logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே திரையரங்கில் தீ விபத்து. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே மேல கோபுர தெருவில் உள்ள பழமையான சென்ட்ரல் திரையரங்கம் இன்று (செப்.12) இரவு 8 மணி அளவில் திடீரென தீ பிடித்தது. இந்த தியேட்டரில் கடந்த சில வருடங்களாக திரைப்படங்கள் திரையிடுவது இல்லை. இருப்பினும் திரையரங்கு வளாகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்துமிடமாக செயல்பட்டு வந்துள்ளது . இந்நிலையில் இன்று இரவு 8 மணி அளவில் திரையங்கில் உள்ளே திடீரென தீ விபத்து ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் ஏதும் தெரியவில்லை. வளாகத்தில் இருந்த கார்கள் அப்புறப்பட்டு வருகின்றன. மேலும் தியேட்டர் உள்ளே அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் 15 பேருக்கு மேல் தங்கள் கடை பொருட்களை குடோன் போல் வைத்து பொருட்களை எடுத்து வந்துள்ளனர். 4 க்கும் மேற்பட்ட மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திரையரங்கு உள்ளே தீ பிடித்து எரிவதால் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

1 hr ago
user_சு.இரத்தினவேல்
சு.இரத்தினவேல்
Madurai South, Tamil Nadu•
1 hr ago

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே திரையரங்கில் தீ விபத்து. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே மேல கோபுர தெருவில் உள்ள பழமையான சென்ட்ரல் திரையரங்கம் இன்று (செப்.12) இரவு 8 மணி அளவில் திடீரென தீ பிடித்தது. இந்த தியேட்டரில் கடந்த சில வருடங்களாக திரைப்படங்கள் திரையிடுவது இல்லை. இருப்பினும் திரையரங்கு வளாகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்துமிடமாக செயல்பட்டு வந்துள்ளது . இந்நிலையில் இன்று இரவு 8 மணி அளவில் திரையங்கில் உள்ளே திடீரென தீ விபத்து ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் ஏதும் தெரியவில்லை. வளாகத்தில் இருந்த கார்கள் அப்புறப்பட்டு வருகின்றன. மேலும் தியேட்டர் உள்ளே அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் 15 பேருக்கு மேல் தங்கள் கடை பொருட்களை குடோன் போல் வைத்து பொருட்களை எடுத்து வந்துள்ளனர். 4 க்கும் மேற்பட்ட மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திரையரங்கு உள்ளே தீ பிடித்து எரிவதால் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.

More news from Tamil Nadu and nearby areas
  • மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே திரையரங்கில் தீ விபத்து. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே மேல கோபுர தெருவில் உள்ள பழமையான சென்ட்ரல் திரையரங்கம் இன்று (செப்.12) இரவு 8 மணி அளவில் திடீரென தீ பிடித்தது. இந்த தியேட்டரில் கடந்த சில வருடங்களாக திரைப்படங்கள் திரையிடுவது இல்லை. இருப்பினும் திரையரங்கு வளாகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்துமிடமாக செயல்பட்டு வந்துள்ளது . இந்நிலையில் இன்று இரவு 8 மணி அளவில் திரையங்கில் உள்ளே திடீரென தீ விபத்து ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் ஏதும் தெரியவில்லை. வளாகத்தில் இருந்த கார்கள் அப்புறப்பட்டு வருகின்றன. மேலும் தியேட்டர் உள்ளே அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் 15 பேருக்கு மேல் தங்கள் கடை பொருட்களை குடோன் போல் வைத்து பொருட்களை எடுத்து வந்துள்ளனர். 4 க்கும் மேற்பட்ட மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திரையரங்கு உள்ளே தீ பிடித்து எரிவதால் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
    1
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே திரையரங்கில் தீ விபத்து. 
மதுரை  மீனாட்சி அம்மன் கோவில் அருகே மேல கோபுர தெருவில்  உள்ள பழமையான  சென்ட்ரல் திரையரங்கம் இன்று (செப்.12) இரவு 8 மணி அளவில் திடீரென தீ பிடித்தது. இந்த தியேட்டரில் கடந்த சில வருடங்களாக திரைப்படங்கள் திரையிடுவது இல்லை. இருப்பினும் திரையரங்கு வளாகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்துமிடமாக செயல்பட்டு வந்துள்ளது . இந்நிலையில் இன்று இரவு 8 மணி அளவில் திரையங்கில் உள்ளே திடீரென தீ விபத்து ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் ஏதும் தெரியவில்லை. வளாகத்தில் இருந்த கார்கள் அப்புறப்பட்டு வருகின்றன. மேலும்  தியேட்டர் உள்ளே அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் 15 பேருக்கு மேல் தங்கள் கடை பொருட்களை குடோன் போல் வைத்து பொருட்களை எடுத்து வந்துள்ளனர். 4 க்கும் மேற்பட்ட மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திரையரங்கு உள்ளே தீ பிடித்து எரிவதால் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    1 hr ago
  • மதுரை கே.கே.நகரில் தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு சாந்தோம் கல்வி தொண்டு அறக்கட்டளையின் பயிற்சி மாணவர்கள் இணைந்து தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர் இந்த பேரணியை அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் சைலேந்திர சிங் மற்றும் கண் மருத்துவர் சிந்துஜா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர் இந்த பேரணி கண்தானத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்றது இந்தப் பேரணியில் கல்லூரி மாணவிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில் “கண்தானம் செய்வோம் – பார்வையற்றோரின் வாழ்க்கையில் ஒளியேற்றுவோம்” உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பங்கேற்பாளர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பேசிய கண் மருத்துவர் சிந்துஜா அவர்கள் கூறியதாவது கண்களை தானமாக வழங்குவதன் மூலம் பார்வையிழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்கச் செய்ய முடியும் என்பதையும், கண்தானம் குறித்த தவறான நம்பிக்கைகளை அகற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்றார் அதனைத் தொடர்ந்து பேசிய கண் மருத்துவர் சைலேந்திர சிங் அவர்கள் கூறியதாவது தமிழக அளவில் பார்வை குறைபாடு உள்ள நபர்கள் அதிக அளவில் உள்ளனர் ஆனால் கருவிழி தானம் செய்ய முன்வருவோர் குறைவாக உள்ளனர் ஒருவர் இறந்த பின்னர் அவரது கண்களை தானமாக வழங்குவதன் மூலம் இரு பார்வையற்ற நபர்களுக்கு பார்வை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதால், பொதுமக்கள் அனைவரும் கண்தானம் செய்ய முன்வந்தால் கண்பார்வை இல்லாத தமிழகத்தை உருவாக்கலாம் என்று தெரிவித்தார் மாணவிகள் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணி, கண்தானத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் அமைந்தது. கண்தானம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவதன் மூலம் அதிகமானோர் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் அகர்வால் கண் மருத்துவமனை பொது மேலாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் லட்சுமணன் மற்றும் ராஜேஷ் உள்ளிட்ட மருத்துவமனை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
    1
    மதுரை கே.கே.நகரில் தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு சாந்தோம் கல்வி தொண்டு அறக்கட்டளையின் பயிற்சி மாணவர்கள் இணைந்து தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர் இந்த பேரணியை அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் சைலேந்திர சிங் மற்றும் கண் மருத்துவர் சிந்துஜா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்
இந்த பேரணி கண்தானத்தின் அவசியம் குறித்து  பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்றது இந்தப் பேரணியில் கல்லூரி மாணவிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 
பேரணியில் “கண்தானம் செய்வோம் – பார்வையற்றோரின் வாழ்க்கையில் ஒளியேற்றுவோம்” உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பங்கேற்பாளர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து பேசிய கண் மருத்துவர் சிந்துஜா அவர்கள் கூறியதாவது
கண்களை தானமாக வழங்குவதன் மூலம் பார்வையிழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்கச் செய்ய முடியும் என்பதையும், கண்தானம் குறித்த தவறான நம்பிக்கைகளை அகற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்றார் 
அதனைத் தொடர்ந்து பேசிய கண் மருத்துவர் சைலேந்திர சிங் அவர்கள் கூறியதாவது
தமிழக அளவில் பார்வை குறைபாடு உள்ள நபர்கள் அதிக அளவில் உள்ளனர் ஆனால் கருவிழி தானம் செய்ய முன்வருவோர் குறைவாக உள்ளனர் 
ஒருவர் இறந்த பின்னர் அவரது கண்களை தானமாக வழங்குவதன் மூலம் இரு பார்வையற்ற நபர்களுக்கு பார்வை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதால், பொதுமக்கள்  அனைவரும் கண்தானம் செய்ய முன்வந்தால் கண்பார்வை இல்லாத தமிழகத்தை உருவாக்கலாம் என்று தெரிவித்தார் 
மாணவிகள் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணி, கண்தானத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் அமைந்தது. கண்தானம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவதன் மூலம் அதிகமானோர் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் அகர்வால் கண் மருத்துவமனை பொது மேலாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் லட்சுமணன் மற்றும் ராஜேஷ் உள்ளிட்ட மருத்துவமனை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
    user_மதுரைக்காரன்
    மதுரைக்காரன்
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    22 hrs ago
  • விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கடந்த மாதம் முதல்வரால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவில் நிரந்தர மின்சார வசதி இல்லாததால் மின்வெட்டு ஏற்படும் நேரமெல்லாம் நோயாளிகள் இருளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது... சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.32.65 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களை கொண்ட ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் தாய் சேய் நலப்பிரிவு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய நவீன சிகிச்சை பிரிவு கட்டிடத்தை தமிழக முதல்வர் விஜய் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி காணொளி காட்சி மூலமாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். ரயில்வே தண்டவாளம் அருகில் புதிய அரசு மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளதால், ரயில்வே நிர்வாகத்தில் முறைப்படி அனுமதி வாங்க முடியாமல் இந்த கட்டிடத்திற்கு கட்டிட நிறைவு சான்றிதழ் பெறப்படாமலும் புதிய மின் இணைப்பு கொடுக்கப்படாமலும் அவசரகதியில் திறப்பு விழா நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 6 தளங்களைக் கொண்ட இந்த சிகிச்சை மையக் கட்டிடத்தில் தரைதளம் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகிறது. தரை தளத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ரத்த சுத்திகரிப்பு மையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய கட்டிடத்திற்கு தனி மின் இணைப்பு வழங்கப்படாமல் ஏற்கனவே உள்ள மின் இணைப்பை பயன்படுத்தி வருவதால் மின்வெட்டு ஏற்படும் சமயங்களில் புதிய நவீன சிகிச்சை மையத்திற்கு ஜெனரேட்டரை பயன்படுத்த முடியாமல் மின்சாரம் இன்றி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சிகிச்சையில் நோயாளிகள் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் இருள் சூழ்ந்த சிகிச்சை மையத்தில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் முன்பதிவு செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவிற்கு தனியாக நிரந்தர மின் இணைப்பு பெற்ற பின்னர் அனைத்து சிகிச்சை பிரிவுகளையும் செயல்படுத்தி சிகிச்சை பெறும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கடந்த மாதம் முதல்வரால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவில் நிரந்தர மின்சார வசதி இல்லாததால் மின்வெட்டு ஏற்படும் நேரமெல்லாம் நோயாளிகள் இருளில் தவிக்கும்  நிலை ஏற்பட்டுள்ளது...
சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.32.65 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களை கொண்ட ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் தாய் சேய் நலப்பிரிவு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய நவீன சிகிச்சை பிரிவு கட்டிடத்தை தமிழக முதல்வர் விஜய்  கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி காணொளி காட்சி மூலமாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். 
ரயில்வே தண்டவாளம் அருகில் புதிய அரசு மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளதால், ரயில்வே நிர்வாகத்தில் முறைப்படி அனுமதி வாங்க முடியாமல்  இந்த கட்டிடத்திற்கு கட்டிட நிறைவு சான்றிதழ் பெறப்படாமலும் புதிய மின் இணைப்பு கொடுக்கப்படாமலும் அவசரகதியில் திறப்பு விழா நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 6 தளங்களைக் கொண்ட இந்த சிகிச்சை மையக் கட்டிடத்தில் தரைதளம் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகிறது. தரை தளத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ரத்த சுத்திகரிப்பு மையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. 
இந்நிலையில் புதிய கட்டிடத்திற்கு தனி மின் இணைப்பு வழங்கப்படாமல் ஏற்கனவே உள்ள மின் இணைப்பை பயன்படுத்தி வருவதால் மின்வெட்டு ஏற்படும் சமயங்களில் புதிய நவீன சிகிச்சை மையத்திற்கு ஜெனரேட்டரை பயன்படுத்த முடியாமல் மின்சாரம் இன்றி  இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சிகிச்சையில் நோயாளிகள் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் இருள் சூழ்ந்த சிகிச்சை மையத்தில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் முன்பதிவு செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 
எனவே ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவிற்கு தனியாக நிரந்தர மின் இணைப்பு பெற்ற பின்னர் அனைத்து சிகிச்சை பிரிவுகளையும் செயல்படுத்தி சிகிச்சை பெறும் நோயாளிகளின் பாதுகாப்பை  உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    1 hr ago
  • இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளாரா முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளாரா என்ற விபரத்தினை அவர் தமிழகம் வந்த பின்னர் தெரிவிக்க வேண்டும். சிவகங்கையில் பாஜக தமிழக தலைவர் நைனார் நாகேந்திரன் பேட்டி சிவகங்கையில் பாஜக நிர்வாகி இல்ல நிகழ்வில் கலந்து கொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது, லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளாரா முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளாரா என்ற விபரத்தினை அவர் தமிழகம் வந்த பின்னர் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் மேலும் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
    1
    இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். 
லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளாரா முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளாரா என்ற விபரத்தினை அவர் தமிழகம் வந்த பின்னர் தெரிவிக்க வேண்டும். சிவகங்கையில் பாஜக தமிழக தலைவர் நைனார் நாகேந்திரன் பேட்டி

சிவகங்கையில் பாஜக நிர்வாகி இல்ல நிகழ்வில் கலந்து கொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது, லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளாரா முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளாரா என்ற விபரத்தினை அவர் தமிழகம் வந்த பின்னர் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் மேலும் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • ஆண்டிப்பட்டி சந்தைகளில் சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு: ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சின்ன வெங்காயம் விவசாயம் பரவலாக செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அப்பகுதி சந்தைகளுக்கு வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. இதேபோல், வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழக சந்தைகளுக்கு வர வேண்டிய சின்ன வெங்காய வரத்து தற்போது சரிவடைந்துள்ளதால், தேவையும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்டிப்பட்டி சந்தைகளில் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து தற்போது ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சந்தைகளில் விலை தாறுமாறாக ஏறி உள்ள போதிலும், உற்பத்தி செய்த சின்ன வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைத்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    1
    ஆண்டிப்பட்டி சந்தைகளில் சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு: ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சின்ன வெங்காயம் விவசாயம் பரவலாக செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அப்பகுதி சந்தைகளுக்கு வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. இதேபோல், வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழக சந்தைகளுக்கு வர வேண்டிய சின்ன வெங்காய வரத்து தற்போது சரிவடைந்துள்ளதால், தேவையும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்டிப்பட்டி சந்தைகளில் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து தற்போது ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சந்தைகளில் விலை தாறுமாறாக ஏறி உள்ள போதிலும், உற்பத்தி செய்த சின்ன வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைத்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாளில் திருப்பத்தூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திறக்காததால் பயணிகள் அதிர்ச்சி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாளில் திருப்பத்தூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திறக்கவில்லை. ஓட்டுநர்-நடத்துனர் முயற்சி தோல்வியடைந்ததால் பள்ளி மாணவர்கள் ஜன்னல் வழியாக இறங்கினர். பெண் பயணிகள் பயத்துடன் நீண்ட நேரம் பேருந்தில் காத்திருந்தனர். பணிமனை பணியாளர் வந்து கதவைத் திறந்தபின் பயணிகள் நிம்மதியுடன் இறங்கினர்.
    1
    சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாளில் திருப்பத்தூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திறக்காததால் பயணிகள் அதிர்ச்சி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாளில் திருப்பத்தூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திறக்கவில்லை. ஓட்டுநர்-நடத்துனர் முயற்சி தோல்வியடைந்ததால் பள்ளி மாணவர்கள் ஜன்னல் வழியாக இறங்கினர். பெண் பயணிகள் பயத்துடன் நீண்ட நேரம் பேருந்தில் காத்திருந்தனர். பணிமனை பணியாளர் வந்து கதவைத் திறந்தபின் பயணிகள் நிம்மதியுடன் இறங்கினர்.
    user_ABDUL SALAM
    ABDUL SALAM
    Photographer சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு•
    2 hrs ago
  • திண்டுக்கல் அருகே உணவகத்தில் மோதல்: உண்மை தகவலை மறைத்து தவறான புகார் அளித்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு ரெட்டியார்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு பார்சல் வாங்கச் சென்ற வேலாம்பட்டியைச் சேர்ந்த நபர் தாக்கப்பட்டதாகவும், பின்னர் நடந்த சம்பவம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குழந்தையுடன் உணவகத்திற்கு சென்ற அந்த நபர், 3 பார்சல் உணவு வாங்க முயன்றுள்ளார். அப்போது அவரிடம் இருந்த பணம் குறைவாக இருந்ததால், அங்கு பணியாற்றும் தனது உறவினரிடம் இரண்டு பார்சலுக்கான பணத்தை கொடுத்து, மீதமுள்ள தொகையை வீட்டிற்கு சென்று குழந்தைக்கு உணவு கொடுத்துவிட்டு மீண்டும் கொண்டு வந்து தருவதாக கூறியதாக கூறப்படுகின்றது. இதற்கு அங்கு பணியாற்றிய உறவினரான ஊழியர் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், உணவக உரிமையாளர்களில் ஒருவர் முழு பணத்தையும் செலுத்திவிட்டு பார்சலை வாங்கிச் செல்லுமாறு கூறியதாகவும், அதற்கு ஊழியர் "நான் பணத்தை கொடுத்து விடுகிறேன்" என்று தெரிவித்தும் உரிமையாளர் ஏற்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து, "இரண்டு பார்சல் மட்டும் போதும், ஒன்றை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு அந்த நபர் கிளம்ப முயன்றபோது, மூன்று பார்சல்களுக்கு பணம் கொடுத்து விட்டு எடுத்துச் செல் மூன்று கட்டச் சொல்லிவிட்டு இரண்டை மட்டும் வாங்கிச் செல்வதா என்று கூறி தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் அவரை சிலர் தாக்கியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.அங்கு நடந்த உரையாடல்களும் கல்லாவில் உள்ள கேமராவில் பதிவு ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், சம்பவம் குறித்து தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்து உணவகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அங்கு நடந்த உரையாடல்கள் வீடியோவாக பதிவாகியுள்ளதாகவும், ஆனால் அந்த பதிவுகளை மட்டும் நீக்கிவிட்டு, மது போதையில் வந்து தகராறு செய்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, அதனை அடிப்படையாக கொண்டு சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக காவல்துறை ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாகவும் இரு தரப்பினரின் விளக்கங்களையும் பெற்று உரிய விசாரணை நடத்தாமல் தவறான தகவல்களை பரப்பாமல் . தீர விசாரித்து செய்தி வெளியிட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    திண்டுக்கல் அருகே உணவகத்தில் மோதல்: உண்மை தகவலை மறைத்து தவறான புகார் அளித்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

ரெட்டியார்சத்திரம்:
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு பார்சல் வாங்கச் சென்ற வேலாம்பட்டியைச் சேர்ந்த நபர் தாக்கப்பட்டதாகவும், பின்னர் நடந்த சம்பவம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குழந்தையுடன் உணவகத்திற்கு சென்ற அந்த நபர், 3 பார்சல் உணவு வாங்க முயன்றுள்ளார். அப்போது அவரிடம் இருந்த பணம் குறைவாக இருந்ததால், அங்கு பணியாற்றும் தனது உறவினரிடம் இரண்டு பார்சலுக்கான பணத்தை கொடுத்து, மீதமுள்ள தொகையை வீட்டிற்கு சென்று குழந்தைக்கு உணவு கொடுத்துவிட்டு மீண்டும் கொண்டு வந்து தருவதாக கூறியதாக கூறப்படுகின்றது.
இதற்கு அங்கு பணியாற்றிய உறவினரான ஊழியர் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், உணவக உரிமையாளர்களில் ஒருவர் முழு பணத்தையும் செலுத்திவிட்டு பார்சலை வாங்கிச் செல்லுமாறு கூறியதாகவும், அதற்கு ஊழியர் "நான் பணத்தை கொடுத்து விடுகிறேன்" என்று தெரிவித்தும் உரிமையாளர் ஏற்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, "இரண்டு பார்சல் மட்டும் போதும், ஒன்றை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு அந்த நபர் கிளம்ப முயன்றபோது, மூன்று பார்சல்களுக்கு பணம் கொடுத்து விட்டு எடுத்துச் செல் மூன்று கட்டச் சொல்லிவிட்டு இரண்டை மட்டும் வாங்கிச் செல்வதா என்று கூறி தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் அவரை சிலர் தாக்கியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.அங்கு நடந்த உரையாடல்களும் கல்லாவில் உள்ள கேமராவில் பதிவு ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சம்பவம் குறித்து தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்து உணவகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அங்கு நடந்த உரையாடல்கள் வீடியோவாக பதிவாகியுள்ளதாகவும், ஆனால் அந்த பதிவுகளை மட்டும்  நீக்கிவிட்டு, மது போதையில் வந்து தகராறு செய்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, அதனை அடிப்படையாக கொண்டு சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக காவல்துறை ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாகவும் இரு தரப்பினரின் விளக்கங்களையும் பெற்று உரிய விசாரணை நடத்தாமல் தவறான தகவல்களை பரப்பாமல் . தீர விசாரித்து செய்தி வெளியிட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • மறைந்த பட்டிமன்ற நடுவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த குவிந்த மக்கள். மதுரையில் ஞான ஒளிபுரம் பகுதியில் வசித்த பிரபல பட்டி மன்ற நடுவர், நடிகர் மற்றும் முன்னாள் தமிழ் பேராசிரியருமான சாலமன் பாப்பையா (90) அவர்கள் இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதியம் காலமானார். அன்னாரின் உடல் ஞான ஒளிபுரம் இல்லத்திற்கு இன்று மாலை 3.30 மணியளவில் கொண்டு வரப்பட்டது. நாளை (செப்.12) காலை உடல் தகனம் செய்யப்படும் என தெரிகிறது. இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். அன்னாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் அப் பகுதியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
    1
    மறைந்த பட்டிமன்ற நடுவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த குவிந்த மக்கள்.
மதுரையில் ஞான ஒளிபுரம் பகுதியில் வசித்த பிரபல பட்டி மன்ற நடுவர், நடிகர்  மற்றும் முன்னாள் தமிழ் பேராசிரியருமான சாலமன் பாப்பையா (90) அவர்கள் இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதியம் காலமானார். அன்னாரின் உடல் ஞான ஒளிபுரம் இல்லத்திற்கு  இன்று மாலை 3.30 மணியளவில் கொண்டு வரப்பட்டது. நாளை (செப்.12) காலை உடல் தகனம் செய்யப்படும் என தெரிகிறது. இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின்,  உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். அன்னாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் அப் பகுதியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.