logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருப்பூரின் அங்கேரிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அஇஅதிமுக கட்சியின் மாநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் வேல்குமார் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளரும் கோவை தெற்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் சிவசாமி, திருப்பூர் வடக்கு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார், மாநகர் மாவட்ட அவைத் தலைவர் பழனிசாமி மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். அவர்கள் கட்சியின் வளர்ச்சி குறித்தான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். கூட்டத்தில் உரையாற்றிய மாநகர் மாவட்ட செயலாளர் வேல்குமார் சாமிநாதன், கட்சியைப் பலப்படுத்த வார்டு வாரியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, தொண்டர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், கட்சிக்கு உண்மையாக உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவிகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார். வளர்மதி பாலம் அருகில் சுரங்கப் பாலம் கட்டப்பட்டதால் அகற்றப்பட்ட எம்.ஜி.ஆர் சிலை மீண்டும் நிறுவப்படும் என்றும், கட்சியின் மாநகர் மாவட்ட தலைமை அலுவலகம் புதிதாகக் கட்டப்படும் என்றும் அவர் அறிவித்தார். இந்தச் செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, கருணாகரன், சிவளா தினேக்ஷ், அன்பு, கேசவன், வி.கே.பி.மணி, ஹரிஹர சுதன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் முருகசாமி, மாநில எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் பட்டுலிங்கம் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்களும் கட்சி நிர்வாகிகளும் திரளாகக் கலந்துகொண்டனர்.

3 hrs ago
user_பிரபாகரன்
பிரபாகரன்
திருப்பூர் வடக்கு, திருப்பூர், தமிழ்நாடு•
3 hrs ago
e14518d6-6564-4a58-9a31-8d83c90be844

திருப்பூரின் அங்கேரிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அஇஅதிமுக கட்சியின் மாநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் வேல்குமார் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளரும் கோவை தெற்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் சிவசாமி, திருப்பூர் வடக்கு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார், மாநகர் மாவட்ட அவைத்

ac511d29-de3f-48a8-aa41-c436049542fe

தலைவர் பழனிசாமி மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். அவர்கள் கட்சியின் வளர்ச்சி குறித்தான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். கூட்டத்தில் உரையாற்றிய மாநகர் மாவட்ட செயலாளர் வேல்குமார் சாமிநாதன், கட்சியைப் பலப்படுத்த வார்டு வாரியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி, தொண்டர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், கட்சிக்கு உண்மையாக உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவிகள் வழங்கப்படும் என்று அவர் கூறினார். வளர்மதி பாலம் அருகில் சுரங்கப் பாலம்

ea8c0c6d-6a78-40fe-84b9-fc12e8c61c6a

கட்டப்பட்டதால் அகற்றப்பட்ட எம்.ஜி.ஆர் சிலை மீண்டும் நிறுவப்படும் என்றும், கட்சியின் மாநகர் மாவட்ட தலைமை அலுவலகம் புதிதாகக் கட்டப்படும் என்றும் அவர் அறிவித்தார். இந்தச் செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் பகுதி செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, கருணாகரன், சிவளா தினேக்ஷ், அன்பு, கேசவன், வி.கே.பி.மணி, ஹரிஹர சுதன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் முருகசாமி, மாநில எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் பட்டுலிங்கம் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்களும் கட்சி நிர்வாகிகளும் திரளாகக் கலந்துகொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள சூரியம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில், டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் திடீரென குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் டாஸ்மாக் ஊழியர்களின் இந்தப் போராட்டம் மூன்றாவது நாளாக நீடித்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஊழியர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சித்தோடு போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து, காவல்துறை வாகனம் மூலமாக அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
    1
    ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள சூரியம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில், டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் திடீரென குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் டாஸ்மாக் ஊழியர்களின் இந்தப் போராட்டம் மூன்றாவது நாளாக நீடித்து வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஊழியர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சித்தோடு போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து, காவல்துறை வாகனம் மூலமாக அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
    user_Reporter Meganathan
    Reporter Meganathan
    Local News Reporter பவானி, ஈரோடு, தமிழ்நாடு•
    8 hrs ago
  • ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையின் சாலையோரம் சிறுத்தை ஒன்று ஒய்யாரமாக நடந்து சென்றுள்ளது. அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் சிலர், சாலையோரத்தில் சிறுத்தை உலா வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, அவர்கள் சிறுத்தையின் நடமாட்டத்தைத் தங்களது செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்த நிலையில், தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதிகளில் சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருவதால், இந்த மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், வனவிலங்குகளைப் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க முயற்சிக்கக் கூடாது என்றும், வழியில் வாகனங்களை நிறுத்தி கூட்டம் சேர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
    1
    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையின் சாலையோரம் சிறுத்தை ஒன்று ஒய்யாரமாக நடந்து சென்றுள்ளது. அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் சிலர், சாலையோரத்தில் சிறுத்தை உலா வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, அவர்கள் சிறுத்தையின் நடமாட்டத்தைத் தங்களது செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்த நிலையில், தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதிகளில் சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருவதால், இந்த மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், வனவிலங்குகளைப் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க முயற்சிக்கக் கூடாது என்றும், வழியில் வாகனங்களை நிறுத்தி கூட்டம் சேர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
    user_Sathees kumar
    Sathees kumar
    Local News Reporter சத்தியமங்கலம், ஈரோடு, தமிழ்நாடு•
    9 hrs ago
  • கோவை டவுன்ஹால் பகுதியில் ஆடி தள்ளுபடி விற்பனை தொடங்கிவிட்டதன் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
    1
    கோவை டவுன்ஹால் பகுதியில் ஆடி தள்ளுபடி விற்பனை தொடங்கிவிட்டதன் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    13 hrs ago
  • கரூர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தோழர் மு. மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநில துணைத் தலைவர் தோழர் செ. முருகேசன் சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து, மாநிலத் தலைவர் தோழர் ஜெ. ராஜா நிறைவுரையாற்றி, ஒன்றிப்பின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியின் நிறைவில் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் எ. குணசுந்தரி நன்றியுரை வழங்கிய இக்கூட்டத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் நிலஅளவை அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    கரூர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் தமிழ்நாடு நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் தோழர் மு. மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநில துணைத் தலைவர் தோழர் செ. முருகேசன் சிறப்புரையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து, மாநிலத் தலைவர் தோழர் ஜெ. ராஜா நிறைவுரையாற்றி, ஒன்றிப்பின் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். நிகழ்ச்சியின் நிறைவில் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் எ. குணசுந்தரி நன்றியுரை வழங்கிய இக்கூட்டத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் நிலஅளவை அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_Karur Wood's Tv
    Karur Wood's Tv
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    5 hrs ago
  • திண்டுக்கல் வத்தலகுண்டு சாலை முழுவதும் பள்ளங்கள் நிறைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. மேலும், மழை பெய்தால் இப்பகுதியில் சாக்கடை நீர் தேங்கி கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மக்களுக்கு அரசு அதிகாரிகள் செய்துள்ள 'நற்பணிகள்' இந்த அளவிற்கு அதிகமாக உள்ளது என்று பொதுமக்கள் கடுமையான நையாண்டியுடனும் ஆத்திரத்துடனும் குற்றம் சாட்டுகின்றனர். இந்தச் சாலை வழியாக நெடுஞ்சாலைத்துறையினர், அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஏராளமான உள்ளாட்சி நிர்வாகிகள் என பலரும் தினசரி பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பொதுமக்கள் மனு கொடுத்தால் மட்டும்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்றும், இதுவரை கொடுத்த மனுக்கள் மீது எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். சாலை அவலத்தால் நடக்கும் விபத்துகளுக்கு அரசு அதிகாரிகள்தான் காரணம் என்று பொதுமக்கள் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
    1
    திண்டுக்கல் வத்தலகுண்டு சாலை முழுவதும் பள்ளங்கள் நிறைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. மேலும், மழை பெய்தால் இப்பகுதியில் சாக்கடை நீர் தேங்கி கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. மக்களுக்கு அரசு அதிகாரிகள் செய்துள்ள 'நற்பணிகள்' இந்த அளவிற்கு அதிகமாக உள்ளது என்று பொதுமக்கள் கடுமையான நையாண்டியுடனும் ஆத்திரத்துடனும் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தச் சாலை வழியாக நெடுஞ்சாலைத்துறையினர், அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஏராளமான உள்ளாட்சி நிர்வாகிகள் என பலரும் தினசரி பயணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். பொதுமக்கள் மனு கொடுத்தால் மட்டும்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்றும், இதுவரை கொடுத்த மனுக்கள் மீது எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். சாலை அவலத்தால் நடக்கும் விபத்துகளுக்கு அரசு அதிகாரிகள்தான் காரணம் என்று பொதுமக்கள் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    12 hrs ago
  • சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சேரகிரீஸ்வரர் ஆலயத்தில், ஆனி மாத பிரதோஷ தினத்தை முன்னிட்டு இன்று சிறப்பு பிரதோஷ பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அருள்மிகு ஸ்ரீ சேரகிரீஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு, வண்ணமலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்ரீ சேரகிரீஸ்வரர் மற்றும் நந்தி பகவானை வணங்கி தரிசனம் பெற்றனர்.
    1
    சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி அடிவாரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சேரகிரீஸ்வரர் ஆலயத்தில், ஆனி மாத பிரதோஷ தினத்தை முன்னிட்டு இன்று சிறப்பு பிரதோஷ பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அருள்மிகு ஸ்ரீ சேரகிரீஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு, வண்ணமலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ஸ்ரீ சேரகிரீஸ்வரர் மற்றும் நந்தி பகவானை வணங்கி தரிசனம் பெற்றனர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    2 min ago
  • தாரமங்கலம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் சிறப்பாக நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட காளை வாகனத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியாரும் ஒருங்கே அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சிவமேளம் முழங்க, பக்தர்களின் 'சிவாய நம' கோஷம் விண்ணை எட்ட, அம்மையப்பன் திருக்கோவிலைச் சுற்றி திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மையப்பனை தரிசித்து வழிபட்டனர். வழிபாட்டின் நிறைவாக பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பிரதோஷத்தையொட்டி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    1
    தாரமங்கலம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் சிறப்பாக நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட காளை வாகனத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியாரும் ஒருங்கே அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சிவமேளம் முழங்க, பக்தர்களின் 'சிவாய நம' கோஷம் விண்ணை எட்ட, அம்மையப்பன் திருக்கோவிலைச் சுற்றி திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இந்த பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மையப்பனை தரிசித்து வழிபட்டனர். வழிபாட்டின் நிறைவாக பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பிரதோஷத்தையொட்டி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
    user_Murali
    Murali
    Salem, Tamil Nadu•
    2 hrs ago
  • பந்திப்பூர் அருகே காட்டு யானை ஒன்று சரக்கு வாகனத்தை துரத்திய சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையைத் தொடர்ந்து, அச்சுறுத்தல் நிறைந்த காட்டுப் பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    பந்திப்பூர் அருகே காட்டு யானை ஒன்று சரக்கு வாகனத்தை துரத்திய சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையைத் தொடர்ந்து, அச்சுறுத்தல் நிறைந்த காட்டுப் பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்று வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Sathees kumar
    Sathees kumar
    Local News Reporter சத்தியமங்கலம், ஈரோடு, தமிழ்நாடு•
    9 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.