காரைக்குடியில் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம். தொடர் விடுமுறையால் வாடிக்கையாளர்கள் பாதிக்கும் அபாயம். வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை, ஓய்வூதிய திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆரிய பவன் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஸ்டேட் வங்கி முன்பு ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இன்று நடைபெறும் போராட்டத்தைத் தொடர்ந்து, நாளை வார விடுமுறை தொடங்குகிறது. அதன்பின்னர் விநாயகர் சதுர்த்தி விடுமுறையும் வருவதால், தொடர் விடுமுறை காரணமாக வாடிக்கையாளர்களின் காசோலை உள்ளிட்ட வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், இந்த தொடர் விடுமுறையால் ஏடிஎம் சேவைகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனியார் வங்கி ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காரைக்குடியில் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம். தொடர் விடுமுறையால் வாடிக்கையாளர்கள் பாதிக்கும் அபாயம். வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை, ஓய்வூதிய திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆரிய பவன் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஸ்டேட் வங்கி முன்பு ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இன்று நடைபெறும் போராட்டத்தைத் தொடர்ந்து, நாளை வார விடுமுறை தொடங்குகிறது. அதன்பின்னர் விநாயகர் சதுர்த்தி விடுமுறையும் வருவதால், தொடர் விடுமுறை காரணமாக வாடிக்கையாளர்களின் காசோலை உள்ளிட்ட வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், இந்த தொடர் விடுமுறையால் ஏடிஎம் சேவைகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனியார் வங்கி ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- மறைந்த பட்டிமன்ற நடுவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த குவிந்த மக்கள். மதுரையில் ஞான ஒளிபுரம் பகுதியில் வசித்த பிரபல பட்டி மன்ற நடுவர், நடிகர் மற்றும் முன்னாள் தமிழ் பேராசிரியருமான சாலமன் பாப்பையா (90) அவர்கள் இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதியம் காலமானார். அன்னாரின் உடல் ஞான ஒளிபுரம் இல்லத்திற்கு இன்று மாலை 3.30 மணியளவில் கொண்டு வரப்பட்டது. நாளை (செப்.12) காலை உடல் தகனம் செய்யப்படும் என தெரிகிறது. இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். அன்னாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் அப் பகுதியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.1
- அரசு பள்ளி முன்பு ஆபத்தான பட்டுப்போன மரம் அகற்ற வேண்டும் என வேண்டுகோள் திருவாடானை தாலுகா ஆதியூர் அரசு தொடக்கப் பள்ளியின் நுழைவாயிலில் உள்ள பட்டுப்போன மரம் ஒன்று, மாணவர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த மரம் முழுமையாக காய்ந்து, இலைகள் உதிர்ந்து, கிளைகள் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. பள்ளியின் நுழைவாயிலிலேயே இந்த மரம் இருப்பதால், மாணவ, மாணவிகள் தினமும் அதன் அருகிலேயே கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எதிர்பாராதவிதமாக மரம் அல்லது அதன் கிளைகள் முறிந்து விழுந்தால், மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, அந்தப் பட்டுப்போன மரத்தை அகற்றி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியார்பயமாக்குவதை கண்டித்து தொமுசசார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய அரசின் தொழிலாளர் மக்கள் விரோத விவசாயிகளின் விரோத நடவடிக்கைகளை கண்டித்து புதுக்கோட்டை டி வி எஸ் கார்னர் அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு தொமுச சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் 300 மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசு கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினர்1
- தவெக மாநில கட்சி அங்கீகாரம் பிரியாணி வழங்கி புதுக்கோட்டையில் நிர்வாகிகள் கொண்டாட்டம் புதுக்கோட்டை உழவர் சந்தை அருகில், தமிழக வெற்றி கழகத்தை மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை வரவேற்கும் வகையிலும், தமிழக முதல்வர் விஜய் அவர்களின் நல்லாட்சி சிறப்பாக நடைபெற வேண்டியும், புதுக்கோட்டை மாவட்ட இளைஞரணி சார்பில் பி.ஆர். பிரவீன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கி கொண்டாடப்பட்டது. முன்னதாக தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி, 500 ஏழை, எளிய மக்களுக்கு சுடச்சுட பிரியாணி வழங்கப்பட்டது.17-வது வாரமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இளைஞரணி மாவட்ட நிர்வாகி தனசேகரன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சேட்டு, பி.ஆர். பிரவீன், நரிமேடு பிரபு மற்றும் பொறுப்பாளர்கள் சதீஷ், ரமேஷ், பி.ஆர். பிரபு, கோகுல், பிரவீன், வினோத், மணி, சுப்புராம், ஹரி, சேகர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு சுடச்சுட பிரியாணி வழங்கினர்.மேலும், தேர்தல் ஆணையத்தின் மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்ததை வரவேற்கும் வகையில் நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.1
- கந்தர்வகோட்டையில் தோழர் S.ராஜேந்திரன் படத்திறப்பு புகழஞ்சலி கூட்டம்.4
- வேலுநாச்சியார் அரண்மனையில் மதுக்கடைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு– “யார் அனுமதி கொடுத்தது?” என நீதிபதிகள் கேள்வி சிவகங்கை மாவட்டத்தின் வரலாற்றுச் சின்னமான வீரமங்கை வேலுநாச்சியார் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றம் மற்றும் மதுக்கடைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனுவில், வேலுநாச்சியார் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ‘கிங்ஸ் ரிக்ரியேஷன் கிளப்’ மற்றும் அதனுடன் தொடர்புடைய மதுக்கடை, அரண்மனையின் வரலாற்று மற்றும் பாரம்பரிய முக்கியத்துவத்தை பாதிப்பதாகக் கூறி, அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சி.விகார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “வீரமங்கை வேலுநாச்சியாரின் அரண்மனை வீரத்தின் அடையாளமாக திகழ்கிறது. அத்தகைய இடத்தில் மனமகிழ் மன்றம் நடத்த யார் அனுமதி வழங்கியது?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்றும், மனமகிழ் மன்றத்தின் செயல்பாட்டிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வேலுநாச்சியார் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வந்த கிளப்புக்கு நீதிமன்றம் தடை விதித்திருப்பது சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- புதிய பயணிகள் நிழற்குடையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த மேயர். மதுரை மாநகராட்சி 85-வது வார்டு தவுட்டு சந்தை பேருந்து நிறுத்தத்தில் மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் முத்துமாரி ஜெயக்குமார் தலைமையில் மாமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிய நிழற்குடையினன பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேயர் (பொறுப்பு) நாகராஜன் அவர்கள் இன்று (செப்.11) காலை திறந்து வைத்தார். அருகில் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா, பகுதி செயலாளர் ஜோசப் தனிஸ்லாஸ்,வட்டச் செயலாளர்கள் முருகன், நாட்டாமை ஜெயக்குமார், செல்வகுமரன், பால் கடை கிருஷ்ணன், தயிர்கடை சங்கர் ஆசீர்வாதம்,சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.1
- அருப்புக்கோட்டை வழியாக தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடிக்கு செல்லும் வாகனங்களில் இளைஞர்கள் தொங்கியபடியும் முகம் சுளிக்கும் வகையில் கத்தியபடியும் அதிவேகமாக செல்வதால் பொதுமக்கள் கடும் அவதி காவல்துறை அறிவுறுத்தல் படி அருப்புக்கோட்டையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் சிரமம் அடைந்த வியாபாரிகள் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வாகனங்களில் செல்வது வழக்கம். இதில் விருதுநகர், சாத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வழியாகத்தான் பரமக்குடி செல்ல முடியும். இவ்வாறு வாகனங்களில் அருப்புக்கோட்டை வழியாக செல்லும் இளைஞர்கள் வாகனங்களில் தொங்கியபடியும் அதிக அளவு கூச்சலிட்டு கொண்டும் பொது மக்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் கத்தியபடியும் சென்றனர். வாகனங்களில் கதவைத் திறந்து அதில் தொங்கியபடி ஆபத்தான வகையில் இளைஞர்கள் பயணம் செய்வது பொதுமக்கள் இடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு செல்லும் வழியில் உள்ள அனைத்து கடைகளையும் காவல்துறையினர் மூட அறிவுறுத்தி உள்ளதால் வணிகர்களும் சிரமம் அடைந்துள்ளனர். போலீசாரின் அறிவுறுத்தல் படி அருப்புக்கோட்டையில் காந்திநகர், திருச்சுழி ரோடு, ஆத்திபட்டி பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. தொடர்ந்து இதுபோன்ற தலைவர்களின் நினைவிடத்திற்கு வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் முக சுழிப்பை ஏற்படுத்தும் வகையிலும் செல்வதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.1
- ராஜபாளையத்தில் நடந்த விபத்தில் இரண்டாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவை சேர்ந்த தனியார் தொழிலாளி ராதாகிருஷ்ணன் என்பவரது மூத்த மகன் ரோகித் (7) தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலை பள்ளி செல்வதற்காக தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, நிறுத்தத்தில் காத்திருந்த மாணவர்களை ஏற்றி செல்ல வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதியதில், சிறுவன் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தான். சிறுவன் உடலை மீட்ட தெற்கு காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் பேருந்து ஓட்டுநர் மம்சாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.1