அருப்புக்கோட்டை வழியாக தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடிக்கு செல்லும் வாகனங்களில் இளைஞர்கள் தொங்கியபடியும் முகம் சுளிக்கும் வகையில் கத்தியபடியும் அதிவேகமாக செல்வதால் பொதுமக்கள் கடும் அவதி காவல்துறை அறிவுறுத்தல் படி அருப்புக்கோட்டையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் சிரமம் அடைந்த வியாபாரிகள் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வாகனங்களில் செல்வது வழக்கம். இதில் விருதுநகர், சாத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வழியாகத்தான் பரமக்குடி செல்ல முடியும். இவ்வாறு வாகனங்களில் அருப்புக்கோட்டை வழியாக செல்லும் இளைஞர்கள் வாகனங்களில் தொங்கியபடியும் அதிக அளவு கூச்சலிட்டு கொண்டும் பொது மக்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் கத்தியபடியும் சென்றனர். வாகனங்களில் கதவைத் திறந்து அதில் தொங்கியபடி ஆபத்தான வகையில் இளைஞர்கள் பயணம் செய்வது பொதுமக்கள் இடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு செல்லும் வழியில் உள்ள அனைத்து கடைகளையும் காவல்துறையினர் மூட அறிவுறுத்தி உள்ளதால் வணிகர்களும் சிரமம் அடைந்துள்ளனர். போலீசாரின் அறிவுறுத்தல் படி அருப்புக்கோட்டையில் காந்திநகர், திருச்சுழி ரோடு, ஆத்திபட்டி பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. தொடர்ந்து இதுபோன்ற தலைவர்களின் நினைவிடத்திற்கு வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் முக சுழிப்பை ஏற்படுத்தும் வகையிலும் செல்வதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

- புதிய பயணிகள் நிழற்குடையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த மேயர். மதுரை மாநகராட்சி 85-வது வார்டு தவுட்டு சந்தை பேருந்து நிறுத்தத்தில் மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் முத்துமாரி ஜெயக்குமார் தலைமையில் மாமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிய நிழற்குடையினன பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேயர் (பொறுப்பு) நாகராஜன் அவர்கள் இன்று (செப்.11) காலை திறந்து வைத்தார். அருகில் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா, பகுதி செயலாளர் ஜோசப் தனிஸ்லாஸ்,வட்டச் செயலாளர்கள் முருகன், நாட்டாமை ஜெயக்குமார், செல்வகுமரன், பால் கடை கிருஷ்ணன், தயிர்கடை சங்கர் ஆசீர்வாதம்,சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.1
- காரைக்குடியில் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம். தொடர் விடுமுறையால் வாடிக்கையாளர்கள் பாதிக்கும் அபாயம். வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை, ஓய்வூதிய திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆரிய பவன் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஸ்டேட் வங்கி முன்பு ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இன்று நடைபெறும் போராட்டத்தைத் தொடர்ந்து, நாளை வார விடுமுறை தொடங்குகிறது. அதன்பின்னர் விநாயகர் சதுர்த்தி விடுமுறையும் வருவதால், தொடர் விடுமுறை காரணமாக வாடிக்கையாளர்களின் காசோலை உள்ளிட்ட வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், இந்த தொடர் விடுமுறையால் ஏடிஎம் சேவைகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனியார் வங்கி ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.1
- பள்ளி மாணவர்களுக்கு வழங்கக்கூடிய உணவு தரம் குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு காமராஜ் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தொடர்பாக முன்னேற்பாடு பணிகளை மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்தனர் தேனி மாவட்டம் தலைநகரம் நகராட்சி சமுதாய சமையல் கூடத்தில் பெருந்தலைவர் காமராஜ் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தொடர்பாக முன்னோட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ் மற்றும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டனர் அதனைத் தொடர்ந்து தேனி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொடுவிலார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் காமராஜ் காலை உணவு திட்டம் விரிவாக்கம் தொடர்பாக பள்ளிக்குச் சென்று அங்கு மாணவர்களை வழங்கக்கூடிய உணவு தரம் குறித்து சாப்பிட்டு பார்த்து ஆய்வு மேற்கொண்டனர் மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கக்கூடிய உணவு தரமான முறையில் வழங்க வேண்டும் அதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் குறித்து அறிவுறுத்தினர் இந்த ஆய்வில் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்1
- TNEB SE அலுவலகம் முன் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேனி கிளை சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் தேனி NRT சாலையில் உள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேனி கிளை சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார் திட்ட செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார் இந்த ஆர்ப்பாட்டத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், ஒப்பந்த முறையில் பணியமர்த்தும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சந்தன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேனி கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்4
- தம்பி விஜய் நீங்க சொன்னது உண்மைதான் நூலகத்துல எல்லாம் இருக்கு போய் முழுசா படிங்க1
- சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாளில் திருப்பத்தூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திறக்காததால் பயணிகள் அதிர்ச்சி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாளில் திருப்பத்தூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திறக்கவில்லை. ஓட்டுநர்-நடத்துனர் முயற்சி தோல்வியடைந்ததால் பள்ளி மாணவர்கள் ஜன்னல் வழியாக இறங்கினர். பெண் பயணிகள் பயத்துடன் நீண்ட நேரம் பேருந்தில் காத்திருந்தனர். பணிமனை பணியாளர் வந்து கதவைத் திறந்தபின் பயணிகள் நிம்மதியுடன் இறங்கினர்.1
- விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் 2026ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதுபெற்ற நல்லாசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது...!நல்லாசிரியர்களுக்கு பரிவட்டம் கட்டி பாராட்டு தெரிவிக்கப்பட்டது...! 2026ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருதுபெற்ற விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 11 நல்லாசிரியர்களுக்கு பாராட்டு விழா வத்திராயிருப்பில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. கூட்டெழுத்து காலாண்டிதழ் சார்பாக நடைபெற்ற இவ்விழாவில் கல்வியாளர்கள் பலரும் கலந்துகொண்டு நல்லாசிரியர்களை பாராட்டி பேசினர். இதனை தொடர்ந்து நல்லாசிரியர் விருது பெற்ற 11 ஆசிரியர்களை கௌவரவிக்கும் விதமாக மேடையில் வைத்து அவர்களுக்கு பரிவட்டம் கட்டியும், சந்தன மாலை அணிவித்தும், நினைவு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.1
- மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர், காவல் ஆணையர் ஆய்வு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன், ஆகியோர் இன்று (11.09.2026) காலை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் குடமுழுக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். உடன் மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் உடன் இருந்தார்.1
- வேலுநாச்சியார் அரண்மனையில் மதுக்கடைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு– “யார் அனுமதி கொடுத்தது?” என நீதிபதிகள் கேள்வி சிவகங்கை மாவட்டத்தின் வரலாற்றுச் சின்னமான வீரமங்கை வேலுநாச்சியார் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றம் மற்றும் மதுக்கடைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனுவில், வேலுநாச்சியார் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ‘கிங்ஸ் ரிக்ரியேஷன் கிளப்’ மற்றும் அதனுடன் தொடர்புடைய மதுக்கடை, அரண்மனையின் வரலாற்று மற்றும் பாரம்பரிய முக்கியத்துவத்தை பாதிப்பதாகக் கூறி, அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சி.விகார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “வீரமங்கை வேலுநாச்சியாரின் அரண்மனை வீரத்தின் அடையாளமாக திகழ்கிறது. அத்தகைய இடத்தில் மனமகிழ் மன்றம் நடத்த யார் அனுமதி வழங்கியது?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்றும், மனமகிழ் மன்றத்தின் செயல்பாட்டிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வேலுநாச்சியார் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வந்த கிளப்புக்கு நீதிமன்றம் தடை விதித்திருப்பது சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1