Shuru
Apke Nagar Ki App…
சேலம்: எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் சேலத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "எடப்பாடி பழனிசாமி அவர்களே, பாஜகவை எதிர்க்கத் துணிவில்லாமல் அடிமையாக இருந்தால் வரலாற்றில் களங்கமாகவே மிச்சமிருப்பீர்கள்" என விமர்சித்தார். இரும்புக்குப் புகழ்பெற்ற சேலத்தில் பிறந்துவிட்டு டெல்லிக்கு முன் முதுகு வளைந்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், இனியாவது பாஜகவை எதிர்த்துப் பேச வேண்டும் என கூறினார்
Salem_Updates
சேலம்: எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் சேலத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "எடப்பாடி பழனிசாமி அவர்களே, பாஜகவை எதிர்க்கத் துணிவில்லாமல் அடிமையாக இருந்தால் வரலாற்றில் களங்கமாகவே மிச்சமிருப்பீர்கள்" என விமர்சித்தார். இரும்புக்குப் புகழ்பெற்ற சேலத்தில் பிறந்துவிட்டு டெல்லிக்கு முன் முதுகு வளைந்தது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், இனியாவது பாஜகவை எதிர்த்துப் பேச வேண்டும் என கூறினார்
More news from தமிழ்நாடு and nearby areas
- திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணியானது சேலத்தில் இன்று நடைபெறவுள்ளது.இப்பேரணியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கலந்துகொள்ள உள்ளார். இதனை காண ஏராளாமான தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அண்ணா பூங்கா அருகே உள்ள கருணாநிதி சிலை முன் குவிந்துள்ளனர்.1
- மு.க. ஸ்டாலின் பாலக்கோடு பகுதியில் நடைபயணம்.. மக்களை நேரில் சந்தித்தார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் பங்கேற்க உள்ளார். இதற்காக நேற்றிரவே தருமபுரிக்கு வருகை தந்தவர், இன்று காலை பாலக்கோடு பகுதியில் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது கோட்டை தெருவில் உள்ள இஸ்லாமிய மக்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். ரொடர்ந்து ஸ்தூபி மைதானம், கடைவீதி, பேருந்து நிலையம் , தக்காளிமண்டி வரை நடந்து சென்று பொதுமக்களை சந்தித்தார்.1
- இராசிபுரம் அத்தனூர் பேரூரில் 1-வது வார்டு பகுதி மக்களிடத்தில் வருகின்ற பொதுத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் மதிவேந்தன் அவர்கள் பரப்புரை செய்தார் நிகழ்வில் பொதுமக்கள் கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் பொதுமக்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வாய்ப்பு கேட்டு நிகழ்வை நடத்தினார்1
- கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை வெள்ளிமலை அருகில் உள்ள மூங்கில் குடில் வளாகத்தில்,சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் இரா.ராகேஷ் தலைமையில் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் பேசிய இரா.ராகேஷ், கல்வராயன் மலை பகுதியில் வாழும் மலைவாழ் மக்களின் முன்னேற்றத்திற்காக அனைத்து வகையிலும் பாடுபடுவேன் என்று உறுதியளித்தார்.மேலும் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் தொழிற்சாலை ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து,ஆண்டுதோறும் சுமார் 200 மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் கல்வி உதவி வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.1
- அவிநாசி தொகுதியில் கோகிலாமணி திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். தற்போது அவிநாசி தொகுதிக்கு உட்பட்ட கிராமப்புறங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள அவர், "உங்கள் வீட்டு பெண் நான். உங்கள் உரிமைக்காக என்றும் குரல் கொடுப்பேன்" என்று கூறி மக்களிடம் ஆதரவு கோரி வருகிறார். இதில் ஏராளமான திமுக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.1
- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சட்ட மன்ற தொகுதியில் (இன்று ஏப்ரல் 15) அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஓட்டு போடுவது எப்படி என பயிற்சி வகுப்பு இன்று காலை ஆம்பூர் இந்து மேல் நிலைப்பள்ளி நடைபெற்றது .ஆம்பூர் தொகுதி அஇஅதிமுக வேட்பாளர் வெங்கடேசன் மற்றும் அஇஅதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு தங்களது இரட்டை இலை சின்னத்தில் ஓட்டு பதிவு வேண்டும் என ஆசிரியர்களுக்கு தங்களுடைய கட்சிக்கு வாக்களிக்குமாறு கேன்வாஸ் செய்தனர்.1
- வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவத்திற்கு ஆதரவாக எரியோடு பேரூராட்சி மணியக்காரன்பட்டி கிராமத்தில் இன்று வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.1
- மணப்பாறை அருகே திடீரென சில கோரிக்கைகளை செய்து கொடுக்க கூறி திமுக வேட்பாளர் காலில் விழுந்த நபரால் பரபரப்பு திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி, வையம்பட்டி ஒன்றியபகுதிகளில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அப்துல் சமது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். ஆனாங்கரைப்பட்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது அங்கிருந்த மக்கள் சிலர் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கூறி முறையிட்டனர். அப்போது அங்கிருந்த ஒருவர் திடீரென சாலை வசதி இல்லை, குடிநீர் வசதி இல்லை, ஜெயிச்சுட்டு போய் 5 வருடமா செஞ்சு தரவில்லை என்று கூறி எம்எல்ஏ காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.1