logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

" தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்து தனிமைப்பட்டு நிற்கிறார் முதல்வர் விஜய்": திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் சென்னை: “மேகேதாட்டு விவகாரத்தில் தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதல்வர் விஜய். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா?” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதல்வர் விஜய். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் எல்லோரும் மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்று எச்சரித்தோம். கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தோம். தமிழகத்துக்கு தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட மாநிலத்துடன் சட்டரீதியாகத்தான் போராட வேண்டும் என்பதே கடந்தகாலத்தில் நாம் பெற்ற படிப்பினை. உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத்தான் அவர்கள் தமிழகத்தைப் பார்க்கிறார்கள். ஆனால், தான் கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழகத்தின் புதிய முதல்வர் நினைத்தாரோ என்னவோ... நமது எச்சரிக்கைகளை மீறி கர்நாடகம் செல்வதற்குத் தூது அனுப்பினார். தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA உத்தரவிட்டதும் “நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்” என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளை முன்பே கணித்துதான், தமிழகத்தில் உள்ள அனைவரும் எச்சரித்தோம். இனியேனும் தமிழகத்தின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தை முதல்வர் ஆலோசனைகளோடு அணுக வேண்டும். நமது முதல்வரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, கர்நாடகத்தில் ஆகஸ்ட் 2 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அம்மாநில முதல்வர் அழைப்பு விடுத்து அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதைத் தனது செயலால் உணர்த்திவிட்டார். முதல்வர் விஜய் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா?

10 hrs ago
user_N-KIPSRA
N-KIPSRA
மதுரை வடக்கு, மதுரை, தமிழ்நாடு•
10 hrs ago
7315c7c7-83d2-4542-84aa-94f26523b2ee

" தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்து தனிமைப்பட்டு நிற்கிறார் முதல்வர் விஜய்": திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் சென்னை: “மேகேதாட்டு விவகாரத்தில் தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதல்வர் விஜய். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா?” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தனி ஆவர்த்தனம் செய்ய நினைத்துத் தனிமைப்பட்டு நிற்கிறார் முதல்வர் விஜய். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் சங்கத்தினர் எல்லோரும் மேகேதாட்டு விவகாரத்தில் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது பயனளிக்காது என்று எச்சரித்தோம். கர்நாடகம் செல்ல வேண்டாம் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தோம். தமிழகத்துக்கு தண்ணீர் தரமுடியாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்ட மாநிலத்துடன் சட்டரீதியாகத்தான் போராட வேண்டும் என்பதே கடந்தகாலத்தில் நாம் பெற்ற படிப்பினை. உபரிநீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாகத்தான் அவர்கள் தமிழகத்தைப் பார்க்கிறார்கள். ஆனால், தான் கர்நாடகம் சென்றால் காவிரியைக் கையோடு எடுத்துவந்து விடலாம் என்று தமிழகத்தின் புதிய முதல்வர் நினைத்தாரோ என்னவோ... நமது எச்சரிக்கைகளை மீறி கர்நாடகம் செல்வதற்குத் தூது அனுப்பினார். தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடச் சொல்லி CWMA உத்தரவிட்டதும் “நீங்கள் இப்போதைக்கு வரவேண்டாம்” என்று கேட்டைச் சாத்திவிட்டார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளை முன்பே கணித்துதான், தமிழகத்தில் உள்ள அனைவரும் எச்சரித்தோம். இனியேனும் தமிழகத்தின் உயிர்ப் பிரச்சினையான காவிரி விவகாரத்தை முதல்வர் ஆலோசனைகளோடு அணுக வேண்டும். நமது முதல்வரை வரவேண்டாம் என்று சொல்லிவிட்டு, கர்நாடகத்தில் ஆகஸ்ட் 2 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அம்மாநில முதல்வர் அழைப்பு விடுத்து அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதைத் தனது செயலால் உணர்த்திவிட்டார். முதல்வர் விஜய் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது எப்போது? முடியுமா முடியாதா?

More news from Tamil Nadu and nearby areas
  • மறைந்த விசிக நிர்வாகி உடலுக்கு அஞ்சலி செலுத்திய திருமாவளவன் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உடல் நலக்குறைவால் மறைந்த திருமங்கலம் சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் பழக்கடை சுப்ரமணியன் அவர்களின் திருவுடலுக்கு இன்று (ஆக.1) மதுரை வந்த விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். உடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    1
    மறைந்த விசிக நிர்வாகி உடலுக்கு அஞ்சலி செலுத்திய திருமாவளவன் 
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உடல் நலக்குறைவால் மறைந்த திருமங்கலம் சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர்  பழக்கடை சுப்ரமணியன் அவர்களின் திருவுடலுக்கு இன்று (ஆக.1) மதுரை வந்த விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். உடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    9 hrs ago
  • வாடிப்பட்டியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியி... இன்று வாடிப்பட்டி சந்தை கேட் அருகில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மருத்துவ நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாலைநேர தர்னா நடைபெற்றது இந்த நிகழ்வில் மாநில கொள்கை பரப்பு செயலாளர்கள் முனைவர் மொ.சித்திராதேவி திருச்சி.சரவனண் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இந்த நன்னாளில் மாவட்ட ஒன்றிய நகர நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
    1
    வாடிப்பட்டியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியி...
இன்று வாடிப்பட்டி சந்தை கேட் அருகில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மருத்துவ நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாலைநேர தர்னா நடைபெற்றது இந்த நிகழ்வில் மாநில கொள்கை பரப்பு செயலாளர்கள் முனைவர் மொ.சித்திராதேவி  திருச்சி.சரவனண் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் இந்த நன்னாளில் மாவட்ட ஒன்றிய நகர நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
    user_தங்க சுரேஷ்
    தங்க சுரேஷ்
    பத்திரிகையாளர் வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
    5 hrs ago
  • ஒரு லட்சம் ஓட்டில் வெற்றிபெறுவோம் என சொன்னார்கள் ஆனால் நாம ஒரு ஓட்டில் தொங்கி கொண்டு இருக்கிறோம் நெற்குப்பை பேரூராட்சி ராஜவீதியில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு ஒரு ஓட்டில் தோல்வி அடைந்த நிலையில் நன்றி தெரிவித்து பிரச்சாரம் செய்தார். அப்போது நம்ம ஆளுங்க யாரை பார்த்தாலும் சொன்னாங்க ஒரு லட்சம் ஓட்டில் வெற்றிபெறுவோம் என ஆனால் நாம ஒரு ஓட்டில் தொங்கி கொண்டு இருக்கிறோம் ஆகையால் வருங்காலங்களில் சிந்தித்து வாக்களியுங்கள் என மு. அமைச்சர் பேசினார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
    1
    ஒரு லட்சம் ஓட்டில் வெற்றிபெறுவோம் என சொன்னார்கள் ஆனால் நாம ஒரு ஓட்டில் தொங்கி கொண்டு இருக்கிறோம்
நெற்குப்பை பேரூராட்சி ராஜவீதியில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு ஒரு ஓட்டில் தோல்வி அடைந்த நிலையில் நன்றி தெரிவித்து பிரச்சாரம் செய்தார். அப்போது நம்ம ஆளுங்க யாரை பார்த்தாலும் சொன்னாங்க ஒரு லட்சம் ஓட்டில் வெற்றிபெறுவோம் என ஆனால் நாம ஒரு ஓட்டில் தொங்கி கொண்டு இருக்கிறோம் ஆகையால் வருங்காலங்களில் சிந்தித்து வாக்களியுங்கள் என மு. அமைச்சர் பேசினார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்
    user_ABDUL SALAM
    ABDUL SALAM
    Photographer சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு•
    1 hr ago
  • தேவகோட்டை அருகே கோவில் திருவிழா முன்னிட்டு உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஆவரங்காடு முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத திருவிழா முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த புனித ஆடி மாதத்தில், உலக நன்மை மற்றும் அனைவரின் நலனை வேண்டி சிறப்பு திருவிளக்கு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது. பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.உலக அமைதி, நல்வாழ்வு, மற்றும் அனைவரின் நலனுக்காகவும் இந்த சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பக்தர்கள் தங்கள் குடும்ப நலனுக்காகவும், சமுதாய நன்மைக்காகவும் அம்மனை வேண்டி வழிபட்டனர்.
    1
    தேவகோட்டை அருகே கோவில் திருவிழா முன்னிட்டு உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை நடைபெற்றது. 
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ஆவரங்காடு முத்துமாரியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத திருவிழா முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இந்த புனித ஆடி மாதத்தில், உலக நன்மை மற்றும் அனைவரின் நலனை வேண்டி சிறப்பு திருவிளக்கு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டது. பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.உலக அமைதி, நல்வாழ்வு, மற்றும் அனைவரின் நலனுக்காகவும் இந்த சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
பக்தர்கள் தங்கள் குடும்ப நலனுக்காகவும், சமுதாய நன்மைக்காகவும் அம்மனை வேண்டி வழிபட்டனர்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    11 hrs ago
  • ஆண்டிபட்டி: வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் ஆண்டிபட்டி நகரில் மேற்கு ஓடை தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இன்று ஆடி மாத சனிக்கிழமை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அதிகாலையிலேயே பால் தயிர் இளநீர் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    1
    ஆண்டிபட்டி: வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
ஆண்டிபட்டி நகரில் மேற்கு ஓடை தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இன்று ஆடி மாத சனிக்கிழமை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு அதிகாலையிலேயே பால் தயிர் இளநீர் சந்தனம் பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    user_Ramesh
    Ramesh
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • ஆண்டிபட்டி வருசநாடு அருகே சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை ஒட்டிய மேகமலை, ஹைவேவிஸ் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல்மழையால் சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. தேனி மாவட்டம், மேகமலை அடிவாரத்தில் கோம்பைத்தொழு வடக்கு மலைப்பகுதியில் மேகமலை அருவி உள்ளது. மேகமலை ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் சரணாலயத்தில் அமைந்துள்ள இந்த அருவிக்கு திண்டுக்கல் ,மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வரத்து இருக்கும். நேற்று விடிய விடிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல்மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது ஏற்கனவே பெய்த கனமழையால் அருவிக்குச் செல்லும் சாலை பகுதியில் சாலைகள் மிகவும் மண்ணரிப்புகளால் மிகவும் சேதம் அடைந்துள்ளது மேலும் படிக்கட்டுகள் தடுப்புக்கம்பிகள் உடைந்து காணப்படுவதாகவும் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இந்நிலையில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கிற்கான பயணிகளுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது இதனைத் தொடர்ந்து சின்ன சுருளி அருவிக்கு மீறி செல்வோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்..
    1
    ஆண்டிபட்டி வருசநாடு அருகே சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை

தேனி மாவட்டம்  ஆண்டிபட்டியை ஒட்டிய மேகமலை, ஹைவேவிஸ்  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல்மழையால் சின்ன சுருளி   அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 
இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை  தடை விதித்துள்ளது. 
தேனி மாவட்டம், மேகமலை அடிவாரத்தில் கோம்பைத்தொழு வடக்கு  மலைப்பகுதியில் மேகமலை அருவி உள்ளது. 
மேகமலை  ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள்  சரணாலயத்தில் அமைந்துள்ள இந்த அருவிக்கு திண்டுக்கல் ,மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.  
ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வரத்து இருக்கும். 
நேற்று விடிய விடிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் சாரல்மழை பெய்து வருவதால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது 
ஏற்கனவே பெய்த  கனமழையால்  அருவிக்குச் செல்லும் சாலை பகுதியில் சாலைகள் மிகவும் மண்ணரிப்புகளால்   மிகவும் சேதம் அடைந்துள்ளது 
மேலும் படிக்கட்டுகள் தடுப்புக்கம்பிகள் உடைந்து காணப்படுவதாகவும் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. 
இந்நிலையில் தொடர் மழையால்  வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கிற்கான  பயணிகளுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது
இதனைத் தொடர்ந்து சின்ன சுருளி  அருவிக்கு மீறி செல்வோர் மீது  உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்..
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    12 hrs ago
  • இடுக்கியில் நிலச்சரிவுக்கு பெண் பலி; கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது:இடுக்கியில் நிலச்சரிவுக்கு பெண் பலி; 6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! ​ ​கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக மந்தமாக இருந்த தென்மேற்கு பருவமழை, கடந்த மூன்று நாட்களாக மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. நேற்று இரவு முழுவதும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ​ தமிழக-கேரள எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டம், தொடுபுழா தாலுகாவிற்கு உட்பட்ட குடயத்தூர் கொலப்ரா அருகிலுள்ள அடூர் மலைப்பகுதியில் இன்று அதிகாலை திடீரெனப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி சுமதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு, சுமதியின் சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர். ​ இதேபோல், கோட்டயம் மாவட்டத்திலும் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.பூஞ்சார் தெக்கேக்கரா பையனித்தோட்டம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு குடியிருப்பு வீடு முழுமையாகச் சேதமடைந்துள்ளது. ​ மழை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில்; இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ (Orange Alert) விடுக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ​ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வயநாடு, இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். ​ மீட்புப் பணிகளை விரைவுபடுத்தும் பொருட்டு, தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து 34 வீரர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படையின் சிறப்புப் பிரிவு கேரளா விரைந்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
    1
    இடுக்கியில் நிலச்சரிவுக்கு பெண் பலி;

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தது:இடுக்கியில் நிலச்சரிவுக்கு பெண் பலி;
6 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
​
​கேரள மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக மந்தமாக இருந்த தென்மேற்கு பருவமழை, கடந்த மூன்று நாட்களாக மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. நேற்று இரவு முழுவதும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, பல்வேறு இடங்களில் நிலச்சரிவு மற்றும் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
​
தமிழக-கேரள எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டம், தொடுபுழா தாலுகாவிற்கு உட்பட்ட குடயத்தூர் கொலப்ரா அருகிலுள்ள அடூர் மலைப்பகுதியில் இன்று அதிகாலை திடீரெனப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த இயற்கை சீற்றத்தில் சிக்கி சுமதி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு, சுமதியின் சடலத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
​
இதேபோல், கோட்டயம் மாவட்டத்திலும் இடைவிடாது பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.பூஞ்சார் தெக்கேக்கரா பையனித்தோட்டம் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரு குடியிருப்பு வீடு முழுமையாகச் சேதமடைந்துள்ளது.
​
மழை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில்; இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ (Orange Alert) விடுக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
​
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வயநாடு, இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், மலப்புரம் மற்றும் பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
​
மீட்புப் பணிகளை விரைவுபடுத்தும் பொருட்டு, தமிழகத்தின் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து 34 வீரர்கள் அடங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படையின் சிறப்புப் பிரிவு கேரளா விரைந்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    14 hrs ago
  • புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட எம்எல்ஏ மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சேடபட்டி மணிமாறன் அவர்கள் செக்காணூரணியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணிகளை பார்வையிட்டதோடு, ஆ.கொக்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் முக்கியஸ்தர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைந்து தீர்வு காணும் படி அறிவுறுத்தினார்‌. உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
    1
    புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட எம்எல்ஏ 
மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சேடபட்டி  மணிமாறன் அவர்கள் செக்காணூரணியில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய பணிகளை பார்வையிட்டதோடு, ஆ.கொக்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் முக்கியஸ்தர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைந்து தீர்வு காணும் படி அறிவுறுத்தினார்‌. உடன் திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    14 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.