போலீசாரால் கைது செய்யப்பட்ட காடேஸ்வரா சுப்பிரமணியம் காயமடைந்ததை கண்டித்து தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது. திருப்பூரில் ஆக்கிரமிப்பில் இருந்ததாக குமரன் குன்று என்ற கோயில் இன்று அகற்றப்பட்டது. இதனைக் கண்டித்து அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் போலீசாரால் கைது செய்யப்பட்ட போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அவர் காயமடைந்து திருப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட போது காடேஸ்வரா சுப்பிரமணியம் காயமடைந்ததை கண்டித்து தேனியில் இன்று மாலை இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தேனி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்த இந்து முன்னணியினர் நேரு சிலை மும்முனை சந்திப்பில் நின்று சாலை மறியலில் ஈடுபட்டனர் . இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட சுமார் 25க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினரை போலீசாரால் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

- தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் சேர்த்து முழு கரும்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தேவதானப்பட்டி பகுதியில் உள்ள கரும்பு விவசாயிகளிடமிருந்து இன்று முதல் நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யும் பணியை கூட்டுறவுத் துறையினர் துவங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு அரசு ஒரு கரும்பிற்கு ரூ.40 வழங்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- தேனி மாவட்டத்திற்கு பொங்கல் பரிசு தொகை தொகுப்பு தொடக்கம் தேனி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகை தொகுப்பானது இன்று தொடங்கப்பட்டது .தேனிபாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் பங்கேற்று தொடங்கி வைத்தார் மேலும் இந்த நிகழ்வில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பயனாளிகள் பங்கேற்றனர்.1
- திமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன .... கடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் உரை..!1
- மணப்பாறை நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இங்கு குப்பைகள் கொட்டகூடாது என்று தமிழக அரசு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தொடங்கி டெண்டர் விடப்பட்டுள்ளது. இதன்படி வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளில் மக்கும் குப்பைகளை உரமாகவும் மக்காத குப்பைகளை (பிளாஸ்டிக் கழிவுகள்) சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பவேண்டும் என்று அரசு ஆணை சொல்கிறது. ஆனால் , மணப்பாறை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தாமல் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை அப்படியே நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர். இதையறிந்த சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.1
- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள பூவந்தி பகுதியில் சாலையோரமாக செல்லும் குடிநீர் குழாய் உடைந்து, சுத்தமான குடிநீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக பழுதை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- குலதெய்வம் வழிபாட்டின் மகிமை என்ன.1
- கேள்வி கேட்டவரை அடித்த காங். நிர்வாகிகள் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மக்களை சந்திக்க சென்ற கரூர் எம்.பி. ஜோதிமணியின் காரை மறித்து கேள்வி கேட்ட நபரை காங்கிரஸ் நிர்வாகிகள் அடித்து விரட்டி அட்டகாசம். இனையத்தில் வீடியோ வைரல் காட்சிகள்1
- சிவகங்கை ஜஸ்டின் பள்ளியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் சார்பில், காரைக்குடி மண்டல பயிற்சி மையத்தில் சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 2026 ஜனவரி 1 முதல் ஜனவரி 31 வரை நடைபெறும் இந்த சாலைப் பாதுகாப்பு மாத விழாவின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடத்தப்பட்டது.1
- தென்காசி மாவட்டம் வடகரை ரேசன் கடைகளில் தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நடந்தது இதில் மாவட்ட கவுன்சிலர் கனிமொழி பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்1