logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ஆண்டிபட்டி பகுதியில் பல ஆண்டுகளாக இருந்து வந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை பேரூராட்சி அதிகாரிகள் இணைந்து ஈடுபட்டனர்- ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை வழியாக பெரியகுளம் மாநில நெடுஞ்சாலையோர பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் இருக்கும் நிலையில் இதனால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்த நிலையில் ஆண்டிபட்டி நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் இணைந்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் ஜேசிபி எந்திரம் மூலம் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது ஒரு சிலர் தங்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்காமல் திடீரென ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபடுவதாக புகார் தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்தனர் இருப்பினும் தொடர்ந்து காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்

14 hrs ago
user_VIGNESH
VIGNESH
Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
14 hrs ago

ஆண்டிபட்டி பகுதியில் பல ஆண்டுகளாக இருந்து வந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை பேரூராட்சி அதிகாரிகள் இணைந்து ஈடுபட்டனர்- ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை வழியாக பெரியகுளம் மாநில நெடுஞ்சாலையோர பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் இருக்கும் நிலையில் இதனால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்த நிலையில் ஆண்டிபட்டி நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் இணைந்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் ஜேசிபி எந்திரம் மூலம் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது ஒரு சிலர் தங்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்காமல் திடீரென ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபடுவதாக புகார் தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்தனர் இருப்பினும் தொடர்ந்து காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • ஆண்டிபட்டி பகுதியில் பல ஆண்டுகளாக இருந்து வந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை பேரூராட்சி அதிகாரிகள் இணைந்து ஈடுபட்டனர்- ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை வழியாக பெரியகுளம் மாநில நெடுஞ்சாலையோர பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் இருக்கும் நிலையில் இதனால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்த நிலையில் ஆண்டிபட்டி நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் இணைந்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர் ஜேசிபி எந்திரம் மூலம் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது ஒரு சிலர் தங்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்காமல் திடீரென ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபடுவதாக புகார் தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்தனர் இருப்பினும் தொடர்ந்து காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்
    1
    ஆண்டிபட்டி பகுதியில் பல ஆண்டுகளாக இருந்து வந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை பேரூராட்சி அதிகாரிகள் இணைந்து ஈடுபட்டனர்- ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை வழியாக பெரியகுளம் மாநில நெடுஞ்சாலையோர பகுதிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் இருக்கும் நிலையில் இதனால் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர்
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடர்ந்து கோரிக்கை எழுந்து வந்த நிலையில் 
ஆண்டிபட்டி நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் இணைந்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்
ஜேசிபி எந்திரம் மூலம் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது 
இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது ஒரு சிலர் தங்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்காமல் திடீரென ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபடுவதாக புகார் தெரிவித்து எதிர்ப்பு தெரிவித்தனர் 
இருப்பினும் தொடர்ந்து காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • 100 அடி தேசிய கொடி ஏற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் நினைவாக 100 அடி உயர தேசியக் கொடி ஏற்ற கோரிக்கை கடந்த 5 ஆண்டுகளாக அனுமதி மறுத்த மாவட்ட நிர்வாகம் நீதிமன்ற உத்தரவின்படி பெரியகுளத்தில் திரண்ட பொதுமக்கள் உண்ணாவிரதம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் தியாகராஜன். இவர் கடந்த 2003-ஆம் ஆண்டு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்தார். அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையிலும், எல்லையில் வீரமரணம் அடைந்த அனைத்து ராணுவ வீரர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையிலும், தாமரைக்குளம் அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் மலைப் பகுதியில் 100 அடி உயர தேசியக் கொடி அமைக்க அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முடிவெடுத்தணர். இதற்காக மாவட்ட நிர்வாகம், காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினரிடம் கடந்த 5 ஆண்டுகளாக அனுமதி கேட்கப்பட்டும், தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பெரியகுளம் நகராட்சி அலுவலகம் அருகே அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது. மேலும் நீதிமன்ற உத்தரவின்படி, தாமரைக்குளம் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். போராட்டத்தின் தொடக்கமாக, வீரமரணம் அடைந்த தியாகராஜனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நாட்டிற்காக உயிர்நீத்த வீரருக்கு மரியாதை செய்யக் கூட 5 ஆண்டுகளாக அனுமதி மறுப்பது மிகுந்த வேதனையளிப்பதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவலை தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, 100 அடி உயர தேசியக் கொடியை ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். நாட்டின் பாதுகாப்புக்காக உயிரைக் கொடுத்த தியாகிக்கு மரியாதை செலுத்தும் வகையில் தேசியக் கொடி ஏற்றக் கேட்கிறோம். இதற்கு 5 ஆண்டுகளாக அனுமதி தராமல் அலைக்கழிப்பது வேதனை தருகிறது. அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்." பேட்டி : சரவணன் முன்னால் ராணுவ வீரர்.
    1
    100 அடி தேசிய கொடி ஏற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்
வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் நினைவாக 100 அடி உயர தேசியக் கொடி ஏற்ற கோரிக்கை
கடந்த 5 ஆண்டுகளாக அனுமதி மறுத்த மாவட்ட நிர்வாகம்  நீதிமன்ற உத்தரவின்படி பெரியகுளத்தில் திரண்ட பொதுமக்கள் உண்ணாவிரதம்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் தியாகராஜன். இவர் கடந்த 2003-ஆம் ஆண்டு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்தார்.
அவரது தியாகத்தை நினைவுகூரும் வகையிலும், எல்லையில் வீரமரணம் அடைந்த அனைத்து ராணுவ வீரர்களுக்கும் மரியாதை செலுத்தும் வகையிலும், தாமரைக்குளம் அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோயில் மலைப் பகுதியில் 100 அடி உயர தேசியக் கொடி அமைக்க அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முடிவெடுத்தணர்.
இதற்காக மாவட்ட நிர்வாகம், காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினரிடம் கடந்த 5 ஆண்டுகளாக அனுமதி கேட்கப்பட்டும், தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பெரியகுளம் நகராட்சி அலுவலகம் அருகே அமைதியான முறையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டது.
மேலும் நீதிமன்ற உத்தரவின்படி, தாமரைக்குளம் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் ஒன்றிணைந்து உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
போராட்டத்தின் தொடக்கமாக, வீரமரணம் அடைந்த தியாகராஜனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாட்டிற்காக உயிர்நீத்த வீரருக்கு மரியாதை செய்யக் கூட 5 ஆண்டுகளாக அனுமதி மறுப்பது மிகுந்த வேதனையளிப்பதாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கவலை தெரிவித்தனர். 
மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, 100 அடி உயர தேசியக் கொடியை ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டின் பாதுகாப்புக்காக உயிரைக் கொடுத்த தியாகிக்கு மரியாதை செலுத்தும் வகையில் தேசியக் கொடி ஏற்றக் கேட்கிறோம். இதற்கு 5 ஆண்டுகளாக அனுமதி தராமல் அலைக்கழிப்பது வேதனை தருகிறது. அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்."
பேட்டி : சரவணன் முன்னால்  ராணுவ வீரர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • கொடைக்கானல்-பூம்பாறை தூய்மை காவலர் ராமர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி காத்திருப்பு போராட்டம். திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறை அருகில் திண்டுக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம்.கொடைக்கானல் பூம்பாறை தூய்மை காவலர் ராமர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் கொலையான ராமரின் பெற்றோர்களை மிரட்டும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் விவசாயம் செய்து வரும் ராமர் இவரது தாய்,தந்தை பூம்பாறை ஊராட்சியில் தூய்மை காவலராக பணி செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாக ராமரை உடலில் பல இடங்களில் வெட்டிக்கொலை செய்துள்ளனர். கொடைக்கானல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    கொடைக்கானல்-பூம்பாறை தூய்மை காவலர் ராமர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரி காத்திருப்பு போராட்டம்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை  பிணவறை  அருகில் திண்டுக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம்.கொடைக்கானல் பூம்பாறை தூய்மை காவலர் ராமர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் கொலையான  ராமரின் பெற்றோர்களை மிரட்டும்  சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் விவசாயம் செய்து வரும் ராமர் இவரது தாய்,தந்தை பூம்பாறை ஊராட்சியில் தூய்மை காவலராக பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு
கூர்மையான ஆயுதங்களால் கொடூரமாக ராமரை உடலில் பல இடங்களில் வெட்டிக்கொலை செய்துள்ளனர்.
கொடைக்கானல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    3 hrs ago
  • ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு! ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு! திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பழைய பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் த/பெ பாண்டி கடந்த 7 ந் தேதி பூட்டை உடைத்து‌ பீரோவிலிருந்த 32 1/2 பவுன் நகை மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர் திருடி சென்றார். இது குறித்து ஒட்டன்சத்திரம் கோட்ட காவல் துணை காணிப்பாளர் கார்த்திகேயன் ஆய்வாளர் லிங்கபாண்டியன் சார்பு ஆய்வாளர் சிவராஜ் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவு ஆகி உள்ள காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் திண்டுக்கல் அருகே கதிரியன் குளத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஈடுபட்டதும் அவர் மற்றொரு வழக்கில் திருட்டு வழக்கில் கைதாகி மதுரை சிறையில் இருப்பதும் தெரியவந்தது இதையடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர் .அப்போது அவர் பாலகிருஷ்ணன் வீட்டில் திருடிய இத ஒப்பிக்கொண்டதை அடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 32 1/2 பவுன் நகைகள் 280 கிராம் வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர் குற்றவாளி விரைந்து செயல்பட்டு கைது செய்து நகைகளை முழுவதையும் மீட்ட ஒட்டன்சத்திரம் போலீசாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.
    2
    ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு!
ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு! 
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பழைய பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் த/பெ பாண்டி கடந்த 7 ந் தேதி  பூட்டை உடைத்து‌ பீரோவிலிருந்த 32 1/2  பவுன் நகை மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர் திருடி சென்றார். இது குறித்து  ஒட்டன்சத்திரம் கோட்ட காவல் துணை காணிப்பாளர் கார்த்திகேயன்  ஆய்வாளர் லிங்கபாண்டியன் சார்பு ஆய்வாளர் சிவராஜ் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.   இப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவு ஆகி உள்ள காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் திண்டுக்கல் அருகே கதிரியன் குளத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஈடுபட்டதும் அவர் மற்றொரு வழக்கில் திருட்டு வழக்கில் கைதாகி மதுரை சிறையில் இருப்பதும் தெரியவந்தது இதையடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர் .அப்போது அவர் பாலகிருஷ்ணன் வீட்டில் திருடிய இத ஒப்பிக்கொண்டதை அடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 32 1/2  பவுன்  நகைகள் 280 கிராம்  வெள்ளி பொருட்களை போலீசார்  பறிமுதல் செய்தனர் குற்றவாளி விரைந்து செயல்பட்டு கைது செய்து நகைகளை முழுவதையும் மீட்ட ஒட்டன்சத்திரம் போலீசாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.
    user_Elangovan
    Elangovan
    Local News Reporter ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    11 hrs ago
  • ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு அருள்மிகு கௌமாரியம்மன் சிறப்பு பூஜை *ஆடி மாதத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்* தேனி மாவட்டம் தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது . மிகவும் புகழ்பெற்ற பழ நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோயிலில் இன்று ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனை தரிசனம் செய்வதற்கு காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர். அம்மனுக்கு பட்டுடுத்தி சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த கௌமாரியம்மன் தரிசனம் செய்வதற்காக பெண்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர் . பக்தர்களின் வசதிக்கேற்ப கோயில் அறநிலையத்துறை சார்பில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டும் பொதுமக்கள் ஒரே வரிசையில் சென்று வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வீரபாண்டி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் . காப்புக் கட்டி விரதம் ஏற்பட்ட பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து கோயில் வளாகத்தில் திருவிளக்கை ஏற்றிச் சென்றனர்.
    1
    ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு அருள்மிகு கௌமாரியம்மன் சிறப்பு பூஜை
*ஆடி மாதத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்*
தேனி மாவட்டம் தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது .
மிகவும் புகழ்பெற்ற பழ நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோயிலில் இன்று ஆடி மாத  வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனை தரிசனம் செய்வதற்கு காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர்.
அம்மனுக்கு பட்டுடுத்தி சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த கௌமாரியம்மன் தரிசனம் செய்வதற்காக பெண்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர் .
பக்தர்களின் வசதிக்கேற்ப கோயில் அறநிலையத்துறை சார்பில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டும் பொதுமக்கள் ஒரே வரிசையில் சென்று வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வீரபாண்டி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .
காப்புக் கட்டி விரதம் ஏற்பட்ட பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து கோயில் வளாகத்தில் திருவிளக்கை ஏற்றிச் சென்றனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் ஸ்ரீராமபுரத்தில் மீண்டும் மோர் மிளகாய் கழிவுகள் கொட்டப்பட்டதால் பரபரப்பு-* *அதிகாரிகள் நேரில் ஆய்வு, காவல்துறையினர் விசாரணை திண்டுக்கல், ஜூலை 31: திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டத்திற்குட்பட்ட ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் ஸ்ரீராமபுரம் பகுதியில் இயங்கி வரும் மோர் மிளகாய் நிறுவனங்களை நிரந்தரமாக மூடக்கோரி, கடந்த 28/07/2026 மூன்று நாட்களுக்கு முன்பு அகில இந்திய விவசாய சங்கம் தலைமையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில், விவசாய நிலங்களிலும் வனத்துறைக்குச் சொந்தமான பகுதிகளிலும் மோர் மிளகாய் கழிவுகள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன், சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்திற்கும் கடுமையான பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், போராட்டம் நடைபெற்ற மூன்று நாட்களிலேயே மீண்டும் அதே பகுதிகளில் தனியார் விவசாய நிலங்களிலும், வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களிலும் மோர் மிளகாய் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கழிவுகள் கொட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், உடனடியாக அகில இந்திய விவசாய சங்க நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, விவசாய சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஸ்ரீராமபுரம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு உடனடியாக புகார் அளித்தனர். புகாரின் பேரில், ஸ்ரீராமபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கல்பனா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்டு, சம்பவம் தொடர்பாக தகவல்களை சேகரித்தார். இதனைத் தொடர்ந்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, மோர் மிளகாய் கழிவுகளை சட்டவிரோதமாக கொட்டியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் கழிவுகளை கொட்டுவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். ஸ்ரீராமபுரம் பகுதியில் மீண்டும் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் எடுக்கவுள்ள நடவடிக்கை மீது அப்பகுதி மக்களின் கவனம் திரும்பியுள்ளது..
    1
    ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் ஸ்ரீராமபுரத்தில் மீண்டும் மோர் மிளகாய் கழிவுகள் கொட்டப்பட்டதால் பரபரப்பு-* *அதிகாரிகள் நேரில் ஆய்வு, காவல்துறையினர் விசாரணை
திண்டுக்கல், ஜூலை 31:
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டத்திற்குட்பட்ட  ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் ஸ்ரீராமபுரம் பகுதியில் இயங்கி வரும் மோர் மிளகாய் நிறுவனங்களை நிரந்தரமாக மூடக்கோரி, கடந்த 28/07/2026 மூன்று நாட்களுக்கு முன்பு அகில இந்திய விவசாய சங்கம் தலைமையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில், விவசாய நிலங்களிலும் வனத்துறைக்குச் சொந்தமான பகுதிகளிலும் மோர் மிளகாய் கழிவுகள் கொட்டப்படுவதால் நிலத்தடி நீர் மாசுபடுவதுடன், சுற்றுச்சூழல் மற்றும் விவசாயத்திற்கும் கடுமையான பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், போராட்டம் நடைபெற்ற மூன்று நாட்களிலேயே மீண்டும் அதே பகுதிகளில் தனியார் விவசாய நிலங்களிலும், வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களிலும் மோர் மிளகாய் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். கழிவுகள் கொட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விவசாயிகள், உடனடியாக அகில இந்திய விவசாய சங்க நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, விவசாய சங்க நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஸ்ரீராமபுரம் பேரூராட்சி செயல் அலுவலருக்கு உடனடியாக புகார் அளித்தனர்.
புகாரின் பேரில், ஸ்ரீராமபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கல்பனா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்டு, சம்பவம் தொடர்பாக தகவல்களை சேகரித்தார்.
இதனைத் தொடர்ந்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து, மோர் மிளகாய் கழிவுகளை சட்டவிரோதமாக கொட்டியவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் கழிவுகளை கொட்டுவதை நிரந்தரமாக தடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஸ்ரீராமபுரம் பகுதியில் மீண்டும் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் எடுக்கவுள்ள நடவடிக்கை மீது அப்பகுதி மக்களின் கவனம் திரும்பியுள்ளது..
    user_ALL INDIA REPORTER KPA
    ALL INDIA REPORTER KPA
    ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    11 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.