logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா வேட்டைக்காரன்பட்டி கிராமத்தில் சீரமைக்கப்படாமல் கிடக்கும் கால்நடை குடிநீர் தொட்டி – பொதுமக்கள் கோரிக்கை சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா, தானாவயல் ஊராட்சிக்கு உட்பட்ட வேட்டைக்காரன்பட்டி கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்காக கட்டப்பட்ட குடிநீர் தொட்டி, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்பாடின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள கால்நடைகள் குடிநீர் அருந்துவதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றன. எனவே, கால்நடைகளின் நலனை கருத்தில் கொண்டு, பயன்பாடின்றி கிடக்கும் குடிநீர் தொட்டியை விரைவாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வேட்டைக்காரன்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2 hrs ago
user_Devakottaigani news
Devakottaigani news
சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
2 hrs ago

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா வேட்டைக்காரன்பட்டி கிராமத்தில் சீரமைக்கப்படாமல் கிடக்கும் கால்நடை குடிநீர் தொட்டி – பொதுமக்கள் கோரிக்கை சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா, தானாவயல் ஊராட்சிக்கு உட்பட்ட வேட்டைக்காரன்பட்டி கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்காக கட்டப்பட்ட குடிநீர் தொட்டி, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்பாடின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள கால்நடைகள் குடிநீர் அருந்துவதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றன. எனவே, கால்நடைகளின் நலனை கருத்தில் கொண்டு, பயன்பாடின்றி கிடக்கும் குடிநீர் தொட்டியை விரைவாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வேட்டைக்காரன்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • லண்டனில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தில் முதல்வர் கலந்து கொள்வது பொதுமக்களிடையே விளையாட்டு போட்டிகள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும். இடைத்தேர்தல் குறித்து உரிய நேரத்தில் முடிவு அறிவிக்கப்படும். சிவகங்கையில் ஜி.கே. வாசன் பேட்டி. சிவகங்கை நகரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநிலத்தலைவர் ஜி.கே. வாசன், செய்தியாளர்களை சந்தித்த போது: தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படும் என்றார். வரும் தேர்தல்களில் எந்தக்கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படுகிறது, எந்தக் கட்சியிலிருந்து கூட்டணி விலகுகிறது என்பதன் மூலம் அரசியல் கட்சிகளின் அணுகுமுறையை புரிந்துகொள்ள முடியும் என குறிப்பிட்டார். புதிய சட்டமன்றக் கட்டிடம் தேவையென அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் கருதுகின்றனர் இதனை உணர்ந்தே தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார். இதுகுறித்து சிலருக்கு சந்தேகங்கள் இருந்தால், அவற்றைத் தீர்க்கும் வகையில் அரசு செயல்படும் என்றார் முதல்வர் விஜய்யின் வெளிநாட்டு பயணம் தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு உதவிகரமாக அமையும் என்றும், உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வரும் தமிழக வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் லண்டனில் நடைபெறும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் நிகழ்வில் முதல்வர் கலந்து கொள்வது பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார். அரசு தேர்தல் வாக்குறுதிகளை 100 நாட்களுக்குள் முழுமையாக நிறைவேற்ற இயலாது; அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றவர், முதல்வர் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதன் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் அவர் மீதான நம்பிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். சட்டப்பேரவையில் எந்த விவகாரத்தை பேச வேண்டும், எதை பேசக்கூடாது என்ற கட்டுப்பாடு அல்லது தடை இருக்கக்கூடாது என்பதே தமிழ் மாநில காங்கிரஸின் நிலைப்பாடு என்றார். மேலும், தமிழகத்தில் போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுக்கும் வகையில் காவல்துறை தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் ஜி.கே. வாசன் வலியுறுத்தினார்.
    1
    லண்டனில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயத்தில்  முதல்வர் கலந்து கொள்வது பொதுமக்களிடையே விளையாட்டு போட்டிகள் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

இடைத்தேர்தல் குறித்து உரிய நேரத்தில் முடிவு அறிவிக்கப்படும். சிவகங்கையில் ஜி.கே. வாசன் பேட்டி. 
சிவகங்கை நகரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாநிலத்தலைவர் ஜி.கே. வாசன், செய்தியாளர்களை சந்தித்த போது: 
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு உரிய நேரத்தில் அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படும் என்றார்.
வரும் தேர்தல்களில் எந்தக்கட்சியுடன் கூட்டணி அமைக்கப்படுகிறது, எந்தக் கட்சியிலிருந்து கூட்டணி விலகுகிறது என்பதன் மூலம் அரசியல் கட்சிகளின் அணுகுமுறையை புரிந்துகொள்ள முடியும் என குறிப்பிட்டார்.
புதிய சட்டமன்றக் கட்டிடம் தேவையென அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் கருதுகின்றனர் இதனை உணர்ந்தே தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார். இதுகுறித்து சிலருக்கு சந்தேகங்கள் இருந்தால், அவற்றைத் தீர்க்கும் வகையில் அரசு செயல்படும் என்றார்  
முதல்வர் விஜய்யின் வெளிநாட்டு பயணம் தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு உதவிகரமாக அமையும் என்றும், உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வரும் தமிழக வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் லண்டனில் நடைபெறும் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் நிகழ்வில் முதல்வர் கலந்து கொள்வது பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
அரசு தேர்தல் வாக்குறுதிகளை 100 நாட்களுக்குள் முழுமையாக நிறைவேற்ற இயலாது; அவை படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றவர்,
முதல்வர் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதன் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் அவர் மீதான நம்பிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் எந்த விவகாரத்தை பேச வேண்டும், எதை பேசக்கூடாது என்ற கட்டுப்பாடு அல்லது தடை இருக்கக்கூடாது என்பதே தமிழ் மாநில காங்கிரஸின் நிலைப்பாடு என்றார். 
மேலும், தமிழகத்தில் போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் பயன்பாட்டை தடுக்கும் வகையில் காவல்துறை தொடர்ந்து தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் ஜி.கே. வாசன் வலியுறுத்தினார்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    31 min ago
  • சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாளில் திருப்பத்தூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திறக்காததால் பயணிகள் அதிர்ச்சி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாளில் திருப்பத்தூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திறக்கவில்லை. ஓட்டுநர்-நடத்துனர் முயற்சி தோல்வியடைந்ததால் பள்ளி மாணவர்கள் ஜன்னல் வழியாக இறங்கினர். பெண் பயணிகள் பயத்துடன் நீண்ட நேரம் பேருந்தில் காத்திருந்தனர். பணிமனை பணியாளர் வந்து கதவைத் திறந்தபின் பயணிகள் நிம்மதியுடன் இறங்கினர்.
    1
    சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாளில் திருப்பத்தூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திறக்காததால் பயணிகள் அதிர்ச்சி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாளில் திருப்பத்தூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திறக்கவில்லை. ஓட்டுநர்-நடத்துனர் முயற்சி தோல்வியடைந்ததால் பள்ளி மாணவர்கள் ஜன்னல் வழியாக இறங்கினர். பெண் பயணிகள் பயத்துடன் நீண்ட நேரம் பேருந்தில் காத்திருந்தனர். பணிமனை பணியாளர் வந்து கதவைத் திறந்தபின் பயணிகள் நிம்மதியுடன் இறங்கினர்.
    user_ABDUL SALAM
    ABDUL SALAM
    Photographer சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே திரையரங்கில் தீ விபத்து. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே மேல கோபுர தெருவில் உள்ள பழமையான சென்ட்ரல் திரையரங்கம் இன்று (செப்.12) இரவு 8 மணி அளவில் திடீரென தீ பிடித்தது. இந்த தியேட்டரில் கடந்த சில வருடங்களாக திரைப்படங்கள் திரையிடுவது இல்லை. இருப்பினும் திரையரங்கு வளாகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்துமிடமாக செயல்பட்டு வந்துள்ளது . இந்நிலையில் இன்று இரவு 8 மணி அளவில் திரையங்கில் உள்ளே திடீரென தீ விபத்து ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் ஏதும் தெரியவில்லை. வளாகத்தில் இருந்த கார்கள் அப்புறப்பட்டு வருகின்றன. மேலும் தியேட்டர் உள்ளே அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் 15 பேருக்கு மேல் தங்கள் கடை பொருட்களை குடோன் போல் வைத்து பொருட்களை எடுத்து வந்துள்ளனர். 4 க்கும் மேற்பட்ட மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திரையரங்கு உள்ளே தீ பிடித்து எரிவதால் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
    1
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே திரையரங்கில் தீ விபத்து. 
மதுரை  மீனாட்சி அம்மன் கோவில் அருகே மேல கோபுர தெருவில்  உள்ள பழமையான  சென்ட்ரல் திரையரங்கம் இன்று (செப்.12) இரவு 8 மணி அளவில் திடீரென தீ பிடித்தது. இந்த தியேட்டரில் கடந்த சில வருடங்களாக திரைப்படங்கள் திரையிடுவது இல்லை. இருப்பினும் திரையரங்கு வளாகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்துமிடமாக செயல்பட்டு வந்துள்ளது . இந்நிலையில் இன்று இரவு 8 மணி அளவில் திரையங்கில் உள்ளே திடீரென தீ விபத்து ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் ஏதும் தெரியவில்லை. வளாகத்தில் இருந்த கார்கள் அப்புறப்பட்டு வருகின்றன. மேலும்  தியேட்டர் உள்ளே அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் 15 பேருக்கு மேல் தங்கள் கடை பொருட்களை குடோன் போல் வைத்து பொருட்களை எடுத்து வந்துள்ளனர். 4 க்கும் மேற்பட்ட மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திரையரங்கு உள்ளே தீ பிடித்து எரிவதால் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    3 hrs ago
  • பொன்னமராவதி பட்டம் வரத்தான் சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊரின் காவல் தெய்வமாக விளங்கும் அருள்மிகு பட்டம் வரத்தான் சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு பட்டமரத்தான் சுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன
    1
    பொன்னமராவதி பட்டம் வரத்தான் சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊரின் காவல் தெய்வமாக விளங்கும் அருள்மிகு பட்டம் வரத்தான் சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு பட்டமரத்தான் சுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன
    user_Kavin
    Kavin
    பொன்னமராவதி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • ஐக்கிய வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) சார்பில் நாடு தழுவிய அளவிலான ஒரு நாள் வங்கி வேலைநிறுத்தப் போராட்டம் திருவாடானை பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ​வங்கிகள் சங்கம் (IBA) சார்பில் ​5 நாள் வேலை ஒப்பந்தத்தை அமல்படுத்துவது. காலியாக உள்ள எழுத்தர் (Clerk) மற்றும் துணைப் பணியாளர் (Sub-staff) பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ​ஓய்வூதியக் கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதனால் வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டனர்
    1
    ஐக்கிய வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) சார்பில் நாடு தழுவிய அளவிலான ஒரு நாள் வங்கி வேலைநிறுத்தப் போராட்டம்
திருவாடானை பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 
​வங்கிகள் சங்கம் (IBA) சார்பில்
​5 நாள் வேலை ஒப்பந்தத்தை அமல்படுத்துவது.  
காலியாக உள்ள எழுத்தர் (Clerk) மற்றும் துணைப் பணியாளர் (Sub-staff) பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.  
​ஓய்வூதியக் கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதனால் வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டனர்
    user_அனல் ஆனந்த்
    அனல் ஆனந்த்
    திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    13 hrs ago
  • விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கடந்த மாதம் முதல்வரால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவில் நிரந்தர மின்சார வசதி இல்லாததால் மின்வெட்டு ஏற்படும் நேரமெல்லாம் நோயாளிகள் இருளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது... சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.32.65 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களை கொண்ட ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் தாய் சேய் நலப்பிரிவு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய நவீன சிகிச்சை பிரிவு கட்டிடத்தை தமிழக முதல்வர் விஜய் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி காணொளி காட்சி மூலமாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். ரயில்வே தண்டவாளம் அருகில் புதிய அரசு மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளதால், ரயில்வே நிர்வாகத்தில் முறைப்படி அனுமதி வாங்க முடியாமல் இந்த கட்டிடத்திற்கு கட்டிட நிறைவு சான்றிதழ் பெறப்படாமலும் புதிய மின் இணைப்பு கொடுக்கப்படாமலும் அவசரகதியில் திறப்பு விழா நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 6 தளங்களைக் கொண்ட இந்த சிகிச்சை மையக் கட்டிடத்தில் தரைதளம் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகிறது. தரை தளத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ரத்த சுத்திகரிப்பு மையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய கட்டிடத்திற்கு தனி மின் இணைப்பு வழங்கப்படாமல் ஏற்கனவே உள்ள மின் இணைப்பை பயன்படுத்தி வருவதால் மின்வெட்டு ஏற்படும் சமயங்களில் புதிய நவீன சிகிச்சை மையத்திற்கு ஜெனரேட்டரை பயன்படுத்த முடியாமல் மின்சாரம் இன்றி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சிகிச்சையில் நோயாளிகள் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் இருள் சூழ்ந்த சிகிச்சை மையத்தில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் முன்பதிவு செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவிற்கு தனியாக நிரந்தர மின் இணைப்பு பெற்ற பின்னர் அனைத்து சிகிச்சை பிரிவுகளையும் செயல்படுத்தி சிகிச்சை பெறும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கடந்த மாதம் முதல்வரால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவில் நிரந்தர மின்சார வசதி இல்லாததால் மின்வெட்டு ஏற்படும் நேரமெல்லாம் நோயாளிகள் இருளில் தவிக்கும்  நிலை ஏற்பட்டுள்ளது...
சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.32.65 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களை கொண்ட ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் தாய் சேய் நலப்பிரிவு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய நவீன சிகிச்சை பிரிவு கட்டிடத்தை தமிழக முதல்வர் விஜய்  கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி காணொளி காட்சி மூலமாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். 
ரயில்வே தண்டவாளம் அருகில் புதிய அரசு மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளதால், ரயில்வே நிர்வாகத்தில் முறைப்படி அனுமதி வாங்க முடியாமல்  இந்த கட்டிடத்திற்கு கட்டிட நிறைவு சான்றிதழ் பெறப்படாமலும் புதிய மின் இணைப்பு கொடுக்கப்படாமலும் அவசரகதியில் திறப்பு விழா நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 6 தளங்களைக் கொண்ட இந்த சிகிச்சை மையக் கட்டிடத்தில் தரைதளம் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகிறது. தரை தளத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ரத்த சுத்திகரிப்பு மையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. 
இந்நிலையில் புதிய கட்டிடத்திற்கு தனி மின் இணைப்பு வழங்கப்படாமல் ஏற்கனவே உள்ள மின் இணைப்பை பயன்படுத்தி வருவதால் மின்வெட்டு ஏற்படும் சமயங்களில் புதிய நவீன சிகிச்சை மையத்திற்கு ஜெனரேட்டரை பயன்படுத்த முடியாமல் மின்சாரம் இன்றி  இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சிகிச்சையில் நோயாளிகள் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் இருள் சூழ்ந்த சிகிச்சை மையத்தில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் முன்பதிவு செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 
எனவே ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவிற்கு தனியாக நிரந்தர மின் இணைப்பு பெற்ற பின்னர் அனைத்து சிகிச்சை பிரிவுகளையும் செயல்படுத்தி சிகிச்சை பெறும் நோயாளிகளின் பாதுகாப்பை  உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    3 hrs ago
  • அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியார்பயமாக்குவதை கண்டித்து தொமுசசார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய அரசின் தொழிலாளர் மக்கள் விரோத விவசாயிகளின் விரோத நடவடிக்கைகளை கண்டித்து புதுக்கோட்டை டி வி எஸ் கார்னர் அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு தொமுச சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் 300 மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசு கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினர்
    1
    அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியார்பயமாக்குவதை கண்டித்து தொமுசசார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அரசின் தொழிலாளர் மக்கள் விரோத விவசாயிகளின் விரோத நடவடிக்கைகளை கண்டித்து புதுக்கோட்டை டி வி எஸ் கார்னர் அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு தொமுச சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் 300 மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசு கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினர்
    user_Arokiaraj.J
    Arokiaraj.J
    Local News Reporter கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா வேட்டைக்காரன்பட்டி கிராமத்தில் சீரமைக்கப்படாமல் கிடக்கும் கால்நடை குடிநீர் தொட்டி – பொதுமக்கள் கோரிக்கை சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா, தானாவயல் ஊராட்சிக்கு உட்பட்ட வேட்டைக்காரன்பட்டி கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்காக கட்டப்பட்ட குடிநீர் தொட்டி, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்பாடின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள கால்நடைகள் குடிநீர் அருந்துவதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றன. எனவே, கால்நடைகளின் நலனை கருத்தில் கொண்டு, பயன்பாடின்றி கிடக்கும் குடிநீர் தொட்டியை விரைவாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வேட்டைக்காரன்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    2
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா வேட்டைக்காரன்பட்டி கிராமத்தில் சீரமைக்கப்படாமல் கிடக்கும் கால்நடை குடிநீர் தொட்டி – பொதுமக்கள் கோரிக்கை
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா, தானாவயல் ஊராட்சிக்கு உட்பட்ட வேட்டைக்காரன்பட்டி கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்காக கட்டப்பட்ட குடிநீர் தொட்டி, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்பாடின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள கால்நடைகள் குடிநீர் அருந்துவதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றன. எனவே, கால்நடைகளின் நலனை கருத்தில் கொண்டு, பயன்பாடின்றி கிடக்கும் குடிநீர் தொட்டியை விரைவாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வேட்டைக்காரன்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.