கே.பி.அன்பழகன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். பொதுமக்கள் உற்சாக வரவேற்பு. தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பாலக்கோடு அதிமுக சட்டமன்ற வேட்பாளர் கே.பி.அன்பழகன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். பொதுமக்கள் உற்சாக வரவேற்பு. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் 6வது முறையாக சட்டமன்ற தொகுதி இரட்டை இலை சின்னத்தில் வேட்பளராக கே.பி.அன்பழகன் நிறுத்தப்பட்டுள்ளார். இன்று பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் அருகே கும்பாரஅள்ளி ஊராட்சியில் குள்ளன்கொட்டாய், கொள்ளுப்பட்டி,கரகூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சட்டமன்ற வேட்பாளர் கே.பி.அன்பழகன் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு தனது பிரச்சாரத்தை துவக்கினார். பொதுமக்களை சந்தித்து அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை எடுத்துக்கூறியும் திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
கே.பி.அன்பழகன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். பொதுமக்கள் உற்சாக வரவேற்பு. தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பாலக்கோடு அதிமுக சட்டமன்ற வேட்பாளர் கே.பி.அன்பழகன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். பொதுமக்கள் உற்சாக வரவேற்பு. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் 6வது முறையாக சட்டமன்ற தொகுதி இரட்டை இலை சின்னத்தில் வேட்பளராக கே.பி.அன்பழகன் நிறுத்தப்பட்டுள்ளார். இன்று பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் அருகே கும்பாரஅள்ளி ஊராட்சியில் குள்ளன்கொட்டாய், கொள்ளுப்பட்டி,கரகூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சட்டமன்ற வேட்பாளர் கே.பி.அன்பழகன் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு தனது பிரச்சாரத்தை துவக்கினார். பொதுமக்களை சந்தித்து அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை எடுத்துக்கூறியும் திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
- தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பாலக்கோடு அதிமுக சட்டமன்ற வேட்பாளர் கே.பி.அன்பழகன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். பொதுமக்கள் உற்சாக வரவேற்பு. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்றத் தொகுதியில் 6வது முறையாக சட்டமன்ற தொகுதி இரட்டை இலை சின்னத்தில் வேட்பளராக கே.பி.அன்பழகன் நிறுத்தப்பட்டுள்ளார். இன்று பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் அருகே கும்பாரஅள்ளி ஊராட்சியில் குள்ளன்கொட்டாய், கொள்ளுப்பட்டி,கரகூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சட்டமன்ற வேட்பாளர் கே.பி.அன்பழகன் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டு தனது பிரச்சாரத்தை துவக்கினார். பொதுமக்களை சந்தித்து அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை எடுத்துக்கூறியும் திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தொடர்ந்து பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.1
- கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே உள்ள 400 ஆண்டு பழமையான சங்கல்தோப்பு தர்காவில் உரூஸ் திருவிழாபழையபேட்டை கோட்டை மக்கானிலிருந்து அனைத்து ஜமாத் கமிட்டி தலைவர் எஸ்.கே.நவாப் தலைமையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இரட்டை குதிரை பூட்டப்பட்ட சாரட் வண்டியில் சந்தனகுடம் ஊர்வலம் நடந்தது.1
- சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சேலம் திமுக மத்திய மாவட்ட செயலாளர் அமைச்சர் ராஜேந்திரன் அறிமுக கூட்டம். இன்று சேலம் மாநகராட்சி தொங்கும் பூங்காவில் நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் ராஜேந்திரன், கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சியில் செய்யப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் இடையே விளக்கமாக பேசி, பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக, வருகின்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தகுதிகளிலும் திமுக வெற்றி பெற, பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.1
- Post by Dharmaraj P1
- சங்ககிரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நித்யா அருண் ஏர் கலப்பையை சுமந்தபடி தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தார்... தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கிறது.சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் வேட்புமனு தாக்கல் இன்று 30ஆம் தேதி தொடங்குகிறது... இதனையடுத்து மாநிலம் முழுவதும் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில் வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன... இந்நிலையில் சேலம் மாவட்டம் சங்ககிரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் நித்யா அருண் வேட்புமனு தாக்கல் செய்ய தங்கள் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டவர்களுடன் உழவர் ஏர் கலப்பை தோலில் சுமந்தபடி இன்று சங்ககிரி மலைக்கோட்டையில் இருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணியாக சென்று சங்ககிரி தேர்தல் நடத்தும் அலுவலர் கேந்திரியாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்...1
- திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடைபெற்ற வருகிறது. கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வு இன்று அதிகாலை தொடங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.1
- *விழுப்புரம் மாவட்ட காவல்துறை* *விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு* *விற்பனைக்காக இரு சக்கர வாகனத்தில் புதுச்சேரியில் இருந்து மதுபானம் வாங்கி வந்தவர் கைது* புதுச்சேரியில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மதுபானங்கள் எடுத்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் .ஆனந்தி, உதவி ஆய்வாளர் .லியோ சார்லஸ் மற்றும் காவலர்கள் தலைமையில் V.அகரம்பாட்டை மெயின் ரோட்டில் வாகன தணிக்கை செய்ததில் அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் புதுச்சேரி மதுபானங்கள் இருந்ததை கண்டறிந்து எதிரியை நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் விழுப்புரம் ஒருகோடி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் ராஜாமணி என்பவரின் மகன் ரவிச்சந்திரன் (41) என்பது தெரிவந்ததை அடுத்து குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்2
- தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அதிமுக சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே பி அன்பழகன் கடந்த 30 ஆண்டுகளாக இந்த தொகுதியில் வெற்றி பெற்று எந்த ஒரு வளர்ச்சி பணியையும் செய்யாமல் மக்களை ஏமாற்றி வருவதாக திமுக வேட்பாளர் மருத்துவர் டி என் வி செந்தில் குமார் குற்றச்சாட்டு. தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு அரூர் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய மூன்று தொகுதிகள் திமுக மற்றும் அதிமுக நேரடியாக இந்த தேர்தலை சந்திக்கின்றனர். இந்த நிலையில் பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டிஎன்வி செந்தில் குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.. அதிமுக சார்பில் தொடர்ந்து ஐந்து முறை வென்ற கேபி அன்பழகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் இன்று சட்டமன்ற தொகுதிக்கு வருகை புரிந்தார். அப்போது மாவட்ட எல்லையான காரிமங்கலம் பிரிவு சாலையில் அவருக்கு கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மேல தாளங்கள் முழங்க வான வேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். கட்சித் தொண்டர்களிடம் பேசிய திமுக வேட்பாளர் செந்தில்குமார் இந்த தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டு முறை அமைச்சராகவும் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்து வரும் கே பி அன்பழகன் எந்த ஒரு வளர்ச்சி திட்டங்களும் கொண்டு வரவில்லை. குறிப்பாக நீர் மேலாண்மை திட்டம் கொண்டு வந்திருந்தால் இப்பகுதி மக்கள் வளர்ச்சி அடைந்திருப்பார்கள். இப்பகுதியில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வரும் நிலையில் என்னே கோள் புதூர் திட்டம் தும்பலல்லி அணையில் இருந்து நீர் பாசன திட்டம் உள்ளிட்ட பல்வேறு நீர் மேலாண்மை திட்டங்கள் கொண்டு வந்திருந்தால் இப்பகுதி செழிப்பாக இருந்திருக்கும். தற்பொழுது பாலக்கோடு சட்டமன்றத் தொகுதி ஒரு மாற்றத்தை விரும்புகிறது. அதற்காகத்தான் திமுக தலைவர் தளபதி என்னை வேட்பாளராக அறிவித்துள்ளார். நான் வெற்றி பெற்று சென்றவுடன் பாலகோடு சட்டமன்ற தொகுதியை நீர் மேலாண்மை திட்டங்கள் கொண்டு வந்து செழிப்பான பகுதியாக மாற்ற பாடுபடுவேன் என வாக்குறுதி அளித்தார்.1