Shuru
Apke Nagar Ki App…
இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளாரா முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளாரா என்ற விபரத்தினை அவர் தமிழகம் வந்த பின்னர் தெரிவிக்க வேண்டும். சிவகங்கையில் பாஜக தமிழக தலைவர் நைனார் நாகேந்திரன் பேட்டி சிவகங்கையில் பாஜக நிர்வாகி இல்ல நிகழ்வில் கலந்து கொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது, லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளாரா முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளாரா என்ற விபரத்தினை அவர் தமிழகம் வந்த பின்னர் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் மேலும் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Devakottaigani news
இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளாரா முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளாரா என்ற விபரத்தினை அவர் தமிழகம் வந்த பின்னர் தெரிவிக்க வேண்டும். சிவகங்கையில் பாஜக தமிழக தலைவர் நைனார் நாகேந்திரன் பேட்டி சிவகங்கையில் பாஜக நிர்வாகி இல்ல நிகழ்வில் கலந்து கொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது, லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளாரா முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளாரா என்ற விபரத்தினை அவர் தமிழகம் வந்த பின்னர் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் மேலும் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளாரா முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளாரா என்ற விபரத்தினை அவர் தமிழகம் வந்த பின்னர் தெரிவிக்க வேண்டும். சிவகங்கையில் பாஜக தமிழக தலைவர் நைனார் நாகேந்திரன் பேட்டி சிவகங்கையில் பாஜக நிர்வாகி இல்ல நிகழ்வில் கலந்து கொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது, லண்டன் சென்றுள்ள முதல்வர் விஜய் சொந்த காரணங்களுக்காக சென்றுள்ளாரா முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக சென்று உள்ளாரா என்ற விபரத்தினை அவர் தமிழகம் வந்த பின்னர் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் மேலும் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.1
- சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாளில் திருப்பத்தூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திறக்காததால் பயணிகள் அதிர்ச்சி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வாரச்சந்தை நாளில் திருப்பத்தூரில் இருந்து வந்த அரசுப் பேருந்தின் ஹைட்ராலிக் கதவு திறக்கவில்லை. ஓட்டுநர்-நடத்துனர் முயற்சி தோல்வியடைந்ததால் பள்ளி மாணவர்கள் ஜன்னல் வழியாக இறங்கினர். பெண் பயணிகள் பயத்துடன் நீண்ட நேரம் பேருந்தில் காத்திருந்தனர். பணிமனை பணியாளர் வந்து கதவைத் திறந்தபின் பயணிகள் நிம்மதியுடன் இறங்கினர்.1
- பொன்னமராவதி பட்டம் வரத்தான் சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊரின் காவல் தெய்வமாக விளங்கும் அருள்மிகு பட்டம் வரத்தான் சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு பட்டமரத்தான் சுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன1
- மறைந்த பட்டிமன்ற நடுவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த குவிந்த மக்கள். மதுரையில் ஞான ஒளிபுரம் பகுதியில் வசித்த பிரபல பட்டி மன்ற நடுவர், நடிகர் மற்றும் முன்னாள் தமிழ் பேராசிரியருமான சாலமன் பாப்பையா (90) அவர்கள் இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதியம் காலமானார். அன்னாரின் உடல் ஞான ஒளிபுரம் இல்லத்திற்கு இன்று மாலை 3.30 மணியளவில் கொண்டு வரப்பட்டது. நாளை (செப்.12) காலை உடல் தகனம் செய்யப்படும் என தெரிகிறது. இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வர் ஸ்டாலின், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். அன்னாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான மக்கள் அப் பகுதியில் குவிந்த வண்ணம் உள்ளனர்.1
- ஐக்கிய வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (UFBU) சார்பில் நாடு தழுவிய அளவிலான ஒரு நாள் வங்கி வேலைநிறுத்தப் போராட்டம் திருவாடானை பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் வங்கிகள் சங்கம் (IBA) சார்பில் 5 நாள் வேலை ஒப்பந்தத்தை அமல்படுத்துவது. காலியாக உள்ள எழுத்தர் (Clerk) மற்றும் துணைப் பணியாளர் (Sub-staff) பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஓய்வூதியக் கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதனால் வாடிக்கையாளர்கள் சிரமப்பட்டனர்1
- மதுரை கே.கே.நகரில் தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் தமிழ்நாடு சாந்தோம் கல்வி தொண்டு அறக்கட்டளையின் பயிற்சி மாணவர்கள் இணைந்து தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர் இந்த பேரணியை அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் சைலேந்திர சிங் மற்றும் கண் மருத்துவர் சிந்துஜா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர் இந்த பேரணி கண்தானத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்றது இந்தப் பேரணியில் கல்லூரி மாணவிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில் “கண்தானம் செய்வோம் – பார்வையற்றோரின் வாழ்க்கையில் ஒளியேற்றுவோம்” உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி பங்கேற்பாளர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பேசிய கண் மருத்துவர் சிந்துஜா அவர்கள் கூறியதாவது கண்களை தானமாக வழங்குவதன் மூலம் பார்வையிழந்தவர்களுக்கு மீண்டும் பார்வை கிடைக்கச் செய்ய முடியும் என்பதையும், கண்தானம் குறித்த தவறான நம்பிக்கைகளை அகற்றி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும் என்றார் அதனைத் தொடர்ந்து பேசிய கண் மருத்துவர் சைலேந்திர சிங் அவர்கள் கூறியதாவது தமிழக அளவில் பார்வை குறைபாடு உள்ள நபர்கள் அதிக அளவில் உள்ளனர் ஆனால் கருவிழி தானம் செய்ய முன்வருவோர் குறைவாக உள்ளனர் ஒருவர் இறந்த பின்னர் அவரது கண்களை தானமாக வழங்குவதன் மூலம் இரு பார்வையற்ற நபர்களுக்கு பார்வை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதால், பொதுமக்கள் அனைவரும் கண்தானம் செய்ய முன்வந்தால் கண்பார்வை இல்லாத தமிழகத்தை உருவாக்கலாம் என்று தெரிவித்தார் மாணவிகள் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணி, கண்தானத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் வகையில் அமைந்தது. கண்தானம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவதன் மூலம் அதிகமானோர் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் அகர்வால் கண் மருத்துவமனை பொது மேலாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் லட்சுமணன் மற்றும் ராஜேஷ் உள்ளிட்ட மருத்துவமனை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்1
- அரசு போக்குவரத்துக் கழகத்தை தனியார்பயமாக்குவதை கண்டித்து தொமுசசார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய அரசின் தொழிலாளர் மக்கள் விரோத விவசாயிகளின் விரோத நடவடிக்கைகளை கண்டித்து புதுக்கோட்டை டி வி எஸ் கார்னர் அருகில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு தொமுச சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் 300 மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசு கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினர்1
- காரைக்குடியில் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம். தொடர் விடுமுறையால் வாடிக்கையாளர்கள் பாதிக்கும் அபாயம். வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை, ஓய்வூதிய திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆரிய பவன் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஸ்டேட் வங்கி முன்பு ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இன்று நடைபெறும் போராட்டத்தைத் தொடர்ந்து, நாளை வார விடுமுறை தொடங்குகிறது. அதன்பின்னர் விநாயகர் சதுர்த்தி விடுமுறையும் வருவதால், தொடர் விடுமுறை காரணமாக வாடிக்கையாளர்களின் காசோலை உள்ளிட்ட வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், இந்த தொடர் விடுமுறையால் ஏடிஎம் சேவைகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனியார் வங்கி ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.1