Shuru
Apke Nagar Ki App…
கிருஷ்ணகிரியில் பாஜக கட்சியின் பட்டியல் அணிசார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம். கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணாசிலைஅருகில்பாஜக கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பட்டியல் அணிசார்பில்பட்டியல், பழங்குடியின் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை மற்ற திட்டங்களுக்கு திசை திருப்பியது. இட ஒதுக்கீட்டு உரிமைகளை மதிக்காமல் ஆட்சி நடத்தும் திமுக அரசை கண்டித்துமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
FAYAZ
கிருஷ்ணகிரியில் பாஜக கட்சியின் பட்டியல் அணிசார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம். கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணாசிலைஅருகில்பாஜக கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பட்டியல் அணிசார்பில்பட்டியல், பழங்குடியின் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை மற்ற திட்டங்களுக்கு திசை திருப்பியது. இட ஒதுக்கீட்டு உரிமைகளை மதிக்காமல் ஆட்சி நடத்தும் திமுக அரசை கண்டித்துமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
More news from தமிழ்நாடு and nearby areas
- கிருஷ்ணகிரி - தூய பாத்திமா அன்னை ஆலயத்தில், சிறப்பு திருப்பலியில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு. ---------------------------------------------------------------- ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படுகின்ற தவக்காலத்தின் துவக்க நாளாக, சாம்பல் புதன் உள்ளது. இந்த நாளில் நடத்தப்படுகின்ற சிறப்பு திருபலி பூஜையில், கிறிஸ்தவர்கள் அனைவரும் பங்குபெற்று தங்களுடைய நெற்றியில் சாம்பலை, சிலுவை அடையாளமாக வைத்துக்கொண்டு தவநாட்களை அனுசரிக்க துவங்குகிறார்கள். அதேபோன்று, கிருஷ்ணகிரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள, தூய பாத்திமா அன்னை திருத்தலத்தில், தவக்காலத்திற்கான சாம்பல் புதன் திருநாள் சிறப்பு திருபலி நடைபெற்றது. இந்த சிறப்பு திருப்பலியை, திருத்தல பங்குத்தந்தை அருள்ராஜ் அவர்கள் முன்னின்று நடத்தினார். இதில் அனைத்து கிறிஸ்தவ மக்களும் கலந்துக்கொண்டு, தங்களுடைய நெற்றியில் சாம்பலை வைத்துக்கொண்டு, தங்களுடைய தவமுயற்சிகளை துவங்கினார்கள். தவக்காலத்தை அனுசரிப்பவர்கள் அசைவ உணவுகள், போதை பொருட்களை தவிர்த்து, சுத்த போஜனம் கடைபிடிக்க வேண்டும் எனவும், தங்களிடம் உள்ள தீய பழக்கங்களை களைவதற்கு, இந்த தவநாட்களை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டார்கள். இதேபோன்று, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும், தவக்கால சாம்பல் புதன் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்வ மக்கள் பங்கேற்று சாம்பல் விபூதி பூசிக்கொண்டனர்.1
- கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே பாஜக பட்டியலின அணி சார்பாக திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்டியல் பழங்குடியின் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை மற்ற திட்டங்களுக்கு திசை திருப்பியது, இட ஒதுக்கீட்டு உரிமைகளை மதிக்காமல் ஆட்சி நடத்தும் திமுக அரசை கண்டித்து பட்டியல அணி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாரதிய ஜனதா கட்சியின் பட்டியலின அணி மாவட்ட தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு, மகளிர் அணி தலைவிகளான சிலம்பொழி, சரண்யா, விமலா உட்பட பாஜக கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள்உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கட்சியினர் பங்கேற்றிருந்தனர். போராட்டத்தின் போது திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. கிருஷ்ணகிரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.1
- கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணாசிலைஅருகில்பாஜக கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பட்டியல் அணிசார்பில்பட்டியல், பழங்குடியின் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் நலத்திட்ட உதவிகளை மற்ற திட்டங்களுக்கு திசை திருப்பியது. இட ஒதுக்கீட்டு உரிமைகளை மதிக்காமல் ஆட்சி நடத்தும் திமுக அரசை கண்டித்துமாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.1
- தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதி பாலக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கணேச மூர்த்தி (55) இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ராசாபுரம் பகுதியில் இருந்து பஞ்ஙம் பிழைக்க தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பகுதிக்கு முன்னோர்களுடன் வந்த நிலையில் தங்கள் கடும் உழைப்பால் ஆடு மாடு கோழி தென்னை என முன்னேறி இன்றுவரை வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் இவரது அபார வளர்ச்சையை கண்டு இப்பகுதி மக்கள் இவரது சொத்துக்களை அபகரித்து விரட்டிவிட தொடர்ந்து கொலை மிரட்டல் தாக்குதல் இவர்களது சொத்துக்க ள திருடி செல்லுதல் என உச்ச பட்சமாக கடந்த 16. ஆண்டுகளுக்கு முன்னர் இவரது பாட்டியையும் கொலை செய்து விட்டு அச்சுறுத்தியுள்ளனர். இதனால் கடுமையாக பாதிப்படைந்த கணேச மூர்த்தி குடும்பத்தார் எதர்க்கும் அசராமல் காவல்நிலையம் நீதிமன்றம் மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளர் முதல்வர் பிரதமர் மனித உரிமை ஆணையம் என பல்லாயிரம் புகார்களை அளித்து சட்ட போராட்டம் இன்றுவரை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது சொத்துக்களை அபகரிக்க அரசியல் பிரமுகர்கள் கார்ப்ரேட்டுகள் என தொடர்ந்து மிரட்டியும் அழுத்தம் குடுத்து வருகின்றனர்.ஆனால் தனது சொத்துக்களையும் குடும்பத்தையும் காக்க விளைநிலத்திலேயே வீடு கட்டி குடியிருந்து வருவது மட்டுமல்லாமல் தங்கள் சுய பாதுகாப்பிற்கு சட்ட போராட்டம் நடத்தி அரசு உரிமம் பெற்று தற்பொழுதுவரை துப்பாக்கியுடன் வாழ்ந்து வருகிறார்.இவர் எங்கு சென்றாலும் இவரை தாக்கி கொலை செய்ய மர்ம கும்பல் தொடர்ந்து கண்காணித்து வருவதாலும் அன்றாட வேளாண்மை பணிகளை செய்யவும் கால்நடைகளை பராமரிக்கவும் வேண்டி. துப்பாக்கியுடன் வலம் வந்து கொண்டு. இருக்கிறார். மேலும் இன்றுவரை எதிரிகளால் தீங்கு விளையும் வகையில் சம்பவங்கள் நடந்தால் உடனடியாக காவல்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் புகார் அளித்தாலும் ஒரு சில புகார்கள் தவிற மற்ற புகார்களுக்கு உடனடி தீர்வு கிடைக்காத காரணத்தால் அந்த துறை சார்ந்த அதிகாரிகள் மீது உயரதிகாரிகளுக்கும் துறை அமைச்சர்கள் வரை புகார் அளித்தால்தான் தீர்வு கிடைத்து வருவதால் இவர் இன்றுவரை சுமார் 3500 க்கும் மேலான புகார்களை பயன்படுத்தி தான் தீர்வு கண்டு இருப்பதாகவும் கூறுகிறார். மேலும் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் ஆலாபுரம் பகுதி ஒருகாலத்தில் நக்சல்களால் பாதிக்கப்பட்டு இன்று வரை அரசின் நலத்திட்ட உதவிகளால் இயங்கி வருவதால் இவரது பாட்டி கொலை செய்யப்பட்ட பொழுதும் இவரது தம்பியை கொலையாளியாக சித்தரித்து காவல்துறையினர் முயற்ச்சித்துள்ளனர் .அதே பாேல கணேச மூர்த்தியையும் சில ஆண்டுகளுக்கு முன்பு நக்சலைட் என கூறி கைது செய்து முடக்க முயற்சித்த சம்பவமும் நீதிமன்ற விசாரணையில் உள்ளதாக தெரிவிக்கும் இவரது தென்னந்தோப்பு அருகாமயைில் தற்பொழுது. தனியாருக்கு சொந்தமான கிரானைட் குவாரி ஒன்று புதிதாக துவக்கப்பட்டு செயல் பட்டு வரும் நிலையில் விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும் இந்த குவாரியில் பயன்படுத்தப்படும் வெடிச் சப்தம் சுற்றுவட்டாரத்தில் உள்ள வீடுகள் கால்நடைகள் மனிதர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் இந்த குவாரிக்கு லைசன்ஸ் ரத்து செய்ய வேண்டும் எனவும் தொடர்ந்து அதிகாரிகளுக்கு புகார் அளித்து வருகிறார்.இதனால் ஆத்திரமடைந்த அதிகாரிகள் இவர் 30ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்த விவசாய நிலத்தில். வேலிகள் அமைத்தும் அதில் உள்ள தென்னை மரங்க ள அகற்றவும் முயற்சி செய்து வருவதாகவும் புகார் அளித்துள்ளார்.ஆனால் அரசு இயந்திரங்கள் கார்ப்ரேட்டுகளுக்கு ஆதரவாக செயல்பட்டு தனது நிலத்தை அபகரித்தும் தன்னையே கைது செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறார். இவரது செயல்பாடுகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சமூக சுற்று சூழலுக்கு எதிராக செயல்படும் சட்ட விரோதிகளுக்கு எதிராக ட்ராஃபிக் ராமசாமி என்ற சமூக ஆர்வலர் செயல்பட்டு வருவதை போலவும் திரைப்படங்களில் வரும் பெட்டிசன் பெரியாசமி என்ற பெயரில் உள்ள கதாபாத்திரங்களை செயல்பட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.1
- தருமபுரியில் வேளாண்மை துறை சார்பில் மாவட்ட அளவிலான ஊட்டத்சத்து சிறுதானிய திருவிழா, கண்காட்சி: மாவட்ட ஆட்சியர் கண்காட்சியை தொடங்கிவைத்து பார்வையிட்டார் வேளான்மை துறை சார்பில் மாவட்ட அளவிலான சிறுதானிய திருவிழா கண்காட்சி தருமபுரியில் வேளான்மை துறை இணை இயக்குனர் மு.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் பங்கேற்ற தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு.ரெ.சதீஸ் 10க்கும் மேற்பட்ட அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த சிறுதானிய வகை கண்காட்சியை திறந்துவைத்து பார்வையிட்டார் இக்கண்காட்சியில் நெல், ராகி, தினை, கம்பு கருப்பு கவுனி அரிசி வகைகள் விதை ரகங்கள், சிறுதானியத்தில் செய்யப்பட்ட உணவு வகைகள் இக்கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன பின்னர் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் அந்த கால மனிதர்கள் சிறுதானிய உணவு வகைகளையே சாப்பிட்டதால் நீண்ட ஆயில்யுடன் வாழ்ந்தனர் ஆனால் இக்கால இளைஞர்கள், குழந்தைகள் நவீன செயற்கை உணவு வகைகளை வாங்கி சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் வருகிறது ஆகையால் அனைவரும் ஊட்டச்சத்து நிறைந்த சிறுதானிய உணவு வகைகளை சாப்பிட்டு நன்றாக வாழவேண்டும் என கேட்டுக்கொண்டார் பின்னர் சிறுதானிய உணவு பற்றிய விவரங்களையும், பலன்களையும் வேளான்மை துறை அதிகாரிகள் மக்களுக்கு எடுத்துரைத்தனர் இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், பெண்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர் மேலும் துனைவேளாம்மை இயக்குனர் ரத்தினம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பாத்திம்மா உள்ளிட்ட வேளான்மை துறை அதிகாரிகள் விவசாபிகள் பங்கேற்றனர்1
- கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் மழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக 200 அடியாக நீர்வரத்து இன்று (பிப்.18) புதன்கிழமை காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 1200 கன அடியாக அதிகரித்துள்ளதாக மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.1
- ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வட்ட செயலாளர் அழகுவேல் தலைமையில் சென்னையில் மாற்று திறனாளிகள் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக காவல்துறையினர் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டி காவல்துறையினர் எதிராக 35 நபர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.1
- கிருஷ்ணகிரிஅண்ணா சிலைமுன்பு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், 16வது நாளாக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி, திமுக அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டன.1