ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையின் சாலையோரம் சிறுத்தை ஒன்று ஒய்யாரமாக நடந்து சென்றுள்ளது. அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் சிலர், சாலையோரத்தில் சிறுத்தை உலா வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, அவர்கள் சிறுத்தையின் நடமாட்டத்தைத் தங்களது செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்த நிலையில், தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதிகளில் சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருவதால், இந்த மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், வனவிலங்குகளைப் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க முயற்சிக்கக் கூடாது என்றும், வழியில் வாகனங்களை நிறுத்தி கூட்டம் சேர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தாளவாடி அடுத்த திம்பம் மலைப்பாதையின் சாலையோரம் சிறுத்தை ஒன்று ஒய்யாரமாக நடந்து சென்றுள்ளது. அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் சிலர், சாலையோரத்தில் சிறுத்தை உலா வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, அவர்கள் சிறுத்தையின் நடமாட்டத்தைத் தங்களது செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்த நிலையில், தற்போது அந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதிகளில் சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருவதால், இந்த மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், வனவிலங்குகளைப் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க முயற்சிக்கக் கூடாது என்றும், வழியில் வாகனங்களை நிறுத்தி கூட்டம் சேர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.1
- ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள சூரியம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில், டாஸ்மாக் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் திடீரென குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் டாஸ்மாக் ஊழியர்களின் இந்தப் போராட்டம் மூன்றாவது நாளாக நீடித்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஊழியர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் சித்தோடு போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து, காவல்துறை வாகனம் மூலமாக அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.1
- கோவை டவுன்ஹால் பகுதியில் ஆடி தள்ளுபடி விற்பனை தொடங்கிவிட்டதன் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.1
- சேலம் அம்மாபேட்டை அடுத்த உரையாப்பட்டி பகுதியில் இருந்து சீலநாயக்கன்பட்டி செல்லும் புறவழிச் சாலையில் உள்ள குமரகிரி மலை ஒட்டிய பகுதி கிராம மக்கள், அடிக்கடி ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்க அங்கு மேம்பாலம் அமைக்கக் கோரி இன்று காலை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பகுதியில் சாலை கடக்கும் போது தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் மேம்பாலம் கட்டக் கோரி பொதுமக்கள் பலமுறை அரசிடம் வலியுறுத்தியும், போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படாததால், பொறுமையிழந்த அப்பகுதி ஆண்கள் மற்றும் பெண்கள் சேலம் - சென்னை புறவழிச்சாலையின் நடுவே அமர்ந்து தங்களுக்கு உடனடியாக மேம்பாலம் கட்டித் தர வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இந்த சாலை மறியல் போராட்டம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அம்மாபேட்டை போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இக்கோரிக்கை குறித்து அரசுக்குத் தெரிவித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பிரதான சாலை என்பதால் இந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசலும் பாதிப்பும் ஏற்பட்டது.1
- கரூர் மாவட்டம் கோவிந்தபாளையத்தில் செந்தில்குமரன் என்பவர் நடத்தி வரும் "பீமா கோச்" என்ற பேருந்து கட்டும் தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகி சேதமடைந்துள்ளன. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொழிற்சாலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அப்போது, அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வந்த சிலர் மது அருந்திவிட்டு, தாங்கள் பயன்படுத்திய வாட்டர் பாட்டில்கள் மற்றும் குப்பைகள் குவிந்திருந்த இடத்தில் தீ வைத்துவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் தீ வேகமாகப் பரவி தொழிற்சாலையிலிருந்த பொருட்கள் எரிந்து நாசமாகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவிய நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- கோயம்புத்தூர் தடாகம் சாலையில் ஓரமாக பைக்கில் சென்று கொண்டிருந்த நபர் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற அரசு பேருந்தின் காரணமாக இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதில் பைக் மீது அரசு பேருந்து மோதிய போதிலும், பைக்கில் வந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.1