logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

வேலுநாச்சியார் அரண்மனையில் மதுக்கடைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு– “யார் அனுமதி கொடுத்தது?” என நீதிபதிகள் கேள்வி சிவகங்கை மாவட்டத்தின் வரலாற்றுச் சின்னமான வீரமங்கை வேலுநாச்சியார் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றம் மற்றும் மதுக்கடைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனுவில், வேலுநாச்சியார் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ‘கிங்ஸ் ரிக்ரியேஷன் கிளப்’ மற்றும் அதனுடன் தொடர்புடைய மதுக்கடை, அரண்மனையின் வரலாற்று மற்றும் பாரம்பரிய முக்கியத்துவத்தை பாதிப்பதாகக் கூறி, அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சி.விகார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “வீரமங்கை வேலுநாச்சியாரின் அரண்மனை வீரத்தின் அடையாளமாக திகழ்கிறது. அத்தகைய இடத்தில் மனமகிழ் மன்றம் நடத்த யார் அனுமதி வழங்கியது?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்றும், மனமகிழ் மன்றத்தின் செயல்பாட்டிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வேலுநாச்சியார் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வந்த கிளப்புக்கு நீதிமன்றம் தடை விதித்திருப்பது சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

21 hrs ago
user_Devakottaigani news
Devakottaigani news
சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
21 hrs ago

வேலுநாச்சியார் அரண்மனையில் மதுக்கடைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு– “யார் அனுமதி கொடுத்தது?” என நீதிபதிகள் கேள்வி சிவகங்கை மாவட்டத்தின் வரலாற்றுச் சின்னமான வீரமங்கை வேலுநாச்சியார் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றம் மற்றும் மதுக்கடைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனுவில், வேலுநாச்சியார் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ‘கிங்ஸ் ரிக்ரியேஷன் கிளப்’ மற்றும் அதனுடன் தொடர்புடைய மதுக்கடை, அரண்மனையின் வரலாற்று மற்றும் பாரம்பரிய முக்கியத்துவத்தை பாதிப்பதாகக் கூறி, அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சி.விகார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “வீரமங்கை வேலுநாச்சியாரின் அரண்மனை வீரத்தின் அடையாளமாக திகழ்கிறது. அத்தகைய இடத்தில் மனமகிழ் மன்றம் நடத்த யார் அனுமதி வழங்கியது?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்றும், மனமகிழ் மன்றத்தின் செயல்பாட்டிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வேலுநாச்சியார் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வந்த கிளப்புக்கு நீதிமன்றம் தடை விதித்திருப்பது சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளாரா முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளாரா என்ற விபரத்தினை அவர் தமிழகம் வந்த பின்னர் தெரிவிக்க வேண்டும். சிவகங்கையில் பாஜக தமிழக தலைவர் நைனார் நாகேந்திரன் பேட்டி சிவகங்கையில் பாஜக நிர்வாகி இல்ல நிகழ்வில் கலந்து கொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது, லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளாரா முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளாரா என்ற விபரத்தினை அவர் தமிழகம் வந்த பின்னர் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் மேலும் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
    1
    இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். 
லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளாரா முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளாரா என்ற விபரத்தினை அவர் தமிழகம் வந்த பின்னர் தெரிவிக்க வேண்டும். சிவகங்கையில் பாஜக தமிழக தலைவர் நைனார் நாகேந்திரன் பேட்டி

சிவகங்கையில் பாஜக நிர்வாகி இல்ல நிகழ்வில் கலந்து கொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது, லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளாரா முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளாரா என்ற விபரத்தினை அவர் தமிழகம் வந்த பின்னர் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் மேலும் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாளில் திருப்பத்தூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திறக்காததால் பயணிகள் அதிர்ச்சி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாளில் திருப்பத்தூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திறக்கவில்லை. ஓட்டுநர்-நடத்துனர் முயற்சி தோல்வியடைந்ததால் பள்ளி மாணவர்கள் ஜன்னல் வழியாக இறங்கினர். பெண் பயணிகள் பயத்துடன் நீண்ட நேரம் பேருந்தில் காத்திருந்தனர். பணிமனை பணியாளர் வந்து கதவைத் திறந்தபின் பயணிகள் நிம்மதியுடன் இறங்கினர்.
    1
    சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாளில் திருப்பத்தூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திறக்காததால் பயணிகள் அதிர்ச்சி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாளில் திருப்பத்தூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திறக்கவில்லை. ஓட்டுநர்-நடத்துனர் முயற்சி தோல்வியடைந்ததால் பள்ளி மாணவர்கள் ஜன்னல் வழியாக இறங்கினர். பெண் பயணிகள் பயத்துடன் நீண்ட நேரம் பேருந்தில் காத்திருந்தனர். பணிமனை பணியாளர் வந்து கதவைத் திறந்தபின் பயணிகள் நிம்மதியுடன் இறங்கினர்.
    user_ABDUL SALAM
    ABDUL SALAM
    Photographer சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு•
    1 hr ago
  • மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே திரையரங்கில் தீ விபத்து. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே மேல கோபுர தெருவில் உள்ள பழமையான சென்ட்ரல் திரையரங்கம் இன்று (செப்.12) இரவு 8 மணி அளவில் திடீரென தீ பிடித்தது. இந்த தியேட்டரில் கடந்த சில வருடங்களாக திரைப்படங்கள் திரையிடுவது இல்லை. இருப்பினும் திரையரங்கு வளாகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்துமிடமாக செயல்பட்டு வந்துள்ளது . இந்நிலையில் இன்று இரவு 8 மணி அளவில் திரையங்கில் உள்ளே திடீரென தீ விபத்து ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் ஏதும் தெரியவில்லை. வளாகத்தில் இருந்த கார்கள் அப்புறப்பட்டு வருகின்றன. மேலும் தியேட்டர் உள்ளே அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் 15 பேருக்கு மேல் தங்கள் கடை பொருட்களை குடோன் போல் வைத்து பொருட்களை எடுத்து வந்துள்ளனர். 4 க்கும் மேற்பட்ட மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திரையரங்கு உள்ளே தீ பிடித்து எரிவதால் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
    1
    மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே திரையரங்கில் தீ விபத்து. 
மதுரை  மீனாட்சி அம்மன் கோவில் அருகே மேல கோபுர தெருவில்  உள்ள பழமையான  சென்ட்ரல் திரையரங்கம் இன்று (செப்.12) இரவு 8 மணி அளவில் திடீரென தீ பிடித்தது. இந்த தியேட்டரில் கடந்த சில வருடங்களாக திரைப்படங்கள் திரையிடுவது இல்லை. இருப்பினும் திரையரங்கு வளாகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்துமிடமாக செயல்பட்டு வந்துள்ளது . இந்நிலையில் இன்று இரவு 8 மணி அளவில் திரையங்கில் உள்ளே திடீரென தீ விபத்து ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் ஏதும் தெரியவில்லை. வளாகத்தில் இருந்த கார்கள் அப்புறப்பட்டு வருகின்றன. மேலும்  தியேட்டர் உள்ளே அப்பகுதியில் உள்ள கடைக்காரர்கள் 15 பேருக்கு மேல் தங்கள் கடை பொருட்களை குடோன் போல் வைத்து பொருட்களை எடுத்து வந்துள்ளனர். 4 க்கும் மேற்பட்ட மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திரையரங்கு உள்ளே தீ பிடித்து எரிவதால் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    50 min ago
  • பொன்னமராவதி பட்டம் வரத்தான் சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊரின் காவல் தெய்வமாக விளங்கும் அருள்மிகு பட்டம் வரத்தான் சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு பட்டமரத்தான் சுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன
    1
    பொன்னமராவதி பட்டம் வரத்தான் சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊரின் காவல் தெய்வமாக விளங்கும் அருள்மிகு பட்டம் வரத்தான் சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு பட்டமரத்தான் சுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன
    user_Kavin
    Kavin
    பொன்னமராவதி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    1 hr ago
  • ஐக்கிய வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) சார்பில் நாடு தழுவிய அளவிலான ஒரு நாள் வங்கி வேலைநிறுத்தப் போராட்டம் திருவாடானை பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ​வங்கிகள் சங்கம் (IBA) சார்பில் ​5 நாள் வேலை ஒப்பந்தத்தை அமல்படுத்துவது. காலியாக உள்ள எழுத்தர் (Clerk) மற்றும் துணைப் பணியாளர் (Sub-staff) பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ​ஓய்வூதியக் கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதனால் வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டனர்
    1
    ஐக்கிய வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) சார்பில் நாடு தழுவிய அளவிலான ஒரு நாள் வங்கி வேலைநிறுத்தப் போராட்டம்
திருவாடானை பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 
​வங்கிகள் சங்கம் (IBA) சார்பில்
​5 நாள் வேலை ஒப்பந்தத்தை அமல்படுத்துவது.  
காலியாக உள்ள எழுத்தர் (Clerk) மற்றும் துணைப் பணியாளர் (Sub-staff) பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.  
​ஓய்வூதியக் கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதனால் வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டனர்
    user_அனல் ஆனந்த்
    அனல் ஆனந்த்
    திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    10 hrs ago
  • மதுரை கே.கே.நகரில் தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு சாந்தோம் கல்வி தொண்டு அறக்கட்டளையின் பயிற்சி மாணவர்கள் இணைந்து தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர் இந்த பேரணியை அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் சைலேந்திர சிங் மற்றும் கண் மருத்துவர் சிந்துஜா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர் இந்த பேரணி கண்தானத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்றது இந்தப் பேரணியில் கல்லூரி மாணவிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில் “கண்தானம் செய்வோம் – பார்வையற்றோரின் வாழ்க்கையில் ஒளியேற்றுவோம்” உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பங்கேற்பாளர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பேசிய கண் மருத்துவர் சிந்துஜா அவர்கள் கூறியதாவது கண்களை தானமாக வழங்குவதன் மூலம் பார்வையிழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்கச் செய்ய முடியும் என்பதையும், கண்தானம் குறித்த தவறான நம்பிக்கைகளை அகற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்றார் அதனைத் தொடர்ந்து பேசிய கண் மருத்துவர் சைலேந்திர சிங் அவர்கள் கூறியதாவது தமிழக அளவில் பார்வை குறைபாடு உள்ள நபர்கள் அதிக அளவில் உள்ளனர் ஆனால் கருவிழி தானம் செய்ய முன்வருவோர் குறைவாக உள்ளனர் ஒருவர் இறந்த பின்னர் அவரது கண்களை தானமாக வழங்குவதன் மூலம் இரு பார்வையற்ற நபர்களுக்கு பார்வை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதால், பொதுமக்கள் அனைவரும் கண்தானம் செய்ய முன்வந்தால் கண்பார்வை இல்லாத தமிழகத்தை உருவாக்கலாம் என்று தெரிவித்தார் மாணவிகள் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணி, கண்தானத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் அமைந்தது. கண்தானம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவதன் மூலம் அதிகமானோர் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் அகர்வால் கண் மருத்துவமனை பொது மேலாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் லட்சுமணன் மற்றும் ராஜேஷ் உள்ளிட்ட மருத்துவமனை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
    1
    மதுரை கே.கே.நகரில் தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது

மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு சாந்தோம் கல்வி தொண்டு அறக்கட்டளையின் பயிற்சி மாணவர்கள் இணைந்து தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர் இந்த பேரணியை அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் சைலேந்திர சிங் மற்றும் கண் மருத்துவர் சிந்துஜா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்
இந்த பேரணி கண்தானத்தின் அவசியம் குறித்து  பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்றது இந்தப் பேரணியில் கல்லூரி மாணவிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 
பேரணியில் “கண்தானம் செய்வோம் – பார்வையற்றோரின் வாழ்க்கையில் ஒளியேற்றுவோம்” உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பங்கேற்பாளர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து பேசிய கண் மருத்துவர் சிந்துஜா அவர்கள் கூறியதாவது
கண்களை தானமாக வழங்குவதன் மூலம் பார்வையிழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்கச் செய்ய முடியும் என்பதையும், கண்தானம் குறித்த தவறான நம்பிக்கைகளை அகற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்றார் 
அதனைத் தொடர்ந்து பேசிய கண் மருத்துவர் சைலேந்திர சிங் அவர்கள் கூறியதாவது
தமிழக அளவில் பார்வை குறைபாடு உள்ள நபர்கள் அதிக அளவில் உள்ளனர் ஆனால் கருவிழி தானம் செய்ய முன்வருவோர் குறைவாக உள்ளனர் 
ஒருவர் இறந்த பின்னர் அவரது கண்களை தானமாக வழங்குவதன் மூலம் இரு பார்வையற்ற நபர்களுக்கு பார்வை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதால், பொதுமக்கள்  அனைவரும் கண்தானம் செய்ய முன்வந்தால் கண்பார்வை இல்லாத தமிழகத்தை உருவாக்கலாம் என்று தெரிவித்தார் 
மாணவிகள் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணி, கண்தானத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் அமைந்தது. கண்தானம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவதன் மூலம் அதிகமானோர் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் அகர்வால் கண் மருத்துவமனை பொது மேலாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் லட்சுமணன் மற்றும் ராஜேஷ் உள்ளிட்ட மருத்துவமனை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
    user_மதுரைக்காரன்
    மதுரைக்காரன்
    மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
    21 hrs ago
  • விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கடந்த மாதம் முதல்வரால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவில் நிரந்தர மின்சார வசதி இல்லாததால் மின்வெட்டு ஏற்படும் நேரமெல்லாம் நோயாளிகள் இருளில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது... சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.32.65 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களை கொண்ட ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் தாய் சேய் நலப்பிரிவு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய நவீன சிகிச்சை பிரிவு கட்டிடத்தை தமிழக முதல்வர் விஜய் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி காணொளி காட்சி மூலமாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். ரயில்வே தண்டவாளம் அருகில் புதிய அரசு மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளதால், ரயில்வே நிர்வாகத்தில் முறைப்படி அனுமதி வாங்க முடியாமல் இந்த கட்டிடத்திற்கு கட்டிட நிறைவு சான்றிதழ் பெறப்படாமலும் புதிய மின் இணைப்பு கொடுக்கப்படாமலும் அவசரகதியில் திறப்பு விழா நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 6 தளங்களைக் கொண்ட இந்த சிகிச்சை மையக் கட்டிடத்தில் தரைதளம் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகிறது. தரை தளத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ரத்த சுத்திகரிப்பு மையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிய கட்டிடத்திற்கு தனி மின் இணைப்பு வழங்கப்படாமல் ஏற்கனவே உள்ள மின் இணைப்பை பயன்படுத்தி வருவதால் மின்வெட்டு ஏற்படும் சமயங்களில் புதிய நவீன சிகிச்சை மையத்திற்கு ஜெனரேட்டரை பயன்படுத்த முடியாமல் மின்சாரம் இன்றி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சிகிச்சையில் நோயாளிகள் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் இருள் சூழ்ந்த சிகிச்சை மையத்தில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் முன்பதிவு செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவிற்கு தனியாக நிரந்தர மின் இணைப்பு பெற்ற பின்னர் அனைத்து சிகிச்சை பிரிவுகளையும் செயல்படுத்தி சிகிச்சை பெறும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கடந்த மாதம் முதல்வரால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்ட ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவில் நிரந்தர மின்சார வசதி இல்லாததால் மின்வெட்டு ஏற்படும் நேரமெல்லாம் நோயாளிகள் இருளில் தவிக்கும்  நிலை ஏற்பட்டுள்ளது...
சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.32.65 கோடி மதிப்பீட்டில் 6 தளங்களை கொண்ட ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் தாய் சேய் நலப்பிரிவு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய நவீன சிகிச்சை பிரிவு கட்டிடத்தை தமிழக முதல்வர் விஜய்  கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி காணொளி காட்சி மூலமாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். 
ரயில்வே தண்டவாளம் அருகில் புதிய அரசு மருத்துவமனை கட்டிடம் கட்டப்பட்டுள்ளதால், ரயில்வே நிர்வாகத்தில் முறைப்படி அனுமதி வாங்க முடியாமல்  இந்த கட்டிடத்திற்கு கட்டிட நிறைவு சான்றிதழ் பெறப்படாமலும் புதிய மின் இணைப்பு கொடுக்கப்படாமலும் அவசரகதியில் திறப்பு விழா நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 6 தளங்களைக் கொண்ட இந்த சிகிச்சை மையக் கட்டிடத்தில் தரைதளம் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகிறது. தரை தளத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ரத்த சுத்திகரிப்பு மையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது. 
இந்நிலையில் புதிய கட்டிடத்திற்கு தனி மின் இணைப்பு வழங்கப்படாமல் ஏற்கனவே உள்ள மின் இணைப்பை பயன்படுத்தி வருவதால் மின்வெட்டு ஏற்படும் சமயங்களில் புதிய நவீன சிகிச்சை மையத்திற்கு ஜெனரேட்டரை பயன்படுத்த முடியாமல் மின்சாரம் இன்றி  இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் சிகிச்சையில் நோயாளிகள் அச்சமடைந்து வருகின்றனர். மேலும் இருள் சூழ்ந்த சிகிச்சை மையத்தில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் முன்பதிவு செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 
எனவே ஒருங்கிணைந்த தீவிர சிகிச்சை பிரிவிற்கு தனியாக நிரந்தர மின் இணைப்பு பெற்ற பின்னர் அனைத்து சிகிச்சை பிரிவுகளையும் செயல்படுத்தி சிகிச்சை பெறும் நோயாளிகளின் பாதுகாப்பை  உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    49 min ago
  • காரைக்குடியில் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம். தொடர் விடுமுறையால் வாடிக்கையாளர்கள் பாதிக்கும் அபாயம். வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை, ஓய்வூதிய திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆரிய பவன் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஸ்டேட் வங்கி முன்பு ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இன்று நடைபெறும் போராட்டத்தைத் தொடர்ந்து, நாளை வார விடுமுறை தொடங்குகிறது. அதன்பின்னர் விநாயகர் சதுர்த்தி விடுமுறையும் வருவதால், தொடர் விடுமுறை காரணமாக வாடிக்கையாளர்களின் காசோலை உள்ளிட்ட வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், இந்த தொடர் விடுமுறையால் ஏடிஎம் சேவைகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனியார் வங்கி ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    1
    காரைக்குடியில் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம். தொடர் விடுமுறையால் வாடிக்கையாளர்கள் பாதிக்கும் அபாயம்.
வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை, ஓய்வூதிய திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆரிய பவன் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஸ்டேட் வங்கி முன்பு ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இன்று நடைபெறும் போராட்டத்தைத் தொடர்ந்து, நாளை வார விடுமுறை தொடங்குகிறது. அதன்பின்னர் விநாயகர் சதுர்த்தி விடுமுறையும் வருவதால், தொடர் விடுமுறை காரணமாக வாடிக்கையாளர்களின் காசோலை உள்ளிட்ட வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், இந்த தொடர் விடுமுறையால் ஏடிஎம் சேவைகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனியார் வங்கி ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.