Shuru
Apke Nagar Ki App…
உணவு தேடி ஊருக்குள் புகுந்த யானைகளால் பொதுமக்கள் அச்சம் பாலக்கோடு அருகே ஏர்ரணஹள்ளி அண்ணாமலைஅள்ளி காப்புக்காடு பகுதியில் இருந்து உணவு மற்றும் நீர் தேடி அவ்வப்போது யானைகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது இந்த நிலையில் இன்று காலை பஞ்சப்பள்ளி அருகே சூடானூர் கிராம பகுதியில் நடந்த இரண்டு காட்டு யானைகள் உணவு தேடி தஞ்சம் அடைந்தது இதனை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்து அதன் பேரில் வனத்துறையினர் இரண்டு காட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Raja
உணவு தேடி ஊருக்குள் புகுந்த யானைகளால் பொதுமக்கள் அச்சம் பாலக்கோடு அருகே ஏர்ரணஹள்ளி அண்ணாமலைஅள்ளி காப்புக்காடு பகுதியில் இருந்து உணவு மற்றும் நீர் தேடி அவ்வப்போது யானைகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருகிறது இந்த நிலையில் இன்று காலை பஞ்சப்பள்ளி அருகே சூடானூர் கிராம பகுதியில் நடந்த இரண்டு காட்டு யானைகள் உணவு தேடி தஞ்சம் அடைந்தது இதனை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்து அதன் பேரில் வனத்துறையினர் இரண்டு காட்டு யானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- பொம்மிடியில் 30 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை பொம்மிடியில் வியாழக்கிழமை நாட்களில் வெற்றிலை விற்பனைக்காக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வெற்றிலை வாரச்சந்தை நடைபெறுகிறது நேற்று ஜன 08 வியாழக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் & வியாபாரிகள் வந்திருந்தனர் 128 கட்டுகளை கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ரூ.10,000 - ரூ.20,000 வரை என 200 வெற்றிலை மூட்டைகள் 30 லட்சத்திற்கும் கடந்த வாரத்தை விட மூட்டைக்கு 2000 ரூபாய் அதிகரித்து விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்1
- தர்மபுரி வட்டார வளர்ச்சி பகுதியில் நியாய விலைக் கடையில் திமுக மாவட்ட செயலாளர் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினரும் அ மணி அவர்கள் பொங்கல் தொகுப்பு பொருட்களை வழங்கினார்1
- பாப்பாரப்பட்டியில் ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாமில் 50க்கும் மேற்பட்ட தவெக-வினர் ரத்ததானம். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி ரமேஷ் என்பவர் கடந்த சில வருடங்களாக ரத்ததானம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டு விழாவை முன்னிட்டு இன்று பாப்பாரப்பட்டியில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமில் தவெக தொண்டர்கள் கலந்து கொண்டு 50-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர். மேலும் தவெக தலைவர் விஜய் கட்சி அரசியல் பயணத்தை தொடங்கியதிலிருந்து திரைப்படத்தில் நடிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது எங்களுக்கு மிகுந்த வேதனையாக உள்ளது. ஆனாலும் தலைவர் எடுத்துள்ள முடிவு மற்றும் அவர் செல்லும் பாதையில் துணை நின்று அவர் பயணம் வெற்றி பெற உறுதியாக இருப்போம் என தொண்டர்கள் தெரிவித்தனர். இந்த ரத்ததான முகாமில் தவெக நிர்வாகிகள் தொண்டர்கள், இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.1
- கிருஷ்ணகிரி அவதானபட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் திடீரென பிரேக் பிடக்காததால் முன்னாள் சென்ற வாகனத்தின் மீது மோதியது இதனை தொடர்ந்து அடுத்தடுத்து பின்னால் வந்த ஆறு கார்களும் ஈச்சர் லாரி மீது ஒன்றின் பின் ஒன்றாக வரிசையாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு கனரக வாகனம் உட்பட ஆறு கார்கள் பலத்தை சேதம் அடைந்தன இந்த விபத்தில் இரண்டு பேர் படுகாயத்துடன் 6 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினர். இதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த ஈச்சர் லாரி வாகன ஓட்டுனர் உள்ளிட்ட இரண்டு பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நகவல் அறிந்து வந்த காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் கிருஷ்ணகிரி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.1
- சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டியில் விசைப்படகு போக்குவரத்து படித்துறை பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளது. விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் படித்துறை பராமரிப்பு பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.1
- ஆத்தூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி1
- 08/01/2026: வியாழக்கிழமை, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஓடப்பள்ளி அக்ரஹாரம் பகுதியில் இன்று பொங்கல் பரிசு தொகுப்பு தமிழ்நாடு அரசால் நியாயவிலை கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. பரிசுத்தொகுப்பை வாங்க காலை முதலே நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர். மாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பொதுமக்கள் ஒடப்பள்ளி-1 நியாய விலை கடையில் மெஷின் பழுதடைந்துள்ளதால், சுமார் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வாங்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.1
- காரிமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பணை தொழிலாளர்களை தரதரவென இழுத்து சென்ற போலீசார்1