Shuru
Apke Nagar Ki App…
Govindappa Govindappa
More news from தமிழ்நாடு and nearby areas
- கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி அருகே உள்ள செந்தாரப்பள்ளியில் அமைந்துள்ள ஆக்ஃபோர்டு பப்ளிக்பள்ளியின்அறிவுதிறன் திருவிழா மற்றும் ஆண்டு விழா நேற்று நடைப்பெற்றது. பள்ளியின் நிறுவனர் மகேந்திரன் தலைமையில் நடைப்பெற்ற இந்த விழாவிற்கு பள்ளியின் இயக்குனர் திருமதி கவிதா ராணி மகேந்திரன், பள்ளியின் முதல்வர் அருட்ச் சகோதரி ஜெசிந்தா முத்தையா மற்றும் பள்ளி நிர்வாகிகளான முனிகிருஷ்ணன், சேகர், ஜாக்கப்ஜார்ஜ், கராத்தே மாஸ்டர் மாரியப்பன், வெங்கடசாமி ,தீர்த்தகிரிஆகியோர் முன்னிலை வகித்தனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- 2026ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் நல்லாட்சி அமைய உள்ளதை தொடர்ந்து, கழக ஆட்சியின் சாதனைகளை விளக்கி, பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டி காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் ஊராட்சியில், மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் , அவர்கள் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினர். ___________ அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தை அமளிக்காடாக மாற்றி பொதுமக்களுக்கு பல்வேறு இன்னல்களை ஏற்படுத்தி வரும் திமுக ஆட்சியை விரட்டும் வகையில், தமிழகமெங்கும் வாக்காளப் பெருமக்களை நேரில் சந்தித்து விடியா திமுக ஆட்சியின் அவலங்களை விளக்கியும், கழக ஆட்சியின் சாதனை திட்டங்களை விளக்கும் வகையிலும், கழக ஆட்சி மீண்டும் மலர்ந்திடும் வகையிலும் தமிழகமெங்கும் பொது மக்களை நேரில் சந்தித்து துண்டு பிரசுரங்களை வழங்கி திண்ணை பிரச்சாரம் நடை பெற்று வருகிறது. காஞ்சிபுரம் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான மணிமங்கலம் வேணுகோபால் அவர்கள் ஏற்பாட்டில், குன்றத்தூர் ஒன்றிய கழக செயலாளரும் ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மதனந்தபுரம் கே.பழனி அவர்கள் தலைமையில், காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் ஊராட்சியில் கடைவீதி பகுதியில், 2026ல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற, பொதுமக்களிடம் கழக ஆட்சியின் சாதனைகளை விளக்கி, மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் ,பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் விவசாய பிரிவு ஒன்றிய செயலாளர் எச்.டி.சிவராஜ் உட்பட ஏராளமான கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- காஞ்சிபுரம் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.ஒரு கோடி இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே மேலவலம் கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் மோகன் (37) இவர் மதுராந்தகத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் கடந்த 10.3.25 ஆம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பான வழக்கு காஞ்சிபுரம் மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தில் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. உயிரிழந்த மோகன் தனியார் மருந்து கம்பெனியில் மூத்த அதிகாரியாக பணியாற்றி வருகிறார் .இவருக்கு கன்னிகா(31) என்ற மனைவியும் கோபிகா(6) ஷட்னிகா(3)நைனிகா(2) மற்றும் தாயார் கௌரி(65) ஆகியோரும் மோகனின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளனனர்.மோகன் உயிரிழந்தது தொடர்பான வழக்கை விசாரித்த தேசிய மக்கள் நீதிமன்றம் விபத்தில் உயிரிழந்த மோகனின் குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு கோடி இழப்பீட்டு தொகையை நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி சார்பில் வழங்கப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் முதன்மை அமர்வு நீதிபதியுமான எஸ். மோகனகுமாரி தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு தலைமை வகித்த முதன்மை அமர்வு நீதிபதி மோகனகுமாரி இழப்பீட்டுத் தொகை ஒரு கோடியை பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரிடம் வழங்கினார் .இந்த நிகழ்வில் தொழிலாளர் நல நீதிபதி சுஜாதா, விபத்து வழக்குகள் நீதிமன்ற நீதிபதி ஜெயஸ்ரீ, முதன்மை சார்பு நீதிபதி கே எஸ் அருண் சபாபதி, சார்பு நீதிபதி திருமால், நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனியின் துணை மேலாளர் லாவண்யா உட்பட பல்வேறு நீதிபதிகளும் மூத்த வழக்கறிஞர்களும் வழக்காடிகளும் கலந்து கொண்டனர்.1
- Post by Saravanan Vasanthi2
- குளித்தலையில் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி மத்திய சிறப்பு படையினர் மற்றும் குளித்தலை காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளை வலுப்படுத்தவும், பொதுமக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும் மத்திய சிறப்பு படையினர் 50 பேர் கரூர் மாவட்டம் குளித்தலை வந்து உள்ளனர். இந்த நிலையில் மத்திய சிறப்பு படையினரின் கொடி அணிவகுப்பு குளித்தலை நகர பகுதிகளில் நடைபெற்றது. குளித்தலை பெரியபாலம் பகுதியில் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் கொடியசைத்து கொடி அணிவகுப்பை தொடங்கி வைத்தார். .அங்கிருந்து மாரியம்மன் கோவில் தெரு, பஜனைமடை தெரு, நகராட்சி அலுவலகம், சின்ன ஆண்டாங் கோவில் தெரு, பேராளம்மன் கோவில் தெரு, பேருந்து நிலையம், நீதிமன்றம் வழியாக சுங்ககேட் வரை சென்று முடிவடைந்தது. மத்திய சிறப்பு படையினர் துப்பாக்கி ஏந்தியபடி சென்றனர். அவர்களை பின்தொடர்ந்து குளித்தலை போலீசாரும் அணிவகுத்து உடன் சென்றனர். இதேபோல் தோகைமலை பேருந்து நிலையம் பகுதிகளிலும் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.1
- Post by Govindappa Govindappa2
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- *காஞ்சிபுரம் அருகே பள்ளி மாணவர் மீது தாக்குதல் – பள்ளிகளில் அதிகரிக்கும் வன்முறை குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை* --------- காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்திற்குட்பட்ட ஊத்துக்காடு ஊராட்சியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடக்கப்பள்ளியும் இயங்கி வருகிறது. இந்த நிலையில், பள்ளியில் பீடி பிடித்ததாக கூறப்படும் எட்டாம் வகுப்பு மாணவனை ஆசிரியரிடம் கூறச் சென்ற ஆறாம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. எட்டாம் வகுப்பு மாணவன் கல்லால் தாக்கியதில், ஆறாம் வகுப்பு மாணவன் தலையில் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் வாலாஜாபாத் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களிடையே அதிகரித்து வரும் வன்முறை மற்றும் போதைப் பழக்கங்கள் குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், இதே பள்ளி வளாகத்தில் உள்ள தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நான்கு கணிப்பொறிகள் மற்றும் சில பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் குறித்து பள்ளிக் கல்வித்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1