logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

விலையில்லா வேட்டி சேலை உற்பத்தி ஆண்டு முழுவதும் மேற்கொள்ள வேண்டும். உற்பத்தியில் வெளிப்படை தன்மை வேண்டும். வேட்டி சேலை உற்பத்தி செய்தவர்களுக்கு 3 ஆண்டாக நிலுவையில் உள்ள தொகை மற்றும் சீருடை உற்பத்தி செய்தவர்களுக்கு 6 ஆண்டு நிலுவைத் தொகை ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும். என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நெசவாளர் அணி மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் நெசவாளர் அணி மாநில தலைவர் G.N. சுந்தரவேல் பேட்டி* இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நெசவாளர் அணி மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்செங் கோட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நெசவாளர் அணி மாநில துணைத் தலைவர் டி.ஏ. கதிரேசன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் தேவராஜன் மாநில பொருளாளர் என்.காவேரி மாநில நிர்வாகி டி.ஆர்.கோதண்ட ராமன், காங்கிரஸ் கட்சி நாமக்கல் மாவட்டத் தலைவர் சர்வேயர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராககாங்கிரஸ் கட்சியின் மாநில நெசவளார் அணித் தலைவர் G.N. சுந்தரவேல் கலந்து கொண்டார் கூட்டத்தில் ஈரோடு மாவட்டத் தலைவர் சி.மாரிமுத்து, நாமக்கல் மாவட்ட பொது செயலாளர் நந்தகோபால், மாவட்ட பொருளாளர் TST. பொன்னுசாமி, Ex மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, மற்றும்சிவாஜி சேகர் தியாகராஜன் மயில்சாமி மாவட்ட நெசவாளர் அணி தலைவர் மாரிமுத்து, முன்னாள் மாவட்ட தலைவர் நவீத், பொன்முடி ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில நெசவளார் அணித் தலைவர் G.N. சுந்தரவேல் கூறியதாவது. நெசவாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு கருதி விலை இல்லா வேட்டி திட்டம் தமிழக அரசால் கொண்டுவரப் பட்டது ஆனால் அந்த திட்டத்தின் கீழ் ஆண்டு முழுவதும் வேலை வழங்கப் படுவதில்லை. இரண்டு மாதம் அல்லது மூன்று மாதங்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது அந்த நிலையை போக்கி ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு வழங்குகின்ற வகையிலே உற்பத்தி திட்டம் வழங்க வேண்டும். உற்பத்தி திட்டமானது வெளிப்படை தன்மையாக வழங்கப் படுவதில்லை. அது அனைத்து பகுதிகளிலும் புகாராக இருந்து வருகிறது. உற்பத்தி திட்டம் வழங்கப்படும் போது வெளிப்படை தன்மையாக வழங்க வேண்டும். மூன்று ஆண்டுகளாக நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. சீருடை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்ட துணிகளுக்கு ஆறாண்டுகளாக நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது எனவே இதையெல்லாம் உடனடியாக தமிழக அரசு கலைய வேண்டும் அரசே கொள்முதல் செய்து கூட்டுறவு சங்கங்களுக்கு உடனடியாக வழங்குவதன் மூலமாக நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை கூட்ட முடியும். எனவே வேட்டி வேலைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் .அடுத்து அனைத்து நெசவாளர்களுக்கும் கல்வி ஊக்கத் தொகையாகவும் உதவித்தொகையாகவும் மருத்துவ பயன்பாடு என்பது வசதி படைத்தவர்களுக்கு இருக்கின்ற ஒரு மருத்துவ பயன்பாடு போல ஒவ்வொரு எளிய மக்களுக்கும் அதே ரீதியாக மருத்துவ காப்பீடு இருக்க வேண்டும். அடுத்து ஆண்டு முழுவதும் ரிபேட் தள்ளுபடி தள்ளுபடி என்பது இப்போது 20 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது மேலும் 60 வயதை கடந்த அனைத்து நெசவாளர்களுக்கும் மாத ஓய்வூதியமாக ரூபாய் 3000 வழங்க வேண்டும் என இந்த கூட்டத்தின் வாயிலாக தமிழக அரசையும் தமிழக முதல்வர் அவர்களையும் கேட்டுக்கொள்கிறோம். என கூறினார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியை எங்கள் தலைவர் முடிவு செய்வார். அவர் யாருடன் கூட்டணி என அறிவிக்கிறாரோ அவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம் என கூறினார்.

1 day ago
user_Balaji studio
Balaji studio
Video Creator திருச்செங்கோடு, நாமக்கல், தமிழ்நாடு•

More news from Tamil Nadu and nearby areas
  • பாப்பிரெட்டிப்பட்டி அருகே இடுகாட்டுக்கு வழி இல்லாததால் இறந்த மூதாட்டியின் உடலை ஆபத்தானமுறையில் ஆற்றை கடந்து சென்று அடக்கம் செய்த பொதுமக்கள் : தொடரும் அவலநிலை தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள குமாரபாளையம் அருந்ததியினர் காலனியில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் , இப்பகுதியில் இறந்தவர்களை அருகே உள்ள பீணியாற்றை கடந்து சென்று அங்குள்ள ஓடையின் அருகே உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்வது வழக்கம். கடந்த சில மாதத்திற்கு முன் பெய்த மழையின் காரணமாக பீணியாற்றில் தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த மாரி (85) என்கிற மூதாட்டி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். அவரை இன்று உறவினர்கள் பாடைக்கட்டி ஆபத்தான முறையில் ஆற்றில் இறங்கி ஆற்றை கடந்து தூக்கி சென்றனர். வெள்ளப்பெருக்கு காலங்களில் இது போன்று செல்லும் போது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், விரைந்து பாலம் அமைக்க வேண்டும் அல்லது குடியிருப்பு பகுதியின் அருகே சுடுகாடு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    1
    பாப்பிரெட்டிப்பட்டி அருகே  இடுகாட்டுக்கு வழி இல்லாததால் இறந்த மூதாட்டியின் உடலை ஆபத்தானமுறையில் ஆற்றை கடந்து சென்று அடக்கம் செய்த பொதுமக்கள் : தொடரும் அவலநிலை 
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி  அருகே உள்ள குமாரபாளையம் அருந்ததியினர் காலனியில் 500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் , இப்பகுதியில் இறந்தவர்களை அருகே உள்ள பீணியாற்றை கடந்து சென்று அங்குள்ள ஓடையின் அருகே உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்வது வழக்கம்.
கடந்த சில மாதத்திற்கு முன் பெய்த மழையின் காரணமாக பீணியாற்றில்  தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த மாரி (85) என்கிற மூதாட்டி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். அவரை இன்று உறவினர்கள் பாடைக்கட்டி ஆபத்தான முறையில் ஆற்றில் இறங்கி ஆற்றை கடந்து தூக்கி சென்றனர். வெள்ளப்பெருக்கு காலங்களில் இது போன்று செல்லும் போது அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், விரைந்து பாலம் அமைக்க வேண்டும் அல்லது குடியிருப்பு பகுதியின் அருகே சுடுகாடு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    user_G Krishnan
    G Krishnan
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    7 hrs ago
  • பொம்மிடியில் 30 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை பொம்மிடியில் வியாழக்கிழமை நாட்களில் வெற்றிலை விற்பனைக்காக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வெற்றிலை வாரச்சந்தை நடைபெறுகிறது நேற்று ஜன 08 வியாழக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் & வியாபாரிகள் வந்திருந்தனர் 128 கட்டுகளை கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ரூ.10,000 - ரூ.20,000 வரை என 200 வெற்றிலை மூட்டைகள் 30 லட்சத்திற்கும் கடந்த வாரத்தை விட மூட்டைக்கு 2000 ரூபாய் அதிகரித்து விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்
    1
    பொம்மிடியில் 30 லட்சத்திற்கு வெற்றிலை விற்பனை
பொம்மிடியில் வியாழக்கிழமை நாட்களில் வெற்றிலை விற்பனைக்காக  மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற வெற்றிலை வாரச்சந்தை நடைபெறுகிறது நேற்று ஜன 08 வியாழக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான விவசாயிகள் & வியாபாரிகள் வந்திருந்தனர் 128 கட்டுகளை  கொண்ட ஒரு மூட்டை வெற்றிலை ரூ.10,000 -  ரூ.20,000 வரை என  200 வெற்றிலை மூட்டைகள்  30 லட்சத்திற்கும் கடந்த வாரத்தை விட மூட்டைக்கு 2000 ரூபாய் அதிகரித்து விற்பனையானதாக  வியாபாரிகள் தெரிவித்தனர்
    user_Raja
    Raja
    செய்தியாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • காரிமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பணை தொழிலாளர்களை தரதரவென இழுத்து சென்ற போலீசார்
    1
    காரிமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பணை தொழிலாளர்களை தரதரவென இழுத்து சென்ற போலீசார்
    user_Periyasamy
    Periyasamy
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    21 hrs ago
  • ரேசன் கடையில் 3000 ரூ கொடுப்பதால் கிடைக்கும் உபசரிப்பு.
    1
    ரேசன் கடையில் 3000 ரூ கொடுப்பதால் கிடைக்கும் உபசரிப்பு.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist Coimbatore South, Tamil Nadu•
    8 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடியில் 300 ஆண்டுகள் பழமையான மாமுனிவர் புனித பெரிய அந்தோணியார் திருத்தலம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16,17,18 ஆகிய மூன்று நாட்களில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் அதோபோல் இந்த ஆண்டும் திருவிழாவின் முதல் கொடி பவனி நேற்று இரவு தொடங்கியது இந்நிகழ்வில் ஊர் பெரியதனகாரர்கள், கிராம மக்கள், பங்கு தந்தையர்கள், அமலவை கன்னியர்கள், குருக்கள், பிரதர்கள், இருபால் துறவியர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
    1
    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடியில் 300 ஆண்டுகள் பழமையான மாமுனிவர் புனித பெரிய அந்தோணியார் திருத்தலம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16,17,18 ஆகிய மூன்று நாட்களில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் அதோபோல் இந்த ஆண்டும் திருவிழாவின் முதல் கொடி பவனி நேற்று இரவு தொடங்கியது இந்நிகழ்வில் ஊர் பெரியதனகாரர்கள், கிராம மக்கள், பங்கு தந்தையர்கள், அமலவை கன்னியர்கள், குருக்கள், பிரதர்கள், இருபால் துறவியர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
    user_CHANDRA SEKAR AYYANAR
    CHANDRA SEKAR AYYANAR
    Journalist திண்டுக்கல் மேற்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    8 hrs ago
  • திண்டுக்கல் சோலைஹால் பகுதியில் உள்ள மீன் கடைகளை அகற்றி மேட்டுப்பட்டி சாலைகள் உள்ள குலசாலையில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது
    1
    திண்டுக்கல் சோலைஹால் பகுதியில் உள்ள மீன் கடைகளை அகற்றி மேட்டுப்பட்டி சாலைகள் உள்ள குலசாலையில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது
    user_Dindigul Prakash
    Dindigul Prakash
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    20 hrs ago
  • முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு 10வயதிற்குட்பட்ட ஆண் பெண் பிள்ளைகளுக்கு தபால் அலுவலகத்தில் சேமிப்பு திட்டம் கணக்கினை அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தொடங்கி பெற்றோரிடம் வழங்கினார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாரண்டஅள்ளியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் பிறந்தநாளையொட்டி 10வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு தன் சொந்த பணத்திலிருந்து தபால் அலுவலகத்தில் 444 ஆண் பிள்ளைகளுக்கு ரூபாய் 500 வீதம் செல்வ மகன் சேமிப்பு திட்டம் மற்றும் 159 பெண் பிள்ளைகளுக்கு ரூபாய் 250 வீதம் செல்வமகள் சேமிப்பு திட்டம் கணக்கினை அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்து. இன்று மாரண்டஅள்ளியில் ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் பெற்றோரிடம் கணக்கு புத்தகத்தை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் தொ.மு.நாகராஜன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கே.வி.ரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் செந்தில் கோபால்,செல்வராஜ்,செந்தில்குமார், மாரண்டஅள்ளி நகர செயலாளர் கோவிந்தன்,பாலக்கோடு நகர செயலாளர் ராஜா, தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    1
    முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு 10வயதிற்குட்பட்ட ஆண் பெண் பிள்ளைகளுக்கு தபால் அலுவலகத்தில்  சேமிப்பு திட்டம் கணக்கினை அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தொடங்கி பெற்றோரிடம் வழங்கினார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாரண்டஅள்ளியில்  முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் பிறந்தநாளையொட்டி 10வயதிற்குட்பட்ட ஆண் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு தன் சொந்த பணத்திலிருந்து தபால் அலுவலகத்தில்  444 ஆண் பிள்ளைகளுக்கு ரூபாய் 500 வீதம் செல்வ மகன் சேமிப்பு திட்டம் மற்றும் 159 பெண் பிள்ளைகளுக்கு ரூபாய் 250 வீதம் செல்வமகள் சேமிப்பு  திட்டம் கணக்கினை அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் மாவட்ட கழக செயலாளர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்து. இன்று மாரண்டஅள்ளியில் ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் பெற்றோரிடம் கணக்கு புத்தகத்தை வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் தொ.மு.நாகராஜன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கே.வி.ரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் செந்தில் கோபால்,செல்வராஜ்,செந்தில்குமார், மாரண்டஅள்ளி நகர செயலாளர் கோவிந்தன்,பாலக்கோடு நகர செயலாளர் ராஜா, தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
    user_G Krishnan
    G Krishnan
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    8 hrs ago
  • தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் சமூக நீதிக்கான திராவிட பொங்கல் திருவிழா தர்மபுரி எம்பி   ஆ மணி போட்டியை தொடங்கி வைத்தனர் தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக கழகம் தர்மபுரி நகர கழகம் கிழக்கு மேற்கு தருமபுரி மேற்கு ஒன்றியம் சார்பில் நடத்தும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் சமூக நீதிக்கான திராவிட பொங்கல் திருவிழா மாவட்ட விளையாட்டு மைதானத்தில்  வாலிபால் வாலிபால் கபடி தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அ மணி அவர்கள் போட்டியினை தொடங்கி வைத்தனர் இந்த போட்டியில் முதல் பரிசு 15 ஆயிரம் ரூபாய் இரண்டாம் பரிசு பத்தாயிரம் ரூபாய் மூன்றாம் பரிசு ரூ.5000 வழங்கப்படுகிறது இந்த போட்டி இரண்டு நாள் நடைபெறுகிறது இந்த போட்டியில் 20 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகிறது இந்த நிகழ்ச்சியில்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடகம் சுப்பிரமணி .நகர செயலாளர். நாட்டான் மாது. கௌதம். தர்மபுரி ஒன்றிய கழக செயலாளர் காவேரி.  நகர மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன் ஜெகன். முல்லைவேந்தன் சுருளிராஜன். இளையராணி மாவட்ட இணை அமைப்பாளர் அசோக்குமார் கோவிந்தன். முன்னாள் நகர செயலாளர் அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
    1
    தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் சமூக நீதிக்கான திராவிட பொங்கல் திருவிழா தர்மபுரி எம்பி   ஆ மணி போட்டியை தொடங்கி வைத்தனர்
தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக கழகம் தர்மபுரி நகர கழகம் கிழக்கு மேற்கு தருமபுரி மேற்கு ஒன்றியம் சார்பில் நடத்தும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் சமூக நீதிக்கான திராவிட பொங்கல் திருவிழா மாவட்ட விளையாட்டு மைதானத்தில்  வாலிபால் வாலிபால் கபடி தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அ மணி அவர்கள் போட்டியினை தொடங்கி வைத்தனர் இந்த போட்டியில் முதல் பரிசு 15 ஆயிரம் ரூபாய் இரண்டாம் பரிசு பத்தாயிரம் ரூபாய் மூன்றாம் பரிசு ரூ.5000 வழங்கப்படுகிறது இந்த போட்டி இரண்டு நாள் நடைபெறுகிறது இந்த போட்டியில் 20 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகிறது இந்த நிகழ்ச்சியில்  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடகம் சுப்பிரமணி .நகர செயலாளர். நாட்டான் மாது. கௌதம். தர்மபுரி ஒன்றிய கழக செயலாளர் காவேரி.  நகர மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன் ஜெகன். முல்லைவேந்தன் சுருளிராஜன். இளையராணி மாவட்ட இணை அமைப்பாளர் அசோக்குமார் கோவிந்தன். முன்னாள் நகர செயலாளர் அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
    user_Periyasamy
    Periyasamy
    Journalist Dharmapuri, Tamil Nadu•
    21 hrs ago
  • பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை-திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
    1
    பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை-திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
    user_RAJA
    RAJA
    Journalist Athoor, Dindigul•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.