையான பதில்களைக் கூறாமல் பொறுமையில் பேசி பொதுமக்களை அலைக்கழித்துள்ளனர். 
மேலும் அரசு அதிகாரிகள் மனுக்களைப் பெறுவதிலும், அதில் உள்ள சந்தேகங்களைத் தீர்ப்பதிலும் மெத்தனப் போக்கையும் அலட்சியத்தையும் காட்டியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
எனவே​ மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன் அவர்கள் நேரடியாக வந்து மனுக்களைப் பெறுவார் என பொதுமக்கள் மாலை 3 மணி முதல் ஆறு மணி வரை நீண்ட நேரமாகக் காத்திருந்தனர். ஆனால், ஆட்சியர் வருகை தராததால் ஏமாற்றமடைந்த மக்கள், மனுக்களைக் கூட வழங்க முடியாமல் வேதனையுடன் திரும்பினர்.
'மக்களுக்காக முகாம்' என்று விளம்பரம் செய்துவிட்டு, பெயரளவில் மட்டும் முகாம் நடத்திய மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு சிறிது நேரம் கடும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
​மேலும் அரசுத்துறை அதிகாரிகள் மாலை 6:00 மணியுடன் வேலைகளை முடித்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து ஆறு மணிக்கு மேல் மனு கொடுக்க வந்த பெண்களுக்கு மனுக்கள் பெறப்படாது எனக் கூறியதை தொடர்ந்து அங்கு இருந்த பெரியகுளம் வட்டாட்சியர் புவனேஸ்வரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அரசுத் திட்டங்களை மதித்து வரும் மக்களுக்குச் சரியான பதில் அளிக்காமல் அலட்சியமாக நடந்துகொண்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மீது தமிழக அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் இதுபோன்று அரசு பணத்தை விரயம் செய்து பெயரளவில் நடைபெறும் முகாம்களை நடத்தி பொதுமக்களை அலைக்களிப்பதாகவும், இது போன்ற செயல்படும் அரசு அதிகாரி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி : அரசப்பன்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 28 வார கர்ப்பிணிக்கு முதுகுத்தண்டு சிகிச்சை செய்து சாதனை *மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 28 வார கர்ப்பிணிக்கு முதுகுத்தண்டு சிகிச்சை செய்து சாதனை* மதுரை மாவட்டம் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 28 வார கர்ப்பிணிக்கு சிக்கலான முதுகுத்தண்டு வட அறுவை சிகிச்சை செய்து சாதனை. மேலும் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்தார் என்பது கூடுதல் சிறப்பு. கிட்டத்தட்ட ஓராண்டாக கடுமையான கழுத்து வலியால் அவதிப்பட்டு வந்த 28 வயது கர்ப்பிணிப் பெண்ணுக்கு முதுகுத்தண்டுவட காசநோய் உருவானதால் நடப்பதில் சிரமமும், மார்புக்குக் கீழே உணர்ச்சியிழப்பும் ஏற்பட்டுருத்தது. முதுகுத்தண்டுவட அழுத்ததை குறைப்பதற்கான சிகிச்சையையும், திசு நீக்கம் மற்றும் நோயாளியின் சொந்த எலும்புகளைக் கொண்டு முதுகுத்தண்டை நிலைநிறுத்தும் ஒட்டு மொத்த அறுவை சிகிச்சையையும் மருத்துவர்கள் குழு வெற்றிகரமாக மேற்கொண்டது. அதே நேரத்தில் கர்ப்பத்திலுள்ள கருவுக்கு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படாதவாறு உரிய சிகிச்சை அளித்து தாய், சேய் இருவரும் நலமாக உள்ளனர் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி நரம்பியல் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் மருத்துவர் செல்வமுத்துக் குமரன் கூறினார். உடன் முதுநிலை நிபுணர் மருத்துவர் செந்தில்குமார், இணை நிபுணர் மருத்துவர் கவீஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
    1
    மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 28 வார கர்ப்பிணிக்கு முதுகுத்தண்டு சிகிச்சை செய்து சாதனை
*மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 28 வார கர்ப்பிணிக்கு முதுகுத்தண்டு சிகிச்சை செய்து சாதனை*   
மதுரை மாவட்டம்
மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 28 வார கர்ப்பிணிக்கு சிக்கலான முதுகுத்தண்டு வட அறுவை சிகிச்சை செய்து சாதனை. மேலும் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்தார் என்பது கூடுதல் சிறப்பு. கிட்டத்தட்ட ஓராண்டாக கடுமையான கழுத்து வலியால் அவதிப்பட்டு வந்த 28 வயது கர்ப்பிணிப் பெண்ணுக்கு முதுகுத்தண்டுவட காசநோய் உருவானதால் நடப்பதில் சிரமமும்,  மார்புக்குக் கீழே உணர்ச்சியிழப்பும் ஏற்பட்டுருத்தது.  முதுகுத்தண்டுவட அழுத்ததை குறைப்பதற்கான சிகிச்சையையும், திசு நீக்கம் மற்றும் நோயாளியின் சொந்த எலும்புகளைக் கொண்டு முதுகுத்தண்டை நிலைநிறுத்தும்  ஒட்டு மொத்த அறுவை சிகிச்சையையும் மருத்துவர்கள் குழு வெற்றிகரமாக மேற்கொண்டது. அதே நேரத்தில் கர்ப்பத்திலுள்ள கருவுக்கு கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படாதவாறு உரிய சிகிச்சை அளித்து தாய், சேய் இருவரும் நலமாக  உள்ளனர் என பத்திரிக்கையாளர் சந்திப்பில் மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி நரம்பியல் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் மருத்துவர் செல்வமுத்துக் குமரன் கூறினார். உடன் முதுநிலை நிபுணர் மருத்துவர் செந்தில்குமார், இணை நிபுணர் மருத்துவர் கவீஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
    user_Dr R.VIJAY
    Dr R.VIJAY
    Local News Reporter மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • மணப்பாறையில் ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் பற்றி எரிந்த தீ : கடும் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி திருச்சி மாவட்டம் மணப்பாறை திண்டுக்கல் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகே தனியார் பள்ளி, விடுதி, நுகர்பொருள் வாணிபக் கிடங்கு, தேவாலயம், - மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் பாலத்திற்கு அடியில் ரெயில்வே தண்டவாளம் அருகே மின் மாற்றிக்கு எதிரே அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் பிளாஸ்டிக் கழிவுகள், கருப்பு சக்கை, பல்வேறு விதமான குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென அந்த குப்பையில் தீப்பற்றி எரிந்தது. இந்த தீ ரெயில்வே மின் இணைப்பு அருகேயும், மின் மாற்றி அருகேயும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தீ எரிந்ததோடு அந்த இடத்தில் இருந்து கரும் புகை கிளம்பியது. இதனால் அந்த பகுதியே கடும் புகை மூட்டமாக காட்சி அளித்ததுடன் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுமட்டுமின்றி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் புகை சூழ்ந்து கொண்டதால் மக்கள் மூச்சு விட கூட கடும் சிரமப்பட்டனர். இவ்வாறு தீ பற்றி எரியும் சம்பவம் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. பாலத்தின் அடியில் குப்பைகளை கொட்டுவதால் தான் அடிக்கடி தீவிபத்து ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் பள்ளி உள்ளதால் மாணவ -மாணவிகள் தொற்று நோய்க்கு ஆளாகும் நிலையும் உள்ளது. ஆகவே திண்டுக்கல் சாலை ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் குப்பை கொட்டுவதை தடுக்க நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    4
    மணப்பாறையில்
ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் பற்றி எரிந்த தீ :
கடும் புகை மூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
திருச்சி மாவட்டம் மணப்பாறை திண்டுக்கல் சாலையில் ரெயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் அருகே தனியார் பள்ளி, விடுதி, நுகர்பொருள் வாணிபக் கிடங்கு, தேவாலயம், - மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் பாலத்திற்கு அடியில் ரெயில்வே  தண்டவாளம் அருகே மின் மாற்றிக்கு எதிரே அதிக அளவில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் பிளாஸ்டிக் கழிவுகள், கருப்பு சக்கை, பல்வேறு விதமான குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இந்த நிலையில் நேற்று மதியம் திடீரென அந்த குப்பையில் தீப்பற்றி எரிந்தது.  இந்த தீ ரெயில்வே மின் இணைப்பு அருகேயும், மின் மாற்றி அருகேயும்  பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக தீ எரிந்ததோடு அந்த இடத்தில் இருந்து கரும் புகை கிளம்பியது. இதனால் அந்த பகுதியே கடும் புகை மூட்டமாக காட்சி அளித்ததுடன் அந்த வழியாக வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதுமட்டுமின்றி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளையும் புகை சூழ்ந்து கொண்டதால் மக்கள் மூச்சு விட கூட கடும் சிரமப்பட்டனர். இவ்வாறு தீ பற்றி எரியும் சம்பவம் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. பாலத்தின் அடியில் குப்பைகளை கொட்டுவதால் தான் அடிக்கடி தீவிபத்து ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் பள்ளி உள்ளதால் மாணவ -மாணவிகள் தொற்று நோய்க்கு ஆளாகும் நிலையும் உள்ளது. ஆகவே திண்டுக்கல் சாலை ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் குப்பை கொட்டுவதை தடுக்க நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    4 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.