Shuru
Apke Nagar Ki App…
கபிலர்மலை ஒன்றியம் ஜேடர்பாளையத்தில் வேட்டுவக்கவுண்டர் இன மாமன்னர் அல்லாள இளைய நாயகர் அவர்களின் பிறந்தநாள் விழா தை 1ம் தேதியன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அந்நிகழ்விற்கான அழைப்பிதழை புதிய திராவிட கழகம் சார்பில் தமிழ்நாடு அரசு சீர்மரபின நலவாரிய உறுப்பினர் K.S.ராஜ்கவுண்டர் அவர்கள் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி அவர்களிடம் வழங்கினார். இந்த நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.
DHINESH KUMAR
கபிலர்மலை ஒன்றியம் ஜேடர்பாளையத்தில் வேட்டுவக்கவுண்டர் இன மாமன்னர் அல்லாள இளைய நாயகர் அவர்களின் பிறந்தநாள் விழா தை 1ம் தேதியன்று அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அந்நிகழ்விற்கான அழைப்பிதழை புதிய திராவிட கழகம் சார்பில் தமிழ்நாடு அரசு சீர்மரபின நலவாரிய உறுப்பினர் K.S.ராஜ்கவுண்டர் அவர்கள் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி அவர்களிடம் வழங்கினார். இந்த நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தமிழ்நாடு கியோகுஷின் சின்னு'ஸ் கராத்தே அசோசியேசன் & வேர்ல்டு சோ கியோகுஷின் கராத்தே சார்பாக தமிழ்நாட்டில் முதன்முறையாக மாநில அளவிலான லோ-கிக் கராத்தே கராத்தே போட்டி சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. சேலம், ஈரோடு, நாமக்கல் ,தர்மபுரி ,கிருஷ்ணகிரி , சென்னை, கோயம்புத்தூர் ,வேலூர், திருச்சி ஆகிய மாவட்டத்திலிருந்து 100 மேற்பட்ட கராத்தே வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். மேலும் மாநில அளவில் நடைபெற்ற லோ-கிக் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற கராத்தே வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது. இதில் தலைமை பயிற்சியாளர் சின்னுசாமி, யுனிவர்சல் பள்ளியின் தாளாளர் சீனிவாசன்,அ.தி.மு.க. நகர செயலாளர் முருகன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி செல்வக்குமரன், மருத்துவர்கள் கோகுலகிருஷ்ணன், ஸ்ரீபாலாஜி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.1
- ஆத்தூர் உழவர் சந்தையில் விவசாயிகள் உள்ளிறுப்பு போராட்டம்.7
- கரூர் மாவட்ட திமுக செயலாளர் வி. செந்தில் பாலாஜி ஆணைக்கிணங்க, நாளை மறுநாள்(11/01/29) நடைபெறும் திமுக திராவிட பொங்கல் சமத்துவ விளையாட்டு போட்டி நடைபெறும் இடமான தமிழ் நகரில் விளையாட்டு மைதானத்தை இன்று தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர் தலைமையில் பணியாட்கள் மற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.1
- சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ரஸ்க் கம்பெனி தீ விபத்து ஏராளமான பொருட்கள் எரிந்து சேதம் காரைக்குடி செஞ்சை சண்முகா நகர் பகுதியில் வணிக பயன்பாட்டிற்கு என்று பதிவு செய்யாமல் வீட்டில் ரஸ்க் கம்பெனி செயல்படுவதாக, மாநகராட்சி அதிகாரிகள் கடந்த நவம்பர் மாதம் ரஸ்க் கம்பெனியை பூட்டி சீல் வைத்தனர்.ஆனால் மாநகராட்சி சீல் வைத்தும் சட்ட விரோதமாக அதே தளத்தில், ரஸ்க் கம்பெனியில் பணிக்கு இருந்த வடமாநில இளைஞர்கள் சிலர் தங்கி உணவு சமைத்து சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் மாலை ரஸ்க் கம்பெனியில் இருந்து, அதிக (புகை வந்த நிலையில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது, இதில் ரஸ்க் தயாரிக்கும் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் எரிந்தது.இதனை அடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் உடனடியாக வந்து தீயை அணைத்தனர். மேலும் ரஸ்க் கம்பெனி பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்த நிலையில் எதற்காக வட மாநில இளைஞர்கள் தங்கி இருந்தார்கள் என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்1
- முள்ளங்கி விலை விவசாயிகள் கவலை தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் முள்ளங்கி சாகுபடி தற்போது நடைபெற்று வருகிறது விளைச்சல் அதிகரிப்பின் காரணமாக முள்ளங்கி விலை குறைந்துள்ளது விவசாயிடமிருந்து ஒரு கிலோ முள்ளங்கி 5 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டு வெளி மார்கெட்டுகளில் 10 ரூபாய் முதல் 12 ரூபாய் வரை விற்பனை ஆகிறது இதனால் விவசாயிகளுக்கு முள்ளங்கி பயிரிட்டு மற்றும் அறுவடை செய்த செய்த அடிப்படை ஆதார விலை கூட கிடைக்காத நிலையில் பலரும் கால்நடைகளுக்கு உணவாக முள்ளங்கிகளை அளித்து வருவது கவலை அளிக்கும் நிகழ்வாக உள்ளது. அரசு ஏதேனும் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.1
- தருமபுரி அரசு கலைக்கல்லூரி கலையரங்கத்தில் உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்ட துவக்க விழா நிகழ்ச்சி காணொலி காட்சி வாயிலாக ஒளிபரப்பபட்டதை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (09.01.2026) கலந்து கொண்டு, பார்வையிட்டு, தன்னார்வலர்களுக்கு தொப்பி மற்றும் கைபேசி இணைப்புகளை வழங்கினார்கள். இந்நிகழ்ச்சிக்கு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி அவர்கள் முன்னிலை வகித்தார். இத்திட்டத்தில் 1079 தன்னார்வலர்களை கொண்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள 4,60,673 குடும்பங்களை சார்ந்த உறுப்பினர்களை நேரில் சந்தித்து 30 நாட்களில் நமது மாநிலத்தில் செயல்படுத்தப்படும் சுமார் 65 திட்டங்களின் செயல்பாடுகள்/பயன்கள் மற்றும் அத்திட்டங்களின் பின் மதிப்பீடுகள் தொடர்பாகவும், மேலும் குடும்ப உறுப்பினர்களின் முக்கிய 3 கனவுகளை கணக்கெடுப்பின் மூலம் கண்டறிந்து 2030 ஆம் ஆண்டிற்குள் நிறைவேற்றும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி நகர மன்ற தலைவர் திருமதி.லட்சுமி நாட்டான் மாது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.கவிதா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி.காயத்ரி, மகளிர் திட்ட இயக்குநர் திருமதி.அ.லலிதா, மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் இந்நாள், முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.1
- புதுக்கோட்டை மாவட்டம் பேராவூரணியில் இருந்து தேங்காய் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி நள்ளிரவில் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த நொச்சிமேடு என்ற இடத்தில் வந்தபோது, லாரியை அதன் டிரைவர் திருப்ப முயன்றார். அப்போது, பின்னால் மன்னார் குடியில் இருந்து கம்பம் நோக்கி சென்ற அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி சேதமடைத்துடன் இடிபாடுகளுக்குள் பஸ் டிரைவர் சிக்கி கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் லாரி சாலையில் கவிழ்ந்து அதிலிருந்த தேங்காயும் சாலையில் சிதறிக் கிடந்தது. இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.1
- கொங்கணபுரம், திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாரந்தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடக்கும். இந்நிலையில் இன்று பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தேங்காய் பருப்பு வாங்க வந்தனர். இதில் மொத்தம் 28 மூட்டை தேங்காய் பருப்பு ரூ.1.31 லட்சத்திற்கு விற்பனையானது. முதல் ரகம் ரூ.120.10 முதல் ரூ.186 வரை, இரண்டாம் ரகம் ரூ.100.10 முதல் ரூ.115.10 வரை விற்பனை செய்யப்பட்டது.1