திருப்பத்தூரில் ஸ்கேட்டிங் வீரர்களுக்கு ரூ32,025 மதிப்புள்ள ஷூ வழங்கிய ஆட்சியர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில், திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், மேல் பகுதியை சேர்ந்த செல்வன் செ.முகுந்தன் (வயது 12), செ. கீர்த்திகா (வயது -11) த/பெ செல்வகுமார் ஆகிய இருவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் நடைபெற்ற ஸ்கேட்டிங் விளையாட்டுப் போட்டிகளில் மாநில அளவில் (under -14) மற்றும் (under-11) ஆகிய பிரிவுகளின் முதல் பரிசு பெற்று, தேசிய அளவில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கு கலந்து கொள்ள உள்ளதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்களின் சமூக பங்களிப்பு (CSR) நிதியிலிருந்து, தலா ரூ.32,025/- மதிப்பிலான ஸ்கேட்டிங் ஷூகளை மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி இன்று (11.05.2026) வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.நாராயணன், மாவட்ட ஊரசு வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டாக்டர் உமாமகேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) பூஷணகுமார், உதவி இயக்குநர் ஊராட்சிகள் (தெற்கு) மகாதேவன், (வடக்கு) முருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தணிகாசலம், மாவட்ட பழங்குடியினர் நலதிட்ட அலுவலர் செந்தில்குமார். மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) முருகேசன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தாமரைமமாளன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.

- திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. குடிநீர், சாலை, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் ஏராளமான மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்ற ஆட்சியர், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.1
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தினால் நுங்கு விற்பனை தீவிரம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது,இந்த நிலையில் உடல் சூட்டை குறைக்கும் விதமாக சாலையோரங்களில் நுங்கு விற்பனை தீவிரமடைந்துள்ளது.இதற்காக பனைமரத் தொழிலாளிகள் இயற்கையாக விளைந்த நுங்குகளை அறுவடை செய்து கிருஷ்ணகிரி மற்றும் மாவட்டத்தின் பல்வேறு சாலை ஓரங்களில் நுங்கு விற்பனையை துவங்கி உள்ளனர்.1
- தருமபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 340 ஆடுகள் விற்பனைக்கு வந்தன. சிறிய குட்டிகள் ₹2000 முதல் பெரிய ஆடுகள் ₹24,000 வரை விற்பனையாகி, மொத்தமாக ₹43 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.1
- தமிழக சட்டமன்றத்தில் பதவி ஏற்பு விழாவின்போது, முதல்வர் ஜோசப் விஜய் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வணக்கத்தை ஏற்காதது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த நிகழ்வின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நாள் முதல்வர், முன்னாள் முதல்வருக்கு மரியாதை செலுத்தாதது பதவியை அவமதிப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.1
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள குஞ்சாம்பாளையம் வயல் ஒன்றில் பைப் போடுவதற்காகத் தோண்டியபோது 10 அடி ஆழ மர்மக் குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆதிகால மக்கள் தங்கள் தானியங்களைப் பாதுகாக்க இந்தக் குழியைப் பயன்படுத்தியதாக நம்பப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.1
- ஸ்பானிய டிவியில் இருந்து ஹாலிவுட் நட்சத்திரமாக உயர்ந்த ஆனா டி அர்மாஸ், தனது பன்முகத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். 'ஜான் விக்' போன்ற அதிரடிப் படங்களிலும், ஆஸ்கர் பரிந்துரை பெற்ற நாடகங்களிலும் ஜொலித்துள்ளார். இவர் தற்போது கலாச்சார ஐகானாகவும், முன்னணி பிராண்டுகளின் உலகளாவிய தூதுவராகவும் திகழ்கிறார்.1
- கரூர் காந்திகிராமம் பகுதியில் உள்ள தனியார் பஞ்சு குடோனில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், இரண்டு வாகனங்களுடன் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.1
- தர்மபுரி பாரதிபுரம் போக்குவரத்து அலுவலகம் முன்பு தமிழக வெற்றி கழக போக்குவரத்து தொழிலாளர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் இவ்வாறு செய்தனர்.1