வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை *தேனி வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீவிர சோதனை* *லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பேரூராட்சி அலுவலக கதவினை பூட்டி ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர்* தேனி அருகே வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இதன் ஒரு பகுதியாக தேனி வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பேரூராட்சி அலுவலக நுழைவாயில் கதவை பூட்டிவிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள், மற்றும் டெண்டர்கள் வழங்குவதில் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை *தேனி வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீவிர சோதனை* *லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பேரூராட்சி அலுவலக கதவினை பூட்டி ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர்* தேனி அருகே வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்ற
நிலையில் இதன் ஒரு பகுதியாக தேனி வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பேரூராட்சி அலுவலக நுழைவாயில் கதவை பூட்டிவிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள், மற்றும் டெண்டர்கள் வழங்குவதில் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
- வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை *தேனி வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீவிர சோதனை* *லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் பேரூராட்சி அலுவலக கதவினை பூட்டி ஆவணங்களை சரிபார்த்து வருகின்றனர்* தேனி அருகே வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று சோதனை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இதன் ஒரு பகுதியாக தேனி வீரபாண்டி பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பேரூராட்சி அலுவலக நுழைவாயில் கதவை பூட்டிவிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் பேரூராட்சி சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள், மற்றும் டெண்டர்கள் வழங்குவதில் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது2
- வறண்ட மீனாட்சி அம்மன் கண்மாய் குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் மீனாட்சிபுரம் பேரூராட்சி நிர்வாகம் *போதிய மழை இன்றி வற்றி வற ண்டு போன தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய மீனாட்சியம்மன் கண்மாய். டன் கணக்கில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மது பாட்டில் கழிவுகள். கண்மாயை சுற்றிலும் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் குப்பை கழிவுகளை அகற்றும் பணியை தொடங்கிய மீனாட்சிபுரம் பேரூராட்சி* . தேனி மாவட்டத்தில் மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்று மீனாட்சி அம்மன் கண்மாய். போடிநாயக்கனூரில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மீனாட்சிபுரம் அருகில் அமைந்துள்ள இந்த கண்மாய் சுமார் 5 சதுர கிலோமீட்டர் பரப்பு சுற்றளவு கொண்டது. தேனி மாவட்டத்தின் மிகப்பெரிய கண்மாய்களில் ஒன்றாக கருதப்படுகின்ற இந்தக் கண்மாயில் உள்ள நீர் இப்பகுதியில் உள்ள சுமார் 5,000 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்திற்கு பாசன வசதி தருகின்றது. மேலும் இங்கு கட்லா ரோகு கெண்டை ஜிலேபி கெண்டை விரால் கெளுத்தி போன்ற நாட்டு ரக மீன்கள் டன் கணக்கில் உற்பத்தியாவதால் தேனி மாவட்ட மீன்வளத்துறை மூலம் குத்தகைக்கு விடப்படுகிறது. இந்த கண்மாயில் உள்ள மீன்களை உணவாக உண்டு இப்பகுதியில் நீர் காகம் வாத்து பெலிக்கன் கரண்டி மூக்கன் கொக்கு நாரை போன்ற பல்வேறு வெளிநாட்டு உள்நாட்டு பறவைகள் வசித்து வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தக் கண்மாய் தற்போது கடந்த ஆறு மாத காலமாக போடிநாயக்கனூர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய மழை யின்மை காரணமாக நீர்வரத்து இன்றி முற்றிலும் வறண்டு காணப்படுகிறது. இந்நிலையில் போடிநாயக்கனூர் மற்றும் மேல சொக்கநாதபுரம் பகுதியில் உள்ள சாக்கடை கழிவுகளும் இறைச்சி கழிவுகள் மற்றும் மருத்துவ கழிவுகள் கண்மாயில் கலப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது கண்மாய் நீர் முற்றிலும் வறண்டு காணப்படுவதால் கண்மாய் சுற்றிலும் பிளாஸ்டிக் கழிவுகள் மதுபான பாட்டில் கழிவுகள் டன் கணக்கில் குவிந்து கிடக்கின்றன. தற்போது இதனை அகற்றும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் மீனாட்சிபுரம் பேரூராட்சி நிர்வாகம் மீனாட்சிபுரம் பகுதியில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் மற்றும் மதுபான பாட்டல் கழிவுகள் குப்பை கழிவுகளை அகற்றுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் உதவியுடன் மீனாட்சிபுரம் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் கண்மாயில் உள்ள குப்பை கழிவுகள் மற்றும் மதுபாட்டில் கழிவுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குப்பைக் கழிவுகளை அகற்றவே நாள் கணக்கில் ஆகும் என்பதால் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்ற தூய்மை பணியாளர்களுடன் சமூக அலுவலர்கள் முன் வர வேண்டும் என்று மீனாட்சிபுரம் பேரூராட்சி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளனர். மீனாட்சிபுரத்தில் அமைந்திருந்தாலும் இந்த தன்மை அம்மாபட்டி ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பேரூராட்சி தலைவர் திருப்பதி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் யோக ஸ்ரீ மற்றும் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் சமூக அலுவலர்கள் தீவிரமாக குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்1
- ஆண்டிப்பட்டி அருகே உள்ள வருசநாடு பகுதியில் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றிதிரியும் நாய்கள் கூட்டம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் மிகவும் அச்சத்தோடு இருக்கின்றனர் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு பகுதியில் நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிகின்றன இதனால் பொதுமக்கள் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு சென்று வருகின்றனர் பொதுமக்கள் யாரையும் இந்த நாய் கூட்டம் கடித்து விடும் முன்பு இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்1
- திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி NCC AIRWING மாணவர்கள் கடலைப் பாதுகாப்போம் – எதிர்காலத் தலை முறையைக் காப்போம்” என்ற நோக்கத்தை வலியுறுத்தி கடலுக்கடியில் விழிப்புணர்வு. புதுச்சேரியில் 26.08.2026 அன்று SCUBA DIVING செயல்பாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி NCC AIRWING மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, கடலுக்கடியில் நீர் மூழ்கிப் பயிற்சி மற்றும் கடல் சூழலியல் தொடர்பான விழிப்புணர்வை பெற்றனர். SCUBA DIVING மூலம் மாணவர்கள் கடல் உயிரினங்கள், பவளப்பாறைகள் மற்றும் கடல் சூழலின் முக்கியத்துவத்தை நேரடியாக அறிந்து கொண்டனர். மேலும், நீருக்கடியில் பாதுகாப்பாக செயல்படுதல், குழு ஒருங்கிணைப்பு, ஒழுக்கம், தன்னம்பிக்கை, துணிச்சல் மற்றும் பொறுப்புணர்வு போன்ற பண்புகள் வளர்க்கப்பட்டன. இந்த நிகழ்வு “கடலைப் பாதுகாப்போம் – எதிர்காலத் தலை முறையைக் காப்போம்” என்ற நோக்கத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்தது. கடல் மாசுபாட்டைக் குறைத்தல், கடல் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் கடல் உயிரினங்களின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வு மாணவர்களுக்கு புதிய அனுபவத்தையும் சவால்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தையும் வழங்கியது. NCC-யின் ஒழுக்கம், தலைமைத்துவம், குழு உணர்வு, துணிச்சல் மற்றும் நாட்டுப்பற்று போன்ற உயரிய பண்புகளை வளர்க்கும் வகையிலும் SCUBA DIVING செயல்பாடு பயனுள்ளதாக அமைந்தது. SCUBA DIVING நிகழ்வு மாணவர்களின் உடல் மற்றும் மனத் திறன்களை மேம்படுத்தியதுடன், கடலைப் பாதுகாக்க வேண்டிய சமூகப் பொறுப்புணர்வையும் ஏற்படுத்தியது. இந்நிகழ்வு மறக்க முடியாத பயனுள்ள அனுபவமாக அமைந்தது என மாணவர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியினை, திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கம் மற்றும் திண்டுக்கல் புனித மேரி மேல்நிலைப் பள்ளி இன்டராக்ட் சங்கம். இணைந்து செய்திருந்தனர் தொடர்ந்து புனித மரியன்னை பள்ளி அருள்தந்தை ஸ்டீபன் லூர்து பிரகாசம் அவர்கள் நிர்வாகி மற்றும் தலைமை ஆசிரியர் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகளான சண்முகம் (உதவி ஆளுநர்), பால சுந்தர், ரெங்கையா (தலைவர்), மதன முனியப்பன் (தலைவர்), மாணவர்களை பாராட்டினர். நிகழ்ச்சியினை NCC அலுவலர் ஜெரோம் நிக்கோலஸ் அவர்கள் ஒருங்கிணைத்தார்.1
- குலுங்கியது குன்றம் ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர் *குலுங்கியது குன்றம் ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர்* மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளின் முதல் படை வீடான இன்று ஆவணி மாத முதல் பௌர்ணமி முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர். இன்று காலை பௌர்ணமி திதி 9 52க்கு தொடங்கி நாளை காலை 10 மணி வரை உள்ளது. இதனால் மாலை 6 மணிக்கு முதல் திருப்பரங்குன்றத்தில் கிரிவலம் செல்ல ஏராளமான பெண் பக்தர்கள் ஆண்கள் பக்தர்கள் மற்றும் குடும்பத்துடன் வந்து கோயில் வாசல் முன்பாக சாமி கும்பிட்டு பக்தர்கள் கிரிவலம் வந்தனர். ' ஒரே நேரத்தில் ஏராளமான பக்தர்கள் வந்ததால் பக்தர்கள் கூட்டம் அலை மோதி குன்றம் குலுங்கியது. கிரிவலம் வந்த பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அன்னதானத்தை பெற்று சென்றார்கள்1
- கர்ப்பிணிக்கு சிக்கலான முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை ஆரோக்கியமான குழந்தை பிறப்பு முதுகுத்தண்டுவட காசநோய் பாதிப்பால் நடக்க முடியாமல் அவதிப்பட்ட 28 வார கர்ப்பிணிக்கு, மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சவாலான முதுகுத்தண்டு அறுவைசிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அறுவைசிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், அந்த பெண் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார். 28 வயதான கர்ப்பிணிக்கு தொடர்ந்து கடுமையான முதுகுத்தண்டு வலி ஏற்பட்டதுடன், நடப்பதில் சிரமமும் மார்புக்குக் கீழ் உணர்விழப்பும் ஏற்பட்டது. மருத்துவப் பரிசோதனைகளில் முதுகுத்தண்டுவடத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நரம்புகளுக்கு அதிக அழுத்தம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, முதுகுத்தண்டுவடத்தின் மீதான அழுத்தத்தை குறைக்கும் வகையில் Decompressive Laminectomy அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தாய் மற்றும் சேய் இருவரையும் காக்க வேண்டும் மற்றும் 28 வார கர்ப்பம் என்பதால் அறுவைசிகிச்சை மருத்துவர்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருந்தது தாயின் உயிருக்கும் உடல்நலத்திற்கும் சிகிச்சை அளிப்பதுடன், வயிற்றில் இருந்த கருவின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியிருந்தது. பரிசோதனைகளில் T1–T2 பகுதியில் முதுகுத்தண்டு பாதிப்பு, முதுகுத்தண்டில் கூன் விழுந்தது போன்ற மாற்றம் மற்றும் நரம்பு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது ‘பாட்ஸ் ஸ்பைன்’ எனப்படும் முதுகுத்தண்டுவட காசநோய் பாதிப்பாக இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். C3–T4 பகுதியில் சிக்கலான அறுவைசிகிச்சையை தொடர்ந்து முதுகுத்தண்டுவடத்தை நிலைநிறுத்தும் வகையில் C3–T4 பகுதியில் அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பல மணி நேரம் நோயாளியை குப்புறப் படுக்க வேண்டியிருந்ததால், தாய் மற்றும் கருவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளின் போது கருவை கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கவும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அறுவைசிகிச்சைக்குப் பின்னர் நோயாளியின் உடல்நிலையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் மீண்டும் நன்றாக நடக்கத் தொடங்கினார். தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்த நிலையில், பின்னர் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார். முதுகுத்தண்டுவட அறுவைசிகிச்சை துறைத்தலைவரும் முதுநிலை நிபுணருமான டாக்டர் கே. செல்வகுமரன், முதுநிலை நிபுணர் டாக்டர் கே. எம். கவில் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அறுவைசிகிச்சையை மேற்கொண்டனர். இது மதுரையில் மருத்துவத் துறையின் மிகப்பெரிய சாதனையாக அமைந்துள்ளது.1
- உங்களைத் தேடி உங்கள் ஊர்' முகாமில் மனுக்கள் பெற மாவட்ட ஆட்சியர் வராததால் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அரசு அதிகாரிகள் அலட்சியம் 'உங்களைத் தேடி உங்கள் ஊர்' முகாமில் மனுக்கள் பெற மாவட்ட ஆட்சியர் வராததால் பொதுமக்கள் வேதனை ஆறு மணிக்கு மேல் மனு வாங்காததால் அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம் தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெரியகுளம் தாலுகா பகுதியில் ஆகஸ்ட் 27-ஆம் தேதி காலை 9 மணி முதல் ஆகஸ்ட் 28-ஆம் தேதி காலை 9 மணி வரை 24 மணி நேர சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக பெரியகுளத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தங்கள் பகுதியின் நீண்டகாலப் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் காலையிலேயே முகாம் அமைவிடத்திற்கு வந்து குவிந்தனர். முகாமுக்கு வந்த மக்களிடம் அங்கு இருந்த அதிகாரிகள் முறையான பதில்களைக் கூறாமல் பொறுமையில் பேசி பொதுமக்களை அலைக்கழித்துள்ளனர். மேலும் அரசு அதிகாரிகள் மனுக்களைப் பெறுவதிலும், அதில் உள்ள சந்தேகங்களைத் தீர்ப்பதிலும் மெத்தனப் போக்கையும் அலட்சியத்தையும் காட்டியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் வைத்தியநாதன் அவர்கள் நேரடியாக வந்து மனுக்களைப் பெறுவார் என பொதுமக்கள் மாலை 3 மணி முதல் ஆறு மணி வரை நீண்ட நேரமாகக் காத்திருந்தனர். ஆனால், ஆட்சியர் வருகை தராததால் ஏமாற்றமடைந்த மக்கள், மனுக்களைக் கூட வழங்க முடியாமல் வேதனையுடன் திரும்பினர். 'மக்களுக்காக முகாம்' என்று விளம்பரம் செய்துவிட்டு, பெயரளவில் மட்டும் முகாம் நடத்திய மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு சிறிது நேரம் கடும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. மேலும் அரசுத்துறை அதிகாரிகள் மாலை 6:00 மணியுடன் வேலைகளை முடித்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து ஆறு மணிக்கு மேல் மனு கொடுக்க வந்த பெண்களுக்கு மனுக்கள் பெறப்படாது எனக் கூறியதை தொடர்ந்து அங்கு இருந்த பெரியகுளம் வட்டாட்சியர் புவனேஸ்வரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அரசுத் திட்டங்களை மதித்து வரும் மக்களுக்குச் சரியான பதில் அளிக்காமல் அலட்சியமாக நடந்துகொண்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மீது தமிழக அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் இதுபோன்று அரசு பணத்தை விரயம் செய்து பெயரளவில் நடைபெறும் முகாம்களை நடத்தி பொதுமக்களை அலைக்களிப்பதாகவும், இது போன்ற செயல்படும் அரசு அதிகாரி மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேட்டி : அரசப்பன்.1
- திருமண ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் முன் விரோதம் வத்திராயிருப்பு அருகே வீடு புகுந்து தந்தை, மகனுக்கு அரிவாள் வெட்டு பொதுமக்கள் போராட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கான்சாபுரத்தில் திருமண ஊர்வலத்தில் பட்டாசு வெடித்தது தொடர்பான முன்விரோதத்தில் வீடு புகுந்து தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதை கண்டித்து நடந்த ஆர்பாட்டத்தில் வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு கான்சாபுரம் மங்கம்மாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கணேசபாண்டி(49). இவரது மனைவி தமிழ் செல்வி(46). இவர்களது மகன் கவுதம்(21). கணேசபாண்டி கூலிவேலை செய்து வருகிறார். செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேச பாண்டியை இரு பைக்குகளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். சத்தம் கேட்டு தடுக்க வந்த அவரது மகன் கவுதமையும் அரிவாளால் வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் கான்சாபுரம் கீழத்தெருவை சேர்ந்த கருப்பசாமி மகன் முனியசாமி, பூபதி மகன் முனியசாமி, ராஜேஷ் மகன் கண்ணபிரான், ராஜலிங்கம் மகன் ராகேஷ், முத்தையன் மகன் பிரகாஷ் ஆகிய 5 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த வத்திராயிருப்பு போலீஸார், 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். புதன்கிழமை காயமடைந்த கணேச பாண்டியின் உறவினர்கள் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த போது, சாலையோரம் நின்றிருந்த ஆட்டோக்கள் மற்றும் பைக்குகள் மீது கல் வீச்சில் சேதமடைந்தது. சம்பவ இடத்தில் மதுரை சரக டிஐஜி அபினவ்குமார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். விருதுநகர் பொறுப்பு எஸ்பி சரவணன் தலைமையில், ஏடிஎஸ்பி, 3 டிஎஸ்பிக்கள், 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 250- க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகாசி சார் ஆட்சியர் முகமது இர்ஃபான் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் காயமடைந்த இளைஞர் துணை ராணுவ படைக்கு தேர்வாகி உள்ளதால், காயம் காரணமாக வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவருக்கு தகுதிக்கேற்ற அரசு பணி வழங்க வேண்டும். தொடர்ந்து இதுபோன்று சம்பவங்கள் நடக்காமல் இருக்க பட்டாசு வெடிப்பதை தடை செய்ய வேண்டும், என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீஸார் கூறுகையில்: கடந்த 15-ம் தேதி மங்கம்மாள் கோயில் தெரு வழியாக சென்ற திருமண ஊர்வலத்தில் ட்ரம்ஸ் அடித்து பட்டாசு வெடித்து ஆடியபடி சென்றுள்ளனர். அப்போது அப்பகுதி மக்கள் பட்டாசுகளை பார்த்து வெடிக்குமாறு கூறிதால் மணப்பெண்ணின் சகோதரர் ராகேஷ், கணேச பாண்டி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த முன் விரோதத்தில் நேற்று இரவு ராகேஷ் தனது நண்பர்கள் உடன் சேர்ந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணேசப்பாண்டியை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டினர். அப்போது தடுக்கச் சென்ற கவுதமும் அரிவாள் வெட்டில் காயமடைந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து புதன்கிழமை ஆர்ப்பாட்டம் செய்ய வந்த பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், எதிர் தரப்பினரின் வீடு மற்றும் வாகனங்கள் மீது கல் வீசி தாக்கினர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம், என்றனர்.1