logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சென்னை: மக்கள் மீது எவ்வித கூடுதல் சுமைகளையும் ஏற்றாமல், அரசுக்கான வருவாயை திரட்டுவது குறித்து தமிழக அரசு சிந்திக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மணல், கிரானைட், கருங்கல் போன்ற கனிம வளங்களை தமிழக அரசே நேரடியாக வெட்டி எடுத்து விற்பனை செய்வதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும் என கம்யூனிஸ்ட் கட்சி நீண்ட நாட்களாக கோரி வருவதாகத் தெரிவித்தார். இந்த புதிய வாய்ப்புகள் குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும், கடந்த ஆட்சியில் பல்வேறு வழிகளில் மடைமாறிய அரசு வருவாயை இனி கருவூலத்திற்கு கொண்டு வருவோம் என ஆளுநர் உரையிலும் கூறப்பட்டிருந்த நிலையில், இது நிதிநிலை அறிக்கையில் தெளிவுபடுத்தப்படும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், அனைத்து ஆட்சிக்காலங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள், காவல்துறையின் அத்துமீறல்கள், சாதிய வன்கொடுமைகள் தொடர்வதாக பெ.சண்முகம் வருத்தம் தெரிவித்தார். குறிப்பாக, பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் போதையில் இருந்ததாக பெரும்பாலான எஃப்ஐஆர்-களில் குறிப்பிடப்படுவதைச் சுட்டிக்காட்டி, போதை கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தினார். பல்வேறு குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாக விளங்கும் போதை கலாச்சாரத்தை ஒழித்து, ஆளுநர் உரையில் முதல்வர் குறிப்பிட்ட 'போதை இல்லா தமிழ்நாடு' என்ற முழக்கத்தை 100% வெற்றிகரமாக நிறைவேற்றினாலே குற்றங்களைக் குறைக்க முடியும் எனவும், சமூகத்தில் விழிப்புணர்வும் தேவை என்றும் தெரிவித்தார். அதிமுகவிலிருந்து நான்கு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததை ஆரோக்கியமற்ற அரசியல் எனக் குறிப்பிட்ட பெ.சண்முகம், வாக்களித்த மக்களை மதிக்காமல் இருபது நாட்களுக்குள் ராஜினாமா செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார். அவர்கள் விரும்பி ராஜினாமா செய்திருந்தாலும், தமிழக வெற்றி கழகம் அவர்களை கட்சியில் இணைத்திருக்கக்கூடாது என்றும், இது போன்ற விஷயங்களை ஊக்குவிக்கக்கூடாது என்றும் தனது கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்தார்.

19 hrs ago
user_N-KIPSRA
N-KIPSRA
Madurai North, Tamil Nadu•
19 hrs ago
05ad0e6b-7ff6-464d-b9ea-b11d61bf5105

சென்னை: மக்கள் மீது எவ்வித கூடுதல் சுமைகளையும் ஏற்றாமல், அரசுக்கான வருவாயை திரட்டுவது குறித்து தமிழக அரசு சிந்திக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மணல், கிரானைட், கருங்கல் போன்ற கனிம வளங்களை தமிழக அரசே நேரடியாக வெட்டி எடுத்து விற்பனை செய்வதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும் என கம்யூனிஸ்ட் கட்சி நீண்ட நாட்களாக கோரி வருவதாகத் தெரிவித்தார். இந்த புதிய வாய்ப்புகள் குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும், கடந்த ஆட்சியில் பல்வேறு வழிகளில் மடைமாறிய அரசு வருவாயை இனி கருவூலத்திற்கு கொண்டு வருவோம் என ஆளுநர் உரையிலும் கூறப்பட்டிருந்த நிலையில், இது நிதிநிலை அறிக்கையில் தெளிவுபடுத்தப்படும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், அனைத்து ஆட்சிக்காலங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள், காவல்துறையின்

414b7131-41ec-4734-9571-274166026f53

அத்துமீறல்கள், சாதிய வன்கொடுமைகள் தொடர்வதாக பெ.சண்முகம் வருத்தம் தெரிவித்தார். குறிப்பாக, பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் போதையில் இருந்ததாக பெரும்பாலான எஃப்ஐஆர்-களில் குறிப்பிடப்படுவதைச் சுட்டிக்காட்டி, போதை கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தினார். பல்வேறு குற்றங்களுக்கு அடிப்படைக் காரணமாக விளங்கும் போதை கலாச்சாரத்தை ஒழித்து, ஆளுநர் உரையில் முதல்வர் குறிப்பிட்ட 'போதை இல்லா தமிழ்நாடு' என்ற முழக்கத்தை 100% வெற்றிகரமாக நிறைவேற்றினாலே குற்றங்களைக் குறைக்க முடியும் எனவும், சமூகத்தில் விழிப்புணர்வும் தேவை என்றும் தெரிவித்தார். அதிமுகவிலிருந்து நான்கு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததை ஆரோக்கியமற்ற அரசியல் எனக் குறிப்பிட்ட பெ.சண்முகம், வாக்களித்த மக்களை மதிக்காமல் இருபது நாட்களுக்குள் ராஜினாமா செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார். அவர்கள் விரும்பி ராஜினாமா செய்திருந்தாலும், தமிழக வெற்றி கழகம் அவர்களை கட்சியில் இணைத்திருக்கக்கூடாது என்றும், இது போன்ற விஷயங்களை ஊக்குவிக்கக்கூடாது என்றும் தனது கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்தார்.

More news from Virudhunagar and nearby areas
  • தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகேயுள்ள ராசா பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த பாலாஜி பட்டாசு ஆலையில் இன்று மாலை வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயம் அடைந்தவர்கள் பட்டாசு ஆலைக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டனர். சாத்தூர் அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட சுமார் 15க்கும் மேற்பட்டோருக்கு முதலுதவி மற்றும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் நத்தத்துப்பட்டி, மாசார்பட்டி, எம். நாகலாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்; இவர்களில் அதிகமான பெண்கள் அடங்குவர். இந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
    1
    தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகேயுள்ள ராசா பட்டி கிராமத்தில் செயல்பட்டு வந்த பாலாஜி பட்டாசு ஆலையில் இன்று மாலை வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும், ஒருவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படுகாயம் அடைந்தவர்கள் பட்டாசு ஆலைக்குச் சொந்தமான வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டனர். சாத்தூர் அரசு மருத்துவமனையின் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட சுமார் 15க்கும் மேற்பட்டோருக்கு முதலுதவி மற்றும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் நத்தத்துப்பட்டி, மாசார்பட்டி, எம். நாகலாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்; இவர்களில் அதிகமான பெண்கள் அடங்குவர்.

இந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
    user_K. Arun pandian
    K. Arun pandian
    Photographer Sattur, Virudhunagar•
    13 hrs ago
  • தேனி மாவட்டம், தேனி தமிழக வெற்றி கழகம் சார்பாக, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு, நகராட்சி அலுவலகம் எதிரே ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதான நிகழ்ச்சியை தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
    1
    தேனி மாவட்டம், தேனி தமிழக வெற்றி கழகம் சார்பாக, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு, நகராட்சி அலுவலகம் எதிரே ஏழை எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த அன்னதான நிகழ்ச்சியை தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் கலந்துகொண்டு, பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • வாழ்க்கையில என்னன்னு அவங்க காட்டுவாங்க 👍💞🧑‍🤝‍🧑💘💚
    1
    வாழ்க்கையில என்னன்னு அவங்க காட்டுவாங்க 👍💞🧑‍🤝‍🧑💘💚
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைக்கப்பட்டு வரும் விமானப் பயிற்சி மையத்தின் (Flying Training Organization - FTO) கட்டுமானப் பணிகளைக் கண்காணிப்பதற்கான முக்கிய நடவடிக்கையை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் (TIDCO) மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசின் நிறுவனமான TIDCO, இந்தப் பணிகளை மேற்பார்வையிட ஒரு சுயாதீன பொறியாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான மின்னணு டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, கட்டுமானப் பணிகளின் தரம், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் திட்ட முன்னேற்றத்தைத் தொடர்ந்து கண்காணித்து ஆலோசனை வழங்கும் தகுதியான நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள நிறுவனங்கள் டெண்டர் ஆவணங்களை TIDCO மற்றும் தமிழ்நாடு அரசின் மின்னணு டெண்டர் இணையதளங்களிலிருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஒப்பந்தப் புள்ளிகள் மற்றும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற ஜூலை 15ஆம் தேதி மதியம் 3 மணி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விமானப் பயிற்சி மையம் கோவில்பட்டி வட்டம் கயத்தாறு பகுதியில் அமைய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் உயர்தரத்துடன் பணிகள் நிறைவேறுவதை உறுதி செய்வதே இந்த டெண்டரின் முக்கிய நோக்கம் என்று TIDCO தெரிவித்துள்ளது. கோவில்பட்டியில் உருவாகி வரும் இந்த விமானப் பயிற்சி மையம் செயல்பாட்டுக்கு வந்தால், தமிழகத்தில் விமானப் பயிற்சி மற்றும் விமானத் துறை சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் வலுப்பெறும் எனக் கருதப்படுகிறது. மேலும், தென் தமிழக இளைஞர்களுக்கு விமானப் பயிற்சி பெறும் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்பதுடன், அப்பகுதியின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் இது ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    1
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைக்கப்பட்டு வரும் விமானப் பயிற்சி மையத்தின் (Flying Training Organization - FTO) கட்டுமானப் பணிகளைக் கண்காணிப்பதற்கான முக்கிய நடவடிக்கையை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டுக் கழகம் (TIDCO) மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு அரசின் நிறுவனமான TIDCO, இந்தப் பணிகளை மேற்பார்வையிட ஒரு சுயாதீன பொறியாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான மின்னணு டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி, கட்டுமானப் பணிகளின் தரம், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் திட்ட முன்னேற்றத்தைத் தொடர்ந்து கண்காணித்து ஆலோசனை வழங்கும் தகுதியான நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள நிறுவனங்கள் டெண்டர் ஆவணங்களை TIDCO மற்றும் தமிழ்நாடு அரசின் மின்னணு டெண்டர் இணையதளங்களிலிருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஒப்பந்தப் புள்ளிகள் மற்றும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் வருகிற ஜூலை 15ஆம் தேதி மதியம் 3 மணி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விமானப் பயிற்சி மையம் கோவில்பட்டி வட்டம் கயத்தாறு பகுதியில் அமைய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் உயர்தரத்துடன் பணிகள் நிறைவேறுவதை உறுதி செய்வதே இந்த டெண்டரின் முக்கிய நோக்கம் என்று TIDCO தெரிவித்துள்ளது.

கோவில்பட்டியில் உருவாகி வரும் இந்த விமானப் பயிற்சி மையம் செயல்பாட்டுக்கு வந்தால், தமிழகத்தில் விமானப் பயிற்சி மற்றும் விமானத் துறை சார்ந்த உள்கட்டமைப்பு வசதிகள் வலுப்பெறும் எனக் கருதப்படுகிறது. மேலும், தென் தமிழக இளைஞர்களுக்கு விமானப் பயிற்சி பெறும் புதிய வாய்ப்புகள் உருவாகும் என்பதுடன், அப்பகுதியின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் இது ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    user_கோ.ரெங்கசாமி
    கோ.ரெங்கசாமி
    கோவில்பட்டி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • முக்கண்ணாமலைப்பட்டியில் அன்னவாசல் காவல்துறையினர் நடை ரோந்துப் பணியிலும், விழிப்புணர்வுப் பணியிலும் ஈடுபட்டனர்.
    1
    முக்கண்ணாமலைப்பட்டியில் அன்னவாசல் காவல்துறையினர் நடை ரோந்துப் பணியிலும், விழிப்புணர்வுப் பணியிலும் ஈடுபட்டனர்.
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    10 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கீழபொய்கை பட்டி அருகே உள்ள பொய்கை மலையில் அமைந்துள்ள மாயவதார பெருமாள் கோவிலில் இன்று மதியம் உச்சி கால பூஜை நடைபெற்றது. இந்த பூஜையின்போது, சிறப்பு வழிபாடுகளும் அபிஷேகங்களும் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில், இப்பகுதியைச் சேர்ந்த பெருமாள் சேவை குழுவினர், தளுகை கமிட்டியினர் மற்றும் ஏராளமான பக்த பெருமக்கள் கலந்துகொண்டனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கீழபொய்கை பட்டி அருகே உள்ள பொய்கை மலையில் அமைந்துள்ள மாயவதார பெருமாள் கோவிலில் இன்று மதியம் உச்சி கால பூஜை நடைபெற்றது.

இந்த பூஜையின்போது, சிறப்பு வழிபாடுகளும் அபிஷேகங்களும் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில், இப்பகுதியைச் சேர்ந்த பெருமாள் சேவை குழுவினர், தளுகை கமிட்டியினர் மற்றும் ஏராளமான பக்த பெருமக்கள் கலந்துகொண்டனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, தேனியில் மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது. தமிழக வெற்றி கழக தேனி வடக்கு மாவட்டம் மற்றும் தமிழக வெற்றிக்கழக திண்டுக்கல் மண்டல தமிழ்நாடு போக்குவரத்து தொழிற்சங்கம் இணைந்து, தேனி தனியார் மண்டபத்தில் இந்த முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தன. இந்த ரத்த தான முகாமிற்கு தமிழக வெற்றி கழக திண்டுக்கல் தமிழ்நாடு போக்குவரத்து கழக தொழிற்சங்க மண்டல பொறுப்பாளர் கார்த்திக் தலைமை வகித்தார். தமிழக வெற்றி கழக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ரத்த தானம் வழங்கிய குருதி கொடையாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார். தேனி அரசு மருத்துவமனை ரத்த தான பிரிவு மருத்துவர் பிரியா தலைமையிலான மருத்துவ குழுவினர், ரத்த மாதிரிகளை சேகரித்தனர். தமிழக வெற்றி கழகம் சார்பில் நடத்தப்பட்ட இந்த மாபெரும் ரத்த தான முகாமில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குருதி கொடை வழங்கி சிறப்பித்தனர்.
    1
    தமிழ்நாடு முதலமைச்சரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, தேனியில் மாபெரும் ரத்த தான முகாம் நடைபெற்றது. தமிழக வெற்றி கழக தேனி வடக்கு மாவட்டம் மற்றும் தமிழக வெற்றிக்கழக திண்டுக்கல் மண்டல தமிழ்நாடு போக்குவரத்து தொழிற்சங்கம் இணைந்து, தேனி தனியார் மண்டபத்தில் இந்த முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தன.

இந்த ரத்த தான முகாமிற்கு தமிழக வெற்றி கழக திண்டுக்கல் தமிழ்நாடு போக்குவரத்து கழக தொழிற்சங்க மண்டல பொறுப்பாளர் கார்த்திக் தலைமை வகித்தார். தமிழக வெற்றி கழக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, ரத்த தானம் வழங்கிய குருதி கொடையாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார். தேனி அரசு மருத்துவமனை ரத்த தான பிரிவு மருத்துவர் பிரியா தலைமையிலான மருத்துவ குழுவினர், ரத்த மாதிரிகளை சேகரித்தனர். தமிழக வெற்றி கழகம் சார்பில் நடத்தப்பட்ட இந்த மாபெரும் ரத்த தான முகாமில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குருதி கொடை வழங்கி சிறப்பித்தனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • இந்த பதிவானது 'உண்மையான பாசம்' என்ற ஆழமான உணர்வை, 💞👍 போன்ற சின்னங்களுடன் நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துகிறது.
    1
    இந்த பதிவானது 'உண்மையான பாசம்' என்ற ஆழமான உணர்வை, 💞👍 போன்ற சின்னங்களுடன் நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துகிறது.
    user_Maatram World news Theni
    Maatram World news Theni
    Public Relations Specialist உத்தமபாளையம், தேனி, தமிழ்நாடு•
    18 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் முக்கிய பகுதியான பங்களா ஸ்டாப் என்ற இடத்தில், பேருந்து நிறுத்தம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிறுத்தம் ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில், அருகிலுள்ள தேநீர் விடுதிக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது ஐம்பதுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை நிறுத்தி, இடத்தை ஆக்கிரமித்து வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பால் பேருந்துகள் சரியான இடத்தில் நிற்க முடியாமல், சாலையின் நடுவிலேயே பயணிகளை ஏற்றி இறக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் விளைவாக, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரின் முக்கிய பகுதியான பங்களா ஸ்டாப் என்ற இடத்தில், பேருந்து நிறுத்தம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிறுத்தம் ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில், அருகிலுள்ள தேநீர் விடுதிக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது ஐம்பதுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை நிறுத்தி, இடத்தை ஆக்கிரமித்து வருகின்றனர்.

இந்த ஆக்கிரமிப்பால் பேருந்துகள் சரியான இடத்தில் நிற்க முடியாமல், சாலையின் நடுவிலேயே பயணிகளை ஏற்றி இறக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் விளைவாக, அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து, பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
    user_திருப்புகழ் ரமேஷ்
    திருப்புகழ் ரமேஷ்
    பழனி, திண்டுக்கல், தமிழ்நாடு•
    19 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.