logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சத்தி அருகே போலீசார் பறிமுதல் செய்த கிராவல் மண் ஏற்றிச் சென்ற லாரிகள் சத்தி அருகே அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய 2 டிப்பர் லாரிகள் பறிமுதல் சத்தி – பண்ணாரி ரோட்டில் உள்ள சிக்கரசம்பாளையம் நால்ரோடு பகுதியில், எஸ்.ஐ. வைரகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ் அந்த வழியாக வந்த இரண்டு டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். விசாரணையில், இரண்டு லாரிகளும் சத்தியை சேர்ந்த சந்திரமோகனுக்கு சொந்தமானவை என்பதும், கோபியைச் சேர்ந்த முகமது ஆசிப் (26), மயில்சாமி (30) ஆகியோர் ஓட்டி வந்ததும் தெரியவந்தது. மேலும், சிக்கரசம்பாளையம் அருகே பீக்கிரிபாளையத்தைச் சேர்ந்த நாகராஜனுக்கு சொந்தமான நிலத்தில் இருந்து, கிராவல் மண்ணை எடுத்து செல்வதாகவும், டிரைவர்கள் தெரிவித்தனர். அவர்களிடம் கிராவல் மண்ணை எடுத்துச் செல்ல தேவையான அரசு அனுமதி மற்றும் கனி மவளத் துறையின் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாதது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இரண்டு டிப்பர் லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து, டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மோகனசுந்தரம், ரமேஷ், நாகராஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

8 hrs ago
user_Sathees kumar
Sathees kumar
Local News Reporter சத்தியமங்கலம், ஈரோடு, தமிழ்நாடு•
8 hrs ago
babccf88-ec13-498a-b7f4-168ca7464f46

சத்தி அருகே போலீசார் பறிமுதல் செய்த கிராவல் மண் ஏற்றிச் சென்ற லாரிகள் சத்தி அருகே அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய 2 டிப்பர் லாரிகள் பறிமுதல் சத்தி – பண்ணாரி ரோட்டில் உள்ள சிக்கரசம்பாளையம் நால்ரோடு பகுதியில், எஸ்.ஐ. வைரகுமார் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ் அந்த வழியாக வந்த இரண்டு டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். விசாரணையில், இரண்டு லாரிகளும் சத்தியை சேர்ந்த சந்திரமோகனுக்கு சொந்தமானவை என்பதும், கோபியைச் சேர்ந்த முகமது ஆசிப் (26), மயில்சாமி (30) ஆகியோர் ஓட்டி வந்ததும் தெரியவந்தது. மேலும், சிக்கரசம்பாளையம் அருகே பீக்கிரிபாளையத்தைச் சேர்ந்த நாகராஜனுக்கு சொந்தமான நிலத்தில் இருந்து, கிராவல் மண்ணை எடுத்து செல்வதாகவும், டிரைவர்கள் தெரிவித்தனர். அவர்களிடம் கிராவல் மண்ணை எடுத்துச் செல்ல தேவையான அரசு அனுமதி மற்றும் கனி மவளத் துறையின் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாதது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, இரண்டு டிப்பர் லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்து, டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மோகனசுந்தரம், ரமேஷ், நாகராஜ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

More news from Tamil Nadu and nearby areas
  • கிரிக்கெட் விளையாடும் போது நடந்த சில ரசிக்கும் படியான காட்சிகள்.
    1
    கிரிக்கெட் விளையாடும் போது நடந்த சில ரசிக்கும் படியான காட்சிகள்.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    11 hrs ago
  • பாப்பிரெட்டிப்பட்டி அருகே பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆலாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ராஜசேகரன்,தலைமையில் செயலாளர் மாதையன், முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது , இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை உடனடியாக முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அத்துடன், நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆதரவு விலையும், கரும்பு டன்னுக்கு ரூ.4,500 ஆதரவு விலையும் வழங்க வேண்டும், வேளாண் இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டும், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், வரும் வேளாண் பட்ஜெட் கூட்டத் தொடரில் போர்க்கால அடிப்படையில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து பயிர்க் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
    1
    பாப்பிரெட்டிப்பட்டி அருகே பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆலாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ராஜசேகரன்,தலைமையில் செயலாளர் மாதையன், முன்னிலையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ,
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை உடனடியாக முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அத்துடன், நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆதரவு விலையும், கரும்பு டன்னுக்கு ரூ.4,500 ஆதரவு விலையும் வழங்க வேண்டும், வேளாண் இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டும், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், வரும் வேளாண் பட்ஜெட் கூட்டத் தொடரில் போர்க்கால அடிப்படையில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து பயிர்க் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய அறிவிப்பு வெளியிட வேண்டும்  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
    user_பத்திரிகையாளர்
    பத்திரிகையாளர்
    நிருபர் பென்னாகரம், தருமபுரி, தமிழ்நாடு•
    21 hrs ago
  • தவெக அரசுக்கு எதிராக விவசாயிகளை திரட்டி போராட்டம்! இபிஎஸ் அறிவிப்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் இருந்து விமான மூலம் சென்னை செல்வதற்கு முன் சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும் போது, தமிழக வெற்றிக்கழக அரசு தேர்தல் வாக்குறுதியின் அளித்தபடி விவசாயிகளின் முழு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மேலும் கடன் தள்ளுபடி காண அறிவிப்பு நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவிக்க வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு விளையாடுவதை விட்டுவிட்டு முதல்வர் மௌனத்தை கலைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், ஒருவேளை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய அறிவிப்பு தவறும் பட்சத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து அதிமுக சார்பில் விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.
    1
    தவெக அரசுக்கு எதிராக விவசாயிகளை திரட்டி போராட்டம்! இபிஎஸ் அறிவிப்பு 
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் இருந்து விமான மூலம் சென்னை செல்வதற்கு முன் சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும் போது, தமிழக வெற்றிக்கழக அரசு தேர்தல் வாக்குறுதியின் அளித்தபடி விவசாயிகளின் முழு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மேலும் கடன் தள்ளுபடி காண அறிவிப்பு நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவிக்க வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு விளையாடுவதை விட்டுவிட்டு முதல்வர் மௌனத்தை கலைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், ஒருவேளை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய அறிவிப்பு தவறும் பட்சத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து அதிமுக சார்பில் விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    22 hrs ago
  • மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் கரூர், ஆகஸ்ட் 1: மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கரூர் மாவட்டத்தின் 5ஆம் வட்டம் சார்பில் இன்று (01.08.2026) காலை 10.00 மணியளவில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் தோழர் K. கலாராணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர், காவேரி தமிழ்நாட்டின் உயிர்நதி என்பதையும், மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், காவேரி நீர் உரிமையைப் பாதுகாக்க ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    1
    மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது
என்பதை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
கரூர், ஆகஸ்ட் 1:
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) கரூர் மாவட்டத்தின் 5ஆம் வட்டம் சார்பில் இன்று (01.08.2026) காலை 10.00 மணியளவில் கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்டச் செயலாளர் தோழர் K. கலாராணி தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர், காவேரி தமிழ்நாட்டின் உயிர்நதி என்பதையும், மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய அரசு எந்தவித அனுமதியும் வழங்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். மேலும், காவேரி நீர் உரிமையைப் பாதுகாக்க ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
    user_Karur Wood's Tv
    Karur Wood's Tv
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    5 hrs ago
  • பொரசல்பட்டி கிராமத்தில் ஆடி மாத கூழ் ஊற்றும் விழா நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் பொரசல்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள புடவைக்காரியம்மன், கருப்பனார் சுவாமி ஆலயத்தில் ஆடி மாத கூழ் ஊற்றும் விழா. ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இவ்வாலயத்தில் உள்ள தெய்வங்களுக்கு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. பொதுமக்கள் அம்மன் தரிசனம் பெற்று அம்பாளுக்கு படைக்கப்பட்ட கூழ் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டன. கூழ் கூற்றும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
    1
    பொரசல்பட்டி கிராமத்தில் ஆடி மாத கூழ் ஊற்றும் விழா
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் பொரசல்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள புடவைக்காரியம்மன், கருப்பனார் சுவாமி ஆலயத்தில் ஆடி மாத கூழ் ஊற்றும் விழா. ஆடி மாதம் மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இவ்வாலயத்தில் உள்ள தெய்வங்களுக்கு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன. பொதுமக்கள் அம்மன் தரிசனம் பெற்று அம்பாளுக்கு படைக்கப்பட்ட கூழ் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டன. கூழ் கூற்றும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
    user_கணேஷ் G
    கணேஷ் G
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    10 hrs ago
  • கண்ணெதிரே கருகிப்போன கனவு!” தமிழ்புரம் விவசாயிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய தீ விபத்து – 2 ஏக்கர் கரும்பு பயிர்கள் சாம்பல்! “கண்ணெதிரே கருகிப்போன கனவு!” தமிழ்புரம் விவசாயிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய தீ விபத்து – 2 ஏக்கர் கரும்பு பயிர்கள் சாம்பல்! ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தமிழ்புரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம், தனது விவசாய நிலத்தில் சுமார் 3½ ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு பயிர்களை சாகுபடி செய்திருந்தார். இந்நிலையில், நேற்று கரும்பு வயலில் எதிர்பாராத விதமாக திடீரென தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியது. கரும்பு பயிர்கள் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி ஆறுமுகம், அருகிலிருந்த விவசாயிகளின் உதவியுடன் டிராக்டர்களை பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். ஆனால், காற்றின் வேகத்தால் தீ கொழுந்துவிட்டு வேகமாக பரவியதால், விவசாயிகள் மேற்கொண்ட தீயணைப்பு முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆசனூரிலிருந்து தமிழ்புரம் கிராமத்திற்கு தீயணைப்பு வாகனம் விரைந்து சென்ற நிலையில், அது சம்பவ இடத்தை அடைவதற்குள் தீ வேகமாக பரவி, சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு பயிர்கள் முற்றிலும் தீயில் கருகி சாம்பலாகின. பல மாதங்களாக கடுமையாக உழைத்து, அறுவடையை எதிர்பார்த்து வளர்த்து வந்த கரும்பு பயிர்கள் கண்முன்னே தீயில் கருகி நாசமானதை கண்டு விவசாயி ஆறுமுகம் பெரும் வேதனை அடைந்தார். இந்த தீ விபத்தால் அவருக்கு கணிசமான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. தாளவாடியில் தீயணைப்பு நிலையம் அவசியம்! தாளவாடி மலைப்பகுதியில் விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ள நிலையில், தீ விபத்து போன்ற அவசர காலங்களில் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தை சென்றடைவதில் ஏற்படும் காலதாமதத்தால் பெரும் சேதங்கள் ஏற்படுவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட விவசாயி ஆறுமுகத்திற்கு அரசு உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற தீ விபத்துகளில் பெரும் சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் தாளவாடி பகுதியில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    கண்ணெதிரே கருகிப்போன கனவு!”
தமிழ்புரம் விவசாயிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய தீ விபத்து – 2 ஏக்கர் கரும்பு பயிர்கள் சாம்பல்!
“கண்ணெதிரே கருகிப்போன கனவு!”
தமிழ்புரம் விவசாயிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திய தீ விபத்து – 2 ஏக்கர் கரும்பு பயிர்கள் சாம்பல்!
ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த தமிழ்புரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஆறுமுகம், தனது விவசாய நிலத்தில் சுமார் 3½ ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு பயிர்களை சாகுபடி செய்திருந்தார்.
இந்நிலையில், நேற்று கரும்பு வயலில் எதிர்பாராத விதமாக திடீரென தீப்பற்றி மளமளவென எரியத் தொடங்கியது. கரும்பு பயிர்கள் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த விவசாயி ஆறுமுகம், அருகிலிருந்த விவசாயிகளின் உதவியுடன் டிராக்டர்களை பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.
ஆனால், காற்றின் வேகத்தால் தீ கொழுந்துவிட்டு வேகமாக பரவியதால், விவசாயிகள் மேற்கொண்ட தீயணைப்பு முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆசனூரிலிருந்து தமிழ்புரம் கிராமத்திற்கு தீயணைப்பு வாகனம் விரைந்து சென்ற நிலையில், அது சம்பவ இடத்தை அடைவதற்குள் தீ வேகமாக பரவி, சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு பயிர்கள் முற்றிலும் தீயில் கருகி சாம்பலாகின.
பல மாதங்களாக கடுமையாக உழைத்து, அறுவடையை எதிர்பார்த்து வளர்த்து வந்த கரும்பு பயிர்கள் கண்முன்னே தீயில் கருகி நாசமானதை கண்டு விவசாயி ஆறுமுகம் பெரும் வேதனை அடைந்தார். இந்த தீ விபத்தால் அவருக்கு கணிசமான பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
தாளவாடியில் தீயணைப்பு நிலையம் அவசியம்!
தாளவாடி மலைப்பகுதியில் விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ள நிலையில், தீ விபத்து போன்ற அவசர காலங்களில் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தை சென்றடைவதில் ஏற்படும் காலதாமதத்தால் பெரும் சேதங்கள் ஏற்படுவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட விவசாயி ஆறுமுகத்திற்கு அரசு உரிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற தீ விபத்துகளில் பெரும் சேதம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் தாளவாடி பகுதியில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Sathees kumar
    Sathees kumar
    Local News Reporter சத்தியமங்கலம், ஈரோடு, தமிழ்நாடு•
    7 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.