Shuru
Apke Nagar Ki App…
பகவதி அம்மன் கோவில் திருவிழா பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது பெரியகுளம் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பெரியகுளம் ஆடுபாலம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் கரகம் ஜோடிக்கப்பட்டு அங்கிருந்து பெரியகுளம் முக்கிய வீதிகளான தேரடி வீதி மேலரது வீதி அரண்மனை தேர்வு புதிய பேருந்து நிலையம் பகவதி அம்மன் கோவில் வழியாக சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்தபடி ஊர்வலமாக கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்
Shakthi
பகவதி அம்மன் கோவில் திருவிழா பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது பெரியகுளம் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பெரியகுளம் ஆடுபாலம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் கரகம் ஜோடிக்கப்பட்டு அங்கிருந்து பெரியகுளம் முக்கிய வீதிகளான தேரடி வீதி மேலரது வீதி அரண்மனை தேர்வு புதிய பேருந்து நிலையம் பகவதி அம்மன் கோவில் வழியாக சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்தபடி ஊர்வலமாக கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்
More news from தமிழ்நாடு and nearby areas
- பெரியகுளம் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பெரியகுளம் ஆடுபாலம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் கரகம் ஜோடிக்கப்பட்டு அங்கிருந்து பெரியகுளம் முக்கிய வீதிகளான தேரடி வீதி மேலரது வீதி அரண்மனை தேர்வு புதிய பேருந்து நிலையம் பகவதி அம்மன் கோவில் வழியாக சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் முளைப்பாரி சுமந்தபடி ஊர்வலமாக கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்1
- தேனியில் உள்ள தேனி அல்லிநகரம் நகராட்சியில் மாதந்திர கூட்டம் நடைபெற்றது,நகராட்சி சேர்மன் ரேணுப்பிரியா பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த நிகழ்வில் துணை சேர்மன், வார்டு கவுன்சிலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்1
- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உணவு மற்றும் உணவு வளங்கள் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் சிலிண்டர் பற்றாக்குறை குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் சிலிண்டரை பற்றி மத்திய அரசு மோடி அரசை கேளுங்கள் என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்று பேட்டி அளித்தார்.1
- ஜாதி வெறிசெயல் குடிக்கும் தண்ணிர் குழாயை அடைத்து இரு சமூகத்தினர் தண்ணியின்றி தவிக்கவிட்ட கிராமச்செயலாளர்(ஈஸ்வரன், கள்ளர்) கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி, கம்பம் ஊராட்சி ஒன்றியம் தேனி மாவட்டம்1
- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரம் பகுதியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முன்னாள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்1
- திருமங்கலம் முனிசிபல் காலனி 12வது வார்டு மூன்று மாதங்களால் அடைக்கப்பட்டிருக்கும் சாக்கடை கழிவுகள்1
- திண்டுக்கல் மாநகராட்சி நாகல்புதூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி (குட்டவாத்தியார் பள்ளி ) 1926 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டு அன்று முதல் இன்று வரை சுமார் நூறு ஆண்டுகளைக் கடந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பான கல்வி முறையை பயிற்றுவித்து வருகிறது. இந்நிலையில் இப்பள்ளியின் நூற்றாண்டு திருவிழா திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராஜப்பா மாநகராட்சி ஆணையர் செந்தில்குமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர் விஜயா முன்னிலை வகித்தார். மேலும் சிறப்பு விருந்தினராக 30வது வார்டு மாமன்ற உறுப்பினர் N.A.லட்சுமி மற்றும் 31 வது வார்டு மாமன்ற உறுப்பினர் உமாதேவி பாரதி முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இந்த நூற்றாண்டு திருவிழாவில் மாநகராட்சி பள்ளியின் இன்னாள் மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் S.M.C உறுப்பினர்கள் முன்னாள் மாணவர்கள் தற்போதைய மாணவ மாணவிகள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர். இத்திருவிழாவின் இறுதி நிகழ்வாக பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவ மாணவிகளுக்கான ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது பள்ளியின் நீண்டகால வரலாற்றையும் அதன் கல்வி பங்களிப்பையும் நினைவு கூர்ந்தது.1
- தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டியில் முல்லை ஆற்றில் குளிப்பதற்காக குடும்பத்தார் மற்றும் உறவினருடன் வந்த காமாட்சி என்பவரின் மகன் தவசி (13) என்ற சிறுவன் ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டான். அவனின் உடலை சுமார் 7 மணி நேரமாக தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர். சிறுவனின் உடலை தண்ணீரை நிறுத்திவிட்டு விரைவாக மீட்க கோரி பெற்றோர்கள் உறவினர்களுடன் தேனி மாவட்டம் சுருளிஅருவி கம்பம் மாநில நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் அறிந்து விரைந்து வந்து காவல்துறையினர் சாலை மறியல் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை செய்து உடனடியாக தண்ணீரை நிறுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறோம், இந்த நேரம் பள்ளி குழந்தைகள் சென்றுவரும் நேரம் என்பதால் சாலை மறியலை கைவிடுங்கள் என கூறியதை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கவைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது தேடும் பணியை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.1