திருச்செங்கோடு நாராயணா இ டெக்னோ ஸ்கூல் மற்றும் ஜேபி ஆனந்த் செஸ் அகாடமி ஆகியவை இணைந்து நடத்திய 6வது மாவட்ட அளவிலான ஓபன் அண்ட் சில்ட்ரன்ஸ் செஸ் திருவிழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. எட்டு வயது, பதினோரு வயது, 14 வயதுக்கு கீழ் உள்ளோருக்கான போட்டி மற்றும் ஓபன் கேட்டகிரி, செஸ் டெஸ்ட் என்னும் ஐந்து வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான செஸ் போட்டி என ஐந்து பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டியில் 185 இளைஞர்கள் இளம்பெண்கள் குழந்தைகள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஐந்து பிரிவுகளிலும் வெற்றி பெற்ற தலா 25 பேருக்கு என மொத்தம் 125 பேருக்குபரிசுகள் கோப்பைகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.மேலும் சிறப்பு பரிசுகளாக குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்ட 9 பேருக்குஸ்மார்ட் வாட்ச் கள் பரிசாக வழங்கப்பட்டது. செஸ் டெஸ்ட்போட்டியில் வெற்றி பெற்ற யுவதி கயன் ஆதித் செழியா ஆகியோருக்குமுறையை முதல் இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசுகளும் மேலும் 6 பேருக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது எட்டு வயதுக்கு உட்பட்டவர்களுக்கானபிரிவில் ஷியாம் விநாயக், சூர்யா, ஜிதிக்க்ஷா ஸ்ரீஆகியோருக்கு முதல் மூன்று இடங்களுக்கான பரிசுகளும் மேலும் 22 பேருக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது 11 வயதுக்குட்பட்டவருக்கான பிரிவில் அத்விக் ராஜன் சாய்,கனிஷ்க்,ரியா உள்ளிட்ட 25 பேருக்கும்பரிசுகள் வழங்கப்பட்டது 14 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் ஹரி சரண், அஸ்வதா ஜெய், சர்வேஷ் பிரவீன்,ஆகியோர் உள்ளிட்ட 25 பேருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது ஓபன் கேட்டகிரி பிரிவில் ஹேம் ஹர்சந் ,முராஹரி,ஜஸ்வின் ஆதித்யா ஆகியோர் உள்ளிட்ட 15 பேருக்கு பரிசுகள் வழங்கப் பட்டது.பரிசுப் பொருட்களாக ரொக்கப் பரிசு கோப்பைகள் பழக்கங்கள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பாளர் சான்றிதழ் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் நாராயணாஇ டெக்னோ பள்ளியின் உதவி பொது மேலாளர் பாலா பள்ளி முதல்வர் சசிகலா உதவி முதல்வர்கள் ஷர்மிளா ஷாலினி வள்ளிமுத்து ஆகியோர் உள்ளிட்ட உடற்பயிற்சி ஆசிரியர்கள் விளையாட்டுப் பயிற்சி ஆசிரியர்கள் போட்டி நடத்தினார்கள் பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

- தர்மபுரி நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரூ.76 லட்சம் மதிப்புள்ள திட்டப் பணிகளுக்கு நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது1
- மேற்கு திமுக மாவட்ட கழக சார்பில் திராவிட பொங்கல் விழா நடைபெறுகிறது இவ்விழாவில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது1
- பென்னாகரம் அருகே தொடர் மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகம் முற்றுகை சாலை மறியல தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆறு மாதமாக தொடர் மின்வெட்டு உள்ளது. தினமும் 10 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. தொடர் மின்வெட்டின் காரணமாக விவசாயிகள் தொழிலாளர்கள் கடும் வேதனை. இதனை கண்டித்து இன்று 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏரியூர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் உரிய பதிலளிக்காமல் சென்றதால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், மின்வாரிய அலுவலகம் எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மின்வாரிய அலுவலகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஏரியூர் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தின் காரணமாக, சுமார் ஒரு மணி நேரம் ஏரியூர் பென்னாகரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது1
- திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட புதிய காவல் நிலையம் எதிரே மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயில் இன்று முருகனுக்கு உகந்த நாள் செவ்வாய்க்கிழமை முன்னிட்டு 16 வகை அனைத்து திரவியங்கள் பயன்படுத்தி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள முருகன் கடவுளை ஏராளமான பக்தர்கள் அருள் பெற்று சென்றனர்1
- வேடசந்தூர் கிராமங்களில் கரூர் MP ஜோதிமணி அவர்கள் மகாத்மா காந்தி 100 நாள் வேலை குறித்து விளக்கம்..... வேடசந்தூர் ஒன்றியத்தில் கரூர் MP ஜோதிமணி 100 நாள் வேலை பார்க்கும் பொதுமக்களிடம் கருக்காம்பட்டி, அய்யர்மடம், குட்டம், தேவிநாயக்கன்பட்டி, விருதலைப்பட்டி, கல்வார்பட்டி கிராம பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசுரம் வழங்கி விளக்கமாக பேசினார் இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் மாநில பொதுக்குழு உறுப்பினர் வடமதுரை வட்டார காங்கிரஸ் தலைவர் மாநில மாவட்ட ஒன்றிய கிராம காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் வேடசந்தூர் தொகுதி காங்கிரஸ் கட்சி செய்தி தகவல் தொடர்பாளர் கலந்து கொண்டனர் வேடசந்தூர் கூம்பூர் காவல்துறை சார்பு ஆய்வாளர்கள் உடனிருந்தனர்1
- திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் இனம் கல் பாளையம் கிராமத்தில் பள்ளி எதிரே குப்பை போல் குறைந்திருக்கும் குப்பைகள் பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்து இன்னும் ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் மிகவும் அச்சமடைகிறார்கள் அரசு அதிகாரிகள் கண்டு கொள்வாரா பொறுத்திருந்து பார்ப்போம்2
- திமுக தொண்டர் அணி அமைப்பாளருக்கு அறிவாள் வெட்டு, காவல்த்துறையினர் விசாரணை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர் 7வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், முன்னாள் நகர் மன்ற உறுப்பினரான இவர் திமுகவில் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளராக பதவியில் இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது மகன் கடந்த 15 தினங்களுக்கு முன்பு காணாமல் போய் உள்ளார். அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்களுக்கும், ஆறுமுகத்திற்கும் மகன் காணாமல் போனது தொடர்பாக வாக்குவாதம் இருந்து வந்துள்ளது. இதனை காரணம் காட்டி வீட்டிலிருந்த ஆறுமுகத்தை மர்ம நபர்கள் சிலர் அறிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. காயமடைந்த ஆறுமுகம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து காவல்த்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆறு மாதமாக தொடர் மின்வெட்டு உள்ளது. தினமும் 10 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. தொடர் மின்வெட்டின் காரணமாக விவசாயிகள் தொழிலாளர்கள் கடும் வேதனை. இதனை கண்டித்து இன்று 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏரியூர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.1
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் பருவமழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக 1,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 2000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று (ஜன.06) செவ்வாய்க்கிழமை காலை 11 மணி நிலவரப்படி வினாடிக்கு 3000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதாக, மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.1