logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் 69-வது நினைவு தினம் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் 69-வது நினைவு தினம் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனின் 69-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தி.மு.க. சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இமானுவேல் சேகரனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், கே.கே. கதிரவன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த தி.மு.க. ஆட்சியின்போது ரூ.3 கோடி மதிப்பில் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனுக்கு அரசு விழா நடத்த அறிவிக்கப்பட்டதுடன், அவரது முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபமும் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் முதன்முறையாக பரமக்குடிக்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலின், இமானுவேல் சேகரனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

8 hrs ago
user_Kaviston
Kaviston
இராமேஸ்வரம், ராமநாதபுரம், தமிழ்நாடு•
8 hrs ago

பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் 69-வது நினைவு தினம் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் 69-வது நினைவு தினம் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனின் 69-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தி.மு.க. சார்பில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இமானுவேல் சேகரனின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், கே.கே. கதிரவன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கடந்த தி.மு.க. ஆட்சியின்போது ரூ.3 கோடி மதிப்பில் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனுக்கு அரசு விழா நடத்த அறிவிக்கப்பட்டதுடன், அவரது முழு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபமும் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்துக்கு பின்னர் முதன்முறையாக பரமக்குடிக்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலின், இமானுவேல் சேகரனின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தியாகி இமானுவேல் சேகரனார் 69 ஆவது நினைவு நாள் அமைச்சர்கள் நினைவிடத்தில் அஞ்சலி: அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்ற அமைச்சர் சிடி நிர்மல் குமார்: தியாகி இமானுவேல் சேகரனார் 69 ஆவது நினைவு நாள் அமைச்சர்கள் நினைவிடத்தில் அஞ்சலி: அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்ற அமைச்சர் சிடி நிர்மல் குமார்: ராமநாதபுரம் செப் 11, தியாகி இமானுவேல் சேகாரனார் 69ஆவது நினைவு நாளையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று நினைவு தினம் மற்றும் குருபூஜை அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நினைவு நாளில் தவெக கட்சி சார்பில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி அமைச்சர்கள் நினைவிடத்தில் மலர்வலை வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் அமைச்சர்கள் சி.டி நிர்மல் குமார், அருண் ராஜ், மதன்ராஜ் ராஜுவ் மற்றும் பிரபு ஆகிய ஐந்து அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிடி நிர்மல் குமார் தமிழக முதல்வர் ஜோசப் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தவெக சார்பில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69 ஆவது நினைவு நாளையொட்டி ஒட்டி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டதாக தெரிவித்தார். தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணத்திற்கு பின் அமைச்சரவை மாற்றம் இருக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தியாகி நினைவிடத்தில் அரசியல் பேச வேண்டாம் என தெரிவித்தார்.
    1
    தியாகி இமானுவேல் சேகரனார்  69 ஆவது நினைவு நாள் அமைச்சர்கள் நினைவிடத்தில் அஞ்சலி: அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்ற அமைச்சர் சிடி நிர்மல் குமார்:
தியாகி இமானுவேல் சேகரனார்  69 ஆவது நினைவு நாள் அமைச்சர்கள் நினைவிடத்தில் அஞ்சலி: அமைச்சரவை மாற்றம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்ற அமைச்சர் சிடி நிர்மல் குமார்:
ராமநாதபுரம் செப் 11,
தியாகி இமானுவேல் சேகாரனார் 69ஆவது நினைவு நாளையொட்டி பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று நினைவு தினம் மற்றும் குருபூஜை அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நினைவு நாளில் தவெக கட்சி சார்பில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி அமைச்சர்கள் நினைவிடத்தில் மலர்வலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் அமைச்சர்கள் சி.டி நிர்மல் குமார், அருண் ராஜ், மதன்ராஜ் ராஜுவ் மற்றும் பிரபு ஆகிய ஐந்து அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டு் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிடி நிர்மல் குமார் தமிழக முதல்வர் ஜோசப் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தவெக சார்பில் தியாகி இமானுவேல் சேகரனாரின்  69 ஆவது நினைவு நாளையொட்டி ஒட்டி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
தமிழக முதல்வர் வெளிநாட்டு பயணத்திற்கு பின் அமைச்சரவை மாற்றம் இருக்குமா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தியாகி நினைவிடத்தில் அரசியல் பேச வேண்டாம் என தெரிவித்தார்.
    user_Kaviston
    Kaviston
    இராமேஸ்வரம், ராமநாதபுரம், தமிழ்நாடு•
    7 hrs ago
  • ஐக்கிய வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) சார்பில் நாடு தழுவிய அளவிலான ஒரு நாள் வங்கி வேலைநிறுத்தப் போராட்டம் திருவாடானை பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ​வங்கிகள் சங்கம் (IBA) சார்பில் ​5 நாள் வேலை ஒப்பந்தத்தை அமல்படுத்துவது. காலியாக உள்ள எழுத்தர் (Clerk) மற்றும் துணைப் பணியாளர் (Sub-staff) பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ​ஓய்வூதியக் கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதனால் வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டனர்
    1
    ஐக்கிய வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) சார்பில் நாடு தழுவிய அளவிலான ஒரு நாள் வங்கி வேலைநிறுத்தப் போராட்டம்
திருவாடானை பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் 
​வங்கிகள் சங்கம் (IBA) சார்பில்
​5 நாள் வேலை ஒப்பந்தத்தை அமல்படுத்துவது.  
காலியாக உள்ள எழுத்தர் (Clerk) மற்றும் துணைப் பணியாளர் (Sub-staff) பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.  
​ஓய்வூதியக் கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதனால் வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டனர்
    user_அனல் ஆனந்த்
    அனல் ஆனந்த்
    திருவாடானை, ராமநாதபுரம், தமிழ்நாடு•
    12 hrs ago
  • சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா வேட்டைக்காரன்பட்டி கிராமத்தில் சீரமைக்கப்படாமல் கிடக்கும் கால்நடை குடிநீர் தொட்டி – பொதுமக்கள் கோரிக்கை சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா, தானாவயல் ஊராட்சிக்கு உட்பட்ட வேட்டைக்காரன்பட்டி கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்காக கட்டப்பட்ட குடிநீர் தொட்டி, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்பாடின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள கால்நடைகள் குடிநீர் அருந்துவதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றன. எனவே, கால்நடைகளின் நலனை கருத்தில் கொண்டு, பயன்பாடின்றி கிடக்கும் குடிநீர் தொட்டியை விரைவாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வேட்டைக்காரன்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    2
    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா வேட்டைக்காரன்பட்டி கிராமத்தில் சீரமைக்கப்படாமல் கிடக்கும் கால்நடை குடிநீர் தொட்டி – பொதுமக்கள் கோரிக்கை
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா, தானாவயல் ஊராட்சிக்கு உட்பட்ட வேட்டைக்காரன்பட்டி கிராமத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்காக கட்டப்பட்ட குடிநீர் தொட்டி, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்பாடின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள கால்நடைகள் குடிநீர் அருந்துவதற்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றன. எனவே, கால்நடைகளின் நலனை கருத்தில் கொண்டு, பயன்பாடின்றி கிடக்கும் குடிநீர் தொட்டியை விரைவாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வேட்டைக்காரன்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    1 hr ago
  • சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாளில் திருப்பத்தூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திறக்காததால் பயணிகள் அதிர்ச்சி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாளில் திருப்பத்தூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திறக்கவில்லை. ஓட்டுநர்-நடத்துனர் முயற்சி தோல்வியடைந்ததால் பள்ளி மாணவர்கள் ஜன்னல் வழியாக இறங்கினர். பெண் பயணிகள் பயத்துடன் நீண்ட நேரம் பேருந்தில் காத்திருந்தனர். பணிமனை பணியாளர் வந்து கதவைத் திறந்தபின் பயணிகள் நிம்மதியுடன் இறங்கினர்.
    1
    சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாளில் திருப்பத்தூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திறக்காததால் பயணிகள் அதிர்ச்சி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாளில் திருப்பத்தூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திறக்கவில்லை. ஓட்டுநர்-நடத்துனர் முயற்சி தோல்வியடைந்ததால் பள்ளி மாணவர்கள் ஜன்னல் வழியாக இறங்கினர். பெண் பயணிகள் பயத்துடன் நீண்ட நேரம் பேருந்தில் காத்திருந்தனர். பணிமனை பணியாளர் வந்து கதவைத் திறந்தபின் பயணிகள் நிம்மதியுடன் இறங்கினர்.
    user_ABDUL SALAM
    ABDUL SALAM
    Photographer சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • பொன்னமராவதி பட்டம் வரத்தான் சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊரின் காவல் தெய்வமாக விளங்கும் அருள்மிகு பட்டம் வரத்தான் சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு பட்டமரத்தான் சுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன
    1
    பொன்னமராவதி பட்டம் வரத்தான் சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊரின் காவல் தெய்வமாக விளங்கும் அருள்மிகு பட்டம் வரத்தான் சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு பட்டமரத்தான் சுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன
    user_Kavin
    Kavin
    பொன்னமராவதி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    3 hrs ago
  • அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியார்பயமாக்குவதை கண்டித்து தொமுசசார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய அரசின் தொழிலாளர் மக்கள் விரோத விவசாயிகளின் விரோத நடவடிக்கைகளை கண்டித்து புதுக்கோட்டை டி வி எஸ் கார்னர் அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு தொமுச சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் 300 மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசு கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினர்
    1
    அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியார்பயமாக்குவதை கண்டித்து தொமுசசார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அரசின் தொழிலாளர் மக்கள் விரோத விவசாயிகளின் விரோத நடவடிக்கைகளை கண்டித்து புதுக்கோட்டை டி வி எஸ் கார்னர் அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு தொமுச சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் 300 மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசு கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினர்
    user_Arokiaraj.J
    Arokiaraj.J
    Local News Reporter கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி டிஇஎல்சி தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு டீ வாங்கிச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் டிஇஎல்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் பயிலும் மாணவர்களை ஆசிரியர்கள் டீ வாங்குவதற்காக வெளியே அனுப்பும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் பள்ளி மாணவர்கள் டீ வாங்குவதற்காக கடைக்கு சென்று டீ வாங்கி வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மாணவர்கள் கல்வி கற்க வேண்டிய நேரத்தில் அவர்களை ஆசிரியர்களின் தனிப்பட்ட தேவைக்காக வெளியே அனுப்புவது சரியா? என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி நலனை கருத்தில் கொண்டு பள்ளி நிர்வாகம் இதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ குறித்து சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி டீ வாங்க அனுப்பிய ஆசிரியர்கள் மீது கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி டிஇஎல்சி தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு டீ வாங்கிச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பெற்றோர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் டிஇஎல்சி தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளியில் பயிலும் மாணவர்களை ஆசிரியர்கள் டீ வாங்குவதற்காக வெளியே அனுப்பும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் பள்ளி மாணவர்கள் டீ வாங்குவதற்காக கடைக்கு சென்று டீ வாங்கி வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மாணவர்கள் கல்வி கற்க வேண்டிய நேரத்தில் அவர்களை ஆசிரியர்களின் தனிப்பட்ட தேவைக்காக வெளியே அனுப்புவது சரியா? என பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி நலனை கருத்தில் கொண்டு பள்ளி நிர்வாகம் இதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ குறித்து சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி டீ வாங்க அனுப்பிய ஆசிரியர்கள் மீது கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Prabaharan Reporter
    Prabaharan Reporter
    Psychologist கரம்பக்குடி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மருத்துவர் V.K. ராஜீவ் கொடியசைத்து துவக்கி வைத்தார் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மருத்துவர் V.K. ராஜீவ் கொடியசைத்து துவக்கி வைத்தார்* ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஹெலிபேட் மைதானத்தில் இன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 2026 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத்துறை அமைச்சர் மருத்துவர் V.K.ராஜீவ் கொடியசைத்து துவக்கி வைத்தார், 2026 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள்,பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது, இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    1
    முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மருத்துவர் V.K. ராஜீவ் கொடியசைத்து துவக்கி வைத்தார்
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மருத்துவர் V.K. ராஜீவ் கொடியசைத்து துவக்கி வைத்தார்* ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஹெலிபேட் மைதானத்தில் இன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் 2026 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத்துறை அமைச்சர் மருத்துவர் V.K.ராஜீவ் கொடியசைத்து துவக்கி வைத்தார், 2026 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள்,பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது, இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ்குமார் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    user_Kaviston
    Kaviston
    இராமேஸ்வரம், ராமநாதபுரம், தமிழ்நாடு•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.