தூத்துக்குடி குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மழைநீர் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், குளங்கள் மற்றும் பாசனக் கால்வாய்களை தூர்வாருதல், தடுப்பணைகள் மற்றும் கால்வாய் மடைகளைச் சீரமைத்தல், வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். மேலும், கருமேனியாற்றில் தடுப்பணைகளைச் சீரமைத்து தண்ணீரைத் தேக்குதல், தாமிரவருணி பாசனக் கால்வாய்கள் மற்றும் குளங்களில் வளர்ந்துள்ள அமலைச் செடிகளை அகற்றுதல், பாசன நீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பது, கடைமடை குளங்களுக்கு தண்ணீர் வழங்குதல், தரமான உரங்களை வழங்குதல், கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் தள்ளுபடி விவரங்களை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. விவசாய நிலங்களைச் சீரமைக்க மானியம் வழங்குதல், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களை விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்துதல், விவசாயிகள் பயன்படுத்தும் சாலைகளைச் சீரமைத்தல், பேருந்து வழித்தடங்களை நீட்டித்தல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, விவசாயிகள் சார்பில் 151 கோரிக்கை மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், நீர்வளத் துறை செயற்பொறியாளர் தங்கராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மனோரஞ்சிதம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மழைநீர் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், குளங்கள் மற்றும் பாசனக் கால்வாய்களை தூர்வாருதல், தடுப்பணைகள் மற்றும் கால்வாய் மடைகளைச் சீரமைத்தல், வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். மேலும், கருமேனியாற்றில் தடுப்பணைகளைச் சீரமைத்து தண்ணீரைத் தேக்குதல், தாமிரவருணி பாசனக் கால்வாய்கள் மற்றும் குளங்களில் வளர்ந்துள்ள அமலைச் செடிகளை அகற்றுதல், பாசன நீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பது, கடைமடை குளங்களுக்கு தண்ணீர் வழங்குதல், தரமான உரங்களை வழங்குதல், கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் தள்ளுபடி விவரங்களை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. விவசாய நிலங்களைச் சீரமைக்க மானியம் வழங்குதல், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களை விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்துதல், விவசாயிகள் பயன்படுத்தும் சாலைகளைச் சீரமைத்தல், பேருந்து வழித்தடங்களை நீட்டித்தல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, விவசாயிகள் சார்பில் 151 கோரிக்கை மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், நீர்வளத் துறை செயற்பொறியாளர் தங்கராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மனோரஞ்சிதம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- தூத்துக்குடி குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் முன்வைத்த கோரிக்கை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், மழைநீர் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், குளங்கள் மற்றும் பாசனக் கால்வாய்களை தூர்வாருதல், தடுப்பணைகள் மற்றும் கால்வாய் மடைகளைச் சீரமைத்தல், வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். மேலும், கருமேனியாற்றில் தடுப்பணைகளைச் சீரமைத்து தண்ணீரைத் தேக்குதல், தாமிரவருணி பாசனக் கால்வாய்கள் மற்றும் குளங்களில் வளர்ந்துள்ள அமலைச் செடிகளை அகற்றுதல், பாசன நீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பது, கடைமடை குளங்களுக்கு தண்ணீர் வழங்குதல், தரமான உரங்களை வழங்குதல், கூட்டுறவு சங்கங்களில் பயிர்க் கடன் தள்ளுபடி விவரங்களை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. விவசாய நிலங்களைச் சீரமைக்க மானியம் வழங்குதல், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்களை விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்துதல், விவசாயிகள் பயன்படுத்தும் சாலைகளைச் சீரமைத்தல், பேருந்து வழித்தடங்களை நீட்டித்தல் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, விவசாயிகள் சார்பில் 151 கோரிக்கை மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டன. கூட்டத்தில், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், நீர்வளத் துறை செயற்பொறியாளர் தங்கராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மனோரஞ்சிதம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.1
- தாலி செயினில் தங்கம் இல்லாத உலோகம் சேர்ப்பு : வேலவன் ஹைப்பர் மார்க்கெட் நகைக்கடை மீது கலெக்டர் .எஸ்பி-யிடம் புகார்.. தாலி செயினில் தங்கம் இல்லாத உலோகம் சேர்ப்பு : வேலவன் ஹைப்பர் மார்க்கெட் நகைக்கடை மீது கலெக்டர் .எஸ்பி-யிடம் புகார்.. தூத்துக்குடி பி என் டி காலனி சேர்ந்த வாழ்த்துக்கள்.இசக்கி ராஜ் என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளார் அதன் பின்பு செய்தியாளர்களிடம் கூறுகையில் அஞ்சு பவுன் நகை வேலவன் ஸ்டோர் நான் கடையில் வாங்கினேன் தாலி செயின் தான் அது மூன்று வருடமாக கழுத்தில் அணிந்திருந்தார்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்துள்ளேன் அவர்கள் அதை ஆடிட்டிங் பார்த்தபோது தங்கம் இல்லாத உலோகம் இருப்பதாக கூறினார்கள் வீடியோ ஆதாரங்கள் அனுப்பி உள்ளார்கள் வேலவன் கடைக்கு நான் அந்த வீடியோவை அனுப்பினேன் இதனை எடுத்து வேலவன் நகைக்கடை பணியாளர்கள் நேரடியாக வந்து தனியார் நிதி நிறுவனத்தில் வந்து பார்வையிட்டார்கள். வேலவன் நகைக்கடைகாரர்களே நாலு லட்சத்து 22,000 தனியார் நிதி நிறுவனத்திலிருந்து நகையைத் திருப்பிப் படுகிறது அரசு வங்கியில் பணியாற்றும் நகை மதிப்பீட்டாளர் வேலவன் கடையில் வைத்து நகையை சோதனை செய்யும் போது சரியான முறையில் இருப்பதாக கூறுகிறார்கள் எங்களுக்கு மீண்டும் சந்தேகம் ஏற்பட்டது அடுத்து தாலி செயின் நடுப்பகுதியை வெட்டப்பட்டு அதனை உருக்கி மீண்டும் சோதனை செய்யும் போது தங்கம் இல்லாத உலோகம் கலக்கப்படுகிறது என்பது உறுதி செய்யப்படுகிறது நாங்கள் கேட்கும்போது இதை பெரிதாக்க வேண்டாம் என்று கூறுகிறார்கள் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் உறவினர்கள் நண்பர்கள் வேலவன் நகை கடையில் நகை வாங்கி உள்ளார்கள் தாலி செயினில் தான் இந்த தங்கம் இல்லாத உலோகம் சேர்க்கப்பட்டதாக தெரிய வருகிறது குறுகிய காலத்தில் அதிக லாபம் செய்வதற்காகவே வேலவன் நகைக்கடை நிறுவனம் இப்படி செய்துள்ளனர் இதனால் பொதுமக்களுக்கு நகை கடை மீது அச்சம் ஏற்படுகிறது தங்கம் மீது இது போல மோசடி நடைபெறுவது வருத்தமளிக்கிறது. எங்களுக்கு மட்டும் நகையை திருப்பி தர வேண்டாம் இதுவரை உங்களிடம் தங்கம் வாங்கிய அனைவரையும் சோதனை செய்ய வேண்டும் என்பது எங்களது கோரிக்கை தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு காவல்துறை தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் தேசிய நுகர்வோர் ஆணையம் மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளோம் இதனை அடுத்து மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம் சி எஸ் ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட குற்றப்பிரிவு விசாரிக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வேலவன் ஸ்டோர் நகை கடையில் யாரும் தங்கம் வாங்கி ஏமாற வேண்டாம் தங்கம் நகை விற்பதை தடை செய்ய வேண்டும் கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும் வேலவன் நகைக்கடை நிறுவனம் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தங்க நகையை திருப்பி வழங்க வேண்டும் அதற்கான நடவடிக்கையை தமிழக அரசும் காவல்துறையும் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கையாக உள்ளது என்று செய்தியாளர்களிடம் பசும்பொன் மக்கள் தேசம் கட்சி மாநில செய்தி தொடர்பாளர் ஆறுமுகம்கூறினார். உடன் பசும்பொன் மக்கள் தேசம் கட்சி மாநில துணைத்தலைவர் வள்ளிக்கண்ணு தேவர். தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் மாதவன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். வேலவன் னஹப்பர் மார்க்கெட் நிறுவனம் நகைக்கடை மீது கூறப்பட்ட புகார் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.2
- தூத்துக்குடியில் 916 தங்க நகையில் கலப்படம்.5 பவுன் தாலிச்சங்கிலியில் தங்கம் அல்லாத உலோகம் கலந்திருப்பதாக புகார். வேலவன் ஜுவல்லர்ஸ் மீது விசாரணை நடத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.1
- தேனி: தந்தை பெரியார் அவர்களின் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பெரியார் பட ஊர்வலம் தந்தை பெரியார் அவர்களின் 148 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பெரியார் பட ஊர்வலம் தேனி மாவட்டம் தேனி நகரில் பழைய பள்ளிவாசல் அருகில் பெரியார் பட ஊர்வலம் தொடங்கி பழைய பேருந்து நிலையம் அம்பேத்கர் தி டலில் முடிவடைந்தது தலைமை பூமணிகண்டன் வரவேற்புரை லோ முத்துசாமி மாவட்ட துணை செயலாளர் முன்னிலை கருப்பு சட்டை நடராஜன் காப்பாளர் ரா வெங்கடேசன் மாவட்ட இளைஞரணி தலைவர் பெரியார் பெருந்தொண்டர் அன்னக்கொடி *பங்கேற்ற* *தோழமை இயக்க* *அமைப்புகள்* மற்றும் *தோழர்கள்* *சிபிஎம்* வீரமணி மாவட்ட துணை செயலாளர் விவசாய தொழிலாளர் சங்கம் *விடுதலை* *சிறுத்தைகள் கட்சி* அன்பு வடிவேல் மாவட்ட பொருளாளர் நகர செயலாளர் காடுவெட்டி கருப்பு ஒன்றிய துணைச் செயலாளர் வீர சங்கிலி கண்ணன் சண்முகம் வீர தெய்வம் கண்ணன் இளம் சிறுத்தைகள் *ꜱᴅᴩɪ* நகரத் தலைவர் சையுதின் நகரச் செயலாளர் காதர் சுல்தான் நகர தலைவர் அன்சாரி *ஆதித்தமிழர்* *பேரவை* மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் வி பெ சுரேஷ் வடக்கு மாவட்ட செயலாளர் நீல கனலன் மேற்கு மாவட்ட செயலாளர் அதியர் மணி மாவட்டத் துணைச் செயலாளர் பிரதாபன் ஒன்றிய செயலாளர் அறிவழகன் மாவட்ட நிதி செயலாளர் சரிதா நகர துணை செயலாளர் நாச்சியம்மாள் மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் பிரித்தா *தமிழ் புலிகள் கட்சி* மண்டல செயலாளர் சேகர் தெற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து பெரியகுளம் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் பால தமிழரசு சவுடையன் பெருமாள் வினித் சங்கிலி மாவட்ட துணை செயலாளர் பாண்டியன் ஐய்யம்பட்டி உதயகுமார் ரஜினி மாரி *ஆதித்தமிழர் கட்சி* மாவட்ட செயலாளர் முல்லை அழகர் மாவட்ட அமைப்பாளர் மாரி சுரேஷ் மாவட்ட பொருளாளர் பி ராமசாமி ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர் சென்ராயன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் மீசை முருகன் தேனி ஒன்றிய துணை சிவக்குமார் தேனி ஒன்றிய ஆலோசகர் பால் துறை ஆண்டிபட்டி ஒன்றிய இணைச் செயலாளர் அஜித்குமார் மற்றும் சமூக ஆர்வலர் ராமசாமி *திராவிட தமிழர்* *கட்சி* மாவட்ட செயலாளர் ஈஸ்வரன் மாவட்ட தலைவர் வீர குரு பாலன் கருப்பசாமி திராவிட தமிழன் உள்ளிட்ட தோழர்கள் *மனிதநேய மக்கள்* *கட்சி* மாவட்ட செயலாளர் சேக் முகமது மாவட்ட தலைவர் அப்பாஸ் மந்திரி *புரட்சித் தமிழர் கட்சி* மாநில அமைப்பாளர் பொதுச் செயலாளர் அருந்தமிழ் அரசு சந்திரன் மாவட்ட செயலாளர் சின்னமுத்து மாவட்ட செயலாளர் *சமூக நல்லிணக்க* *பேரவை* முகமது சபி *ஆதித்தமிழர்* *முன்னேற்ற கழகம்* மாவட்ட செயலாளர் மதுரை வீரன் மாவட்ட தலைவர் ஜெகதீஷ் குமார் மற்றும் திராவிட கழகத் தோழர்கள் பெரியகுளம் முருகன் பெரியகுளம் ஆண்டவர் வீரபாண்டி மொத்தமாய் தோழர் நாகலட்சுமி உள்ளிட்ட *நூற்றுக்கும்* மேற்பட்ட தோழர்கள் பெரியார் பட ஊர்வலத்தில் கலந்து கொண்டு பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் திடலில் பெரியார் உருவப்படத்திற்கு முன்பாக சமூக நீதி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் நிகழ்ச்சியின் முடிவில் ஒன்றிய செயலாளர் சென்ராயன் நன்றி கூறினார்...2
- கோவில்பட்டியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு, மேற்கு, நாலாட்டின்புத்தூர் காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் 27 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலம் அருகே இருந்து புறப்பட்ட ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் மெயின் ரோடு,கிருஷ்ணன் கோவில் ரோடு, புதுக்கிராமம்,எட்டையாபுரம் ரோடு, வழியாக அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோயில் வந்தடைந்தன. இதில் பாஜக, இந்து முன்னணியினர் திரளானோர் கலந்து கொண்டனர். விநாயகர் சிலைகள் இன்று மாலை கோவில்பட்டியில் இருந்து கொண்டு செல்லப்பட்டு வேம்பார் கடலில் கரைக்கப்பட உள்ளதாக இந்து முன்னணியினர் தெரிவித்தனர்.1
- தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா நடந்தது இதில் மாவட்ட அமைப்பாளர் பாக்கியராஜ் தலைமையில் பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்1
- பிரதமர் மோடி பிறந்தநாள் ஒட்டப்பிடாரம் சிவன் கோவிலில் சிறப்பு பூஜை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி 76 வது பிறந்த நாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் வர்த்தக பிரிவு சார்பாக வர்த்தக பிரிவு மாவட்டத் தலைவர் E. முத்தமிழ்செல்வன் தலைமையில் புதியம்புத்தூர் சிவன் கோயிலில் வைத்து அவருக்கு சிறப்பு பூஜை செய்து பிரசாதம் வழங்கி கொண்டாடப்பட்டது இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் சரவண கிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்பித்தார் மற்றும் வர்த்தகப்பிரிவு கிழக்கு ஒன்றிய தலைவர் தேன்ராஜ் வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் திருமணி செல்வன் ஓட்டப்பிடாரம் ஒன்றிய பொதுச் செயலாளர் கதிரவன் ஒன்றிய பொருளாளர் மந்திரம் கல்வியாளர் பிரிவு கோயில் பிள்ளை மூத்த உறுப்பினர் ஆனந்தராஜ், பாலகிருஷ்ணன், ரத்தினகுமார், நிர்வாகிகள் சுரேஷ், கார்த்திக், சாம்ராஜ், பெரியசாமி, பாஸ்கர் முருகன், கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்1
- நடிகர் சரத்குமார் நாகர்கோவில் செல்வதற்காகதிருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதியர் சாலையில் இருந்த மணலில் சறுக்கி விழுந்து அடிபட்ட நிலையில் அவர்களுக்கு முதல் உதவி செய்து மருத்துவமனைக்கு நிர்வாகிகளுடன் அனுப்பி வைத்தார். நடிகர் சரத்குமார் நாகர்கோவில் செல்வதற்காகதிருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தம்பதியர் சாலையில் இருந்த மணலில் சறுக்கி விழுந்து அடிபட்ட நிலையில் அவர்களுக்கு முதல் உதவி செய்து மருத்துவமனைக்கு நிர்வாகிகளுடன் அனுப்பி வைத்தார். சாலையில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும். குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கூடுதல் கவனத்துடன் செல்ல வேண்டும்.1