logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருவொற்றியூர் மார்க்சீட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் அறிமுக கூட்டம். சென்னை திருவொற்றியூர் மத்திய பகுதி திமுக சார்பில் பகுதி செயலாளர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் மணலி பாடசாலையில் உள்ள பகுதி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மார்க் சீட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல்.சுந்தர்ராஜன் பங்கேற்றம் சிறப்புரை ஆற்றினார். அருகில் மாவட்ட பகுதி வட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

3 hrs ago
user_Reporter M.Krishna Kumar
Reporter M.Krishna Kumar
Local News Reporter திருவொற்றியூர், சென்னை, தமிழ்நாடு•
3 hrs ago

திருவொற்றியூர் மார்க்சீட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் அறிமுக கூட்டம். சென்னை திருவொற்றியூர் மத்திய பகுதி திமுக சார்பில் பகுதி செயலாளர் ஏ.வி.ஆறுமுகம் தலைமையில் மணலி பாடசாலையில் உள்ள பகுதி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மார்க் சீட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எல்.சுந்தர்ராஜன் பங்கேற்றம் சிறப்புரை ஆற்றினார். அருகில் மாவட்ட பகுதி வட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • ​2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் அவர்கள் வீதி வீதியாக சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்  _________ தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் ஏப்ரல் மாதம் 23 ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான  வி.சோமசுந்தரம் அவர்கள் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் அறிவித்துள்ளார்கள். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வி.சோமசுந்தரம் அவர்கள் காஞ்சிபுரம் மாநகர கிழக்கு பகுதி கழக செயலாளர் பாலாஜி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து பெரிய காஞ்சிபுரம் பகுதியில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து வருகிறார். காஞ்சிபுரம் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தவும், வாழ்வாதாரமின்றி அல்லல் படும் பூக்கடை வியாபாரிகள் மற்றும் தெருவோரக்கடை வியாபாரிகள் வாய்க்கை மேம்படவும் முயற்சிகள் எடுக்கப் போவதாக உறுதியளித்து  பிரச்சாரம் மேற்கொண்டு  வருகிறார். காஞ்சிபுரம் மாநகர கிழக்கு பகுதியில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வில் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ,அனைத்துலகு எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம்  உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பொதுமக்களிடம் அதிமுக தேர்தல் அறிக்கைகளில் உள்ள திட்டங்களை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்து வருகிறார்கள். வி.சோமசுந்தரம் அவர்கள் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு முன்னதாக பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் பங்குனி உத்திர விழாவில் சாமி ஊர்வலம் வரும்போது அதிமுக கழகம் பெரும் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக்கொண்டு பிரசாரத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
    1
    ​2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம் அவர்கள் வீதி வீதியாக சென்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் 
_________
தமிழகம், கேரளா, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற உறுப்பினர் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் ஏப்ரல் மாதம் 23 ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான  வி.சோமசுந்தரம் அவர்கள் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வி.சோமசுந்தரம் அவர்கள் காஞ்சிபுரம் மாநகர கிழக்கு பகுதி கழக செயலாளர் பாலாஜி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினருடன் சேர்ந்து பெரிய காஞ்சிபுரம் பகுதியில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்து வருகிறார்.
காஞ்சிபுரம் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தவும், வாழ்வாதாரமின்றி அல்லல் படும் பூக்கடை வியாபாரிகள் மற்றும் தெருவோரக்கடை வியாபாரிகள் வாய்க்கை மேம்படவும் முயற்சிகள் எடுக்கப் போவதாக உறுதியளித்து  பிரச்சாரம் மேற்கொண்டு  வருகிறார்.
காஞ்சிபுரம் மாநகர கிழக்கு பகுதியில் வாக்கு சேகரிக்கும் நிகழ்வில் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் ,அனைத்துலகு எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம்  உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் பொதுமக்களிடம் அதிமுக தேர்தல் அறிக்கைகளில் உள்ள திட்டங்களை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்து வருகிறார்கள்.
வி.சோமசுந்தரம் அவர்கள் பிரச்சாரம் மேற்கொள்வதற்கு முன்னதாக பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் பங்குனி உத்திர விழாவில் சாமி ஊர்வலம் வரும்போது அதிமுக கழகம் பெரும் வெற்றி பெற வேண்டும் என வேண்டிக்கொண்டு பிரசாரத்தை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
    user_E.LAKSHMI KANTHAN
    E.LAKSHMI KANTHAN
    பத்திரிகையாளர் காஞ்சிபுரம், காஞ்சிபுரம், தமிழ்நாடு•
    9 hrs ago
  • Post by Vinayagam Vinayagam
    1
    Post by Vinayagam Vinayagam
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • Post by ஸ்ரீதர் கரைமேடு7708698199
    1
    Post by ஸ்ரீதர் கரைமேடு7708698199
    user_ஸ்ரீதர் கரைமேடு7708698199
    ஸ்ரீதர் கரைமேடு7708698199
    Carpenter புவனகிரி, கடலூர், தமிழ்நாடு•
    7 hrs ago
  • கிருஷ்ணகிரி வடக்கு ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சி, பழைய பேட்டை மற்றும் லைன் கொல்லை ஆகிய பகுதிகளில், கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர்அசோக்குமார் அவர்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
    1
    கிருஷ்ணகிரி வடக்கு ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சி, பழைய பேட்டை மற்றும் லைன் கொல்லை ஆகிய பகுதிகளில், கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர்அசோக்குமார் அவர்கள் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
    user_FAYAZ
    FAYAZ
    பத்திரிகையாளர் கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, தமிழ்நாடு•
    13 hrs ago
  • காவேரிப்பட்டணம் அருகே பட்ட பகலில் கல்லுரி பேருந்தை வழி மறித்து மாணவியை கடத்த முயற்சி. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டிணம் அருகே தனியார் கல்லூரி பேருந்தை வழி மறித்து மது போதையில் பட்ட பகலில் மாணவியை கடத்த முயற்சி செய்து சக மாணவிகள் தடுத்ததால் மது போதையில் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வீடியோ ஆதாரம் கசிந்ததையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்க துரை அவர்கள் உத்தரவின் பேரில் வீடியோவை ஆதாரமாக வைத்து காவல் துறை அதிகாரிகள் வலை வீசி தேடியதில் வீடியோவில் உள்ள நபர்கள் காவேரிப்பட்டிணம் அருகே உள்ள செட்டிமாரம்பட்டி பகுதியை சேர்ந்த சர்க்கரை மகன் தங்கராஜ் என்பது தெரிய வந்தது உடன் கூட்டாளிகள் மூன்று பேரை காவேரிப்பட்டிணம் காவல் நிலைய போலீஸ்சார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையின் துரித நடவடிக்கையால் உடனடியாக கல்லூரி பேருந்தை வழி மறித்து மாணவியை தாக்கிய போதை ஆசாமிகளை பிடித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    காவேரிப்பட்டணம் அருகே பட்ட பகலில் கல்லுரி பேருந்தை வழி மறித்து மாணவியை கடத்த முயற்சி.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டிணம் அருகே தனியார் கல்லூரி பேருந்தை வழி மறித்து மது போதையில் பட்ட பகலில் மாணவியை கடத்த முயற்சி செய்து சக மாணவிகள் தடுத்ததால் மது போதையில் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வீடியோ ஆதாரம் கசிந்ததையடுத்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்க துரை அவர்கள் உத்தரவின் பேரில் வீடியோவை ஆதாரமாக வைத்து காவல் துறை அதிகாரிகள் வலை வீசி தேடியதில் வீடியோவில் உள்ள நபர்கள் காவேரிப்பட்டிணம் அருகே உள்ள செட்டிமாரம்பட்டி பகுதியை சேர்ந்த சர்க்கரை மகன் தங்கராஜ் என்பது தெரிய வந்தது 
உடன் கூட்டாளிகள் மூன்று பேரை காவேரிப்பட்டிணம் காவல் நிலைய போலீஸ்சார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் துறையின் துரித நடவடிக்கையால் உடனடியாக கல்லூரி பேருந்தை வழி மறித்து மாணவியை தாக்கிய போதை ஆசாமிகளை பிடித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_செல்வம்
    செல்வம்
    பத்திரிகையாளர் Krishnagiri, Tamil Nadu•
    20 hrs ago
  • பத்து தோல்வி பழனிச்சாமியை மொத்த தோல்வி பழனிசாமியாக ஆக்கி மக்கள் அடித்து விரட்ட வேண்டும் - அரூர் சட்டமன்ற தனி தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை. தர்மபுரி மாவட்டத்தில் இன்று தேர்தல் பரப்புரையில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் திமுக வேட்பாளரான சண்முகத்தை ஆதரித்து தமிழக துணை முதல்வர், திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்: திமுக மீண்டும் ஆட்சி அமைத்த உடன் இல்லத்தரசி திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் 8000 மதிப்புள்ள ஒரு கூப்பன் வழங்கப்பட்டு அதில் வீட்டுக்கு தேவையான எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கிக் கொள்ள வேண்டும். கடந்த ஐந்து வருடத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நம்பர் ஒன் மாநிலமாக இருந்து வருகிறது. ஒன்றிய அரசு நாம் கேட்கின்ற நிதியை கொடுக்கவில்லை, மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை பார்த்து பார்த்து தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்து.இது தொடர வேண்டும். மீண்டும் அதிமுக அடிமை ஆட்சியை தமிழகத்தில் விட்டு விடக்கூடாது, பிரதமர் மோடி அமித்ஷா ஆகியோர் தமிழ்நாட்டிற்கு வருகின்றனர், தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாத பாஜகவை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும், அதிமுகவுக்கு போடப்படும் போட்டு பாஜகவுக்கு போடும் ஓட்டு. இது தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் நடக்கக்கூடிய தேர்தல், மோடியா தமிழ்நாடா என பார்க்கக்கூடிய தேர்தல். ஒவ்வொரு முறையும் டெல்லியை ஓட ஓட விரட்டிக் கொண்டு இருக்கிறோம், மோடி அமிச்சாவை கூட வாட விரட்டி இருக்கிறோம், இந்த தேர்தலில் மோடியையும் அமிச்சாவையும் ஓட ஓட விரட்ட வேண்டும், ஜாடிக்கேத்த மூடி என பழமொழி இருப்பதாகவும் அதே போல தான் மோடிக்கு ஏத்த எடப்பாடி என இருக்கிறார், மொரட்டு பக்தர் போல மொரட்டு அடிமையை விரட்டி அடிக்க வேண்டும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துபத்து தோல்வி பழனிச்சாமியை மொத்த தோல்வி பழனிச்சாமி அடித்து விரட்ட வேண்டும் என மக்களிடம் பேசினார். இதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் சண்முகத்திற்கு அனைவரும் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
    1
    பத்து தோல்வி பழனிச்சாமியை 
மொத்த தோல்வி பழனிசாமியாக ஆக்கி மக்கள் அடித்து விரட்ட வேண்டும் - அரூர் சட்டமன்ற தனி தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை.
தர்மபுரி மாவட்டத்தில் இன்று தேர்தல் பரப்புரையில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் திமுக வேட்பாளரான சண்முகத்தை ஆதரித்து தமிழக துணை முதல்வர், திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். 
அப்போது பேசிய அவர்: திமுக மீண்டும் ஆட்சி அமைத்த உடன் இல்லத்தரசி திட்டம் செயல்படுத்தப்பட்டு, ஒவ்வொரு வீட்டிற்கும் 8000 மதிப்புள்ள ஒரு கூப்பன் வழங்கப்பட்டு அதில் வீட்டுக்கு தேவையான எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கிக் கொள்ள வேண்டும். கடந்த ஐந்து வருடத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி நம்பர் ஒன் மாநிலமாக இருந்து வருகிறது. ஒன்றிய அரசு நாம் கேட்கின்ற நிதியை கொடுக்கவில்லை, மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை பார்த்து பார்த்து தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்து.இது தொடர வேண்டும்.
மீண்டும் அதிமுக அடிமை ஆட்சியை தமிழகத்தில் விட்டு விடக்கூடாது, பிரதமர் மோடி அமித்ஷா ஆகியோர் தமிழ்நாட்டிற்கு வருகின்றனர், தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாத பாஜகவை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும், அதிமுகவுக்கு போடப்படும் போட்டு பாஜகவுக்கு போடும் ஓட்டு. இது தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் நடக்கக்கூடிய தேர்தல், மோடியா தமிழ்நாடா என பார்க்கக்கூடிய தேர்தல். ஒவ்வொரு முறையும் டெல்லியை ஓட ஓட விரட்டிக் கொண்டு இருக்கிறோம், மோடி அமிச்சாவை கூட வாட விரட்டி இருக்கிறோம், இந்த தேர்தலில் மோடியையும் அமிச்சாவையும் ஓட ஓட விரட்ட வேண்டும், ஜாடிக்கேத்த மூடி என பழமொழி இருப்பதாகவும் அதே போல தான் மோடிக்கு ஏத்த எடப்பாடி என இருக்கிறார், மொரட்டு பக்தர் போல மொரட்டு அடிமையை விரட்டி அடிக்க வேண்டும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துபத்து தோல்வி பழனிச்சாமியை மொத்த தோல்வி பழனிச்சாமி அடித்து விரட்ட வேண்டும் என மக்களிடம் பேசினார். 
இதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் சண்முகத்திற்கு அனைவரும் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    1
    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக
    user_Vinayagam Vinayagam
    Vinayagam Vinayagam
    Real Estate Agent ஆற்காடு, ராணிப்பேட்டை, தமிழ்நாடு•
    6 hrs ago
  • தர்மபுரியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி பேச்சு - திமுகவால் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கான பாமக (பாட்டாளி மக்கள் கட்சி) வேட்பாளர் சௌமியா அன்புமணி இன்று தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினரால் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து தர்மபுரியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கே.பி. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் பாமக மற்றும் அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 5 சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்கள் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பிரச்சார திட்டங்கள், வாக்காளர் தொடர்பு முறைகள், பூத் வாரியாக அமைப்பு வலுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து பேசிய சௌமியா அன்புமணி தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு குற்றங்கள் பெருகி உள்ளது என்றும், தருமபுரி மாவட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்கள், இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்க்காக தொடங்கப்பட்ட சிப்காட் தொழிற்சாலை உள்ளிட்ட முக்கிய திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது, மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைப்போம் என்றும் அப்போது தருமபுரி மாவட்டத்தின் அணைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    1
    தர்மபுரியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி பேச்சு -  திமுகவால் கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும்
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்கான பாமக (பாட்டாளி மக்கள் கட்சி) வேட்பாளர் சௌமியா அன்புமணி இன்று தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தந்தார்.
அவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினரால் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. 
தொடர்ந்து தர்மபுரியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கே.பி. அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. 
இதில் பாமக மற்றும் அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 5 சட்டமன்ற தொகுதிகளின் வேட்பாளர்கள்  முக்கிய நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பிரச்சார திட்டங்கள், வாக்காளர் தொடர்பு முறைகள், பூத் வாரியாக அமைப்பு வலுப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
தொடர்ந்து பேசிய சௌமியா அன்புமணி தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளதாகவும்,
கடந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு குற்றங்கள் பெருகி உள்ளது என்றும்,
தருமபுரி மாவட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்கள், இளைஞர்களின் வேலை வாய்ப்பிற்க்காக தொடங்கப்பட்ட சிப்காட் தொழிற்சாலை உள்ளிட்ட முக்கிய திட்டங்களை  திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது, மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைப்போம் என்றும் அப்போது தருமபுரி மாவட்டத்தின் அணைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகள்  மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் தங்க கதிரவனும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பாத்திமா பர்ஹானாவும் போட்டியிடுகின்றனர்.அரசியலில் இரு துருவ பிரச்சாரம் மேற்கொள்ளும் இருவரும் இரவு திட்டச்சேரி பகுதியில் வாக்கு சேகரிப்பு ஈடுபட்டனர் அப்போது கடைத்தெரு பகுதியில் இரு வேட்பாளர்களும் நேருக்கு நேர் சந்தித்தபோது அரசியல் நாகரீகத்தோடு தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆரோக்கியமாக விவாதித்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர் அதிமுக வேட்பாளர் தங்க கதிரவன் நாம் தமிழர் கட்சிவேட்பாளர் பாத்திமா பர்கானாவிடம் உங்கள் தந்தை தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது எனக்கு நண்பர் என்றும் சிறுவயதிலிருந்து தெரியும் என்றும் கூறி நினைவுகளை பகிர்ந்து கொண்டார்சுமார் 15 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பு மற்றும் உரையாடல் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது
    1
    நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக சார்பில் தங்க கதிரவனும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பாத்திமா பர்ஹானாவும் போட்டியிடுகின்றனர்.அரசியலில் இரு துருவ பிரச்சாரம் மேற்கொள்ளும் இருவரும் இரவு திட்டச்சேரி பகுதியில் வாக்கு சேகரிப்பு ஈடுபட்டனர் அப்போது கடைத்தெரு பகுதியில் இரு வேட்பாளர்களும் நேருக்கு நேர் சந்தித்தபோது அரசியல் நாகரீகத்தோடு தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆரோக்கியமாக விவாதித்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர் அதிமுக வேட்பாளர் தங்க கதிரவன் நாம் தமிழர் கட்சிவேட்பாளர் பாத்திமா பர்கானாவிடம் உங்கள் தந்தை தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது எனக்கு நண்பர் என்றும் சிறுவயதிலிருந்து தெரியும் என்றும் கூறி நினைவுகளை பகிர்ந்து கொண்டார்சுமார் 15 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பு மற்றும் உரையாடல் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது
    user_Chakravarthy
    Chakravarthy
    Nagapattinam, Tamil Nadu•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.