Shuru
Apke Nagar Ki App…
மறைந்த பட்டிமன்ற நடுவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த குவிந்த மக்கள். மதுரையில் ஞான ஒளிபுரம் பகுதியில் வசித்த பிரபல பட்டி மன்ற நடுவர், நடிகர் மற்றும் முன்னாள் தமிழ் பேராசிரியருமான சாலமன் பாப்பையா (90) அவர்கள் இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதியம் காலமானார். அன்னாரின் உடல் ஞான ஒளிபுரம் இல்லத்திற்கு இன்று மாலை 3.30 மணியளவில் கொண்டு வரப்பட்டது. நாளை (செப்.12) காலை உடல் தகனம் செய்யப்படும் என தெரிகிறது. இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். அன்னாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் அப் பகுதியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
சு.இரத்தினவேல்
மறைந்த பட்டிமன்ற நடுவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த குவிந்த மக்கள். மதுரையில் ஞான ஒளிபுரம் பகுதியில் வசித்த பிரபல பட்டி மன்ற நடுவர், நடிகர் மற்றும் முன்னாள் தமிழ் பேராசிரியருமான சாலமன் பாப்பையா (90) அவர்கள் இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதியம் காலமானார். அன்னாரின் உடல் ஞான ஒளிபுரம் இல்லத்திற்கு இன்று மாலை 3.30 மணியளவில் கொண்டு வரப்பட்டது. நாளை (செப்.12) காலை உடல் தகனம் செய்யப்படும் என தெரிகிறது. இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். அன்னாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் அப் பகுதியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
More news from Tamil Nadu and nearby areas
- மறைந்த பட்டிமன்ற நடுவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த குவிந்த மக்கள். மதுரையில் ஞான ஒளிபுரம் பகுதியில் வசித்த பிரபல பட்டி மன்ற நடுவர், நடிகர் மற்றும் முன்னாள் தமிழ் பேராசிரியருமான சாலமன் பாப்பையா (90) அவர்கள் இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதியம் காலமானார். அன்னாரின் உடல் ஞான ஒளிபுரம் இல்லத்திற்கு இன்று மாலை 3.30 மணியளவில் கொண்டு வரப்பட்டது. நாளை (செப்.12) காலை உடல் தகனம் செய்யப்படும் என தெரிகிறது. இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். அன்னாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் அப் பகுதியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.1
- மதுரை கே.கே.நகரில் தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு சாந்தோம் கல்வி தொண்டு அறக்கட்டளையின் பயிற்சி மாணவர்கள் இணைந்து தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர் இந்த பேரணியை அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் சைலேந்திர சிங் மற்றும் கண் மருத்துவர் சிந்துஜா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர் இந்த பேரணி கண்தானத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்றது இந்தப் பேரணியில் கல்லூரி மாணவிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில் “கண்தானம் செய்வோம் – பார்வையற்றோரின் வாழ்க்கையில் ஒளியேற்றுவோம்” உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பங்கேற்பாளர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பேசிய கண் மருத்துவர் சிந்துஜா அவர்கள் கூறியதாவது கண்களை தானமாக வழங்குவதன் மூலம் பார்வையிழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்கச் செய்ய முடியும் என்பதையும், கண்தானம் குறித்த தவறான நம்பிக்கைகளை அகற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்றார் அதனைத் தொடர்ந்து பேசிய கண் மருத்துவர் சைலேந்திர சிங் அவர்கள் கூறியதாவது தமிழக அளவில் பார்வை குறைபாடு உள்ள நபர்கள் அதிக அளவில் உள்ளனர் ஆனால் கருவிழி தானம் செய்ய முன்வருவோர் குறைவாக உள்ளனர் ஒருவர் இறந்த பின்னர் அவரது கண்களை தானமாக வழங்குவதன் மூலம் இரு பார்வையற்ற நபர்களுக்கு பார்வை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதால், பொதுமக்கள் அனைவரும் கண்தானம் செய்ய முன்வந்தால் கண்பார்வை இல்லாத தமிழகத்தை உருவாக்கலாம் என்று தெரிவித்தார் மாணவிகள் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணி, கண்தானத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் அமைந்தது. கண்தானம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவதன் மூலம் அதிகமானோர் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் அகர்வால் கண் மருத்துவமனை பொது மேலாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் லட்சுமணன் மற்றும் ராஜேஷ் உள்ளிட்ட மருத்துவமனை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்1
- இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளாரா முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளாரா என்ற விபரத்தினை அவர் தமிழகம் வந்த பின்னர் தெரிவிக்க வேண்டும். சிவகங்கையில் பாஜக தமிழக தலைவர் நைனார் நாகேந்திரன் பேட்டி சிவகங்கையில் பாஜக நிர்வாகி இல்ல நிகழ்வில் கலந்து கொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது, லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளாரா முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளாரா என்ற விபரத்தினை அவர் தமிழகம் வந்த பின்னர் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் மேலும் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.1
- ஆண்டிப்பட்டி சந்தைகளில் சின்ன வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு: ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சின்ன வெங்காயம் விவசாயம் பரவலாக செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அப்பகுதி சந்தைகளுக்கு வரும் சின்ன வெங்காயத்தின் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. இதேபோல், வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழக சந்தைகளுக்கு வர வேண்டிய சின்ன வெங்காய வரத்து தற்போது சரிவடைந்துள்ளதால், தேவையும் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்டிப்பட்டி சந்தைகளில் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து தற்போது ஒரு கிலோ 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சந்தைகளில் விலை தாறுமாறாக ஏறி உள்ள போதிலும், உற்பத்தி செய்த சின்ன வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைத்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.1
- சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாளில் திருப்பத்தூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திறக்காததால் பயணிகள் அதிர்ச்சி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாளில் திருப்பத்தூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திறக்கவில்லை. ஓட்டுநர்-நடத்துனர் முயற்சி தோல்வியடைந்ததால் பள்ளி மாணவர்கள் ஜன்னல் வழியாக இறங்கினர். பெண் பயணிகள் பயத்துடன் நீண்ட நேரம் பேருந்தில் காத்திருந்தனர். பணிமனை பணியாளர் வந்து கதவைத் திறந்தபின் பயணிகள் நிம்மதியுடன் இறங்கினர்.1
- திண்டுக்கல் அருகே உணவகத்தில் மோதல்: உண்மை தகவலை மறைத்து தவறான புகார் அளித்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு ரெட்டியார்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு பார்சல் வாங்கச் சென்ற வேலாம்பட்டியைச் சேர்ந்த நபர் தாக்கப்பட்டதாகவும், பின்னர் நடந்த சம்பவம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குழந்தையுடன் உணவகத்திற்கு சென்ற அந்த நபர், 3 பார்சல் உணவு வாங்க முயன்றுள்ளார். அப்போது அவரிடம் இருந்த பணம் குறைவாக இருந்ததால், அங்கு பணியாற்றும் தனது உறவினரிடம் இரண்டு பார்சலுக்கான பணத்தை கொடுத்து, மீதமுள்ள தொகையை வீட்டிற்கு சென்று குழந்தைக்கு உணவு கொடுத்துவிட்டு மீண்டும் கொண்டு வந்து தருவதாக கூறியதாக கூறப்படுகின்றது. இதற்கு அங்கு பணியாற்றிய உறவினரான ஊழியர் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், உணவக உரிமையாளர்களில் ஒருவர் முழு பணத்தையும் செலுத்திவிட்டு பார்சலை வாங்கிச் செல்லுமாறு கூறியதாகவும், அதற்கு ஊழியர் "நான் பணத்தை கொடுத்து விடுகிறேன்" என்று தெரிவித்தும் உரிமையாளர் ஏற்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து, "இரண்டு பார்சல் மட்டும் போதும், ஒன்றை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு அந்த நபர் கிளம்ப முயன்றபோது, மூன்று பார்சல்களுக்கு பணம் கொடுத்து விட்டு எடுத்துச் செல் மூன்று கட்டச் சொல்லிவிட்டு இரண்டை மட்டும் வாங்கிச் செல்வதா என்று கூறி தகராறு ஏற்பட்டதாகவும், பின்னர் அவரை சிலர் தாக்கியதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.அங்கு நடந்த உரையாடல்களும் கல்லாவில் உள்ள கேமராவில் பதிவு ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், சம்பவம் குறித்து தகவல் அறிந்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்து உணவகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அங்கு நடந்த உரையாடல்கள் வீடியோவாக பதிவாகியுள்ளதாகவும், ஆனால் அந்த பதிவுகளை மட்டும் நீக்கிவிட்டு, மது போதையில் வந்து தகராறு செய்ததாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, அதனை அடிப்படையாக கொண்டு சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக காவல்துறை ஒருதலைப் பட்சமாக செயல்படுவதாகவும் இரு தரப்பினரின் விளக்கங்களையும் பெற்று உரிய விசாரணை நடத்தாமல் தவறான தகவல்களை பரப்பாமல் . தீர விசாரித்து செய்தி வெளியிட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- புதிய பயணிகள் நிழற்குடையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த மேயர். மதுரை மாநகராட்சி 85-வது வார்டு தவுட்டு சந்தை பேருந்து நிறுத்தத்தில் மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் முத்துமாரி ஜெயக்குமார் தலைமையில் மாமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிய நிழற்குடையினன பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேயர் (பொறுப்பு) நாகராஜன் அவர்கள் இன்று (செப்.11) காலை திறந்து வைத்தார். அருகில் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா, பகுதி செயலாளர் ஜோசப் தனிஸ்லாஸ்,வட்டச் செயலாளர்கள் முருகன், நாட்டாமை ஜெயக்குமார், செல்வகுமரன், பால் கடை கிருஷ்ணன், தயிர்கடை சங்கர் ஆசீர்வாதம்,சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.1
- ராஜபாளையத்தில் நடந்த விபத்தில் இரண்டாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவை சேர்ந்த தனியார் தொழிலாளி ராதாகிருஷ்ணன் என்பவரது மூத்த மகன் ரோகித் (7) தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலை பள்ளி செல்வதற்காக தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, நிறுத்தத்தில் காத்திருந்த மாணவர்களை ஏற்றி செல்ல வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதியதில், சிறுவன் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தான். சிறுவன் உடலை மீட்ட தெற்கு காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் பேருந்து ஓட்டுநர் மம்சாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.1