தியாகி இமானுவேல் சேகரனார் 69 ஆவது நினைவு நாள் அமைச்சர்கள் நினைவிடத்தில் அஞ்சலி: அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்ற அமைச்சர் சிடி நிர்மல் குமார்: தியாகி இமானுவேல் சேகரனார் 69 ஆவது நினைவு நாள் அமைச்சர்கள் நினைவிடத்தில் அஞ்சலி: அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்ற அமைச்சர் சிடி நிர்மல் குமார்: ராமநாதபுரம் செப் 11, தியாகி இமானுவேல் சேகாரனார் 69ஆவது நினைவு நாளையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று நினைவு தினம் மற்றும் குருபூஜை அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நினைவு நாளில் தவெக கட்சி சார்பில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி அமைச்சர்கள் நினைவிடத்தில் மலர்வலை வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் அமைச்சர்கள் சி.டி நிர்மல் குமார், அருண் ராஜ், மதன்ராஜ் ராஜுவ் மற்றும் பிரபு ஆகிய ஐந்து அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிடி நிர்மல் குமார் தமிழக முதல்வர் ஜோசப் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தவெக சார்பில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69 ஆவது நினைவு நாளையொட்டி ஒட்டி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டதாக தெரிவித்தார். தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணத்திற்கு பின் அமைச்சரவை மாற்றம் இருக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தியாகி நினைவிடத்தில் அரசியல் பேச வேண்டாம் என தெரிவித்தார்.
தியாகி இமானுவேல் சேகரனார் 69 ஆவது நினைவு நாள் அமைச்சர்கள் நினைவிடத்தில் அஞ்சலி: அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்ற அமைச்சர் சிடி நிர்மல் குமார்: தியாகி இமானுவேல் சேகரனார் 69 ஆவது நினைவு நாள் அமைச்சர்கள் நினைவிடத்தில் அஞ்சலி: அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்ற அமைச்சர் சிடி நிர்மல் குமார்: ராமநாதபுரம் செப் 11, தியாகி இமானுவேல் சேகாரனார் 69ஆவது நினைவு நாளையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று நினைவு தினம் மற்றும் குருபூஜை அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நினைவு நாளில் தவெக கட்சி சார்பில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி அமைச்சர்கள் நினைவிடத்தில் மலர்வலை வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் அமைச்சர்கள் சி.டி நிர்மல் குமார், அருண் ராஜ், மதன்ராஜ் ராஜுவ் மற்றும் பிரபு ஆகிய ஐந்து அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிடி நிர்மல் குமார் தமிழக முதல்வர் ஜோசப் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தவெக சார்பில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69 ஆவது நினைவு நாளையொட்டி ஒட்டி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டதாக தெரிவித்தார். தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணத்திற்கு பின் அமைச்சரவை மாற்றம் இருக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தியாகி நினைவிடத்தில் அரசியல் பேச வேண்டாம் என தெரிவித்தார்.
- அரசு பள்ளி முன்பு ஆபத்தான பட்டுப்போன மரம் அகற்ற வேண்டும் என வேண்டுகோள் திருவாடானை தாலுகா ஆதியூர் அரசு தொடக்கப் பள்ளியின் நுழைவாயிலில் உள்ள பட்டுப்போன மரம் ஒன்று, மாணவர்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த மரம் முழுமையாக காய்ந்து, இலைகள் உதிர்ந்து, கிளைகள் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் நிலையில் உள்ளது. பள்ளியின் நுழைவாயிலிலேயே இந்த மரம் இருப்பதால், மாணவ, மாணவிகள் தினமும் அதன் அருகிலேயே கடந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எதிர்பாராதவிதமாக மரம் அல்லது அதன் கிளைகள் முறிந்து விழுந்தால், மாணவர்களுக்கு பலத்த காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, அந்தப் பட்டுப்போன மரத்தை அகற்றி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளாரா முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளாரா என்ற விபரத்தினை அவர் தமிழகம் வந்த பின்னர் தெரிவிக்க வேண்டும். சிவகங்கையில் பாஜக தமிழக தலைவர் நைனார் நாகேந்திரன் பேட்டி சிவகங்கையில் பாஜக நிர்வாகி இல்ல நிகழ்வில் கலந்து கொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது, லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளாரா முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளாரா என்ற விபரத்தினை அவர் தமிழகம் வந்த பின்னர் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் மேலும் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.1
- புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் இமானுவேல் சேகரனாரின் 69-ஆம் ஆண்டு குருபூஜை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் இமானுவேல் சேகரனாரின் 69-ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு கறம்பக்குடி சீனிக்கடை முக்கத்தில் அவரது திருவுருவப் படம் இடம்பெற்ற பதாகை அமைக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திரண்டு வந்து அவரது நினைவைப் போற்றினர். மேலும் இமானுவேல் சேகரனாரின் சமூகப் பங்களிப்பு தியாகம் மற்றும் சமுதாயத்திற்காக ஆற்றிய பணிகளை நினைவுகூரும் வகையில் மரியாதை செலுத்தப்பட்டது. குருபூஜையை முன்னிட்டு அப்பகுதியில் அமைதியான முறையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி கறம்பக்குடி சீனிக்கடை முக்கம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.1
- புதுக்கோட்டை மாநகராட்சி இருபதாவது வார்டுகு ட்பட்ட மாரியம்மன் கோவில் வீதியில் திருச்சி எம்பி நியாய விலை கடை திறந்து வைத்தார் புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட 20 ஆவது வார்டு பகுதியான திருவப்பூர் சோழா எஸ்டேட் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கடையினை மக்கள் பயன்பாட்டிற்கு திருச்சி எம் பி துரை வைகோ திறந்து வைத்து இந்த நியாய விலை கடையில் மக்கள் பொருட்கள் வாங்கி பயன்பெற வேண்டும் என்று உரையாற்றினார்1
- தவெக மாநில கட்சி அங்கீகாரம் பிரியாணி வழங்கி புதுக்கோட்டையில் நிர்வாகிகள் கொண்டாட்டம் புதுக்கோட்டை உழவர் சந்தை அருகில், தமிழக வெற்றி கழகத்தை மாநில கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை வரவேற்கும் வகையிலும், தமிழக முதல்வர் விஜய் அவர்களின் நல்லாட்சி சிறப்பாக நடைபெற வேண்டியும், புதுக்கோட்டை மாவட்ட இளைஞரணி சார்பில் பி.ஆர். பிரவீன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கி கொண்டாடப்பட்டது. முன்னதாக தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பர்வேஸ் அவர்களின் அறிவுறுத்தலின்படி, 500 ஏழை, எளிய மக்களுக்கு சுடச்சுட பிரியாணி வழங்கப்பட்டது.17-வது வாரமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இளைஞரணி மாவட்ட நிர்வாகி தனசேகரன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சேட்டு, பி.ஆர். பிரவீன், நரிமேடு பிரபு மற்றும் பொறுப்பாளர்கள் சதீஷ், ரமேஷ், பி.ஆர். பிரபு, கோகுல், பிரவீன், வினோத், மணி, சுப்புராம், ஹரி, சேகர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு சுடச்சுட பிரியாணி வழங்கினர்.மேலும், தேர்தல் ஆணையத்தின் மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்ததை வரவேற்கும் வகையில் நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.1
- ஓடிடியில் வெளியான சூர்யாவின் படம்: முடிக்கப்படாத காட்சிகளால் ட்ரோலில் சிக்கிய விஸ்வநாத் & சன்ஸ்! நடிகர் சூர்யா நடிப்பில் உருவான 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் இன்று வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் கடுமையான ட்ரோல்களுக்கு உள்ளாகி வருகின்றன. விஎஃப்எக்ஸ் (VFX), கலர் கிரேடிங் உள்ளிட்ட இறுதிக்கட்டப் பணிகளைச் சரிபார்க்காமல் அரைகுறையான காட்சிகளைப் படக்குழுவினர் ஓடிடிக்கு வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பல காட்சிகளில் குறைபாடுகள் அப்பட்டமாகத் தெரிவதாக ரசிகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் உருவான படத்தில் இது போன்ற அடிப்படை தொழில்நுட்பக் குறைபாடுகளைக் கூடவா கவனிக்காமல் விட்டுவிட்டார்கள் என ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.1
- பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் 69-வது நினைவு தினம் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் 69-வது நினைவு தினம் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனின் 69-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தி.மு.க. சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இமானுவேல் சேகரனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், கே.கே. கதிரவன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த தி.மு.க. ஆட்சியின்போது ரூ.3 கோடி மதிப்பில் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனுக்கு அரசு விழா நடத்த அறிவிக்கப்பட்டதுடன், அவரது முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபமும் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் முதன்முறையாக பரமக்குடிக்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலின், இமானுவேல் சேகரனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.1
- காரைக்குடியில் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம். தொடர் விடுமுறையால் வாடிக்கையாளர்கள் பாதிக்கும் அபாயம். வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை, ஓய்வூதிய திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆரிய பவன் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஸ்டேட் வங்கி முன்பு ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இன்று நடைபெறும் போராட்டத்தைத் தொடர்ந்து, நாளை வார விடுமுறை தொடங்குகிறது. அதன்பின்னர் விநாயகர் சதுர்த்தி விடுமுறையும் வருவதால், தொடர் விடுமுறை காரணமாக வாடிக்கையாளர்களின் காசோலை உள்ளிட்ட வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், இந்த தொடர் விடுமுறையால் ஏடிஎம் சேவைகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனியார் வங்கி ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.1
- சில்வர்ஸ்டோன் ரேஸ்: லண்டனில் கூடிய ரசிகர்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்திய நடிகர் அஜித்! சில்வர்ஸ்டோன் பந்தயத்தில் (Race) பங்கேற்பதற்காக லண்டன் சென்றுள்ள நடிகர் அஜித், அங்கே குவிந்த ரசிகர்களிடம் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களைப் பாதுகாப்பாக இருக்குமாறு அவர் அறிவுறுத்திய நிலையில், சிலர் அதைக் கவனிக்காமல் கூச்சலிட்டதால் "முக்கியமான விஷயம் சொல்கிறேன், தயவுசெய்து கேளுங்கள்" என லேசாகக் கடிந்துகொண்டார். தொடர்ந்து, அங்கு வந்திருந்த அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். இந்த நிலையில், லண்டனில் நடைபெறவுள்ள இந்த கார் பந்தயத்தை முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.1