Shuru
Apke Nagar Ki App…
ஆத்தூர் கோட்டாட்சியர் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தேர்தல் நடத்தை சம்பந்தமாக அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் ஆர்டிஓ தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் டிஎஸ்பி சத்யராஜ் சபரிநாதன் தாசில்தார் பாலாஜி ஜெயந்தி மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உடன் இருந்தனர் அப்பொழுது தேர்தல் சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது சிலைகளை மூட வேண்டும் சுவர்களில் உள்ள சின்னங்களை உடனே அகற்ற வேண்டும்.
Selva
ஆத்தூர் கோட்டாட்சியர் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் சேலம் மாவட்டம் ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று தேர்தல் நடத்தை சம்பந்தமாக அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம் ஆர்டிஓ தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் டிஎஸ்பி சத்யராஜ் சபரிநாதன் தாசில்தார் பாலாஜி ஜெயந்தி மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உடன் இருந்தனர் அப்பொழுது தேர்தல் சம்பந்தமாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது சிலைகளை மூட வேண்டும் சுவர்களில் உள்ள சின்னங்களை உடனே அகற்ற வேண்டும்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், தமிழக அரசு அலுவலகங்களில் உள்ள முதல்வர் படங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, சேலத்தில் சேலம் தெற்கு, மேற்கு, வடக்கு மற்றும் வீரபாண்டி ஆகிய நான்கு சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களுக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். தேர்தல் முடியும் வரை இந்த அலுவலகங்கள் செயல்பாட்டில் இருக்காது என அறிவிக்கப்பட்டு, அங்குள்ள பெயர் பலகைகளும் மறைக்கப்பட்டுள்ளன.1
- தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காடுசெட்டிபட்டி சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி சொகுசு காரின் எடுத்துச் செல்லப்பட்ட 1.52 லட்சம் ரூபாய் ரொக்க பணம், அதேபோல் கொலசனஹள்ளி பகுதியில் சொகுசு காரில் எடுத்து செல்லப்பட்ட 300 கிராமம் மதிப்பிலான 29 வெள்ளி விநாயகர் சிலை கிப்ட் பாக்ஸை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்1
- தேர்தல் விதிமுறை நடைமுறைக்கு வந்துள்ளது அடுத்து தர்மபுரி மாவட்டத்தில் வருவாய் துறையினர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சீல் வைத்து மூடப்பட்டனர். வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் இன்று முதல் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது. தேர்தல் ஆணையம் விதிமுறைப்படி தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய ஐந்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். மேலும் பேருந்து நிலையம், கட்சி அலுவலகங்கள், சாலையோரம் உள்ளிட்ட பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள கட்சி தலைவர்களின் சிலை மூடப்பட்டது. ஆங்காங்கே ஒட்டப்பட்ட வால் போஸ்டர்கள், சுவரொட்டிகள், பேனர்கள், விளம்பரப் பததைகள், கட்சி கொடிகள் என அனைத்தையும் நகராட்சி பேரூராட்சி அலுவலர்கள் மூலம் தூய்மை பணியாளர்களால் அகற்றப்பட்டனர்.1
- கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சியில் ரூபாய் 4.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய அலுவலக கட்டிட கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது1
- ஒன்றிய அரசை கண்டித்து சேலம் மேற்கு மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் எடப்பாடி பேருந்து நிலையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஒன்றிய அரசின் கொள்கைகளை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன... அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் சேலம் மேற்கு மாவட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன முழக்கங்களை எழுப்பினர்... மேலும், தமிழ்நாட்டுக்கு தேவையான திட்டங்கள் வழங்கப்படவில்லை என்றும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறி பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது எடப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது...1
- Post by R. Suresh1
- தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் சதிஷ் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து பேட்டி. வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் புதிய வாக்களர்களை வாக்களிக்க தேவையான அனைத்து விழிப்புணர்வு மற்றும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 85 வயதிற்க்கு மேற்பட்ட 9541 வாக்காளர்கள் தருமபுரி மாவட்டத்தில் உள்ளனர். இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின் படி அவர்கள் தபால் ஓட்டுக்களை பயன்படுத்திக் கொள்ளலாம். வாக்குசாவடி மையத்தில் நேரடியாக சென்று வாக்களிக்க விரும்பினாலும் நேரடியாக சென்று வாக்களிக்கலாம், 11345 மாற்றுதிறனாளி வாக்களர்கள் உள்ளனர். 1596 வாக்குசாவடிகளிலும் அவர்களுக்கு தேவையான சாய்வுதளம், சக்கர நாற்காலி உள்ளிட்ட தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன, மேலும் மாற்று திறனாளிகளுக்கும் தபால் வாக்குகள் தரப்பட்டு அவர்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. முப்படை ரானுவத்தில் பணியாற்றும் 1601 வாக்களர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மனு தாக்கல் நிறைவடையும் 10 தினங்களுக்கு முன்னர் வரை படிவம், 6, 7, 8 மூலம் புதிய இளம் வாக்காளர்களை சேர்த்து கொள்ள முடியும், வாக்களர்கள் வாக்களிக்க வசதியாக புதிய நடைமுறைகளை மேற்கொண்டுள்ளது, தருமபுரி மாவட்டத்தில் வாக்கு சதவீதத்தை அதிகப்படுத்த அனைத்து வாக்களர்களுக்கும் தேவையான வசதிகள் தங்கு தடையின்றி செய்து தரப்படும், ஒவ்வொரு வாக்குசாவடியிலும் 1500 லிருந்து 1200 வாக்களர்களாக குறைக்கப்பட்டுள்ளது இதன் மூலம் வாக்காளர்கள் எளிதில் வாக்களித்து விட்டு செல்ல முடியும், மாவட்டத்தில் உள்ள 1596 வாக்குசாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, இதன் மூலம் மக்கள் யாருடையை அச்சுறுத்தலும் இன்றி தைரியமாக வாக்களித்து செல்ல முடியும், வாக்களர்கள் பகுதி எண், பாகம் எண், எளிதாக கண்டறியும் வாக்கு சீட்டின் வலது புறத்தில் பெரிய எழுத்துக்களில் அச்சிடப்பட்டுள்ளது. செல்போன்களை வாக்குசாவடி மையத்திற்க்குள் அனுமதி இல்லை என்பதால் செல்போன்கள் பாதுகாக்க வாக்கு சாவடி வெளியே தனி கவுண்டர் அமைக்கப்பட்டுள்ளது, வாக்களர்கள் செல்போனை அங்கே ஒப்படைத்து விட்டு வாக்கு செலுத்தி விட்டு திரும்பி செல்லும் போது பெற்றுக் கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாக்குசாவடி மையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்க்கு அப்பால் தான் மற்றவர்கள் இருக்க வேண்டும், வாக்களர்கள் மட்டுமே அதனை தாண்டி வர முடியும், இந்த முறை வாக்கு பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் கலர் புகைப்படபம் இடம் பெற்றுள்ளதால் வேட்பாளர்களை எளிதில் அடையாளம் காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்ததும் அனைத்து வாக்குசாவடி முகவர்களுக்கும் 17 சி என்றபடிவம் வழங்கப்படும், பெண்கள், மற்றும் வயதானவர்களுக்கு தனி வரிசை அமைக்கப்படும், ஒரே மையத்தில் 5 க்கு மேற்பட்ட வாக்கு சாவடி மையங்கள் இருந்தால் வார்டுகள் கண்டறியும் வகையில் பல வண்ணங்களில் அமைக்கப்படும், அனைத்து வசதிகள் மற்றும் துணை ராணுவ படையினரின் பாதுகாப்புடன் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 130 வாக்குசாவடிகள் பதட்டமான வாக்கு சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது, அதற்கு தேவையான சி.ஆர்.பி.எப் வீரர்கள் உள்ளனர்.அத்தகைய வாக்குசாவடிகள் தொடர்ந்து கண்காணிக்ப்பட்டு வருகிறது, 12 ஆயிரம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டத்தில் 11 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட எல்லை வன பகுதியில் உள்ளது அப்பகுதியில் உள்ள சாலைகளையும் கண்காணிப்பு கேமரா மூலம் காண்காணித்து வருகிறோம். 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்து செல்பவர்கள் உரிய ஆவனத்துடன் எடுத்து செல்ல வேண்டும். உரிய ஆவனமின்றி எடுத்து செல்லும் பணம் தங்க நகை பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கணக்கில் வைக்கப்படும், உரிய ஆவணங்கள் காட்டி பெற்று செல்லலாம். தர்மபுரி மாவட்டத்தில் கோட்டூர் மலை, ஏரிமலை கிராமங்களுக்கு இதற்கு முன்னர் வாக்கு எந்திரங்களை கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன, தற்போது டிராக்டர் மூலம் எடுத்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, தேர்தல் தொடர்பான புகார்களை சி.விஜில் என்ற ஆப்பிலும், 9443947017 என்ற செல்போனில் எண்ணிலும் தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.1
- கரூர் மாவட்டம் குளித்தலை காந்தி சிலை முன்பு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டிற்கு காரணமான பிஜேபி அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள இராஜகிரி பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழைகளின் மக்களுக்கு 12-லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.. முஸ்லிம் வெல்ஃபேர் அசோசியேசன் சார்பில் தொடர்ந்து 44-ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் அமைப்பின் தலைவர் முகம்மதுகாசிம், செயலாளர் அன்வர்அலி, பொருளாளர் சபிர்அஹமது, இராஜகிரி ஹனபி பெரியபள்ளிவாசலின் ஜமாஅத் தலைவர் யூசுப்அலி, துணைத் தலைவர் முகம்மதுரபி, செயலாளர் முகம்மது சுல்தான், பொருளாளர் மொல்லா முகம்மது பாரூக் உட்பட ஜமாஅத்தார்கள், சமூக ஆர்வலர்கள் ஊர் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.. நிகழ்ச்சியில் ராஜகிரி மற்றும் பண்டாரவாடை பகுதியை சேர்ந்த ஏழை, எளிய குடும்பங்களுக்கு தேவையான ஆடைகள், அரிசி மற்றும் மளிகை பொருள்கள் ரமலான் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்..1