Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல்லில் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் காங்கிரஸ் மாவட்ட அலுவலகத்தில் திண்டுக்கல் மாநகர் மற்றும் திண்டுக்கல் கிழக்கு மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் நிவேதிக் ஆல்வா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
RAJA news
திண்டுக்கல்லில் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் காங்கிரஸ் மாவட்ட அலுவலகத்தில் திண்டுக்கல் மாநகர் மற்றும் திண்டுக்கல் கிழக்கு மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த ஆலோசனை கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் நிவேதிக் ஆல்வா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- இன்றைய இளைஞர்களின் தலை முறை எவ்வாறு போய்க்கொண்டிருக்கிறது என்பதை நன்றாக பாருங்கள் சினிமா மோகம் அரசியல் இந்த வயதில் நமக்குத் தேவையா என்பதை எந்த இளைஞர்களும் கண்டு கொள்வதில்லை ஆனால் சினிமாவின் மீது பைத்தியமாக அழிவதால் நாம் எதிர்கால வாழ்க்கை பாதிப்பாகிறது. அனைத்து அரசியல்வாதிகளுமே தான் மீண்டும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தான் பார்க்கிறார்கள். அதனால் இதில் எந்த ஒரு கட்சித் தலைவருக்கும் நீங்கள் ஆதரவு அளிப்பது உங்களுடைய தனிப்பட்ட விஷயம். ஆனால் கல்வி என்பது அனைவருக்கும் முக்கியம். அனைத்து அரசியல்வாதிகளுமே அரசியலில் சம்பாதித்து தங்களுடைய பணத்தையும் தங்களுடைய குடியுரிமையும் வெளிநாட்டில் வைத்திருக்கிறார்கள். நாளை நாட்டிற்கு வறுமை வரும்போது தனி ஜெட்டில் பறந்து குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு சென்று செட்டில் ஆகி விடுவார்கள். ஒன்றுமே பிழைக்க வழி இல்லாத ஒரு நாட்டில் நாம் எவ்வாறு வாழ்வது. தமிழ்நாட்டில் உள்ள எந்த ஒரு கட்சியின் நம்புவது உங்கள் கையில் உள்ளது. இந்த செய்தி நிச்சயமாக ஒரு அரசியல் பதிவாக இருக்க நான் விரும்பவில்லை அனைத்து அரசியல் தலைவர்களும் தங்கள் குடும்பத்திற்காகவே வாக்குறுதிகளை கொடுக்கிறார்கள் அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி. ஆனால் கல்வி குடும்பம் இதுதான் நம்முடைய வாழ்க்கை என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள மட்டுமே இந்த தொகுப்பு ஒரு அரசியல் தலைவரை வாழ்த்தி பேச வேண்டும் என்பதற்காக இந்த செய்தி கிடையாது மற்றொருவருடைய பதிவை எடுத்து தான் இதில் போட்டு இருக்கிறேன். ஆனால் அவர் சொல்லக்கூடிய அரசியல் தலைவருக்கு ஓட்டு போடுங்கள் என்று நான் சொல்லவில்லை.1
- திண்டுக்கல்-பழனி சாலையில் முருகபவனம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கை வேறுயிடத்துக்கு மாற்றக் கோரி, நாம் தமிழா் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு நாம் தமிழா் கட்சியின் மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளா் முத்தரசி தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது,குப்பைக் கிடங்கினால், சுற்றுப்புறப் பகுதியில் நிலத்தடி நீா் மாசுபடுகிறது. குப்பைக் கிடங்கில் அடிக்கடி தீப்பற்றி எரிவதால், காற்று மாசு ஏற்படுகிறது. குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்து, இந்த 16.5 ஏக்கா் நிலத்தை மக்கள் பயன்பாட்டுக்கான இடமாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதைத் தொடா்ந்து, குப்பைக் கிடங்கு முன்புள்ள சாலையில் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.2
- தேனி அருகே சமதர்மபுரத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக நடைபெற்றது முன்னதாக தனி சன்னதியில் அருள்பாலிக்கும் ஶ்ரீ ஸ்வர்னாகர்ஷ்ண பைரவருக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், இளநீர், விபூதி உள்ளிட்ட பலவித திரவியங்கள் கொண்டு சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து ஸ்வர்னாகர்ஷ்ண பைரவருக்கு வண்ணமலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு தூபம் காட்டப்பட்டு சோடச உபச்சாரம் நடத்தி மகா தீபாராதனை, நட்சத்திர தீபாராதனை மற்றும் பஞ்ச கற்பூர ஆரத்தியுடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு காலபைரவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை கண்டு தரிசித்துச் சென்றனர்1
- திருச்சியில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், "இந்தியாவில் கேஸ் தட்டுப்பாடு என்பது இல்லை. ஊடகங்கள் கேஸ் தட்டுப்பாடு என்கிற செய்தியை பரப்புகிறது. எரிபொருள் இருப்பு குறித்து விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும். தவெகவை NDA கூட்டணியில் இணைப்பது குறித்து, தமிழ்நாட்டில் NDA கூட்டணிக்கு தலைமை வகிக்கும் எடப்பாடி பழனிசாமி தான் முடிவெடுக்க வேண்டும்" என்றார். இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.1
- வணிக சிலிண்டர் தட்டுப்பாடு - மதுரையில் 3 நாட்களில் உணவகங்கள் மூடப்படும் அபாயம் – வணிகர்கள் எச்சரிக்கை. மதுரை, மார். 10 - சர்வதேச அளவில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் சந்தையில் ஏற்பட்ட அதிர்வுகள், இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. இதன் விளைவாக வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளதுடன், பல இடங்களில் விநியோக தட்டுப்பாடும் உருவாகியுள்ளது. இந்த நிலைமையால் சிறு வணிகர்கள், உணவகங்கள், டீக்கடைகள் மற்றும் பல தொழில்துறைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. சமீபத்திய அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எரிவாயு சிலிண்டர் விலை ரூ.115 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் ரூ.1,929-க்கு விற்கப்பட்டு வந்த சிலிண்டர் தற்போது ரூ.2,043.50 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், வீட்டு பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ.60 உயர்ந்து ரூ.928.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தில்லி, மும்பை மற்றும் கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களிலும் விலை உயர்வு பதிவாகியுள்ளது. போர் பதற்றம் – கச்சா எண்ணெய் விலைய அதிகரிப்பு. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றம் சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உலகின் முக்கிய கடல்சார் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணை வழியாக உலக நாடுகளின் சுமார் 20 சதவீத கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இந்த பகுதியில் உருவான பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து வருவதுடன், அதன் தாக்கம் சமையல் எரிவாயு சந்தையிலும் பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் அதிகரித்த முன்பதிவு இந்த அச்சநிலையைத் தொடர்ந்து கடந்த 5 முதல் 6 நாட்களுக்குள் எரிவாயு முன்பதிவு 15% முதல் 20% வரை அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் பல பகுதிகளில் விநியோக தாமதம் மற்றும் தட்டுப்பாடு உருவாகி வருகிறது. இந்த நிலைமையை குறித்து சமையல் எரிவாயு விநியோகத்தில் பணியாற்றும் தனியார் நிறுவன பணியாளர் இளங்கோவன் கூறுகையில், “சமீப நாட்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் விநியோகம் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டதால் உணவகங்கள் மற்றும் டீக்கடைகளுக்கு தேவையான அளவு சிலிண்டர்கள் கிடைக்காமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல கடைகளில் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமே இருப்பு உள்ளது. அதன் பிறகு கடைகளை மூட வேண்டிய நிலை உருவாகும் அபாயம் உள்ளது,” என தெரிவித்தார். மதுரையில் உணவகங்களுக்கு கடும் பாதிப்பு. மதுரை மாவட்டத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட உணவகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றை நம்பி 25,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அதேபோல் சாலையோர உணவக கடைகள் சுமார் 10,000 உணவகங்கள் மற்றும் டீக்கடைகளும் நகரின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக உள்ளன. வணிக சிலிண்டர் கிடைக்காததால் சாலையோர சிறிய கடைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மதுரையில் மகபூப்பாளையம் 20 ஆண்டுகளாக சாலையோர வடைக் கடை நடத்தி வரும் ஜெயக்குமார் கூறுகையில், “சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் கடையை நடத்த அதிக முதலீடு தேவைப்படுகிறது. எங்களிடம் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே சிரமமாகிறது. ஒரு நாளைக்கு சுமார் ஆயிரம் முதல் 1500 ரூபாய் வரை தான் வியாபாரம் இருக்கும். ஒரு சிலிண்டர் ஐந்து நாட்களுக்கு தான் பயன்படுத்த முடியும். சிலிண்டர் கிடைக்கவில்லை என்றால் எங்களின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும்,” என்று தெரிவித்தார். கருப்புச் சந்தை குற்றச்சாட்டு சில இடங்களில் வணிக சிலிண்டர்கள் விநியோகிக்க வேண்டாம் என டீலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சந்தையில் கிடைக்காத சிலிண்டர்கள் கருப்புச் சந்தையில் ரூ.3,000 வரை விற்கப்படுகின்றன என வணிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து கோச்சடை நடராஜ் நகர் பகுதியில் இயங்கி வரும் பாரத் கேஸ் சிலிண்டர் சேமிப்பு கிடங்கில் பணியாற்றிய ஒரு தொழிலாளி கூறுகையில் முன்பு வீடுகளுக்கு பயன்படுத்தும் சிலிண்டர்கள் முதல் நாள் புக் செய்தால் மறுநாள் கொண்டு போய் வீடுகளுக்கு கொடுக்கப்படும் ஆனால் இப்போது புக்கிங் செய்தார்கள் என்றால் சுமார் ஒரு வாரம் கழித்து தான் கொடுக்க முடிகிறது அந்த அளவிற்கு தற்போது தட்டுப்பாடு என்பது அதிகரித்துள்ளது. மேலும் இதே நிலை நீடித்தால் புக்கிங் செய்பவர்களுக்கு இன்னும் கொடுக்க காலதாமதம் ஏற்படும் .மேலும் வணிக ரீதியான சிலிண்டரை முதலில் நேரடியாக நாங்கள் ஆர்டர் போட்டவுடன் கொண்டு போய் வழங்குவோம் இப்பொழுது நேரடியாக சென்னையில் உள்ள மையத்திற்கு தகவல் கொடுத்தால் அதுவும் குறிப்பாக மருத்துவமனை மற்றும் தங்கும் விடுதிகளுக்கு மட்டுமே கொடுக்கச் சொல்லி உள்ளார்கள் அப்படி இவர்கள் புக்கிங் செய்து அவர்கள் எங்களுடைய நிறுவனத்திற்கு தகவல் கொடுப்பார்கள் அந்த அடிப்படையில் தான் வணிகரீதியான சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது அதுவும் குறைவான எண்ணிக்கையில் தான் இப்போது வந்துள்ளது இதனால் தற்போது வீடுகளிலும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்படுகிறது. உணவுப் பொருட்களின் விலை உயர்வு அபாயம். வணிக சிலிண்டர் விலை உயர்வும் தட்டுப்பாடும் தொடர்ந்தால், தோசை, இட்லி, பரோட்டா போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை இருமடங்கு உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என உணவக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பொதுமக்களின் அன்றாட உணவு செலவும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கும் தாக்கம் மதுரையில் பல ஆயிரம் மாணவர்கள் விடுதிகளில் தங்கி கல்வி கற்கின்றனர். அதேபோல் வெளிமாவட்டங்களில் இருந்து வேலைக்காக வந்திருக்கும் தொழிலாளர்களும் உணவகங்களையே பெரிதும் நம்பி உள்ளனர். உணவகங்கள் மூடப்பட்டால் அவர்களின் அன்றாட உணவு தேவைகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும் ஓட்டல் உரிமையாளர்கள் சிலர் கூறுகின்றனர். பொருளாதார பாதிப்பு குறித்து வணிகர்கள் கவலை சர்வதேச போர் பதற்றம் நீடித்தால் அதன் தாக்கம் இந்திய பொருளாதாரத்திலும் கடுமையாக இருக்கும் என வணிகர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்கும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இதன் விளைவாக பொதுமக்களின் வாங்கும் சக்தி குறையும் நிலையும் உருவாகலாம் என எச்சரிக்கப்படுகிறது. போர் நிறுத்தத்திற்கு இந்தியா முயற்சி எடுக்க வேண்டும் எனவே, ஈரான் தொடர்பான போர் நடவடிக்கைகளை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நிறுத்தும் வகையில் இந்திய அரசு சர்வதேச அளவில் ஆலோசனைகள் மேற்கொண்டு அமைதியை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு போர் பதற்றத்தை குறைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் இந்தியாவில் உள்ள சிறு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் பொருளாதார பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதே நேரத்தில், நாட்டில் உருவாகியுள்ள வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டை உடனடியாக சீரமைத்து விநியோகத்தை அதிகரிக்கவும், விலை உயர்வை கட்டுப்படுத்தவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வணிகர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜெ. பொன்மாறன்.2
- திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள தொப்பம்பட்டியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்து வரும் முத்தப்புடையான்பட்டியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் அப்பள்ளியில் பயின்று வரும் மாணவிகளில் சிலருக்கு பாலியல் தொந்தரவு செய்தாகவும், அது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டியை சேர்ந்த வேளாங்கண்ணி என்பவரிடம் பெற்றோர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (06.03.26) புகார் தெரிவித்துள்ளனர். தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி இது தொடர்பாக நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் சிறுமிகளின் பெற்றோர்கள் 09.03.2026 பள்ளி முன்பு திரண்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை காவல்துறையினருக்கு தகவல் தெரிந்ததன் பேரில் பள்ளிக்கு சென்ற மணப்பாறை உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் காவியா மற்றும் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் குழந்தைகள் நல துறையைச் சேர்ந்த அலுவலர்கள் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். ஆசிரியர் பாஸ்கர் பள்ளி சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டதும் அந்த நிகழ்வை பள்ளியின் தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி யாரிடமும் சொல்லாமல் மறைத்த குற்றத்திற்காகவும் மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கைது சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- Post by அன்பரசு1
- தேனி மாவட்டம் தேனி அருகே அன்னஞ்சி விளக்கு பகுதியில் பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த காளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இரு சமுதாய கிராம மக்கள் ஒன்றிணைந்து கோயில் திருவிழாக்கள் மற்றும் பூஜைகளை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கோயிலை நிர்வாகிப்பது குறித்து இருதரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டு பெரியகுளம் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வந்தது . தற்போது கோயில் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒரு தரப்பினர் நீதிமன்றம் சென்று உத்தரவைப் பெற்று வந்து ஜேசிபி வைத்து கோயிலை இடிக்கும் பணியை மேற்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோயில் வளாகத்தில் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினர் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது . இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பராமரிப்பு பணியையும் மேற்கொள்ளாமல் அனைவரையும் அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.1