logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்காமல் புறக்கணிக்கப் போவதாக - தேனியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் முடிவு* தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்த அனைத்து விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் தேனி அருகே கொடுவிலார்பட்டியில் நடைபெற்றது தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருக சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விவசாயிகள் சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் திமுகவிற்கு வாக்களிக்காமல் புறக்கணிப்பு செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளோம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகளுக்காக கொடுத்த 83 வாக்குறுதிகளில் 73 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை 1.10 லட்சம் ஏக்கர் விவசாயிகளின் நிலத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துள்ளது திமுக அரசு, உரிமைக்காக போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட ஒரே அரசு திமுக அரசு மட்டும் தான், மணல் திருட்டை தட்டி கேட்கின்ற விவசாயிகள் மீதும் கறிக்கோழி விலை உயர்வு கேட்ட விவசாயிகள் மீதும் பொய் வழக்கு போடப்பட்டு நான் உட்பட விவசாயிகள் சிறையில் அடைக்கப்பட்டோம் வேறு எந்த கட்சிகளுக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் ஆனால் திமுகவிற்கு மட்டும் வாக்களிக்க வேண்டாம் என விவசாயிகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள முதல்வருடன் நடப்பு உறவில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் பேபி அணையை பல நடவடிக்கை எடுக்கவில்லை முல்லை பெரியாறு அணையை 152 அடி உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை? எனவே விவசாயிகள் பொதுமக்கள் திமுகவிற்கு வாக்களிக்காமல் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

3 hrs ago
user_Shakthi
Shakthi
பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
3 hrs ago

சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு வாக்களிக்காமல் புறக்கணிக்கப் போவதாக - தேனியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் முடிவு* தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்த அனைத்து விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் தேனி அருகே கொடுவிலார்பட்டியில் நடைபெற்றது தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருக சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விவசாயிகள் சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் திமுகவிற்கு வாக்களிக்காமல் புறக்கணிப்பு செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளோம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகளுக்காக கொடுத்த 83 வாக்குறுதிகளில் 73 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை 1.10 லட்சம் ஏக்கர் விவசாயிகளின் நிலத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துள்ளது திமுக அரசு, உரிமைக்காக போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட ஒரே அரசு திமுக அரசு மட்டும் தான், மணல் திருட்டை தட்டி கேட்கின்ற விவசாயிகள் மீதும் கறிக்கோழி விலை உயர்வு கேட்ட விவசாயிகள் மீதும் பொய் வழக்கு போடப்பட்டு நான் உட்பட விவசாயிகள் சிறையில் அடைக்கப்பட்டோம் வேறு எந்த கட்சிகளுக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் ஆனால் திமுகவிற்கு மட்டும் வாக்களிக்க வேண்டாம் என விவசாயிகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள முதல்வருடன் நடப்பு உறவில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் பேபி அணையை பல நடவடிக்கை எடுக்கவில்லை முல்லை பெரியாறு அணையை 152 அடி உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை? எனவே விவசாயிகள் பொதுமக்கள் திமுகவிற்கு வாக்களிக்காமல் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • தளபதி விஜய் சகோதரிகளுக்கு தாய் மாமன் சீரு வழங்கப்படும் எனவாக்குறுதி எடுத்துரைத்து பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து போடி வேட்பாளர் விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணை பகுதியில் சேர்ந்த தமிழக வெற்றி கழகம் மாவட்ட பொறுப்பாளர் காசி பாண்டி ஏற்பாட்டில் பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி வேட்பாளர் சபரி ஐங்கரன், தேனி வடக்கு மாவட்ட செயலாளர் போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான பிரகாஷ் ஆகியோருக்கு தேவதானப்பட்டிக்கு வருகை தந்த போது வான வேடிக்கை மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து பெரியகுளம் வேட்பாளருக்கு போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சி பகுதியை பொதுமக்களை சந்தித்து விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார் அப்போது தமிழக வெற்றிக்கழக தேர்தல் வாக்குறுதியான தளபதி விஜய் சகோதரர்களுக்கு தாய்மாமன் சீரு வழங்கப்படும், வருடத்துக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கு ஆறு சிலிண்டர், பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதியை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர் மேலும் தற்போது வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவின்போது மக்களான நீங்கள் தளபதி விஜய் வேட்பாளர்களை ஆதரித்து விசில் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள் என பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டனர் இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகம் மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    1
    தளபதி விஜய் சகோதரிகளுக்கு தாய் மாமன் சீரு வழங்கப்படும் எனவாக்குறுதி எடுத்துரைத்து பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து போடி வேட்பாளர் விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்
பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணை பகுதியில் சேர்ந்த தமிழக வெற்றி கழகம் மாவட்ட பொறுப்பாளர் காசி பாண்டி ஏற்பாட்டில் பெரியகுளம் சட்டமன்ற தனி தொகுதி வேட்பாளர் சபரி ஐங்கரன், தேனி வடக்கு மாவட்ட செயலாளர் போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளருமான பிரகாஷ் ஆகியோருக்கு தேவதானப்பட்டிக்கு வருகை தந்த போது வான வேடிக்கை மேளதாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து பெரியகுளம் வேட்பாளருக்கு போடி சட்டமன்ற தொகுதி வேட்பாளரும் வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சி பகுதியை பொதுமக்களை சந்தித்து விசில் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்
அப்போது தமிழக வெற்றிக்கழக தேர்தல் வாக்குறுதியான தளபதி விஜய் சகோதரர்களுக்கு தாய்மாமன் சீரு வழங்கப்படும், வருடத்துக்கு ஒவ்வொரு குடும்பத்துக்கு ஆறு சிலிண்டர், பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதியை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர் மேலும் தற்போது வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவின்போது மக்களான நீங்கள் தளபதி விஜய் வேட்பாளர்களை ஆதரித்து விசில் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள் என பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டனர்
இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழகம் மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    20 min ago
  • Post by K.M.Parameshwaran
    1
    Post by K.M.Parameshwaran
    user_K.M.Parameshwaran
    K.M.Parameshwaran
    கொடைக்கானல், திண்டுக்கல், தமிழ்நாடு•
    18 hrs ago
  • மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். திண்டுக்கல் மாவட்டம் திமுக மாவட்ட கட்சி அலுவலகம் முன்பு ஆத்தூர் தொகுதி வேட்பாளர் ஐ பெரியசாமி மற்றும் திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் முன்னிலையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவினை எதிர்த்து கருப்புக் கொடி ஏந்தி மசோதாவின் நகலை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். 
திண்டுக்கல் மாவட்டம் திமுக மாவட்ட கட்சி அலுவலகம் முன்பு ஆத்தூர் தொகுதி வேட்பாளர் ஐ பெரியசாமி மற்றும் திண்டுக்கல் தொகுதி வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் முன்னிலையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவினை எதிர்த்து கருப்புக் கொடி ஏந்தி மசோதாவின் நகலை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து  கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_Natarajan Pitchaimani
    Natarajan Pitchaimani
    Local News Reporter திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    2 hrs ago
  • மதுரை வண்டியூர் பகுதியில் இன்று (ஏப்.16) காலை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசின் தொகுதி வரையறை திருத்த மசோதாவை எரிக்கும் போராட்டம் நடத்தினார். உடன் மாவட்ட செயலாளர் தளபதி, அமைச்சர் மூர்த்தி, பூமிநாதன் எம்எல்ஏ உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    1
    மதுரை வண்டியூர் பகுதியில் இன்று (ஏப்.16) காலை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசின் தொகுதி வரையறை திருத்த மசோதாவை எரிக்கும் போராட்டம் நடத்தினார். உடன் மாவட்ட செயலாளர் தளபதி, அமைச்சர் மூர்த்தி, பூமிநாதன் எம்எல்ஏ உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    4 hrs ago
  • வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவத்திற்கு ஆதரவாக எரியோடு பேரூராட்சி மணியக்காரன்பட்டி கிராமத்தில் இன்று வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
    1
    வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவத்திற்கு ஆதரவாக எரியோடு பேரூராட்சி மணியக்காரன்பட்டி கிராமத்தில் இன்று வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
    user_Farmers joint Liability Group
    Farmers joint Liability Group
    Farmer குஜிலியம்பாறை, திண்டுக்கல், தமிழ்நாடு•
    19 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மணப்பாறையில் கருப்பு கொடி ஏந்தி நகலை எரித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டமானது மணப்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ப.அப்துல் சமது தலைமையில் நடைபெற்றது. இதில் இப்பகுதியை சேர்ந்த கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மணப்பாறையில் கருப்பு கொடி ஏந்தி நகலை எரித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டமானது மணப்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ப.அப்துல் சமது தலைமையில் நடைபெற்றது. இதில் இப்பகுதியை சேர்ந்த கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • மணப்பாறை அருகே திடீரென சில கோரிக்கைகளை செய்து கொடுக்க கூறி திமுக வேட்பாளர் காலில் விழுந்த நபரால் பரபரப்பு திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி, வையம்பட்டி ஒன்றியபகுதிகளில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அப்துல் சமது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். ஆனாங்கரைப்பட்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது அங்கிருந்த மக்கள் சிலர் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கூறி முறையிட்டனர். அப்போது அங்கிருந்த ஒருவர் திடீரென சாலை வசதி இல்லை, குடிநீர் வசதி இல்லை, ஜெயிச்சுட்டு போய் 5 வருடமா செஞ்சு தரவில்லை என்று கூறி எம்எல்ஏ காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    1
    மணப்பாறை அருகே 
திடீரென சில கோரிக்கைகளை செய்து கொடுக்க கூறி திமுக வேட்பாளர் காலில் விழுந்த நபரால் பரபரப்பு
திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி, வையம்பட்டி ஒன்றியபகுதிகளில் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அப்துல் சமது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். ஆனாங்கரைப்பட்டியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது அங்கிருந்த மக்கள் சிலர் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று கூறி முறையிட்டனர். அப்போது அங்கிருந்த ஒருவர் திடீரென சாலை வசதி இல்லை, குடிநீர் வசதி இல்லை, ஜெயிச்சுட்டு போய் 5 வருடமா செஞ்சு தரவில்லை என்று கூறி எம்எல்ஏ காலில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • தேர்தல் காலகட்டத்தில் தொகுதி வரையறையை அவசரமாக கொண்டு வந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் நோக்கோடு செயல்படும் மத்திய அரசை கண்டித்து திமுக வினர் தங்களது இல்லங்களில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் பெரியகுளம் திமுக கட்சி அலுவலகத்தில் நகர செயலாளர் முகமது இலியாஸ் தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்து மத்திய அரசு பாராளுமன்ற வரையறையை திருத்த மசோதாவை கண்டித்து கையில் கருப்பு கொடி ஏந்தி மசோதா நகலை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர் மேலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தம் மசோதா சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் தொடர்ந்து தமிழகத்திற்கு வஞ்சிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர் இந்த நகல் எரிப்பு போராட்டத்தில் நாங்கள் ஒண்ணும் அதிமுக அடிமை இல்லை நாங்கள் திமுக எதற்கும் அஞ்ச மாட்டோம் மத்திய அரசு போக்கை கண்டித்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து கண்டன கோஷங்களை எழுப்பினர் இதில் சிறப்பா அழைப்பாளர் திமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிஷாந்த், திமுக இணைச்செயலாளர் சேதுராமன்,மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார்,மாவட்ட பிரதிநிதி ராஜபாண்டி,நகர பிரமுகர் சேதுராமன், VTS ராஜவேலு, மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
    1
    தேர்தல் காலகட்டத்தில் தொகுதி வரையறையை அவசரமாக கொண்டு வந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் நோக்கோடு செயல்படும் மத்திய அரசை கண்டித்து திமுக வினர் தங்களது இல்லங்களில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார். 
அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் பெரியகுளம் திமுக கட்சி அலுவலகத்தில் நகர செயலாளர் முகமது இலியாஸ் தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்து மத்திய அரசு பாராளுமன்ற வரையறையை திருத்த மசோதாவை கண்டித்து கையில் கருப்பு கொடி ஏந்தி மசோதா நகலை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்
மேலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தம் மசோதா சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் தொடர்ந்து தமிழகத்திற்கு வஞ்சிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்
இந்த நகல் எரிப்பு போராட்டத்தில் நாங்கள் ஒண்ணும் அதிமுக அடிமை இல்லை நாங்கள் திமுக எதற்கும் அஞ்ச மாட்டோம் மத்திய அரசு போக்கை கண்டித்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து கண்டன கோஷங்களை எழுப்பினர்
இதில் சிறப்பா அழைப்பாளர் திமுக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிஷாந்த், திமுக இணைச்செயலாளர் சேதுராமன்,மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார்,மாவட்ட பிரதிநிதி ராஜபாண்டி,நகர பிரமுகர் சேதுராமன், VTS ராஜவேலு, மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.