logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மதுரை கே.கே.நகரில் தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு சாந்தோம் கல்வி தொண்டு அறக்கட்டளையின் பயிற்சி மாணவர்கள் இணைந்து தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர் இந்த பேரணியை அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் சைலேந்திர சிங் மற்றும் கண் மருத்துவர் சிந்துஜா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர் இந்த பேரணி கண்தானத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்றது இந்தப் பேரணியில் கல்லூரி மாணவிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில் “கண்தானம் செய்வோம் – பார்வையற்றோரின் வாழ்க்கையில் ஒளியேற்றுவோம்” உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பங்கேற்பாளர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பேசிய கண் மருத்துவர் சிந்துஜா அவர்கள் கூறியதாவது கண்களை தானமாக வழங்குவதன் மூலம் பார்வையிழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்கச் செய்ய முடியும் என்பதையும், கண்தானம் குறித்த தவறான நம்பிக்கைகளை அகற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்றார் அதனைத் தொடர்ந்து பேசிய கண் மருத்துவர் சைலேந்திர சிங் அவர்கள் கூறியதாவது தமிழக அளவில் பார்வை குறைபாடு உள்ள நபர்கள் அதிக அளவில் உள்ளனர் ஆனால் கருவிழி தானம் செய்ய முன்வருவோர் குறைவாக உள்ளனர் ஒருவர் இறந்த பின்னர் அவரது கண்களை தானமாக வழங்குவதன் மூலம் இரு பார்வையற்ற நபர்களுக்கு பார்வை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதால், பொதுமக்கள் அனைவரும் கண்தானம் செய்ய முன்வந்தால் கண்பார்வை இல்லாத தமிழகத்தை உருவாக்கலாம் என்று தெரிவித்தார் மாணவிகள் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணி, கண்தானத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் அமைந்தது. கண்தானம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவதன் மூலம் அதிகமானோர் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் அகர்வால் கண் மருத்துவமனை பொது மேலாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் லட்சுமணன் மற்றும் ராஜேஷ் உள்ளிட்ட மருத்துவமனை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

20 hrs ago
user_மதுரைக்காரன்
மதுரைக்காரன்
மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
20 hrs ago

மதுரை கே.கே.நகரில் தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு சாந்தோம் கல்வி தொண்டு அறக்கட்டளையின் பயிற்சி மாணவர்கள் இணைந்து தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர் இந்த பேரணியை அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் சைலேந்திர சிங் மற்றும் கண் மருத்துவர் சிந்துஜா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர் இந்த பேரணி கண்தானத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்றது இந்தப் பேரணியில் கல்லூரி மாணவிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில் “கண்தானம் செய்வோம் – பார்வையற்றோரின் வாழ்க்கையில் ஒளியேற்றுவோம்” உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பங்கேற்பாளர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பேசிய கண் மருத்துவர் சிந்துஜா அவர்கள் கூறியதாவது கண்களை தானமாக வழங்குவதன் மூலம் பார்வையிழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்கச் செய்ய முடியும் என்பதையும், கண்தானம் குறித்த தவறான நம்பிக்கைகளை அகற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்றார் அதனைத் தொடர்ந்து பேசிய கண் மருத்துவர் சைலேந்திர சிங் அவர்கள் கூறியதாவது தமிழக அளவில் பார்வை குறைபாடு உள்ள நபர்கள் அதிக அளவில் உள்ளனர் ஆனால் கருவிழி தானம் செய்ய முன்வருவோர் குறைவாக உள்ளனர் ஒருவர் இறந்த பின்னர் அவரது கண்களை தானமாக வழங்குவதன் மூலம் இரு பார்வையற்ற நபர்களுக்கு பார்வை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதால், பொதுமக்கள் அனைவரும் கண்தானம் செய்ய முன்வந்தால் கண்பார்வை இல்லாத தமிழகத்தை உருவாக்கலாம் என்று தெரிவித்தார் மாணவிகள் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணி, கண்தானத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் அமைந்தது. கண்தானம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவதன் மூலம் அதிகமானோர் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் அகர்வால் கண் மருத்துவமனை பொது மேலாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் லட்சுமணன் மற்றும் ராஜேஷ் உள்ளிட்ட மருத்துவமனை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • காரைக்குடியில் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம். தொடர் விடுமுறையால் வாடிக்கையாளர்கள் பாதிக்கும் அபாயம். வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை, ஓய்வூதிய திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆரிய பவன் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஸ்டேட் வங்கி முன்பு ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இன்று நடைபெறும் போராட்டத்தைத் தொடர்ந்து, நாளை வார விடுமுறை தொடங்குகிறது. அதன்பின்னர் விநாயகர் சதுர்த்தி விடுமுறையும் வருவதால், தொடர் விடுமுறை காரணமாக வாடிக்கையாளர்களின் காசோலை உள்ளிட்ட வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், இந்த தொடர் விடுமுறையால் ஏடிஎம் சேவைகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனியார் வங்கி ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    1
    காரைக்குடியில் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம். தொடர் விடுமுறையால் வாடிக்கையாளர்கள் பாதிக்கும் அபாயம்.
வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை, ஓய்வூதிய திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆரிய பவன் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஸ்டேட் வங்கி முன்பு ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இன்று நடைபெறும் போராட்டத்தைத் தொடர்ந்து, நாளை வார விடுமுறை தொடங்குகிறது. அதன்பின்னர் விநாயகர் சதுர்த்தி விடுமுறையும் வருவதால், தொடர் விடுமுறை காரணமாக வாடிக்கையாளர்களின் காசோலை உள்ளிட்ட வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், இந்த தொடர் விடுமுறையால் ஏடிஎம் சேவைகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனியார் வங்கி ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    4 hrs ago
  • அருப்புக்கோட்டை வழியாக தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடிக்கு செல்லும் வாகனங்களில் இளைஞர்கள் தொங்கியபடியும் முகம் சுளிக்கும் வகையில் கத்தியபடியும் அதிவேகமாக செல்வதால் பொதுமக்கள் கடும் அவதி காவல்துறை அறிவுறுத்தல் படி அருப்புக்கோட்டையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் சிரமம் அடைந்த வியாபாரிகள் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வாகனங்களில் செல்வது வழக்கம். இதில் விருதுநகர், சாத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வழியாகத்தான் பரமக்குடி செல்ல முடியும். இவ்வாறு வாகனங்களில் அருப்புக்கோட்டை வழியாக செல்லும் இளைஞர்கள் வாகனங்களில் தொங்கியபடியும் அதிக அளவு கூச்சலிட்டு கொண்டும் பொது மக்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் கத்தியபடியும் சென்றனர். வாகனங்களில் கதவைத் திறந்து அதில் தொங்கியபடி ஆபத்தான வகையில் இளைஞர்கள் பயணம் செய்வது பொதுமக்கள் இடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.‌ மேலும் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு செல்லும் வழியில் உள்ள அனைத்து கடைகளையும் காவல்துறையினர் மூட அறிவுறுத்தி உள்ளதால் வணிகர்களும் சிரமம் அடைந்துள்ளனர். போலீசாரின் அறிவுறுத்தல் படி அருப்புக்கோட்டையில் காந்திநகர், திருச்சுழி ரோடு, ஆத்திபட்டி பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. தொடர்ந்து இதுபோன்ற தலைவர்களின் நினைவிடத்திற்கு வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் முக சுழிப்பை ஏற்படுத்தும் வகையிலும் செல்வதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
    1
    அருப்புக்கோட்டை வழியாக தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடிக்கு செல்லும் வாகனங்களில் இளைஞர்கள் தொங்கியபடியும் முகம் சுளிக்கும் வகையில் கத்தியபடியும் அதிவேகமாக செல்வதால் பொதுமக்கள் கடும் அவதி
காவல்துறை அறிவுறுத்தல் படி அருப்புக்கோட்டையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் சிரமம் அடைந்த வியாபாரிகள்
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வாகனங்களில் செல்வது வழக்கம்.  
இதில் விருதுநகர், சாத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார  பகுதிகளை சேர்ந்தவர்கள் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வழியாகத்தான் பரமக்குடி செல்ல முடியும். இவ்வாறு வாகனங்களில் அருப்புக்கோட்டை வழியாக செல்லும் இளைஞர்கள் வாகனங்களில் தொங்கியபடியும் அதிக அளவு கூச்சலிட்டு கொண்டும் பொது மக்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் கத்தியபடியும் சென்றனர். 
வாகனங்களில் கதவைத் திறந்து அதில் தொங்கியபடி ஆபத்தான வகையில் இளைஞர்கள் பயணம் செய்வது பொதுமக்கள் இடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.‌
மேலும் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு செல்லும் வழியில் உள்ள அனைத்து கடைகளையும் காவல்துறையினர் மூட அறிவுறுத்தி உள்ளதால் வணிகர்களும் சிரமம் அடைந்துள்ளனர். 
போலீசாரின் அறிவுறுத்தல் படி அருப்புக்கோட்டையில் காந்திநகர், திருச்சுழி ரோடு, ஆத்திபட்டி பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. 
தொடர்ந்து இதுபோன்ற தலைவர்களின் நினைவிடத்திற்கு வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் முக சுழிப்பை ஏற்படுத்தும் வகையிலும் செல்வதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    7 hrs ago
  • பொன்னமராவதி பட்டம் வரத்தான் சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊரின் காவல் தெய்வமாக விளங்கும் அருள்மிகு பட்டம் வரத்தான் சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு பட்டமரத்தான் சுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன
    1
    பொன்னமராவதி பட்டம் வரத்தான் சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊரின் காவல் தெய்வமாக விளங்கும் அருள்மிகு பட்டம் வரத்தான் சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு பட்டமரத்தான் சுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன
    user_Kavin
    Kavin
    பொன்னமராவதி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    53 min ago
  • கருப்பசாமி மற்றும் பச்சை நாச்சியம்மன் கோவிலில் புதிய கட்சிகளை பிரதிஷ்டை விழா அருள்மிகு ஊத்தாம் பாறை கருப்பசாமி மற்றும் பச்சை நாச்சியம்மன் கோவிலில் புதிய கட்சிகளை பிரதிஷ்டை விழா மற்றும் கும்பாபிஷேக விழா. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரண்மனையில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஊத்தாம் பாறை. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள வடக்கு மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த வனப்பகுதியில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு போடிநாயக்கனூரை ஆண்ட ராஜ கம்பளத்தார் அரண்மனை வம்சாவளியினர் இந்த கோவிலை உருவாக்கினர். வடக்கு மலை எல்லைப் பகுதி காவல் தெய்வமாக விளங்கும் இந்த உத்தம்பாறை கருப்பசாமி இப்பகுதியில் பாறை வெடித்து உருவானதாக இப்பகுதியில் மக்கள் நம்பிக்கையில் உள்ளது. போடிநாயக்கனூர் அரண்மனைக்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலில் 350 ஆண்டுகளாக மண்ணால் உள்ள கருப்புசாமி சிலை மற்றும் காவல் தெய்வங்கள் பச்சை நாச்சியம்மன் சிலை உருவாக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது. நிலையில் கோயில் புதிதாக கட்டமைக்கப்பட்டு புதிய கருவறை உருவாக்கப்பட்டு ராஜகம்பளத்தார் முறைப்படி போதகப் புல்லால் கூரை வேயப்பட்டது. இன்று இருந்த மண் சிலை அகற்றப்பட்டு புதிதாக கருப்பணசாமிக்கு கற்சிலை உருவாக்கப்பட்டு கருவறையில் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. காலை அமாவாசை திதியில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றது. ராஜகம்பளத்தார் முறைப்படி பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பகிர்ந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மரத்தில் குடி கொண்டிருக்கும் பச்சை நாச்சி அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றது வனப்பகுதியில் உள்ள கோயில் என்பதால் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
    1
    கருப்பசாமி மற்றும் பச்சை நாச்சியம்மன்  கோவிலில் புதிய கட்சிகளை பிரதிஷ்டை விழா
அருள்மிகு ஊத்தாம் பாறை கருப்பசாமி மற்றும் பச்சை நாச்சியம்மன்  கோவிலில் புதிய கட்சிகளை பிரதிஷ்டை விழா மற்றும் கும்பாபிஷேக விழா.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரண்மனையில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஊத்தாம் பாறை.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள வடக்கு மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த வனப்பகுதியில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு போடிநாயக்கனூரை ஆண்ட ராஜ கம்பளத்தார் அரண்மனை வம்சாவளியினர் இந்த கோவிலை உருவாக்கினர்.
வடக்கு மலை எல்லைப் பகுதி காவல் தெய்வமாக விளங்கும் இந்த உத்தம்பாறை கருப்பசாமி இப்பகுதியில் பாறை வெடித்து உருவானதாக இப்பகுதியில் மக்கள் நம்பிக்கையில் உள்ளது.
போடிநாயக்கனூர் அரண்மனைக்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலில் 350 ஆண்டுகளாக மண்ணால் உள்ள கருப்புசாமி சிலை மற்றும் காவல் தெய்வங்கள் பச்சை நாச்சியம்மன் சிலை உருவாக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது.
நிலையில் கோயில் புதிதாக கட்டமைக்கப்பட்டு புதிய கருவறை உருவாக்கப்பட்டு ராஜகம்பளத்தார் முறைப்படி போதகப் புல்லால் கூரை       வேயப்பட்டது.
இன்று இருந்த மண் சிலை அகற்றப்பட்டு புதிதாக கருப்பணசாமிக்கு கற்சிலை உருவாக்கப்பட்டு கருவறையில் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
காலை அமாவாசை திதியில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றது.
ராஜகம்பளத்தார் முறைப்படி பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பகிர்ந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மரத்தில் குடி கொண்டிருக்கும் பச்சை நாச்சி அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றது 
வனப்பகுதியில் உள்ள கோயில் என்பதால் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சாலையில் உணவு மற்றும் உணவுகள் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் பழைய வத்தலகுண்டு சாலையில் அமைந்துள்ள உணவு மற்றும் வணிக கழக கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டது உணவுப் பொருட்களின் தரத்தை குறித்து ஆய்வு செய்தார்
    1
    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சாலையில் உணவு மற்றும் உணவுகள் துறை அமைச்சர் வெங்கட்ரமணன் பழைய வத்தலகுண்டு சாலையில் அமைந்துள்ள உணவு மற்றும் வணிக கழக கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டது உணவுப் பொருட்களின் தரத்தை குறித்து ஆய்வு செய்தார்
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    41 min ago
  • TNEB SE அலுவலகம் முன் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேனி கிளை சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் தேனி NRT சாலையில் உள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேனி கிளை சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார் திட்ட செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார் இந்த ஆர்ப்பாட்டத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், ஒப்பந்த முறையில் பணியமர்த்தும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சந்தன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேனி கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
    4
    TNEB SE அலுவலகம் முன் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேனி கிளை சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தேனி NRT சாலையில் உள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்  தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேனி கிளை சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார் திட்ட செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார் இந்த ஆர்ப்பாட்டத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், ஒப்பந்த முறையில் பணியமர்த்தும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சந்தன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேனி கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர், காவல் ஆணையர் ஆய்வு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன், ஆகியோர் இன்று (11.09.2026) காலை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் குடமுழுக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். உடன் மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் உடன் இருந்தார்.
    1
    மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர், காவல் ஆணையர் ஆய்வு 
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர காவல் ஆணையாளர்  ராஜேந்திரன், ஆகியோர் இன்று (11.09.2026) காலை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் குடமுழுக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு  மேற்கொண்டனர்.
உடன் மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் உடன் இருந்தார்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    8 hrs ago
  • விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் 2026ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதுபெற்ற நல்லாசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது...!நல்லாசிரியர்களுக்கு பரிவட்டம் கட்டி பாராட்டு தெரிவிக்கப்பட்டது...! 2026ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதுபெற்ற விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 11 நல்லாசிரியர்களுக்கு பாராட்டு விழா வத்திராயிருப்பில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. கூட்டெழுத்து காலாண்டிதழ் சார்பாக நடைபெற்ற இவ்விழாவில் கல்வியாளர்கள் பலரும் கலந்துகொண்டு நல்லாசிரியர்களை பாராட்டி பேசினர். இதனை தொடர்ந்து நல்லாசிரியர் விருது பெற்ற 11 ஆசிரியர்களை கௌவரவிக்கும் விதமாக மேடையில் வைத்து அவர்களுக்கு பரிவட்டம் கட்டியும், சந்தன மாலை அணிவித்தும், நினைவு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    1
    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் 2026ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதுபெற்ற நல்லாசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது...!நல்லாசிரியர்களுக்கு பரிவட்டம் கட்டி பாராட்டு தெரிவிக்கப்பட்டது...!

2026ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதுபெற்ற விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 11 நல்லாசிரியர்களுக்கு பாராட்டு விழா வத்திராயிருப்பில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. 
கூட்டெழுத்து காலாண்டிதழ் சார்பாக நடைபெற்ற இவ்விழாவில் கல்வியாளர்கள் பலரும் கலந்துகொண்டு நல்லாசிரியர்களை பாராட்டி பேசினர்.  இதனை தொடர்ந்து  நல்லாசிரியர் விருது பெற்ற 11 ஆசிரியர்களை கௌவரவிக்கும் விதமாக மேடையில் வைத்து அவர்களுக்கு  பரிவட்டம் கட்டியும், சந்தன மாலை அணிவித்தும், நினைவு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    9 hrs ago
  • வேலுநாச்சியார் அரண்மனையில் மதுக்கடைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு– “யார் அனுமதி கொடுத்தது?” என நீதிபதிகள் கேள்வி சிவகங்கை மாவட்டத்தின் வரலாற்றுச் சின்னமான வீரமங்கை வேலுநாச்சியார் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றம் மற்றும் மதுக்கடைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனுவில், வேலுநாச்சியார் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ‘கிங்ஸ் ரிக்ரியேஷன் கிளப்’ மற்றும் அதனுடன் தொடர்புடைய மதுக்கடை, அரண்மனையின் வரலாற்று மற்றும் பாரம்பரிய முக்கியத்துவத்தை பாதிப்பதாகக் கூறி, அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சி.விகார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “வீரமங்கை வேலுநாச்சியாரின் அரண்மனை வீரத்தின் அடையாளமாக திகழ்கிறது. அத்தகைய இடத்தில் மனமகிழ் மன்றம் நடத்த யார் அனுமதி வழங்கியது?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்றும், மனமகிழ் மன்றத்தின் செயல்பாட்டிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வேலுநாச்சியார் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வந்த கிளப்புக்கு நீதிமன்றம் தடை விதித்திருப்பது சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    1
    வேலுநாச்சியார் அரண்மனையில் மதுக்கடைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு– “யார் அனுமதி கொடுத்தது?” என நீதிபதிகள் கேள்வி
சிவகங்கை மாவட்டத்தின் வரலாற்றுச் சின்னமான வீரமங்கை வேலுநாச்சியார் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றம் மற்றும் மதுக்கடைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனுவில், வேலுநாச்சியார் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ‘கிங்ஸ் ரிக்ரியேஷன் கிளப்’ மற்றும் அதனுடன் தொடர்புடைய மதுக்கடை, அரண்மனையின் வரலாற்று மற்றும் பாரம்பரிய முக்கியத்துவத்தை பாதிப்பதாகக் கூறி, அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சி.விகார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “வீரமங்கை வேலுநாச்சியாரின் அரண்மனை வீரத்தின் அடையாளமாக திகழ்கிறது. அத்தகைய இடத்தில் மனமகிழ் மன்றம் நடத்த யார் அனுமதி வழங்கியது?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்றும், மனமகிழ் மன்றத்தின் செயல்பாட்டிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வேலுநாச்சியார் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வந்த கிளப்புக்கு நீதிமன்றம் தடை விதித்திருப்பது சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    20 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.