logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தம்பி விஜய் நீங்க சொன்னது உண்மைதான் நூலகத்துல எல்லாம் இருக்கு போய் முழுசா படிங்க

1 day ago
user_மா.கணேஷ்
மா.கணேஷ்
Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
1 day ago

தம்பி விஜய் நீங்க சொன்னது உண்மைதான் நூலகத்துல எல்லாம் இருக்கு போய் முழுசா படிங்க

More news from தமிழ்நாடு and nearby areas
  • உயர் கல்வி சட்ட திருத்த மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடியில், நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
    1
    உயர் கல்வி சட்ட திருத்த மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடியில், நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது.
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Local News Reporter ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    17 min ago
  • தூத்துக்குடியில் சமூக நல திட்டங்கள் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய அமைச்சர் தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், திருமண நிதியுதவி, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், திருநங்கைகள் நலத்திட்டம், மகளிர் தங்கும் விடுதி, முதியோர் இல்லங்கள், அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு, காலிப் பணியிடங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆகியன குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். அப்போது, பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டப் பயன்கள் முழுமையாகச் சென்றடையும் வகையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் திறம்பட பணியாற்ற வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து, முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000 மதிப்பிலான வைப்பு தொகைக்கான ரசீதுகளை அமைச்சர் வழங்கினார். நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் அனுசியா, மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் காமாட்சி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) (பொ) சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
    1
    தூத்துக்குடியில் சமூக நல திட்டங்கள் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்திய அமைச்சர் 
தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு அமைச்சர் கு.ஜெகதீஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், திருமண நிதியுதவி, பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், திருநங்கைகள் நலத்திட்டம், மகளிர் தங்கும் விடுதி, முதியோர் இல்லங்கள், அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு, காலிப் பணியிடங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஆகியன குறித்து  அமைச்சர் கேட்டறிந்தார்.
அப்போது, பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டப் பயன்கள் முழுமையாகச் சென்றடையும் வகையில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் திறம்பட பணியாற்ற வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000 மதிப்பிலான வைப்பு தொகைக்கான ரசீதுகளை அமைச்சர் வழங்கினார்.
நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், மாவட்ட சமூக நல அலுவலர் பிரேமலதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் அனுசியா, மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர் காமாட்சி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) (பொ) சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆறுமுகநேரி இந்து முன்னணி சார்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி ஆறுமுகனேரி நகர இந்து முன்னணியும் இணைந்து நடத்தும் மாபெரும் இந்திய எழுச்சி திருவிழா 🙏
    3
    விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆறுமுகநேரி இந்து முன்னணி சார்பாக 
தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி ஆறுமுகனேரி நகர இந்து முன்னணியும்  இணைந்து நடத்தும் மாபெரும் இந்திய எழுச்சி திருவிழா 🙏
    user_Jegan
    Jegan
    திருச்செந்தூர், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    32 min ago
  • விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கடந்த மாதம் முதல்வரால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவில் நிரந்தர மின்சார வசதி இல்லாததால் மின்வெட்டு ஏற்படும் நேரமெல்லாம் நோயாளிகள் இருளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது... சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.32.65 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களை கொண்ட ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் தாய் சேய் நலப்பிரிவு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய நவீன சிகிச்சை பிரிவு கட்டிடத்தை தமிழக முதல்வர் விஜய் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி காணொளி காட்சி மூலமாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். ரயில்வே தண்டவாளம் அருகில் புதிய அரசு மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளதால், ரயில்வே நிர்வாகத்தில் முறைப்படி அனுமதி வாங்க முடியாமல் இந்த கட்டிடத்திற்கு கட்டிட நிறைவு சான்றிதழ் பெறப்படாமலும் புதிய மின் இணைப்பு கொடுக்கப்படாமலும் அவசரகதியில் திறப்பு விழா நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 6 தளங்களைக் கொண்ட இந்த சிகிச்சை மையக் கட்டிடத்தில் தரைதளம் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகிறது. தரை தளத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ரத்த சுத்திகரிப்பு மையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய கட்டிடத்திற்கு தனி மின் இணைப்பு வழங்கப்படாமல் ஏற்கனவே உள்ள மின் இணைப்பை பயன்படுத்தி வருவதால் மின்வெட்டு ஏற்படும் சமயங்களில் புதிய நவீன சிகிச்சை மையத்திற்கு ஜெனரேட்டரை பயன்படுத்த முடியாமல் மின்சாரம் இன்றி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சிகிச்சையில் நோயாளிகள் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் இருள் சூழ்ந்த சிகிச்சை மையத்தில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் முன்பதிவு செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவிற்கு தனியாக நிரந்தர மின் இணைப்பு பெற்ற பின்னர் அனைத்து சிகிச்சை பிரிவுகளையும் செயல்படுத்தி சிகிச்சை பெறும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கடந்த மாதம் முதல்வரால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவில் நிரந்தர மின்சார வசதி இல்லாததால் மின்வெட்டு ஏற்படும் நேரமெல்லாம் நோயாளிகள் இருளில் தவிக்கும்  நிலை ஏற்பட்டுள்ளது...
சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.32.65 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களை கொண்ட ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் தாய் சேய் நலப்பிரிவு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய நவீன சிகிச்சை பிரிவு கட்டிடத்தை தமிழக முதல்வர் விஜய்  கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி காணொளி காட்சி மூலமாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். 
ரயில்வே தண்டவாளம் அருகில் புதிய அரசு மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளதால், ரயில்வே நிர்வாகத்தில் முறைப்படி அனுமதி வாங்க முடியாமல்  இந்த கட்டிடத்திற்கு கட்டிட நிறைவு சான்றிதழ் பெறப்படாமலும் புதிய மின் இணைப்பு கொடுக்கப்படாமலும் அவசரகதியில் திறப்பு விழா நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 6 தளங்களைக் கொண்ட இந்த சிகிச்சை மையக் கட்டிடத்தில் தரைதளம் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகிறது. தரை தளத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ரத்த சுத்திகரிப்பு மையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. 
இந்நிலையில் புதிய கட்டிடத்திற்கு தனி மின் இணைப்பு வழங்கப்படாமல் ஏற்கனவே உள்ள மின் இணைப்பை பயன்படுத்தி வருவதால் மின்வெட்டு ஏற்படும் சமயங்களில் புதிய நவீன சிகிச்சை மையத்திற்கு ஜெனரேட்டரை பயன்படுத்த முடியாமல் மின்சாரம் இன்றி  இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சிகிச்சையில் நோயாளிகள் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் இருள் சூழ்ந்த சிகிச்சை மையத்தில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் முன்பதிவு செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 
எனவே ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவிற்கு தனியாக நிரந்தர மின் இணைப்பு பெற்ற பின்னர் அனைத்து சிகிச்சை பிரிவுகளையும் செயல்படுத்தி சிகிச்சை பெறும் நோயாளிகளின் பாதுகாப்பை  உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    50 min ago
  • தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து பாவூர்சத்திரம் செல்லும் ரோட்டில் குருங்காவனத்தில் சிற்றாறு குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் உள்ள இரும்பு ராடுகள் பெயர்ந்து வாகனங்களின் டயர்கள் மற்றும் பாதசாரிகளின் பாதங்களை சேதப்படுத்தி வருகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    1
    தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து பாவூர்சத்திரம் செல்லும் ரோட்டில் குருங்காவனத்தில் சிற்றாறு குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தின் உள்ள இரும்பு ராடுகள் பெயர்ந்து வாகனங்களின் டயர்கள் மற்றும் பாதசாரிகளின் பாதங்களை சேதப்படுத்தி வருகிறது.  ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு சரி செய்ய வேண்டுமென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாயில் குப்பையை கொட்டும் திருவண்ணாமலை ஊராட்சி நிர்வாகம்  பொதுமக்கள் அதிருப்தி  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை கண்மாயில் கொட்டி வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் பொட்டல்குளம் குருக்கள்குளம் கண்மாய் உள்ளது. 36 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் மூலம் 32 ஹெக்டர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கண்மாய் பாசன பரப்பு பெரும்பாலும் குடியிருப்புகளாக மாறி ஶ்ரீவில்லிபுத்தூர் நகரின் விரிவாக்க பகுதியாக உள்ளது.  ஶ்ரீவில்லிபுத்தூர் நகரின் விரிவாக்க பகுதிகளான இந்திரா நகர், அன்னை சத்யா நகர், மாதா நகர், வள்ளுவர் நகர் ஆகியவை திருவண்ணாமலை ஊராட்சியில் உள்ளன. மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபங்கள், வணிக கடைகள் பெரும்பாலும் திருவண்ணாமலை ஊராட்சியில் வருகிறது. இப்பகுதியில் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பையை ஊராட்சி நிர்வாகம் பொட்டல்குளம் குருக்கள்குளம் கண்மாயில் கொட்டி வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதால் கண்மாய் நீர் மாசடைவதுடன், தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. நீர்நிலையை பாதுகாக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகமே குப்பையை கண்மாயில் கொட்டி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கண்மாயை குப்பை கொட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை
    1
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாயில் குப்பையை கொட்டும் திருவண்ணாமலை ஊராட்சி நிர்வாகம் 

பொதுமக்கள் அதிருப்தி 


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை கண்மாயில் கொட்டி வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் பொட்டல்குளம் குருக்கள்குளம் கண்மாய் உள்ளது. 36 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் மூலம் 32 ஹெக்டர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கண்மாய் பாசன பரப்பு பெரும்பாலும் குடியிருப்புகளாக மாறி ஶ்ரீவில்லிபுத்தூர் நகரின் விரிவாக்க பகுதியாக உள்ளது. 
ஶ்ரீவில்லிபுத்தூர் நகரின் விரிவாக்க பகுதிகளான இந்திரா நகர், அன்னை சத்யா நகர், மாதா நகர், வள்ளுவர் நகர் ஆகியவை திருவண்ணாமலை ஊராட்சியில் உள்ளன. மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபங்கள், வணிக கடைகள் பெரும்பாலும் திருவண்ணாமலை ஊராட்சியில் வருகிறது. இப்பகுதியில் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பையை ஊராட்சி நிர்வாகம் பொட்டல்குளம் குருக்கள்குளம் கண்மாயில் கொட்டி வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதால் கண்மாய் நீர் மாசடைவதுடன், தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. நீர்நிலையை பாதுகாக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகமே குப்பையை கண்மாயில் கொட்டி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கண்மாயை குப்பை கொட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை
    user_Prabakaran Praba
    Prabakaran Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    22 hrs ago
  • மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே திரையரங்கில் தீ விபத்து. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே மேல கோபுர தெருவில் உள்ள பழமையான சென்ட்ரல் திரையரங்கம் இன்று (செப்.12) இரவு 8 மணி அளவில் திடீரென தீ பிடித்தது. இந்த தியேட்டரில் கடந்த சில வருடங்களாக திரைப்படங்கள் திரையிடுவது இல்லை. இருப்பினும் திரையரங்கு வளாகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்துமிடமாக செயல்பட்டு வந்துள்ளது . இந்நிலையில் இன்று இரவு 8 மணி அளவில் திரையங்கில் உள்ளே திடீரென தீ விபத்து ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் ஏதும் தெரியவில்லை. வளாகத்தில் இருந்த கார்கள் அப்புறப்பட்டு வருகின்றன. மேலும் தியேட்டர் உள்ளே அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் 15 பேருக்கு மேல் தங்கள் கடை பொருட்களை குடோன் போல் வைத்து பொருட்களை எடுத்து வந்துள்ளனர். 4 க்கும் மேற்பட்ட மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திரையரங்கு உள்ளே தீ பிடித்து எரிவதால் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
    1
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே திரையரங்கில் தீ விபத்து. 
மதுரை  மீனாட்சி அம்மன் கோவில் அருகே மேல கோபுர தெருவில்  உள்ள பழமையான  சென்ட்ரல் திரையரங்கம் இன்று (செப்.12) இரவு 8 மணி அளவில் திடீரென தீ பிடித்தது. இந்த தியேட்டரில் கடந்த சில வருடங்களாக திரைப்படங்கள் திரையிடுவது இல்லை. இருப்பினும் திரையரங்கு வளாகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்துமிடமாக செயல்பட்டு வந்துள்ளது . இந்நிலையில் இன்று இரவு 8 மணி அளவில் திரையங்கில் உள்ளே திடீரென தீ விபத்து ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் ஏதும் தெரியவில்லை. வளாகத்தில் இருந்த கார்கள் அப்புறப்பட்டு வருகின்றன. மேலும்  தியேட்டர் உள்ளே அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் 15 பேருக்கு மேல் தங்கள் கடை பொருட்களை குடோன் போல் வைத்து பொருட்களை எடுத்து வந்துள்ளனர். 4 க்கும் மேற்பட்ட மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திரையரங்கு உள்ளே தீ பிடித்து எரிவதால் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    51 min ago
  • பாரதியார் இம்மானுவேல் சேகரனார் நினைவு நாள் - திமுகவினர் அஞ்சலி தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இம்மானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார் இதுபோல் மகாகவி பாரதியாரின் 105 வந்து நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் புகைப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது தியாகி இம்மானுவேல் சேகரனின் 69 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இம்மானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த தியாகி இம்மானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் ஏராளமான திமுகவினர் மலர் மரியாதை செலுத்தினார்கள் இதுபோல் மகாகவி பாரதியாரின் 105வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திரு உருவப்படத்திற்கும் மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் மாநகராட்சி மண்டல தலைவர் பால குருசாமி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    1
    பாரதியார் இம்மானுவேல் சேகரனார் நினைவு நாள் - திமுகவினர் அஞ்சலி 
தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இம்மானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு   முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன்  தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார் இதுபோல் மகாகவி பாரதியாரின் 105 வந்து நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் புகைப்படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது
தியாகி இம்மானுவேல் சேகரனின் 69 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் இம்மானுவேல் சேகரன் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் வைக்கப்பட்டிருந்த தியாகி இம்மானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு முன்னாள்  அமைச்சர்  கீதா ஜீவன் தலைமையில்  ஏராளமான திமுகவினர் மலர் மரியாதை செலுத்தினார்கள் இதுபோல் மகாகவி பாரதியாரின் 105வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திரு உருவப்படத்திற்கும் மரியாதை செலுத்தப்பட்டது 
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன்  மாநகராட்சி மண்டல தலைவர் பால குருசாமி 
மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    user_Mithun
    Mithun
    City Star தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.