Shuru
Apke Nagar Ki App…
பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் விழா... தூய்மை பணியாளர்களுக்கு சேலை, இனிப்பு வழங்கிய பாஜகவினர்..... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சந்திரசேகரபுரம் பகுதியில், பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாள் விழா பாஜக சார்பில் நடைபெற்றது. பாஜக ஒன்றிய செயலாளர் விஜய சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சந்திரசேகரபுரம் ஊராட்சியில் பணியாற்றி வரும் 15-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு சேலைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Aravinth
பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் விழா... தூய்மை பணியாளர்களுக்கு சேலை, இனிப்பு வழங்கிய பாஜகவினர்..... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சந்திரசேகரபுரம் பகுதியில், பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாள் விழா பாஜக சார்பில் நடைபெற்றது. பாஜக ஒன்றிய செயலாளர் விஜய சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சந்திரசேகரபுரம் ஊராட்சியில் பணியாற்றி வரும் 15-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு சேலைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- ராசிபுரம் அருகே வீட்டின் அருகே புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு – தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்பு... ராசிபுரம் அருகே வீட்டின் அருகே புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு – தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்பு... ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை குள்ளாண்டிக்காடு பகுதியில் வீட்டின் அருகே புகுந்த சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை குள்ளாண்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கவின்குமார். கொல்லிமலை அடிவாரப் பகுதியில் வசித்து வரும் இவரது வீட்டின் அருகே மலைப்பாம்பு ஒன்று புகுந்ததாக ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள், வீட்டின் அருகே பதுங்கியிருந்த மலைப்பாம்பை பாம்பு பிடிக்கும் இடுக்கி மூலம் லாவகமாக உயிருடன் மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட மலைப்பாம்பு சுமார் 8 அடி நீளம் கொண்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.1
- பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் விழா... தூய்மை பணியாளர்களுக்கு சேலை, இனிப்பு வழங்கிய பாஜகவினர்..... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சந்திரசேகரபுரம் பகுதியில், பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாள் விழா பாஜக சார்பில் நடைபெற்றது. பாஜக ஒன்றிய செயலாளர் விஜய சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சந்திரசேகரபுரம் ஊராட்சியில் பணியாற்றி வரும் 15-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு சேலைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.1
- சேலத்தில் துவங்கியது மாவீரன் மக்கள் கழகம் என்ற புதிய கட்சி! பாமகவிலிருந்து பிரிந்து சென்ற நிர்வாகிகள் ஒன்றிணைந்து, இன்று சேலத்தில் மாவீரன் மக்கள் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்துள்ளனர். இக்கட்சியின் தலைவராக கரூர் பாஸ்கரனும், பொது செயலாளராக தர்மபுரி சரவணன், பொருளாளர் திருச்சி லூர்துசாமி, ஆகிய நிர்வாகிகளை இன்று முறைப்படி தேர்ந்தெடுத்தனர். மேலும் கட்சியின் புதிய கொடியையும் அறிமுகம் செய்தனர், இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- நன்செய் இடையாறு பொன்கோவில் - மூங்கில் வனச்சோலை கூட்டாத்து மூலையில் அமைந்து இருக்கும் ஸ்ரீ சங்கிலி கருப்பண்ண சுவாமி மஹா கும்பாபிஷேக விழா நன்செய் இடையாறு பொன்கோவில் - மூங்கில் வனச்சோலை கூட்டாத்து மூலையில் அமைந்து இருக்கும் ஸ்ரீ சங்கிலி கருப்பண்ண சுவாமி மஹா கும்பாபிஷேக விழா1
- பெரியார் 148-வது பிறந்தநாள் திமுக சார்பில் கரூரில் மாலை அணிவித்து மரியாதை. கரூர்:17.09.2026 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் கரூரில் மாலை அணிவித்து மரியாதை. பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 146-வது பிறந்தநாளை முன்னிட்டு திராவிட கட்சிகள், திராவிட இயக்கத்தினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். கரூர் மாவட்ட திமுக சார்பில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திருமாநிலையூர் பகுதியில் உள்ள தந்தை பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர்.1
- கரூரில் ADMK வடக்கு பகுதி கட்சி அலுவலகம் திறப்பு விழா கரூர் மாவட்டம் அதிமுக வடக்கு பகுதி சார்பில் இன்று அலுவலகம் திறக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி கரூர் மாவட்ட கழக செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் அதிமுக வடக்குப் பகுதி கட்சி அலுவலகம் திறப்பு விழா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர் இந்த நிகழ்ச்சியில் அருண் டெக்ஸ் தங்கவேலு என்.எஸ்.கிருஷ்ணன் வடக்கு பகுதி நிர்வாகிகள் அவைத் தலைவர் மணி வார்டு செயலாளர்கள் சரவணன்.பிரபு. சுப்பிரமணி.மகாமுனி.. வடக்கு பகுதி நிர்வாகிகள் வழக்கறிஞர் கலைராஜன் இந்தியன் கார்த்திக்.ராஜா.மகேஷ்.பெரியசாமி. கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கி சிறப்பித்தனர்1
- முசிறியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகம் முன்னாள் அமைச்சர் அண்ணாவ திறந்து வைத்தார். முசிறியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கட்சி அலுவலகம் திறப்பு முசிறி, செப். 17- முசிறியில் துறையூர் ரோட்டில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக மாவட்ட அலுவலகத்தை மாவட்டச் செயலாளர் யோகநாதன் தலைமையில் அதிமுக முன்னாள் அமைச்சர் அண்ணாவி திறந்து வைத்தார். நிகழ்வில் முசிறி நகரச் செயலாளர் சுவிட் ராஜா என்கிற மாணிக்கம், எம் ஐ டி நடராஜன், மாவட்ட மாவட்ட பொருளாளர் குட்டி என்கிற ஜெயசீலன், வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் பத்மராஜ், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஆசிரியர் பொன் சேகர், எம்ஜிஆர் மன்றம் மாவட்ட இணைச் செயலாளர் பேங்க் ராமசாமி, புரட்சித்தலைவி பேரவை மாவட்டச் செயலாளர் பாலகுமார், எம் ஜி ஆர் மன்ற மாவட்ட இணைச் செயலாளர் மரக்கடை பாண்டியன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் சாய் மோகன்ராஜ், தொழிற்சங்க பேரவை ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன், உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக அணி பிரிவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.1
- புதுச்சத்திரம் அருகே ஏழூர் பண்ணையம்மன் கோயிலில் பால்குடம் ஊர்வலம்... நாமக்கல் ஏழூர் பண்ணையம்மன் கோயிலில் பால்குடம் ஊர்வலம்... நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியம் ஏழூர் கிராமத்தில், சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அருள்மிகு பண்ணையம்மன் சுவாமி திருக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. இதையொட்டி, ஏராளமான பக்தர்கள் பால் குடம் ஏந்தி, மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பால் குடங்களை சுமந்து வந்தனர். தொடர்ந்து, பண்ணையம்மன் சுவாமிக்கு பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அபிஷேகத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏழூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, பண்ணையம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.1