அரசு பள்ளி முன்பு ஆபத்தான பட்டுப்போன மரம் அகற்ற வேண்டும் என வேண்டுகோள் திருவாடானை தாலுகா ஆதியூர் அரசு தொடக்கப் பள்ளியின் நுழைவாயிலில் உள்ள பட்டுப்போன மரம் ஒன்று, மாணவர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த மரம் முழுமையாக காய்ந்து, இலைகள் உதிர்ந்து, கிளைகள் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. பள்ளியின் நுழைவாயிலிலேயே இந்த மரம் இருப்பதால், மாணவ, மாணவிகள் தினமும் அதன் அருகிலேயே கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எதிர்பாராதவிதமாக மரம் அல்லது அதன் கிளைகள் முறிந்து விழுந்தால், மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, அந்தப் பட்டுப்போன மரத்தை அகற்றி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அரசு பள்ளி முன்பு ஆபத்தான பட்டுப்போன மரம் அகற்ற வேண்டும் என வேண்டுகோள் திருவாடானை தாலுகா ஆதியூர் அரசு தொடக்கப் பள்ளியின் நுழைவாயிலில் உள்ள பட்டுப்போன மரம் ஒன்று, மாணவர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த மரம் முழுமையாக காய்ந்து, இலைகள் உதிர்ந்து, கிளைகள் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. பள்ளியின் நுழைவாயிலிலேயே இந்த மரம் இருப்பதால், மாணவ, மாணவிகள் தினமும் அதன் அருகிலேயே கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எதிர்பாராதவிதமாக மரம் அல்லது அதன் கிளைகள் முறிந்து விழுந்தால், மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, அந்தப் பட்டுப்போன மரத்தை அகற்றி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- ஐக்கிய வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) சார்பில் நாடு தழுவிய அளவிலான ஒரு நாள் வங்கி வேலைநிறுத்தப் போராட்டம் திருவாடானை பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் வங்கிகள் சங்கம் (IBA) சார்பில் 5 நாள் வேலை ஒப்பந்தத்தை அமல்படுத்துவது. காலியாக உள்ள எழுத்தர் (Clerk) மற்றும் துணைப் பணியாளர் (Sub-staff) பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஓய்வூதியக் கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதனால் வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டனர்1
- இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளாரா முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளாரா என்ற விபரத்தினை அவர் தமிழகம் வந்த பின்னர் தெரிவிக்க வேண்டும். சிவகங்கையில் பாஜக தமிழக தலைவர் நைனார் நாகேந்திரன் பேட்டி சிவகங்கையில் பாஜக நிர்வாகி இல்ல நிகழ்வில் கலந்து கொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது, லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளாரா முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளாரா என்ற விபரத்தினை அவர் தமிழகம் வந்த பின்னர் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் மேலும் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.1
- சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாளில் திருப்பத்தூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திறக்காததால் பயணிகள் அதிர்ச்சி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாளில் திருப்பத்தூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திறக்கவில்லை. ஓட்டுநர்-நடத்துனர் முயற்சி தோல்வியடைந்ததால் பள்ளி மாணவர்கள் ஜன்னல் வழியாக இறங்கினர். பெண் பயணிகள் பயத்துடன் நீண்ட நேரம் பேருந்தில் காத்திருந்தனர். பணிமனை பணியாளர் வந்து கதவைத் திறந்தபின் பயணிகள் நிம்மதியுடன் இறங்கினர்.1
- பொன்னமராவதி பட்டம் வரத்தான் சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊரின் காவல் தெய்வமாக விளங்கும் அருள்மிகு பட்டம் வரத்தான் சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு பட்டமரத்தான் சுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன1
- அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியார்பயமாக்குவதை கண்டித்து தொமுசசார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய அரசின் தொழிலாளர் மக்கள் விரோத விவசாயிகளின் விரோத நடவடிக்கைகளை கண்டித்து புதுக்கோட்டை டி வி எஸ் கார்னர் அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு தொமுச சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் 300 மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசு கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினர்1
- தவெக மாநில கட்சி அங்கீகாரம் பிரியாணி வழங்கி புதுக்கோட்டையில் நிர்வாகிகள் கொண்டாட்டம் புதுக்கோட்டை உழவர் சந்தை அருகில், தமிழக வெற்றி கழகத்தை மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை வரவேற்கும் வகையிலும், தமிழக முதல்வர் விஜய் அவர்களின் நல்லாட்சி சிறப்பாக நடைபெற வேண்டியும், புதுக்கோட்டை மாவட்ட இளைஞரணி சார்பில் பி.ஆர். பிரவீன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கி கொண்டாடப்பட்டது. முன்னதாக தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி, 500 ஏழை, எளிய மக்களுக்கு சுடச்சுட பிரியாணி வழங்கப்பட்டது.17-வது வாரமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இளைஞரணி மாவட்ட நிர்வாகி தனசேகரன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சேட்டு, பி.ஆர். பிரவீன், நரிமேடு பிரபு மற்றும் பொறுப்பாளர்கள் சதீஷ், ரமேஷ், பி.ஆர். பிரபு, கோகுல், பிரவீன், வினோத், மணி, சுப்புராம், ஹரி, சேகர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு சுடச்சுட பிரியாணி வழங்கினர்.மேலும், தேர்தல் ஆணையத்தின் மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்ததை வரவேற்கும் வகையில் நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.1
- தியாகி இமானுவேல் சேகரனார் 69 ஆவது நினைவு நாள் அமைச்சர்கள் நினைவிடத்தில் அஞ்சலி: அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்ற அமைச்சர் சிடி நிர்மல் குமார்: தியாகி இமானுவேல் சேகரனார் 69 ஆவது நினைவு நாள் அமைச்சர்கள் நினைவிடத்தில் அஞ்சலி: அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்ற அமைச்சர் சிடி நிர்மல் குமார்: ராமநாதபுரம் செப் 11, தியாகி இமானுவேல் சேகாரனார் 69ஆவது நினைவு நாளையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று நினைவு தினம் மற்றும் குருபூஜை அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நினைவு நாளில் தவெக கட்சி சார்பில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி அமைச்சர்கள் நினைவிடத்தில் மலர்வலை வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் அமைச்சர்கள் சி.டி நிர்மல் குமார், அருண் ராஜ், மதன்ராஜ் ராஜுவ் மற்றும் பிரபு ஆகிய ஐந்து அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிடி நிர்மல் குமார் தமிழக முதல்வர் ஜோசப் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தவெக சார்பில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69 ஆவது நினைவு நாளையொட்டி ஒட்டி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டதாக தெரிவித்தார். தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணத்திற்கு பின் அமைச்சரவை மாற்றம் இருக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தியாகி நினைவிடத்தில் அரசியல் பேச வேண்டாம் என தெரிவித்தார்.1
- அரசு பள்ளி முன்பு ஆபத்தான பட்டுப்போன மரம் அகற்ற வேண்டும் என வேண்டுகோள் திருவாடானை தாலுகா ஆதியூர் அரசு தொடக்கப் பள்ளியின் நுழைவாயிலில் உள்ள பட்டுப்போன மரம் ஒன்று, மாணவர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த மரம் முழுமையாக காய்ந்து, இலைகள் உதிர்ந்து, கிளைகள் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. பள்ளியின் நுழைவாயிலிலேயே இந்த மரம் இருப்பதால், மாணவ, மாணவிகள் தினமும் அதன் அருகிலேயே கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எதிர்பாராதவிதமாக மரம் அல்லது அதன் கிளைகள் முறிந்து விழுந்தால், மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, அந்தப் பட்டுப்போன மரத்தை அகற்றி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1