logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர், காவல் ஆணையர் ஆய்வு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன், ஆகியோர் இன்று (11.09.2026) காலை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் குடமுழுக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். உடன் மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் உடன் இருந்தார்.

9 hrs ago
user_சு.இரத்தினவேல்
சு.இரத்தினவேல்
Madurai South, Tamil Nadu•
9 hrs ago

மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர், காவல் ஆணையர் ஆய்வு மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன், ஆகியோர் இன்று (11.09.2026) காலை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் குடமுழுக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். உடன் மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் உடன் இருந்தார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • காரைக்குடியில் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம். தொடர் விடுமுறையால் வாடிக்கையாளர்கள் பாதிக்கும் அபாயம். வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை, ஓய்வூதிய திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆரிய பவன் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஸ்டேட் வங்கி முன்பு ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இன்று நடைபெறும் போராட்டத்தைத் தொடர்ந்து, நாளை வார விடுமுறை தொடங்குகிறது. அதன்பின்னர் விநாயகர் சதுர்த்தி விடுமுறையும் வருவதால், தொடர் விடுமுறை காரணமாக வாடிக்கையாளர்களின் காசோலை உள்ளிட்ட வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், இந்த தொடர் விடுமுறையால் ஏடிஎம் சேவைகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனியார் வங்கி ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    1
    காரைக்குடியில் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டம். தொடர் விடுமுறையால் வாடிக்கையாளர்கள் பாதிக்கும் அபாயம்.
வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே வேலை, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை, ஓய்வூதிய திருத்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியா முழுவதும் பொதுத்துறை வங்கிகளைச் சேர்ந்த சுமார் 8 லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆரிய பவன் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஸ்டேட் வங்கி முன்பு ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இன்று நடைபெறும் போராட்டத்தைத் தொடர்ந்து, நாளை வார விடுமுறை தொடங்குகிறது. அதன்பின்னர் விநாயகர் சதுர்த்தி விடுமுறையும் வருவதால், தொடர் விடுமுறை காரணமாக வாடிக்கையாளர்களின் காசோலை உள்ளிட்ட வங்கி பரிவர்த்தனைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், இந்த தொடர் விடுமுறையால் ஏடிஎம் சேவைகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தனியார் வங்கி ஊழியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • பொன்னமராவதி பட்டம் வரத்தான் சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊரின் காவல் தெய்வமாக விளங்கும் அருள்மிகு பட்டம் வரத்தான் சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு பட்டமரத்தான் சுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன
    1
    பொன்னமராவதி பட்டம் வரத்தான் சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊரின் காவல் தெய்வமாக விளங்கும் அருள்மிகு பட்டம் வரத்தான் சுவாமி கோவிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை முன்னிட்டு பட்டமரத்தான் சுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன
    user_Kavin
    Kavin
    பொன்னமராவதி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    1 hr ago
  • கருப்பசாமி மற்றும் பச்சை நாச்சியம்மன் கோவிலில் புதிய கட்சிகளை பிரதிஷ்டை விழா அருள்மிகு ஊத்தாம் பாறை கருப்பசாமி மற்றும் பச்சை நாச்சியம்மன் கோவிலில் புதிய கட்சிகளை பிரதிஷ்டை விழா மற்றும் கும்பாபிஷேக விழா. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரண்மனையில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஊத்தாம் பாறை. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள வடக்கு மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த வனப்பகுதியில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு போடிநாயக்கனூரை ஆண்ட ராஜ கம்பளத்தார் அரண்மனை வம்சாவளியினர் இந்த கோவிலை உருவாக்கினர். வடக்கு மலை எல்லைப் பகுதி காவல் தெய்வமாக விளங்கும் இந்த உத்தம்பாறை கருப்பசாமி இப்பகுதியில் பாறை வெடித்து உருவானதாக இப்பகுதியில் மக்கள் நம்பிக்கையில் உள்ளது. போடிநாயக்கனூர் அரண்மனைக்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலில் 350 ஆண்டுகளாக மண்ணால் உள்ள கருப்புசாமி சிலை மற்றும் காவல் தெய்வங்கள் பச்சை நாச்சியம்மன் சிலை உருவாக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது. நிலையில் கோயில் புதிதாக கட்டமைக்கப்பட்டு புதிய கருவறை உருவாக்கப்பட்டு ராஜகம்பளத்தார் முறைப்படி போதகப் புல்லால் கூரை வேயப்பட்டது. இன்று இருந்த மண் சிலை அகற்றப்பட்டு புதிதாக கருப்பணசாமிக்கு கற்சிலை உருவாக்கப்பட்டு கருவறையில் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. காலை அமாவாசை திதியில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றது. ராஜகம்பளத்தார் முறைப்படி பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பகிர்ந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மரத்தில் குடி கொண்டிருக்கும் பச்சை நாச்சி அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றது வனப்பகுதியில் உள்ள கோயில் என்பதால் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
    1
    கருப்பசாமி மற்றும் பச்சை நாச்சியம்மன்  கோவிலில் புதிய கட்சிகளை பிரதிஷ்டை விழா
அருள்மிகு ஊத்தாம் பாறை கருப்பசாமி மற்றும் பச்சை நாச்சியம்மன்  கோவிலில் புதிய கட்சிகளை பிரதிஷ்டை விழா மற்றும் கும்பாபிஷேக விழா.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரண்மனையில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஊத்தாம் பாறை.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள வடக்கு மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த வனப்பகுதியில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு போடிநாயக்கனூரை ஆண்ட ராஜ கம்பளத்தார் அரண்மனை வம்சாவளியினர் இந்த கோவிலை உருவாக்கினர்.
வடக்கு மலை எல்லைப் பகுதி காவல் தெய்வமாக விளங்கும் இந்த உத்தம்பாறை கருப்பசாமி இப்பகுதியில் பாறை வெடித்து உருவானதாக இப்பகுதியில் மக்கள் நம்பிக்கையில் உள்ளது.
போடிநாயக்கனூர் அரண்மனைக்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலில் 350 ஆண்டுகளாக மண்ணால் உள்ள கருப்புசாமி சிலை மற்றும் காவல் தெய்வங்கள் பச்சை நாச்சியம்மன் சிலை உருவாக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது.
நிலையில் கோயில் புதிதாக கட்டமைக்கப்பட்டு புதிய கருவறை உருவாக்கப்பட்டு ராஜகம்பளத்தார் முறைப்படி போதகப் புல்லால் கூரை       வேயப்பட்டது.
இன்று இருந்த மண் சிலை அகற்றப்பட்டு புதிதாக கருப்பணசாமிக்கு கற்சிலை உருவாக்கப்பட்டு கருவறையில் இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
காலை அமாவாசை திதியில் சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெற்றது.
ராஜகம்பளத்தார் முறைப்படி பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பகிர்ந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மரத்தில் குடி கொண்டிருக்கும் பச்சை நாச்சி அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றது 
வனப்பகுதியில் உள்ள கோயில் என்பதால் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் இருசக்கர வாகனத்தில் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • TNEB SE அலுவலகம் முன் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேனி கிளை சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் தேனி NRT சாலையில் உள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேனி கிளை சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார் திட்ட செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார் இந்த ஆர்ப்பாட்டத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், ஒப்பந்த முறையில் பணியமர்த்தும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சந்தன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேனி கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
    4
    TNEB SE அலுவலகம் முன் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேனி கிளை சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தேனி NRT சாலையில் உள்ள மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்  தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேனி கிளை சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார் திட்ட செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார் இந்த ஆர்ப்பாட்டத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும், ஒப்பந்த முறையில் பணியமர்த்தும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சந்தன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மின் கழக தொழிலாளர் முன்னேற்ற சங்க தேனி கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    2 hrs ago
  • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாயில் குப்பையை கொட்டும் திருவண்ணாமலை ஊராட்சி நிர்வாகம்  பொதுமக்கள் அதிருப்தி  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை கண்மாயில் கொட்டி வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் பொட்டல்குளம் குருக்கள்குளம் கண்மாய் உள்ளது. 36 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் மூலம் 32 ஹெக்டர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கண்மாய் பாசன பரப்பு பெரும்பாலும் குடியிருப்புகளாக மாறி ஶ்ரீவில்லிபுத்தூர் நகரின் விரிவாக்க பகுதியாக உள்ளது.  ஶ்ரீவில்லிபுத்தூர் நகரின் விரிவாக்க பகுதிகளான இந்திரா நகர், அன்னை சத்யா நகர், மாதா நகர், வள்ளுவர் நகர் ஆகியவை திருவண்ணாமலை ஊராட்சியில் உள்ளன. மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபங்கள், வணிக கடைகள் பெரும்பாலும் திருவண்ணாமலை ஊராட்சியில் வருகிறது. இப்பகுதியில் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பையை ஊராட்சி நிர்வாகம் பொட்டல்குளம் குருக்கள்குளம் கண்மாயில் கொட்டி வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதால் கண்மாய் நீர் மாசடைவதுடன், தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. நீர்நிலையை பாதுகாக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகமே குப்பையை கண்மாயில் கொட்டி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கண்மாயை குப்பை கொட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை
    1
    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கண்மாயில் குப்பையை கொட்டும் திருவண்ணாமலை ஊராட்சி நிர்வாகம் 

பொதுமக்கள் அதிருப்தி 


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சியில் சேகரமாகும் குப்பையை கண்மாயில் கொட்டி வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை ஊராட்சியில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் பொட்டல்குளம் குருக்கள்குளம் கண்மாய் உள்ளது. 36 ஹெக்டர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் மூலம் 32 ஹெக்டர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த கண்மாய் பாசன பரப்பு பெரும்பாலும் குடியிருப்புகளாக மாறி ஶ்ரீவில்லிபுத்தூர் நகரின் விரிவாக்க பகுதியாக உள்ளது. 
ஶ்ரீவில்லிபுத்தூர் நகரின் விரிவாக்க பகுதிகளான இந்திரா நகர், அன்னை சத்யா நகர், மாதா நகர், வள்ளுவர் நகர் ஆகியவை திருவண்ணாமலை ஊராட்சியில் உள்ளன. மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபங்கள், வணிக கடைகள் பெரும்பாலும் திருவண்ணாமலை ஊராட்சியில் வருகிறது. இப்பகுதியில் வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பையை ஊராட்சி நிர்வாகம் பொட்டல்குளம் குருக்கள்குளம் கண்மாயில் கொட்டி வருவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதால் கண்மாய் நீர் மாசடைவதுடன், தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது. நீர்நிலையை பாதுகாக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகமே குப்பையை கண்மாயில் கொட்டி வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கண்மாயை குப்பை கொட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை
    user_Prabakaran Praba
    Prabakaran Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    22 hrs ago
  • புதிய பயணிகள் நிழற்குடையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த மேயர். மதுரை மாநகராட்சி 85-வது வார்டு தவுட்டு சந்தை பேருந்து நிறுத்தத்தில் மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் முத்துமாரி ஜெயக்குமார் தலைமையில் மாமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிய நிழற்குடையினன பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேயர் (பொறுப்பு) நாகராஜன் அவர்கள் இன்று (செப்.11) காலை திறந்து வைத்தார். அருகில் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா, பகுதி செயலாளர் ஜோசப் தனிஸ்லாஸ்,வட்டச் செயலாளர்கள் முருகன், நாட்டாமை ஜெயக்குமார், செல்வகுமரன், பால் கடை கிருஷ்ணன், தயிர்கடை சங்கர் ஆசீர்வாதம்,சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    1
    புதிய பயணிகள் நிழற்குடையை மக்கள்  பயன்பாட்டிற்கு திறந்து வைத்த மேயர்.
மதுரை மாநகராட்சி 85-வது வார்டு தவுட்டு சந்தை பேருந்து நிறுத்தத்தில் மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் முத்துமாரி ஜெயக்குமார் தலைமையில் மாமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து புதிய நிழற்குடையினன பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மேயர் (பொறுப்பு) நாகராஜன் அவர்கள் இன்று (செப்.11) காலை திறந்து வைத்தார். அருகில் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா, பகுதி செயலாளர் ஜோசப் தனிஸ்லாஸ்,வட்டச் செயலாளர்கள் முருகன், நாட்டாமை ஜெயக்குமார், செல்வகுமரன், பால் கடை கிருஷ்ணன், தயிர்கடை சங்கர் ஆசீர்வாதம்,சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    8 hrs ago
  • அருப்புக்கோட்டை வழியாக தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடிக்கு செல்லும் வாகனங்களில் இளைஞர்கள் தொங்கியபடியும் முகம் சுளிக்கும் வகையில் கத்தியபடியும் அதிவேகமாக செல்வதால் பொதுமக்கள் கடும் அவதி காவல்துறை அறிவுறுத்தல் படி அருப்புக்கோட்டையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் சிரமம் அடைந்த வியாபாரிகள் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வாகனங்களில் செல்வது வழக்கம். இதில் விருதுநகர், சாத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வழியாகத்தான் பரமக்குடி செல்ல முடியும். இவ்வாறு வாகனங்களில் அருப்புக்கோட்டை வழியாக செல்லும் இளைஞர்கள் வாகனங்களில் தொங்கியபடியும் அதிக அளவு கூச்சலிட்டு கொண்டும் பொது மக்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் கத்தியபடியும் சென்றனர். வாகனங்களில் கதவைத் திறந்து அதில் தொங்கியபடி ஆபத்தான வகையில் இளைஞர்கள் பயணம் செய்வது பொதுமக்கள் இடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.‌ மேலும் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு செல்லும் வழியில் உள்ள அனைத்து கடைகளையும் காவல்துறையினர் மூட அறிவுறுத்தி உள்ளதால் வணிகர்களும் சிரமம் அடைந்துள்ளனர். போலீசாரின் அறிவுறுத்தல் படி அருப்புக்கோட்டையில் காந்திநகர், திருச்சுழி ரோடு, ஆத்திபட்டி பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. தொடர்ந்து இதுபோன்ற தலைவர்களின் நினைவிடத்திற்கு வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் முக சுழிப்பை ஏற்படுத்தும் வகையிலும் செல்வதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
    1
    அருப்புக்கோட்டை வழியாக தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடிக்கு செல்லும் வாகனங்களில் இளைஞர்கள் தொங்கியபடியும் முகம் சுளிக்கும் வகையில் கத்தியபடியும் அதிவேகமாக செல்வதால் பொதுமக்கள் கடும் அவதி
காவல்துறை அறிவுறுத்தல் படி அருப்புக்கோட்டையில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் சிரமம் அடைந்த வியாபாரிகள்
தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வாகனங்களில் செல்வது வழக்கம்.  
இதில் விருதுநகர், சாத்தூர், ராஜபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார  பகுதிகளை சேர்ந்தவர்கள் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வழியாகத்தான் பரமக்குடி செல்ல முடியும். இவ்வாறு வாகனங்களில் அருப்புக்கோட்டை வழியாக செல்லும் இளைஞர்கள் வாகனங்களில் தொங்கியபடியும் அதிக அளவு கூச்சலிட்டு கொண்டும் பொது மக்களுக்கு முகம் சுளிக்கும் வகையில் கத்தியபடியும் சென்றனர். 
வாகனங்களில் கதவைத் திறந்து அதில் தொங்கியபடி ஆபத்தான வகையில் இளைஞர்கள் பயணம் செய்வது பொதுமக்கள் இடைய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.‌
மேலும் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு செல்லும் வழியில் உள்ள அனைத்து கடைகளையும் காவல்துறையினர் மூட அறிவுறுத்தி உள்ளதால் வணிகர்களும் சிரமம் அடைந்துள்ளனர். 
போலீசாரின் அறிவுறுத்தல் படி அருப்புக்கோட்டையில் காந்திநகர், திருச்சுழி ரோடு, ஆத்திபட்டி பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன. 
தொடர்ந்து இதுபோன்ற தலைவர்களின் நினைவிடத்திற்கு வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் முக சுழிப்பை ஏற்படுத்தும் வகையிலும் செல்வதால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    8 hrs ago
  • வேலுநாச்சியார் அரண்மனையில் மதுக்கடைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு– “யார் அனுமதி கொடுத்தது?” என நீதிபதிகள் கேள்வி சிவகங்கை மாவட்டத்தின் வரலாற்றுச் சின்னமான வீரமங்கை வேலுநாச்சியார் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றம் மற்றும் மதுக்கடைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனுவில், வேலுநாச்சியார் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ‘கிங்ஸ் ரிக்ரியேஷன் கிளப்’ மற்றும் அதனுடன் தொடர்புடைய மதுக்கடை, அரண்மனையின் வரலாற்று மற்றும் பாரம்பரிய முக்கியத்துவத்தை பாதிப்பதாகக் கூறி, அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சி.விகார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “வீரமங்கை வேலுநாச்சியாரின் அரண்மனை வீரத்தின் அடையாளமாக திகழ்கிறது. அத்தகைய இடத்தில் மனமகிழ் மன்றம் நடத்த யார் அனுமதி வழங்கியது?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்றும், மனமகிழ் மன்றத்தின் செயல்பாட்டிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வேலுநாச்சியார் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வந்த கிளப்புக்கு நீதிமன்றம் தடை விதித்திருப்பது சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    1
    வேலுநாச்சியார் அரண்மனையில் மதுக்கடைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு– “யார் அனுமதி கொடுத்தது?” என நீதிபதிகள் கேள்வி
சிவகங்கை மாவட்டத்தின் வரலாற்றுச் சின்னமான வீரமங்கை வேலுநாச்சியார் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றம் மற்றும் மதுக்கடைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனுவில், வேலுநாச்சியார் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ‘கிங்ஸ் ரிக்ரியேஷன் கிளப்’ மற்றும் அதனுடன் தொடர்புடைய மதுக்கடை, அரண்மனையின் வரலாற்று மற்றும் பாரம்பரிய முக்கியத்துவத்தை பாதிப்பதாகக் கூறி, அதனை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சி.விகார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “வீரமங்கை வேலுநாச்சியாரின் அரண்மனை வீரத்தின் அடையாளமாக திகழ்கிறது. அத்தகைய இடத்தில் மனமகிழ் மன்றம் நடத்த யார் அனுமதி வழங்கியது?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும் என்றும், மனமகிழ் மன்றத்தின் செயல்பாட்டிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வேலுநாச்சியார் அரண்மனை வளாகத்தில் செயல்பட்டு வந்த கிளப்புக்கு நீதிமன்றம் தடை விதித்திருப்பது சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    21 hrs ago
  • ராஜபாளையத்தில் நடந்த விபத்தில் இரண்டாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவை சேர்ந்த தனியார் தொழிலாளி ராதாகிருஷ்ணன் என்பவரது மூத்த மகன் ரோகித் (7) தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான். இன்று காலை பள்ளி செல்வதற்காக தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, நிறுத்தத்தில் காத்திருந்த மாணவர்களை ஏற்றி செல்ல வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதியதில், சிறுவன் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தான். சிறுவன் உடலை மீட்ட தெற்கு காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் பேருந்து ஓட்டுநர் மம்சாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    ராஜபாளையத்தில் நடந்த விபத்தில் இரண்டாம் வகுப்பு மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவை சேர்ந்த தனியார் தொழிலாளி ராதாகிருஷ்ணன் என்பவரது மூத்த மகன் ரோகித் (7) தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான்.
இன்று காலை பள்ளி செல்வதற்காக தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, நிறுத்தத்தில் காத்திருந்த மாணவர்களை ஏற்றி செல்ல வந்த தனியார் கல்லூரி பேருந்து மோதியதில், சிறுவன் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தான். 
சிறுவன் உடலை மீட்ட தெற்கு காவல் துறையினர் உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் பேருந்து ஓட்டுநர் மம்சாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_Virudhunagar
    Virudhunagar
    Virudhunagar, Tamil Nadu•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.